1914ல் ஒரு கனவின்
அடிப்படையில் ஹஸ்ரத் முதலாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களது திருக்கரங்களில் ஒருவர் பைஅத்
செய்தார்.
அவர் தான் செளத்ரி
முஹம்மது ஹுசைன் சாஹிப் .அவர்கள் ஓர் அருளுக்குரிய அஹ்மதி.
இணைந்ததன் பின் பல்வேறு
துன்ப துயரங்களை ஜமாஅத்திற்காக சகித்துக் கொண்டார்கள். எனினும் தமது வாழ்வின் இறுதி
வரை ஜமாஅத்தின் மீதும் கிலாஃபத்தின் மீதும் அளவற்ற மதிப்பும் மிகச் சிறந்த கட்டுப்படுதலும் கொண்டவராக திகழ்ந்தார்கள்.
அவர்கள் கண்ட ஒரு
கனவினை பற்றி இவ்வாறு விவரிக்கின்றார்கள்:
"நான் அப்போது
மஃரிப் தொழுகையை தொடர்ந்து சுன்னத் தொழுது கொண்டிருந்தேன். தொழுகையில் சூரா அல் ஃபுர்கானின், "எங்கள் இறைவா எங்கள் மனைவிகளையும் எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்கு குளிர்ச்சி
தரக்கூடியவர்களாக ஆக்குவாயாக!" என்ற வசனத்தை ஓதியபோது மகத்துவமிக்க அல்லாஹ் ஓர்
ஆண் குழந்தையை என்னிடம் தந்தான். நான் எனது கண்களால் அக்குழந்தையை நோக்கியவாறு எனது
கரங்களில் பெற்றுக் கொண்டேன். தொடர்ந்து குழந்தையின் பெயரைக் கேட்டபோது " அப்துஸ்
ஸலாம்" என எனக்கு பதில் தரப்பட்டது. இதற்காக நான் அந்த மகத்துவமிக்க இறைவனுக்கு
நன்றி கூறினேன்."
தொடர்ந்து 1926 ஜனவரித்
திங்கள் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் நேரத்தில் அன்பிற்குரிய ஸலாம் பிறந்தார்.
பிறந்த நேரத்தில்
இந்த கனவுகளை முழுமையாக எழுதி அன்றைய கலீஃபா முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்களுக்கு ஒரு
கடிதம் அனுப்பப்பட்டது. அதில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கவும் விண்ணப்பம் இருந்தது.
அதற்கு ஹுஸூர் அவர்களது பதிலில் "முன்னரே அல்லாஹ் பெயர் வைத்து விட்டானல்லவா"
என்று குறிப்பிட்டார்கள்.
அப்துல் ஸலாம் எனும்
அக்குழந்தை முற்றிலும் காலத்தின் கலீஃபாவின் துவாவினாலும் வழிகாட்டுதலிலும் வளர்ந்தது. இதனால் கல்வியில் வரலாறுகளை
மாற்றியமைத்துக் கொண்டு அக்குழந்தை முன்னேறியது.
உயர் கல்வியின் போது
தனக்கு விருப்பமில்லாத நிலையிலும் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப மதிப்பிற்குரிய
அப்துஸ் ஸலாம் சாஹிப் அவர்கள் இயற்பியல் துறையை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார்கள்.
அந்த முடிவு அவர்களை
எதுவரை எட்ட வைத்ததென்றால் "நோபல் பரிசை வென்ற முதல் முஸ்லிம் விஞ்ஞானி"
என்ற உன்னத நிலைக்கு இட்டுச்சென்றது. கடந்த 1000 வருடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில்
உதித்த மாபெரும் விஞ்ஞானி என உலகம் அன்னாரை வர்ணனை செய்தது.
தமக்கு நோபல் பரிசு
கிடைக்க வேண்டுமென அன்னார் விரும்பினர்கள் .
அது ஜமாஅத்திற்கும்
முஸ்லிம் நாடுகளுக்கும் பெருமை சேர்ப்பதாகும் என அவர்கள் கருதினார்கள்.
1978ல் ஹஸ்ரத் மூன்றாவது
கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் இலண்டன் வந்த போது அவர்கள் தமது விருப்பத்தை ஹுஸூரிடம்
நேரில் தெரிவித்தார்கள்.
கண்ணியத்திற்குரிய
ஹுஸூர் அவர்கள் இறை அறிவிப்பின் அடிப்படையில் "இந்த வருடம் நோபல் பரிசு கிடைப்பதற்கு
வாய்ப்பில்லையென்றும் அடுத்த வருடம் மேற்கொள்கின்ற ஆராய்ச்சியில் அது கிடைக்குமென்றும் ஹுஸூர் அருளினார்கள்.
