ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது சாஹிப் காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
பாவம் என்பது மனிதனது இரத்தத்தில் சேர்ந்திருக்கும் ஒரு கிருமியாகும். ஆனால் இதற்கான மருத்துவம், இஸ்திக்ஃபார் என்னும் பாவ மன்னிப்புக் கோருவதாலேயே செய்ய முடியும்.
இஸ்திக்ஃபாரின் பயனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்திக்ஃபார் செய்வதால், ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட பாவங்களது தீய விளைவுகளிலிருந்து இறைவன் காப்பாற்றுவான். இதுவரை நிகழாமல் இருந்த, ஆனால் இனிமேல் நிகழப்போகும் பாவங்கள் நிகழாமல், உள்ளுக்குள்ளேயே எரிந்து சாம்பலாகிவிடும்.
இந்த காலம் மிகவும் பயங்கரமான காலமாகும். எனவே நீங்கள் தவ்பா செய்து இஸ்திக்ஃபார் செய்வதில் அதாவது கழிவிரக்கங் கொண்டு பாவமன்னிப்புக் கோருவதில் ஈடுபட்டு, உங்களது நஃப்ஸை பற்றித் தெரிந்து கொண்டேயிருங்கள்.
தண்டனை இறங்குவதற்கு முன்னர் சதகா என்னும் தான தருமங்கள் கொடுப்பதால் தண்டனை அகன்று விடுகின்றது என்பதை எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் வேதமுடையவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தண்டனை இறங்கியதன் பின்னர், அது ஒருபோதும் அகற்றப்படுவதில்லை. எனவே நீங்கள் தண்டனைக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவும் இறைவன் உங்களைப் பாதுகாப்பதற்காகவும் இப்பொழுதிலிருந்தே நீங்கள் உங்களது பாவங்களுக்காக கழிவிரக்கங் கொண்டு பாவ மன்னிப்புக் கோருவதில் ஈடுபடுங்கள்.
(மல்ஃபூஸாத், பாகம் 5 பக்கம் 299)
எனது கடன் தீருவதற்காகத் தாங்கள் துஆ பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்களிடம் ஒருவர் கேட்டுக் கொண்டபோது, அவரிடம், நீங்கள் மிகவும் அதிகமாகப் பாவ மன்னிப்புக் கோருங்கள். மனிதன் கவலைகளிலிருந்து விடுபடுவதற்காக அதிகமாக இஸ்திக்ஃபார் செய்து வர வேண்டும். மேலும் இது முன்னேற்றங்களுக்கான திறவு கோலாகும் என்று கூறினார்கள்.
(மல்ஃபூஸாத், பாகம் 2 பக்கம் 206)
எனக்குக் குழந்தைகள் கிடைப்பதற்காக தாங்கள் எனக்காக துஆ பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்களிடம் ஒருவர் கேட்டு கொண்டதற்கு அவர்கள் நீங்கள் மிக அதிகமாக இஸ்திக்ஃபார் செய்யுங்கள். இதனால் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன; இறைவன் குழந்தைகளையும் வழங்கிவிடுகின்றான். முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு இறைவனே முன் வந்து உதவி செய்கிறான் என்று கூறினார்கள்.
(மல்ஃபூஸாத், பாகம் 2 பக்கம் 209)
அவர்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் கழிவிரக்கங் கொண்டு பாவமன்னிப்புக் கோரிக் கொண்டே இருங்கள். பாவ மன்னிப்புக் கோருபவருக்கு வளமான வாழ்வை கொடுப்பதாக இறைவன் வாக்குறுதி அளித்துள்ளான் என்று கூறியுள்ளார்கள்.
(மல்ஃபூஸாத் பாகம் 10 பக்கம் 110)
மேலும் அவர்கள், நிரந்தரமாக பாவ மன்னிப்புக் கோருவதை எவர் தமது பழக்கமாக ஆக்கிக் கொள்வதில்லையோ, அவர் மனிதரல்ல அவர் ஒரு புழு பூக்சியே ஆவார்; அவர் ஒரு குருடரே ஆவார்; அவர் தூய்மையானவர் அல்ல; அவர் அசுத்தமானவரே ஆவார் என்று கூறியுள்ளார்கல்ல்.
(இஸ்லாமி உஸூல் கி ஃபிலாஸஃபி)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None