உருவப்படங்கள் பற்றி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் விளக்கம்

கேள்வி: உயிரினங்களின் உருவப் படம் வரைவது பற்றி நபிமொழிகளில் கடுமையான எச்சரிக்கை உள்ளது. ஆனால் தங்களின் புகைப்படங்கள் வெளியிட்டிருப்பதிலிருந்து  தாங்கள் அதனை ஆகுமானதாக கருதுகின்றீர்கள் எனத் தெரிகிறது.

பதில் : உருவப்படம் முற்றிலும் ஹராமானது என்பது என் கொள்கை அல்ல.

ஜின் பிரிவினர் ஹஸ்ரத் சுலைமானுக்காக உருவப்படங்களை செய்து கொண்டிருந்தனர் என திருக்குர்ஆனிலிருந்து நிரூபணமாகிறது.

இஸ்ரவேலர்களிடம் நீண்ட காலம் வரை நபிமார்களின் உருவப் படங்கள் இருந்தன.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களுக்கு ஆயிஷா (ரலி ) அவர்களின் உருவப்படத்தை ஒரு பட்டுத்துணியில் ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) காட்டினார்கள்.

தண்ணீரில் சில கற்கள் மேல் சில உயிரினங்களின் உருவப்படம் இயற்கையாகவே பதிந்துவிடுகின்றன.

இப்போது புகைப்படம் எடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவி நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை .இது மிகவும் பயனுள்ள கருவி ஆகும் .இதன் மூலம் சில நோய்கள் கண்டறியப்படுகின்றன. படம்பிடிக்கின்ற  இன்னுமொரு கருவி (xray) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மனிதனின் அனைத்து எலும்புகளின் படமும் பிடிக்க முடியும். கீழ்வாதம், சந்துவாதம் போன்ற நோய்களைக் கண்டுபிடிக்க இந்த கருவியின் மூலம் படம் எடுக்கப்படுகிறது. அதன் மூலம் நோயின் உண்மை தெரியவருகிறது.


அவ்வாறே போட்டோவின் மூலமாக பல அறிவியல் பயன்களும் வெளிவந்துள்ளன. எனவே சில ஆங்கிலேயர்கள் போட்டோ மூலமாக உலகின் எல்லா உயிரினங்களுடையதும் - எதுவரையெனில் வகை வகையான பூச்சிகளின் படங்களையும் ,எல்லா வகையான பறவைகள் ,கால்நடைகளின் படங்களையும் தங்கள் நூல்களில் வெளியிட்டுள்ளனர் .அதன் மூலம் அறிவு வளர்ச்சி ஏற்பட்டது. எனவே அறிவை ஊக்குவிக்கின்ற இறைவன் பெரும் பெரும் சிக்கலான நோய்களைக் கண்டறிய கூடியதும் ,அகப்பார்வை உடையோருக்கு நேர்வழி கிடைக்க வழி செய்யக் கூடியதுமான கருவியை பயன்படுத்துவதை தடுப்பான் எனக் கருத முடியுமா?

இவையெல்லாம் இப்போது பரவியுள்ள அறியாமைகளாகும் நம் நாட்டு மவ்லவிகள் மன்னரின் முகத்தைக் கொண்ட நாணய ரூபாய் ,இரண்டு அணா, நாலணா எட்டணாக்களை தங்கள் பைகளிலிருந்தும், வீடுகளிலிருந்தும் ஏன் எடுத்து வெளியே வீசுவதில்லை .அந்த நாணயங்களில் படம் இல்லையா?  இம்மக்கள் வீணாக அறிவுக்கு அப்பாற்பட்ட பேச்சுகளை பேசி எதிரிகளுக்கு இஸ்லாத்தை கேலி செய்ய வாய்ப்பளிக்கின்றனர் . வீணானதும் இணைவைத்தலுக்கு உதவக்கூடியதுமான அனைத்து செயலையும் தான் இஸ்லாம் தடுக்கிறது .மனித அறிவை வளர்க்கக்கூடியதும் , நோய்களைக் கண்டறிய வழிவகுக்கக் கூடியதும், அகப்பார்வை உடையோரை நேர்வழியின் அருகில் கொண்டுவர கூடியதுமான விஷயங்களை இஸ்லாம் தடுப்பதில்லை.