அல்லாஹ்வின் அறிவிப்பிற்கேற்ப
அவர்களுக்கு 1979ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
காலத்தின் கலீஃபா
இதற்கான பாராட்டு மடலில் "எல்லா புகழும் அல்லாஹ்விற்கே உரியது. என்னுடைய மற்றும்
முழு உலக அஹ்மதிய்யா ஜமாஅத்துடைய உளப்பூர்வமான பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்வீராக"
எனக் கூறினார்கள்.
நோபல் பரிசு கிடைத்ததும்
"உலகில் அமைதியை நிலை நாட்ட அவர் விஞ்ஞான உலகை துணையாக்கிக் கொண்டார்" என
சமுதாயம் அவரை அங்கீகரித்தது.
ஆனால் இயற்பியலை
விடவும் உலக நாடுகளின் ஒத்துழைப்பை விடவும் அவர்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்த
ஒரு விஷயமுண்டு.... அது இஸ்லாம் அஹ்மதிய்யத்! தமது முன்னேற்றத்தின் ஒவ்வோர் படியிலும்
காலத்தின் கலீஃபாவின் அறிவுரைகளை எப்போதும் பின்பற்றினார்கள்.
டாக்டர் அப்துஸ்
ஸலாம் சாஹிப் அவர்கள் பாகிஸ்தான் அதிபரின் முக்கிய அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்து வந்த
காலகட்டத்தில் 1972ல் பாகிஸ்தான் அதிபர் பூட்டோ அஹ்மதிகள் முஸ்லிம்கள் அல்ல என பிரகடனப்படுத்தி
சட்டம் இயற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு அந்த மாவீரர் தமது பணியை
ராஜினாமா செய்ததுடன் தாடியை வளர்த்திக் கொண்டு தமது பெயருடன் முஹம்மது என சேர்த்துக்
கொண்டார்கள்.
நோபல் பரிசை ஸ்வீடன்
மன்னரிடமிருந்து பெறும் போது இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடிப்படையில் தமது தலை முடியை
மறைத்துக் கொண்டார்கள். அவ்வேளையில் தமது உரையை திருக்குர்ஆன் ஓதியவாறே துவக்கினார்கள்.
அதன் பிறகு மன்னரின்
அரண்மனையில் விருந்தினராக அழைக்கப்பட்ட போது அந்த அரச குடும்பத்திற்கு திருக்குர்ஆனையும்
மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் நூற்களையும் பரிசாக வழங்கினார்கள்.
அவர்கள் எழுதிய புத்தகங்களில்
பெரும்பாலானவை,
அறிவியல் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டங்களே!
திருக்குர்ஆனும்
அறிவியலும்,
இஸ்லாமில் அறிவியலின் பொற்காலம் , நம்பிக்கையும் அறிவியலும், இஸ்லாமும் அறிவியலும்,
பொருத்தமும் பொருத்தமற்றவையும், இஸ்லாமிய அரசியலில் அறிவியலின்
எதிர்காலம் போன்றவை அன்னார் எழுதிய நூல்களில் சில.
தமது ஆராய்ச்சிகளின்
அடிப்படையை எப்போதும் திருக்குர்ஆனில் நிலை நிறுத்தியவாறு, மேலும் ஹதீஸ்களிலிருந்தும் மஸீஹ் (அலை)
அவர்களின் நூல்களிலிருந்தும் (தமது ஆராய்ச்சிக்கு) உதவி தேடிக் கொள்வார்கள்.
உலக அரங்கில் மிக
உயரிய பதவிகள் பலவற்றை அலங்கரித்த போதும் அவர்கள் எளிமையையும் பணிவையும் கைவிட்டதில்லை.
ஹஸ்ரத் மூன்றாவது
கலீஃபத்துல் மஸீஹ் கூறினார்கள்: "டாக்டர் அப்துஸ்ஸலாமிற்கு கிடைத்த ஆதரவும் அந்தஸ்தும்
எத்தகையதென்றால்,
ஏதேனும் அறிவியல் மாநாடு நடைபெறும் போது அதில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மிக முக்கிய விஞ்ஞானிகள் கலந்து கொண்டிருந்தாலும்
டாக்டர் அப்துஸ் ஸலாம் அந்த மாநாட்டு அவையில் நுழையும் போது முழு அவையும் அமைதியுடன்
எழுந்து நின்று அவர்களுக்கு மதிப்பளிக்கும். ஆனால் அவரோ தான் பெரிய மனிதனென்ற பாவனையோ, வெளிப்படுத்தலோ சிறிதும் இன்றி மிகவும் பணிவுடனேயே அனைவரிடமும் நடந்து கொள்வார்கள்."
