இன்றைய நாட்களில், நாம் கடந்து கெண்டிருக்கின்ற இஸ்லாமிய
மாதத்தின் பெயர் முஹர்ரமுல் ஹராம் ஆகும்.
இந்த மாதம் இஸ்லாமிய காலண்டரின் முதல் மாதம் ஆகும். பொதுவாக வருடத்தின் முதல் மாதம் வரும் போது,
புதிய வருடம் தொடங்கும் போது நாம் ஒருவர் மற்றவருக்கு வாழ்த்துக்களைக்
கூறுவோம். சில இடங்களில் முஹர்ரம் கடந்த
வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நான் ஜூமுஆவிற்காக
வந்த போது, வெளியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்
எனக்கு வாழ்த்து கூறினார். ஆனால்
வாழ்த்துவது எதற்காக? அந்த நாளில் தான் ஈராக்கில் குண்டு
வெடிப்பு நடந்தது. ஷியாக்களின் மீது
தாக்குதல் நடத்தப்பட்டது. பலர்
ஷஹீதாக்கப்பட்டனர்.
பொதுவாக நாம் வருடத்தின் ஆரம்பத்தில் ஒருவர் மற்றவருக்கு வாழ்த்துக்
கூறுவோம். ஆனால் சந்திர வருடத்தின் மாதம்
தொடங்கும் போது, முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட
முஸ்லிம் சான்றோர்களில் பெரும்பான்மையினர் இந்த மாதம் வருவதைக் கண்டு வருத்தமும்
கவலையும் அடைகின்றனர். இது ஏன்? நான் கூறியது போன்று குண்டு வெடிப்புகள் நடக்கின்றன. கொலை, கொள்ளை நடைபெறுகிறது என்பதே இதற்குக் காரணமாகும். அரசாங்கத்தின் அறிக்கைகள்
இருந்தும் கூட பல்வேறு பிரிவுகளிலுள்ள ஆலிம்களின் ஒன்றுபட்ட கூற்றுக்களுக்குப்
பிறகும் கூட, அறிவிப்புகளுக்குப் பிறகும் கூட ஷியா, சுன்னிகளுக்கிடையே குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அல்லது எங்கேயாவது
ஏதாவது காஸியா அல்லது இமாம்பாடா அல்லது மற்ற பிரிவினர்களின் புறமிருந்து அல்லது
விஷமிகளின் புறமிருந்து தாக்குதல்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும்.
தற்போது இந்த சுயநலவாதிகள், தீவிரவாதிகள்
போன்றவர்கள் அந்நியர்களின் கையில் பொம்மைகளாகி, ஷியாக்களின்
கூட்டங்களில் தாக்குதல் நடத்தி பல அப்பாவிகளின் உயிர்களைப் பறிக்கின்றனர். இவர்களிடம் மார்க்க நோக்கங்கள் எதுவுமில்லை
அல்லது மார்க்க சண்டைகளும் அவர்களிடம் இல்லை. மாறாக அரசியல் நோக்கங்கள் மட்டுமே
அவர்களுக்கு இருக்கிறது. அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க விரும்புகின்றனர். பொதுவாக முஹர்ரம்
10 ஆம் தேதி மிகவும் அபாயம் நிறைந்த நாளாக இருக்கும்.
மேற்கத்திய நாடுகளில் அது நாளையாகும்.
இங்கு குறிப்பிடும்படியான எந்த விதமான அபாயமும் இல்லை. ஆனால் கிழக்கத்திய
நாடுகளில் இது இன்று ஆகும். ஒருவேளை பாகிஸ்தான்
மற்றும் வேறு சில நாடுகளிலும் இருக்கலாம்.
இந்த நாளில் சில சமயங்களில் எல்லை மீறிய கொடுமையிழைக்கப்படுகிறது. இந்த முறை
ஷியாக்களின் பல்வேறு கூட்டங்களின் மீது தாக்குதல்கள் ஆரம்பமாகி விட்டன. நான் கூறியது போன்று, முதல் தேதி அன்றே ஈராக்கில் ஷியாக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் ராவல்பிண்டி, கராச்சி, கொய்ட்டா,
சவாத் போன்ற இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றைய
செய்தித்தாளில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. பல உயிர்கள் அழிந்தன என செய்தி
வந்திருந்தது. ராவல்பிண்டியில் நேற்றும், நேற்றைய முன்
தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நேற்று ஷியாக்களின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களின் காரணத்தால் 23
பேர் மரணமடைந்தனர். ஷியாக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது
அவர்களும் இதற்கு பழிவாங்குகின்றனர்.
தற்போது முஸ்லிம் சமுதாயம் ஒரு பரிதாபகரமான நிலையில் உள்ளது; கருணை காட்டப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இந்த மார்க்க வேறுபாடுகள்
அல்லது வேறு விதமான வேறுபாடுகளாலும் அவை முஸ்லிம்களிடமும் அல்லது முஸ்லிம்
அரசாங்கத்திலும் ஒருவர் மற்றவருக்குள் பிளவை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. சிறுபான்மையினரின் ஆட்சி நடைபெறும் நாடுகளும்
சில உள்ளன. அவற்றில் பெரும்பான்மையான
பிரிவு கடினமான எதிர்நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. வெடி குண்டுகளை பயன்படுத்தவும்
துணிகின்றனர். சிறுபான்மையான
பிரிவுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அது பெரும்பான்மையினர் மீது தாக்குதல்
நடத்துகின்றது. இந்த அடிப்படையில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில்
அல்லது கிளர்ச்சியாளர்களை அடக்குகிறோம் என்ற பெயரில் அரசாங்கமும் அப்பாவி உயிர்களை
அழித்து வருகிறது. சற்றும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக குண்டு வெடிப்புகள்
நடத்தப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றது. வீடுகள் நாசமாக்கப்படுகின்றன. சொந்த நாட்டிலேயே ஆயிரக்கணக்கான ஆண்களும்
பெண்களும் மரணத்தின் குழியில் தள்ளப்படுகின்றனர்.