உருவப்படங்கள் பற்றி ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் விளக்கம் 

கேள்வி: உயிரினங்களின் உருவப் படம் வரைவது பற்றி நபிமொழிகளில் கடுமையான எச்சரிக்கை உள்ளது. ஆனால் தங்களின் (இமாம் மஹ்தியின் )  புகைப்படங்கள் வெளியிட்டிருப்பதிலிருந்து  தாங்கள் அதனை ஆகுமானதாக கருதுகின்றீர்கள் எனத் தெரிகிறது.

பதில்: என்னை புகைப்படம் எடுப்பதையும் அதனை சிலைகளை வணங்குகின்றவர்கள் போல் தங்களிடம் வைத்துக்கொள்ளவோ, வெளியிடவோ செய்வதனை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவ்வாறு செய்யுமாறு நான் எவருக்கும்  ஒருபோதும் கட்டளையிட்டதில்லை. சிலை வணக்கத்திற்கும் உருவ வழிபாட்டிற்கும்  என்னைவிட பெரிய எதிரி எவரும் இருக்க மாட்டார் .

ஆனால் தற்கால ஐரோப்பிய மக்கள் ஒரு நபரின் நூலை பார்க்க நாடினால் முதலில் அவரின் புகைப்படத்தைக் காண  விரும்புகின்றனர் .ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் அகப்பார்வை கல்வி மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்களுள் பெரும்பாலோர் வாதி ஒருவரின் புகைப்படத்தை மட்டும் பார்த்து விட்டு இவர் உண்மையாளரா? பொய்யாளரா?  என பிரித்தறிந்து கொள்கின்றனர். அவர்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பதால் அவர்களால் என்னிடம் வர முடியவில்லை. என் முகத்தை பார்க்க முடியவில்லை .

எனவே அந்த நாட்டைச் சேர்ந்த அகப்பார்வை உடையவர்கள், புகைப்படம் மூலமாக என்அகநிலை குறித்து சிந்தனை செய்கின்றனர். ஐரோப்பா அல்லது அமெரிக்காவிலிருந்து எனக்கு கடிதம் எழுதியுள்ள மக்கள் பலர் உள்ளனர். நாங்கள் உங்களது புகைப்படத்தைக் கவனமாக பார்த்தோம் அப்போது இந்த புகைப்படத்தையுடையவர் பொய்யர் இல்லை என அகப்பார்வையின் மூலம் நாங்கள் நம்ப வேண்டியதாயிற்று என அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதியுள்ளனர் .

மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இது இயேசு அதாவது ஈஸா (அலை) அவர்களின் புகைப்படமாகும் என கூறியுள்ளார் .எனவே இந்த நோக்கத்துடன் இந்த அளவு இந்த வழிமுறை இயங்குவதில் நன்நோக்கத்துடன் மௌனத்தைக் கடைப்பிடிக்கிறேன் .
'வ இன்னமல் அஃமாலு பினிய்யாத்தி' (மேலும் எண்ணங்களுக்கேற்பவே செயல்களின் முடிவு அமையும்) 

உருவப்படம் முற்றிலும் ஹராமானது என்பது என் கொள்கை அல்ல. ஜின் பிரிவினர் ஹஸ்ரத் சுலைமானுக்காக உருவப்படங்களை செய்து கொண்டிருந்தனர் என திருக்குர்ஆனிலிருந்து நிரூபணமாகிறது .இஸ்ரவேலர்களிடம் நீண்ட காலம் வரை நபிமார்களின் உருவப் படங்கள் இருந்தன .ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்களின் உருவப்படத்தை ஒரு பட்டுத்துணியில் ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) காட்டினார்கள்  . தண்ணீரில் சில கற்கள் மேல் சில உயிரினங்களின் உருவப்படம் இயற்கையாகவே பதிந்துவிடுகின்றன .

இப்போது புகைப்படம் எடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவி நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை .இது மிகவும் பயனுள்ள கருவி ஆகும் .இதன் மூலம் சில நோய்கள் கண்டறியப்படுகின்றன. படம்பிடிக்கின்ற  இன்னுமொரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மனிதனின் அனைத்து எலும்புகளின் படமும் பிடிக்க முடியும். கீழ்வாதம், சந்துவாதம் போன்ற நோய்களைக் கண்டுபிடிக்க இந்த கருவியின் மூலம் படம் எடுக்கப்படுகிறது. அதன் மூலம் நோயின் உண்மை தெரியவருகிறது .