பொருள் தியாகங்களில்
மிகவும் உற்சாகத்துடன் பங்கெடுத்துக் கொள்வதுடன் தான தர்மங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
1979ல் வருடாந்திர மாநாட்டில் ஹஸ்ரத் மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் முன்
வைத்த கல்வி திட்டத்தின்படி ஏழை ,எளிய மாணவர்களுக்கு Scholorship வழங்கும் கமிட்டியின் தலைவராக இவர்களையே ஹுஸூர் அவர்கள் நியமித்தார்கள். டாக்டர்
அப்துஸ் ஸலாம் சாஹிப் அவர்களோ தமக்கு கிடைத்த மற்றெல்லா உலகியல் பதவிகளை விட இதனையே
உயர்வாக கருதினார்கள்.
Cambridge University யிலிருந்து Theoretical Physics
ல் PhD.
பட்டம் பெற்ற அவர்கள் அதே University ல் இயற்பியல் துறையின் தலைவராகவும் சேவை புரிந்துள்ளார்கள்.
Cambridge univerisity உட்பட 39 பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்தது. இதில்
4 இந்திய universityகளாகும்.
1. குருநானக்தேவ்
யூனிவர்சிட்டி (1981)
2. ஹிந்து யூனிவர்சிட்டி
( 1981)
3. முஸ்லிம் யூனிவர்சிட்டி
(1981)
4. பஞ்சாப் யூனிவர்சிட்டி
(1988)
இவர்கள் இந்தியாவுடன்
எப்போதும் நல்லுறவு கொண்டிருந்தார்கள். பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பிறந்த இவர்கள்
இந்தியன் சிவில் சர்வீஸில் பணிபுரிய வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாக இருந்தது.
ஆனால் அதனை எழுத நினைத்த அதே ஆண்டில் இரண்டாம் உலகப்போர் மூண்டதால் தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இலண்டனில் இருந்தபோது தான் இந்தியா - பாகிஸ்தான்
பிரிவினை ஏற்பட்டது.
ராஜீவ் காந்தி அவர்களுடன்
டாக்டர் சாஹிப் நல்ல நட்புறவு கொண்டிருந்தார்கள். இந்திரா அம்மையார் இந்திய பிரதமராக
இருந்த போது டாக்டர் சாஹிப் அவர்களை இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தார்கள். இந்தியாவிற்கு
வந்த அவர்களை இந்திரா காந்தி தமது வீட்டில் வரவேற்பளித்து தமது கரங்களாலேயே தேநீர்
விருந்தும் வழங்கினார்கள். மட்டுமல்ல அவர்களது பாதங்களுக்கு அருகில் சம்மனங்காலில்
அமர்ந்தபடி Dr.
அப்துஸ் ஸலாம் சாஹிப் அவர்களது பேச்சை செவியுற்றார்கள்.
1981 ல் இந்தியாவில் தமக்கு கிடைத்த உற்சாக வரவேற்பையும், அன்பையும் தமது குடும்பத்தாரிடம் கூறிக் கொண்டிருப்பார்கள்.
ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை தர வாக்குறுதி செய்ததாக அவர்களது
மகன் குறிப்பிடுகின்றார்கள்.
Dr. அப்துஸ் ஸலாம் sb. அவர்கள் UNESCO
வின் கீழ் செயல்படுகின்ற international center of theoretical
physics (ICTP) யின் நிறுவனர் ஆவார்கள். மேலும் அதன் இயக்குனராகவும், தலைவராகவும் சேவை புரிந்துள்ளார்கள்.
அவர்களது மறைவிற்கு
பிறகு அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாக ICTP யின் பெயர் Abdussalam
international center of theoretical physics என்று மாற்றப்பட்டது.
நீண்ட யுகங்களுக்குப்
பின் - அந்த ஆரம்ப கால ஞானத்தின் எழுச்சியை - உலகத்திற்கு மீண்டும் காண்பித்து தந்த
இருபதாம் நூற்றாண்டின் ஒப்புயர்வற்ற விஞ்ஞானியாவார் Dr.அப்துஸ் ஸலாம் சாஹிப்!
தமிழ் மொழியாக்கம்: கோவை T.M. முஹம்மது முஸ்தஃபா [பாபு]
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None