இன்றைய நாட்களில் சிரியாவில் இதுதான் நடக்கிறது. இதன் காரணமாக இஸ்லாத்தின் எதிரி சக்திகளுக்கு
தம் விருப்பப்படி செயல்படுவதற்கு முழு சுதந்திரம் கிடைத்து விடுகிறது.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு முஸ்லிம்களிடையே
உள்ள வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மையே காரணம் ஆகும். மார்க்க வேறுபாடுகளின் காரணமாக அல்லது அரசியல்
வேறுபாடுகளின் காரணமாக எல்லா விதமான நற்பண்புகளையும் அழிக்காத எந்தவொரு முஸ்லிம்
நாடும் இல்லை. அல்லது ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அநீதிக்கு, அநீதியை திருப்பித் தராமல் இல்லை. இதன் விளைவாக ஏதாவதொரு வகையில் ஒருவர்
மற்றவர் மீது அநீதியிழைப்பது தெரியத்தான் செய்கிறது. அந்நிய இஸ்லாமிய எதிரி
சக்திகளும் இதன் விளைவாக இஸ்லாமிய நாடுகளின் மீது தமது நெருக்கடியை
அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றன.
அந்தோ! முஸ்லிம்கள் அறிவு பெற வேண்டுமே! இவர்கள் ஒன்றுபட வேண்டுமே!
தமது முன்னவர்களிடமிருந்து கொஞ்சம் பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள். வரலாறு இவர்களைப்
பற்றி என்ன கூறுகின்றது? இஸ்லாத்திற்கு பகைமையான ஒரு சக்தி அதாவது
ரோமானிய ஆட்சி ஹஸ்ரத் அலி மற்றும் ஹஸ்ரத் முஆவியா உடைய கருத்து வேறுபாட்டின் காரணத்தால், இஸ்லாமிய சக்தியை பலவீனமாகக் கருதி, தனது ஆட்சியை
நிறுவுவதற்காக தாக்குதல் நடத்த விரும்பிய போது, ஹஸ்ரத்
முஆவியாவுக்கு இது தெரிய வந்தவுடன் அந்த மன்னருக்கு, "எங்களது
வேற்றுமையைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் மீது
தாக்குதல் நடத்த முயற்சிக்க வேண்டாம்; அவ்வாறு
தாக்குதல் நடத்தினால் நான் ஹஸ்ரத் அலி சார்பாக உங்களுடன் சண்டையிடக்கூடிய முதல் தளபதி
ஆவேன்" என தூது அனுப்பினார்கள். ஆக, இதுதான் அந்த
சஹாபாக்களின் எதிர்நடவடிக்கையாக இருந்தது. நாம் இவர்களைச் சார்ந்தவர்கள் என்று
கூறுகின்றோம். ஆனால் இவர்கள் எதிரிகளுடன்
இணைந்து இஸ்லாமிய அரசுகளுக்கு எதிராக திட்டங்களை தீட்டுகின்றனர். மேலும் இவர்கள் முஸ்லிம்கள் என தம்மை கூறிக்
கொள்கின்றனர்.
ஆனால் ஒரு விஷயத்தில் இந்த பெயர் தாங்கி ஆலிம்கள் அல்லது தீமைகளைப்
பரப்பக்கூடிய பிரிவுகள் ஒன்றிணைகின்றனர். அது முஹம்மதிய்ய மஸீஹினால்
ஏற்படுத்தப்பட்ட ஜமாஅத்திற்கு எதிராக திட்டங்கள் தீட்டுவது அல்லது லாயிலாஹ
இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் -வில் உளப்பூர்வமாக நம்பிக்கை கொண்டுள்ள அஹ்மதிகளை
வலுக்கட்டாயமாக இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேற்றுவது ஆகியவற்றில் இவர்கள்
ஒன்றுசேர்கிறார்கள். இந்த மக்களுக்கு
கொஞ்சம் கூட பயம் இல்லை. எந்த நபி உடைய
கலிமாவை இவர்கள் ஓதுகின்றனரோ, வாதம் புரிகின்றனரோ,
எதற்காக உயிரையும், கண்ணியத்தையும் தியாகம்
செய்வதாக வாதம் செய்கின்றார்க¼ளா அந்த நபியின் இந்த கூற்றின்
மீது கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இவர்கள்
கொஞ்சம் கூட கவனம் செலுத்துவதேயில்லை.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது பொதுவான கட்டளையாகும். ஒரு
சஹாபிக்கு மட்டும் கூறப்பட்டதல்ல. அவர்கள் உள்ளத்தால் கலிமாவை கூறினார்களா அல்லது
பயத்தினால் மேலோட்டமாக ஓதுகின்றார்களா என்று நீர் மக்களின் உள்ளங்களை பிளந்து
பார்த்தீரா? அந்தோ! இவர்கள் புரிய வேண்டுமே!
ஆலிம்கள் என்று தம்மை கூறக்கூடியவர்கள் தனது பெயர் தாங்கிய அறிவின் வாதத்தின்
கூற்றிலிருந்து வெளியே வாருங்கள். பொதுமக்களை வழிகெடுப்பதற்குப் பதிலாக அவர்களிடம்
நீதி மற்றும் உண்மையைக் கூறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த அல்லாஹ்வின் வீரருடன் இணைந்து எல்லா
பிரிவுகளையும் ஒழித்து விட்டு, அநீதியை விட்டொழித்து
மார்க்கப் போரின் சிந்தனைகளை ஒழித்து விட்டு இஸ்லாத்தின் அழகிய போதனையை, காலத்தின் மஸீஹினால் காட்டப்பட்ட வழியின்படி பரப்பி பகைவர்களின் சக்திகளை அழித்து,
நபி (ஸல்) அவர்களின் கொடியின் கீழ் கொண்டு வரக்கூடியவர்களாக
ஆகுங்கள்.