அவ்வாறே போட்டோவின் மூலமாக பல அறிவியல் பயன்களும் வெளிவந்துள்ளன. எனவே சில ஆங்கிலேயர்கள் போட்டோ மூலமாக உலகின் எல்லா உயிரினங்களுடையதும் - எதுவரையெனில் வகை வகையான பூச்சிகளின் படங்களையும் ,எல்லா வகையான பறவைகள் ,கால்நடைகளின் படங்களையும் தங்கள் நூல்களில் வெளியிட்டுள்ளனர் .அதன் மூலம் அறிவு வளர்ச்சி ஏற்பட்டது. எனவே அறிவை ஊக்குவிக்கின்ற இறைவன் பெரும் பெரும் சிக்கலான நோய்களைக் கண்டறிய கூடியதும் ,அகப்பார்வை உடையோருக்கு நேர்வழி கிடைக்க வழி செய்யக் கூடியதுமான கருவியை பயன்படுத்துவதை தடுப்பான் எனக் கருத முடியுமா?

இவையெல்லாம் இப்போது பரவியுள்ள அறியாமைகளாகும் நம் நாட்டு மவ்லவிகள் மன்னரின் முகத்தைக் கொண்ட நாணய ரூபாய் ,இரண்டு அணா, நாலணா எட்டணாக்களை தங்கள் பைகளிலிருந்தும், வீடுகளிலிருந்தும் ஏன் எடுத்து வெளியே வீசுவதில்லை .அந்த நாணயங்களில் படம் இல்லையா?  இம்மக்கள் வீணாக அறிவுக்கு அப்பாற்பட்ட பேச்சுகளை பேசி எதிரிகளுக்கு இஸ்லாத்தை கேலி செய்ய வாய்ப்பளிக்கின்றனர் . வீணானதும் இணைவைத்தலுக்கு உதவக்கூடியதுமான அனைத்து செயலையும் தான் இஸ்லாம் தடுக்கிறது .மனித அறிவை வளர்க்கக்கூடியதும் , நோய்களைக் கண்டறிய வழிவகுக்கக் கூடியதும், அகப்பார்வை உடையோரை நேர்வழியின் அருகில் கொண்டுவர கூடியதுமான விஷயங்களை இஸ்லாம் தடுப்பதில்லை .

ஆனால் என் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் கட்டாயத் தேவை ஏதும் இல்லாமல் என் போட்டோவை பொதுவாக வெளியிடுவதையும் ,தங்களது தொழிலாகவும் வருவாய்க்குறியதாகவும் அதனை ஆக்குவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை . ஏனெனில் இதனால் படிப்படியாக புதுமைகள் உருவாகி அது இணைவைத்தல் வரை சென்றடையலாம் . எனவே என் ஜமாஅத் முடிந்த அளவு அப்படிப்பட்ட செயல்களை விட்டும் விலகிக்கொள்ள வேண்டும் என இவ்விடத்தில் அவர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன் . 

சில நண்பர்களின் அட்டையை கண்டேன் .அதன் பின்புறத்தில் எனது படத்தை வெளியிடுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். என் ஜமாத்தை சேர்ந்த எவரும் அவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை .நல்ல பயனுள்ள நோக்கத்திற்காக ஒன்றை செய்வது வேறு விஷயம். இந்துக்களைப் போல் தங்கள் சான்றோர்களின் உருவப்படங்களை வீடுகளிலும் சுவர்களிலும் ஆங்காங்கே மாட்டி வைப்பது வேறு விஷயம் . இத்தகைய வீண் செயல்கள்  ஷிர்க்கிற்கு  முன்னோடியாக இருந்து வருவதை பெரும்பாலும் காணலாம் .  அதனால் இந்துக்களிலும் , கிறிஸ்தவர்களிலும் ஏற்பட்டதுபோல் பெரும் பெரும் கேடுகள் விளையலாம்.என் அறிவுரைகளை கண்ணியத்துடனும் ,மதிப்புடனும் பார்ப்பவர் என்னுடைய உண்மையான சீடர் ஆவார். அவர் இந்தக் கட்டளைக்கு பின் அப்படிப்பட்ட செயல்களை விட்டு விலகி இருப்பார் என நான் எதிர்பார்க்கிறேன் .இல்லாவிடில் அவர் என் வழிக்கு மாற்றமாக நடந்துகொள்கிறார் . மேலும் ஷரியத்தின் வழிகளில் எல்லை மீறி நடந்து கொள்கிறார் .

(பராஹீனே  அஹ்மதிய்யா தொகுதி 5 பக்கம் 365 ,367)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.