முஹர்ரம் தொடர்பாக நான் கூற ஆரம்பித்தேன்.
தற்போது நான் இந்தக் காலத்தின் மஸீஹ் மற்றும் மஹ்தியின் சில மேற்கோள்களை உங்கள்
முன் எடுத்து வைப்பேன். இதன் மூலமாக இலட்சக்கணக்கிலுள்ள அஹ்மதிகளுக்கு முன்பு இந்த
விஷயம் வெளிப்பட வேண்டும். மேலும் புதியதாக இணையக்கூடிய அஹ்மதிகளும் இதனை கேட்க
வேண்டும். இதனைப் பற்றிய அறிவு இல்லாத இளைஞர்களும்
கேட்க வேண்டும். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை) அவர்கள் எவ்வாறு சான்றோர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தினார்கள். எவ்வாறு சஹாபாக்களின் அந்தஸ்தை
கண்டறிந்தார்கள். எவ்வாறு ஷியா, சுன்னியின் வேற்றுமைகளைக் களைந்தார்கள்.
மேலும் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப எவ்வாறு பூமியில் வாழக்கூடிய அனைத்து
முஸ்லிம்களையும் ஒரு கையில் ஒன்றிணைத்து ஒரே உம்மத்தாக ஆவதற்குரிய வழியினை
கூறினார்கள் என்று பாருங்கள்.
இதைப் போன்று சில சமயங்களில் நமது குத்பாக்களைக் கேட்கக்வடிய நமது கூற்றுகளை கேட்கக்கூடிய
மற்ற ஜமாஅத்தார்களுக்கும் இந்த காலத்தில் ருஹமாவு பைனஹும் (அவர்கள் தமக்கிடையில்
கருணையுடன் நடந்து கொள்வார்கள்) என்ற வசனத்தின் உண்மையான அடையாளமாக விளங்குவதற்கு
சத்தியமான போதனை எது? என்பது தெரிய வேண்டும்.
கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்! எப்போது வரை முஸ்லிம்களின் பலவீனமான நிலையைக்
கண்டு அழுது வெளிப்படையான கூட்டங்களையும், ஊர்வலங்களையும்
நடத்தி அல்லது தீவிரவாதத்தில் ஈடுபட்டு இஸ்லாத்திற்கு தொண்டு செய்யும் கடமையையும்
உரிமையையும் நிறைவேற்றுபவராக நீங்கள் உங்களை கருதுவீர்கள்? மேலும் எப்போது வரை சற்றும்
பயனளிக்காத அநீதியான செயல்களில் ஈடுபட்டு பகைவர்களுக்கு இஸ்லாத்தின் மீது
தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள்?
முஸ்லிம் நாடுகளின் அமைதியின்மை, நிம்மதியின்மை
போன்றவை சொந்த நாட்டில் ஒருவர் மற்றவர் மீது அநீதியிழைப்பதன் காரணமாக ஏற்பட்டாலும்
அல்லது இஸ்லாத்தின் எதிரி சக்திகள் முஸ்லிம்களின் மீது அநீதியிழைப்பதன் காரணமாக
ஏற்பட்டாலும் இதற்கு தீர்வு, அமைதி நிலவுவதற்கான சிகிச்சை,
முஸ்லிம்களின் கம்பீரத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்குரிய திறன்
ஆகியவை அல்லாஹ்வின் புறமிருந்து வந்துள்ள அந்த நல்லடியாரிடம் மட்டும் தான் உள்ளது.
அவர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உண்மைப் பேரன்பரும், பெருமானாருடைய
போதனைகளை உலகில் பரப்புவதற்குரிய நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டவராவார்.
நான் கூறியதுபோன்று அவர்களுடைய சில மேற்கோள்களை உங்கள் முன்
வைக்கின்றேன். இவை அனைத்தும் சஹாபாக்களின்
அந்தஸ்துகளைப் பற்றி எடுத்துரைக்கும். தற்போது முஸ்லிம்கள் தமது ஒற்றுமையை
நிரூபிக்க வேண்டும் என்றால், தமது ஆதிக்கத்தை
நிலைநாட்ட விரும்பினால், இஸ்லாத்தை அந்நியர்களின் தாக்குதலிலிருந்து
காப்பாற்ற வேண்டும் என்றால், உலகிற்கு இஸ்லாத்தின் தூதை எட்ட
வைத்து, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கொடியின் கீழ் கொண்டு வர
வேண்டும் என்றால், ஷியா, சுன்னி உடைய
வேற்றுமையைக் களைய வேண்டும். பரஸ்பரம் உள்ள
பிரிவினை, வேறுபாடுகள் ஆகியவற்றைக் களைய வேண்டும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த அந்த
இஸ்லாத்தின் போதனையின்படி செயல்பட வேண்டும்.
அதில் எந்தவித பிரிவும் இருந்ததில்லை. அதில் ஒவ்வொரு சஹாபியும் தியாகத்தின்
ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். நன்மை மற்றும் இறையச்சத்தின் முன்னுதாரணமாக
திகழ்ந்தனர். வெளிச்சமும், வழிகாட்டலும் வழங்கக்கூடிய
நட்சத்திரங்களாக இருந்தனர். ஆனால் ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்கள் மத்தியில், சிலரது அந்தஸ்து மற்றவர்களை விட
உயர்ந்ததாக இருந்தது.
ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களுடைய அந்தஸ்திற்கு அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்களும் கொடுத்த உயர்வு வேறெவர்க்கும் கிடைக்கப் பெறாது.
இதனைப் போன்று ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களுடைய அந்தஸ்தும், ஹஸ்ரத்
அலி (ரலி) அவர்களுடைய அந்தஸ்தும், ஹஸ்ரத் இமாம் ஹுஸைன்
மற்றும் ஹஸன் உடைய அந்தஸ்தும் படிப்படியாக இவ்வாறு உள்ளது. ஆக, இவ்வாறு தகுதிகளின் அடிப்படையில் சஹாபாக்களின் அந்தஸ்தைப் பார்ப்பது
அவசியமாகும். அவ்வாறு செயல்பட்டால் அனைத்து விதமான குழப்பமும் தீர்ந்து விடும்.
இந்த அனைத்து வேற்றுமைகளையும் களைவதற்காக ஆகரீன்களின் மத்தியில் ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்கள் தோன்றினார்கள்.
ஒவ்வொரு சஹாபியும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் கொண்ட நெருக்கத்தையும் அவர்கள் அனைவருடைய அந்தஸ்தையும் நமக்கு
எடுத்துக் கூறி, அவர்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் நிலைநாட்டினார்கள்.
அன்னார் ஓரிடத்தில் கூறுகின்றார்கள்: இது சிர்ருல் கிலாஃபா என்ற நூலில்
அரபியில் உள்ளது. அதன் மொழியாக்கம் இதுவாகும்.
எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அனைத்து
சஹாபாக்களை விடவும், உயர்வான கண்ணியத்தையும், உயர்வான அந்தஸ்தையும் உடையவர் ஆவார்கள். எவ்வித சந்தேகமுமின்றி முதல்
கலீஃபா ஆவார்கள். அவர்களைப் பற்றி கிலாஃபத்தின் வசனங்கள் இறங்கின.
சிர்ருல் கிலாஃபா உடைய மற்றொரு மேற்கோள். அதன் மொழியாக்கம் இதுவாகும். இறைவன் மீது ஆணையாக! அவர்கள் இஸ்லாத்தின்
இரண்டாவது ஆதம் மற்றும் சிறந்த படைப்பினங்களின் முதல் தோற்றம் ஆவார்கள். அவர்கள் நபியாக இருக்கவில்லை. எனினும்
அவர்களிடம் நபிமார்களுடைய, ரஸூல்மார்களுடைய ஆற்றல்கள் இருந்தன.
ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் சஹாபாக்களில் அனைவரை விடவும்
தைரியமிக்க, இறையச்சமுடைய, நபி
(ஸல்) அவர்களுக்கு மிகப் பிரியமானவர்கள் ஆவார்கள். வெற்றிவாகை சூடக்கூடிய தளபதியாவார்கள். உலகத் தலைவர் (ஸல்) அவர்களின் அன்பில் தன்னை
மாய்க்கக்கூடியவர். ஆரம்பத்திலிருந்தே பெருமானார் உடைய துக்கங்களைப் பகிர்ந்து
கொள்ளக் கூடியவர், பெருமானார் உடைய பணிகளில் உதவி
செய்யக்கூடியவர் ஆவார் என்பதனை அல்லாஹ் அறிந்திருந்தான். இதனால் தான் அல்லாஹ் தனது நபிக்கு ஏற்பட்ட
இக்கட்டான காலகட்டங்களில் இவர்கள் மூலமாக ஆறுதல் வழங்கினான். அவர்கள் ஸித்தீக் என்ற பெயரால்
சிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஈருலக
நபியின் நெருக்கமானவர்கள் ஆவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஸானிய இஸ்னைன் (9:41)
- தனது சிறப்பிற்குரிய அடியார்களில் இணைத்துக் கொண்டான் என்று
பெருமையாகக் கூறியுள்ளான்.
ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்களுடைய காலத்தில் முதல் கலீஃபா அவர்கள் மிகப்பெரிய
வியாபாரி ஆவார்கள். முஸ்லிம் ஆகி முஸ்லிம்களுக்கு உதாரணம் கூற முடியாத அளவுக்கு
உதவிகள் செய்தார்கள். மேலும் அவர்களுக்கு
ஸித்தீக் என்ற அந்தஸ்து கிடைத்தது. முதலில் நண்பர், பிறகு
முதல் கலீஃபா ஆனார்கள்.
எழுதப்பட்டிருக்கின்றது: அவர்கள் வியாபாரத்திலிருந்து திரும்பி வந்தபோது, மக்காவை சென்றடையவில்லை. வழியிலேயே ஒரு நபரை சந்தித்தார்கள். அவரிடம் ஏதாவது புதிய செய்தியைக் கூறுங்கள்
என்றார்கள். அதற்கு அவர், "உமது நண்பர்
நுபுவ்வத்திற்கான வாதம் புரிந்துள்ளார் என்பதைத் தவிர வேறெந்த புதிய செய்தியும்
இல்லை" என்றார். ஹஸ்ரத் அபூபக்கர்
அங்கேயே நின்றவாறு, "அவர்கள் அவ்வாறு வாதம் புரிந்துள்ளார்
என்றால் அது உண்மையாகும்" என்றார்கள்.
அடுத்து அன்னார் கூறுகின்றார்கள்: ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் தமது
அனைத்து செல்வங்களையும் இறைவனது வழியில் அர்ப்பணித்தார்கள். அவர்கள் கம்பளியை
போர்த்திக் கொண்டார்கள். ஆனால் அல்லாஹ்
இதற்குப் பதிலாக அவர்களை முழு அரபு நாட்டிற்கும் மன்னர் ஆக்கினான். அவர்களது கையின் மூலமாக இஸ்லாத்தை மீண்டும்
உயிர்பெறச் செய்தான். மரணித்த அரபு நாட்டை மீண்டும் வெற்றி பெறச் செய்தான். அவர்களுக்கு எவராலும் நினைத்துக்கூட பார்க்க
முடியாதவற்றை வழங்கினான்.
பிறகு ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களைப் பற்றி கூறுகின்றார்கள்: ஹஸ்ரத் உமர் (ரலி)
அவர்களின் தர்ஜா சஹாபாக்களின் மத்தியில் எந்த அளவு உயர்ந்தது என்பது உங்களுக்கு
தெரியுமா? எந்த அளவுக்கு என்றால், சில நேரங்களில் அவர்களின் கருத்திற்கிணங்க திருக்குர்ஆன் இறங்கியது.
மேலும் அவர்களைப் பற்றி ஹதீஸிலும் உள்ளது. அதாவது, ஷய்த்தான்
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் நிழலைக் கண்டு விரண்டு ஓடி விடுவான். எனக்குப் பிறகு
நபி உண்டு என்றால் அவர் உமர் ஆகத்தான் இருப்பார் என்று மற்றொரு ஹதீஸிலும்
வருகிறது. மூன்றாவது ஹதீஸில் முந்தைய உம்மத்தில் முஹத்தஸ் வந்து
கொண்டிருந்தார்கள். இந்த உம்மத்தில்
ஒருவர் முஹத்தஸ் ஆக இருக்கின்றார் என்றால், அவர் உமர் ஆவார்
என்று வருகிறது.
உமர் (ரலி) அவர்களுக்கும் இல்ஹாம் இறங்கியது. அவர்கள் தம்மை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. இல்ஹாம் இறங்கும் போது நான் பெரியவன் ஆகி
விட்டேன் என்று ஒருபோதும் கருதவில்லை. இறைவன் பூமியில் நிறுவிய உண்மையான
தலைமைத்துவத்தில் தம்மையும் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதாவது, இல்ஹாம் தன் மீது இறங்கியதால் நானும், ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்களுக்கு கிடைத்த அந்தஸ்தில் இணைவேன் என ஒருபோதும் கருதவில்லை. மாறாக தாழ்மையான எளியவனாகவும் ஒரு அடிமையாகவுமே
தன்னை ஆக்கிக் கொண்டார்கள். இதனால் தான்
இறைவனது அருள் அவர்களை துணை இமாமாக ஆக்கியது. அதாவது கிலாஃபத் என்ற அந்தஸ்தை
வழங்கியது.
அரபியின் மொழியாக்கம் இதுவாகும். ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அருகில் நல்லவர்களாகவும், தூயவர்களாகவும், நெருக்கமானவர்களாகவும் இருந்த
இரண்டு நபர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இறைவன் அவர்களது வாழ்விலும்
மரணத்திற்குப் பிறகும் தனது ரஸூலின் நண்பர்களாகவே ஆக்கினான். அதாவது மரணத்திற்குப் பிறகும் அருகிலேயே
அடங்கப்பட்டார்கள். அன்பு என்பது கடைசி
வரை நிலைபெறுவதாகும். இதற்கு உதாரணம் குறைவாகத்தான் கிடைக்கப்பெறும். ஆக, அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுடைய
ஊரில் அவர்களது இடத்தில் கலீஃபாவாக நியமிக்கப்பட்டார்கள். பெருமானார் (ஸல்)
அவர்களுடைய அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்களது கபரின் நெருக்கத்தை
அடைந்தார்கள். மேலும் மறுமையில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் எழுப்பப்படுவார்கள்.
அதன் மொழியாக்கம் இதுவாகும். எனது ரப்
என் மீது வெளிப்படுத்தி இருக்கின்றான். அதாவது ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி), ஹஸ்ரத் உமர் ஃபாரூக் (ரலி), ஹஸ்ரத் உஸ்மான் (ரலி)
ஆகியோர்கள் நல்லவர்களாகவும் ஈமான் கொண்டவர்களாகவும் திகழ்ந்தனர். மேலும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மக்களைச்
சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். மேலும்
அல்லாஹ் அவர்களை தனது அருளுக்குரியவர்களாக ஆக்கினான். இறைவன் மீது ஆணையாக! அவன் அபூபக்கர், உமர், உஸ்மான் ஸுன் நூரைன் ஆகியோரை இஸ்லாத்தின்
வாசல் மற்றும் இறைவனது படையின் கொடி ஏந்திய முன்னணி வீரர்களாக ஆக்கினான்.
அவர்கள் இறையச்சமுடையவராகவும், பரிசுத்தமானவராகவும்
திகழ்ந்தார்கள். இவர் ரஹ்மானாகிய இறைவனின்
மிக அதிக நேசத்தைப் பெற்றவர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மேலும் நல்ல வம்சத்தைச் சேர்ந்தவர்களாக
இருந்தார்கள். மேலும் காலத்தின்
தலைவர்களில் ஒருவராக இருந்தார்கள். வெற்றி வாகை சூடும் இறைவனின் சிங்கமாகவும்,
வலிமைமிக்க இறைவனின் வீரராகவும் திகழ்ந்தார்கள். கொடை வள்ளலாகவும் தூய உள்ளத்தைக் கொண்டவராகவும்
திகழ்ந்தார்கள். போர்க் களத்தின்
மையப்பகுதியிலிருந்து விலகாத வீரமிக்கவராகவும் திகழ்ந்தார்கள். அன்னாருக்கு நேர் எதிராக
ஒரு பெரும் படை இருந்தாலும் கூட அவர்கள் அதனை விட்டு நகர்வதில்லை. அவர்கள்
எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார்கள். இறையச்சம் மற்றும் தூய்மையில்
உச்சநிலையை அடைந்திருந்தார்கள். மேலும்
அன்னார் பொருளையும் செல்வங்களையும் வாரி வழங்குபவராகவும், துன்பங்களை
அகற்றுவது, ஏழைகள், அனாதைகள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆகியோரை அரவணைப்பதில் முதன்மை ஆனவராகவும்
திகழ்ந்தார்கள். மேலும் பல்வேறு போர்க்களங்களில்
அன்னாரின் தைரியத்தின் செயல்பாடுகள் தென்பட்டன.
அதாவது இவர்கள் மட்டும் இருந்ததில்லை. பலர் இருந்தனர். ஆனால் இவருக்கு நல்ல
மதிப்பு இருந்தது. அன்னார் வாள் மற்றும்
ஈட்டியினால் புரியும் போரில் ஆச்சரியத்திற்கும் திறமைகளுக்கும் ஓர் உதாரணமாகத்
திகழ்ந்தார்கள். அத்துடன் இனிமையாகப் பேசுபவராகவும், மிக
ஆழமாக கருத்துக்களை கூறக்கூடியவராகவும் இருந்தார்கள். அதாவது அவரது உரைகள் மிகவும் அறிவுப்பூர்வமானதாக
இருக்கும். அதற்கு உதாரணத்தை சாதாரண
மனிதரில் கூற முடியாது. அன்னாரது பேச்சு உள்ளத்தின் ஆழம் வரை சென்றடையும்.
அவர்கள் தமது பேச்சின் மூலம் சிந்தனையிலுள்ள கரைகளை அகற்றினார்கள்.
மேலும் அன்னார் உள்ளங்களை ஆதாரத்தின் ஒளியைக் கொண்டும் ஒளியூட்டினார்கள்.
அன்னார் அனைத்து கோட்பாடுகளையும் அறிந்தவராகத் திகழ்ந்தார்கள். மேலும் எவரேனும்
ஒருவர் ஏதேனும் விசயத்தில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும், அவரும் அன்னாரின் முன்பு தோல்வி அடைந்தவராக மன்னிப்புக் கேட்டவாறு
வருவார். அன்னார் அனைத்து சிறப்புகளிலும் சொற்பொழிவுத் திறன்களிலும் முழுமை
பெற்றவராகவும் திகழ்ந்தார்கள். எவர் ஒருவர் அன்னாரின் இந்த சிறப்புகளை நிராகரிக்கின்றாரோ
அவர் வெட்கக்கேடான வழியில் செல்பவராக இருக்கிறார். அன்னார் தேவை உடையவருக்கு
அனுதாபம் காட்டுவதற்கு முன்னுரிமை வழங்கி வந்தார்கள். போதும் என்று மன நிறைவு கொள்ளும்
ஒவ்வொருவருக்கும், பின்னாலேயே வந்து யாசிக்கக்
கூடியவர்களுக்கும் உணவளிக்குமாறு கட்டளையிட்டு வந்தார்கள். அதாவது போதுமென்று
நினைக்கக் கூடிய மக்களையும் கவனத்தில் கொள்வார்கள். அதாவது கேட்காதவர்களுக்கும்
யாசிப்பவர்களுக்கும் அவர் வலுக்கட்டாயமாக யாசித்தாலும் அவரையும் கவனத்தில் கொண்டு
வந்தார்கள். அன்னார் அல்லாஹ்வின்
நெருக்கத்தைப் பெற்ற மக்களை சார்ந்தவர் ஆவார்கள்.
இதனைப் போன்று திருக்குர்ஆன் என்ற கிண்ணத்திலிருந்து பால் அருந்துவதில்
முந்திச் செல்பவர்களைச் சார்ந்தவர் ஆவார்கள். அன்னாருக்கு திருக்குர்ஆனின் நுண்ணிய
கருத்துகளைப் பற்றிய ஆச்சரியமூட்டும் வகையில் ஞானம் இருந்தது. அதாவது திருக்குர்ஆனின் ஞானம் ஓர் ஆன்மீக பால்
ஆகும். அதை அவர் அதிகமாக புரியக் கூடியவர் ஆவார்கள்.
பிறகு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத்
செய்தார்கள். அப்போது நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியவாறு ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப்
பற்றி ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
அன்பு மற்றும் ஈமானால் பிணைக்கப்பட்டிருந்த ஒரு உயிர் நேசர் உயிரைப் பணையம்
வைக்கும் விதத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களது படுக்கையில் நபியின் கட்டளைக்கிணங்க
நடந்து கொண்டார்கள். எதிரிகளின்
ஒற்றன் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச்
சென்று விட்டார்கள் என்று சற்றும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காகவும், தன்னை ரஸூல் (ஸல்) அவர்கள் என
நினைத்து அங்கேயே நிற்க வேண்டும் என்பதற்காகவும் முகத்தை மூடிக் கொண்டு
படுத்திருந்தார்கள்.
ஃபார்ஸியில் கூறுகின்றார்கள்: அதன் பொருள், எவரும்
மற்றவருக்காக தன் தலையை வெட்ட விடமாட்டார். உயிரைக் கொடுக்கவும் மாட்டார்.
அன்புதான் இந்த வேலையை மிகவும் உளப்பூர்வமாக செய்ய வைக்கும்.
எனக்கு ஹஸ்ரத் அலி மற்றும் ஹுஸைனுடன் ஒரு அழகான, நுட்பமான
ஒப்புமை இருக்கின்றது. இந்த இரகசியத்தை கிழக்கிற்கும் மேற்கிற்கும் ரப்பைத் தவிர
வேறு எவரும் அறியமாட்டார்கள். மேலும் நிச்சயமாக நான் அலி (ரலி) மற்றும் அன்னாரின்
இரண்டு மகன்களுடன் அன்பு வைத்துள்¼ளன். எவர்
இவ்விருவருக்கும் எதிரியாக இருப்பாரோ அவருக்கு நான் எதிரியாவேன்.
பிறகு அன்னார் ஹஸ்ரத் ஹஸன் மற்றும் ஹஸ்ரத் ஹுஸைன் பற்றி இருவருக்கும்
வெவ்வேறான பணிகள் இருந்தன. தனித்தனி திறமைகள் இருந்தன. அவர்களுக்கு தனி அந்தஸ்து
ஒன்று இருந்தது. இவர்களைப் பற்றி
கூறுகின்றார்கள்:
ஹஸ்ரத் ஹஸன் (ரலி) அவர்கள் எனது சிந்தனையின்படி மிகச் சிறந்த வேலையை
செய்தார்கள். அதாவது கிலாஃபத்திலிருந்து விலகி விட்டார்கள். முதலிலேயே
ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மேலும் மக்கள் கொலை
செய்யப்படுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள் முஆவியாவிடமிருந்து விலகிச்
சென்றார்கள். ஹஸ்ரத் ஹஸன் உடைய இந்த
செயலால் ஷியாக்களின் மீது ஆட்சேபணை ஏற்படுகின்றது. எனவே இமாம் ஹஸன் (ரலி)
அவர்களின் இந்த செயலால் முழுமையான மகிழ்ச்சி அடையவில்லை. ஷியாக்கள் ஹஸ்ரத் அலி உடைய பிள்ளைகளைப் பற்றி
கூறும்போது, ஹஸ்ரத் ஹஸனை விட எந்த அளவு ஹஸ்ரத் ஹுஸைனை
மிகைப்படுத்திக் கூறப்படுமோ அந்த அளவு கூறுகிறார்கள். அதனால் அவர்களது செயலால்
மகிழ்ச்சி அடையவில்லை என்று கூறுகின்றார்கள்.
கூறுகின்றார்கள்: நாங்கள் இருவரையுமே புகழ்கின்றோம். நாங்கள் இருவரையுமே
பாராட்டுகின்றோம். உண்மையான விசயம் இதுவாகும். அதாவது, ஒவ்வொருவரது சக்தியும் தனித்தனியாகும். ஹஸ்ரத் இமாம் ஹஸன் (ரலி) அவர்கள்
முஸ்லம்களிடையே போர் ஏற்பட்டு கொலைகள் நடப்பதை விரும்பவில்லை. அவர்கள் அமைதியை
நிலைநாட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். மேலும் ஹஸ்ரத் இமாம் ஹுஸைன்
(ரலி) அவர்கள் ஒரு தீயவனின் கையில் பைஅத் செய்வதை விரும்பவில்லை. இதன் மூலம் மார்க்கத்தில் குழப்பம் ஏற்படும் என
கருதினார்கள். இருவருடைய எண்ணமும்
நல்லதாகத்தான் இருந்தது. இன்னமல் அஃமாலு
பின்னிய்யாத்தி. மேலும் யஸீத் உடைய
கையாலும் இஸ்லாத்திற்கு முன்னேற்றம் கிடைத்தது என்பது வேறு விசயமாகும். இது
இறைவனின் அருளாகும். அவன் விரும்பினால் ஒரு தீயவனின் மூலமும் முன்னேற்றம்
வழங்குவான். யஸீத் உடைய மகன் நல்லவனாக இருந்தான். அதாவது நல்ல மனிதன் ஆவான்.
இந்த விசயத்தை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். நபிமார்கள் மற்றும் இறைவனுடைய நல்லடியார்களாகவும், உண்மையாளர்களாகவும் இருக்கக் கூடியவர்கள் உலகில் ஒரு முன்மாதிரியாக
வருகிறார்கள். எவர் இந்த
முன்மாதிரியின்படி அமல் செய்ய முயற்சிக்க மாட்டாரோ, அவர்
அவருக்கு ஸஜ்தா செய்வதற்கும், அவரையே தேவைகளை நிறைவேற்றுபவர்
என்று கருதுவதற்கும் தயாராக இருக்கின்றார்.
அதாவது எந்த அளவு மிகைப்படுத்துகிறார்கள் என்றால் அவர்களை முன்மாதிரியாக
ஆக்கிக் கொள்ளாமல் ஸஜ்தா செய்ய ஆரம்பித்து, தமது தேவைகளை நிறைவேற்றக்
கூடியவராக கருதினால், அவர் இறைவனது பார்வையில்
மதிக்கத்தக்கவர் அல்ல. மாறாக மரணத்திற்குப் பிறகு அந்த இமாம் அவரை விட்டு
தவிர்ந்திருப்பார். இதனைப் போன்று ஹஸ்ரத் அலி (ரலி) மற்றும் ஹஸ்ரத் இமாம் ஹுஸைன்
(ரலி) அவர்களுடைய பதவிகளை அதிகமாக உயர்த்தக் கூடியவர்கள் ஒரு வகையில் அவர்களை வணங்குகின்றனர். அவர்கள் இமாம் ஹுஸைனைப் பின்பற்றக் கூடியவர்கள்
அல்ல. இதன் மூலம் இமாம் ஹுஸைன் (ரலி)
அவர்கள் மகிழ்ச்சி அடையமாட்டார்கள். நபிமார்கள்
எப்போதும் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியாகத்தான் வருவார்கள். உண்மை
என்னவென்றால் வெறும் பின்பற்றுதல் என்பது ஒன்றுமேயில்லை. அதாவது அமல் தான் அசல் விசயமாகும்.
நல்லடியார்கள் குறிப்பாக நபிமார்களின் வழிகாட்டலின்படி செயல்பட வேண்டும்.
தெளிவாகட்டுமாக! அஹ்மதிகளுக்கு அறிவுரை வழங்கியவாறு கூறுகின்றார்கள். ஏதாவதொரு
அஹ்மதி ஹஸ்ரத் இமாம் ஹுஸைனைப் பற்றி ஏதோ ஒன்றை கூறினார். அதனைப் பற்றி ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்களுக்கு தெரிய வந்த போது, அவர்கள் மிகவும் கோபம்
அடைந்தார்கள்.
மேலும் அஹ்மதிகளிடம் கூறினார்கள்: தெளிவாகட்டுமாக! ஏதாவதொரு நபரது கடிதம்
மூலமாக எனக்கு தெரிய வந்துள்ளது. அதாவது தன்னை எனது ஜமாஅத்துடன் தொடர்புபடுத்திக்
கூறக்கூடிய சில அறிவில்லாத மனிதர்கள் ஹஸ்ரத் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் பற்றி
நவூதுபில்லாஹ் ஹுஸைன் அவர்கள் காலத்தின் கலீஃபாவிடம் அதாவது யஸீத் இடம் பைஅத்
செய்யவில்லை. அவர் ஒரு கிளர்ச்சியாளர் ஆவார்.
யஸீத் உண்மையாளர் என்ற சொற்களை நாவினால் கூறுகின்றனர். லஃனத்துல்லாஹி அலல் காஸிபீன்.
கூறுகின்றார்கள்: எனது ஜமாஅத்தைச் சேர்ந்த நல்லடியார்களின் வாயிலிருந்து
இப்படிப்பட்ட மோசமான வார்த்தைகள் வெளிவந்திருக்கும் என எனக்கு நம்பிக்கை
இல்லை. மேலும் எனக்கு இதனுடன் இந்த
எண்ணமும் எனது உள்ளத்தில் தோன்றுகிறது. அதாவது பெரும்பாலும் ஷியாக்கள் தமது விர்து
- தபர்ரே, லான்தானில் என்னையும் இணைத்து
விட்டனர். அதாவது என்னையும் ஏசிப்
பேசுகின்றனர். எனவே இதில் எந்த விதமான
ஆச்சரியமும் கிடையாது. அதாவது ஏதாவது அறிவில்லாத ஒழுக்கங்கெட்ட நபர் முட்டாள்தனமான
கூற்றிற்குப் பதிலாக முட்டாள்தனமான கூற்றை கூறியிருப்பார். எவ்வாரென்றால், சில
அறிவில்லாத முஸ்லிம்கள் ஏதாவது கிறிஸ்தவர் நபி (ஸல்) அவர்களது கண்ணியத்திற்கு
எதிராக தீய வார்த்தைகளைக் கூறும் போது ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு எதிராக
கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விடுகின்றனர்.
எவ்வாறிருப்பினும் நான் இந்த பிரசுரம் வாயிலாக எனது ஜமாஅத்திற்கு
அறிவிக்கின்றேன். யஸீத் அசுத்தமானவனும் உலகின் புழுவும் அநீதியிழைப்பவனும் ஆவான்
என நாம் நம்புகிறோம். எந்தப் பொருளின் அடிப்படையில் ஒருவரை மூஃமின் என்று
அழைப்போமோ அது அவனிடம் இருக்கவில்லை.
மூஃமின் ஆவது எளிதான காரியமல்ல.
அல்லாஹ் இப்படிப்பட்ட நபர்கள் தொடர்பாக கூறுகின்றான்: உள்ளத்தில் ஈமான் எழுதப்பட்டவர்கள் தான்
உண்மையான மூஃமின் ஆவார்கள். இறைவன் மற்றும் அவனது விருப்பத்தினை எல்லா பொருட்களையும்
விட அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். மேலும் இறையச்சத்தின் நுண்ணிய வழிகளையும், குறுகிய பாதைகளையும் இறைவனுக்காக மேற்கொள்வார்கள். அவனது அன்பில் மூழ்கி
விடுவார்கள். சிலையைப் போன்று இறைவனிடமிருந்து தடுக்கக் கூடிய ஒவ்வொரு பொருளையும்
அது ஒழுக்க நிலையாக இருந்தாலும் சரி அல்லது தீய அமல்களாக இருந்தாலும் சரி அல்லது
கவனமின்மை மற்றும் சோம்பேறித்தனமாக இருந்தாலும் சரி இவை அனைத்தையும்
தன்னிடமிருந்து தூரம் விலக்கி விடுவார்கள்.
அவர்கள் தான் மூஃமின் ஆவார்கள். ஆனால் துரதிஷ்டசாலியான யஸீதிற்கு இந்த
விசயங்கள் எங்கு கிடைத்தது. உலகத்தின் நேசம் அவனை குருடனாக்கி விட்டது. ஆனால்
ஹுஸைன் (ரலி) அவர்கள் தூய்மையானவரும் தூய்மையாக்கப்பட்டவரும் ஆவார்கள். மேலும்
சந்தேகமின்றி இறைவன் தனது கைகளால் தூய்மைப்படுத்திய நல்லடியார்களை சேர்ந்தவர் - இறைவன்
தனது அன்பினால் நிரப்பியவர் ஆவார்கள்.
சந்தேகமின்றி அவர் சுவர்க்கத்தின் தலைவர்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களைப் பற்றி சிறிதளவு கூட தப்பெண்ணம்
கொள்வது ஈமானை வீணாக்கி விடக்கூடியதாகும். அந்த இமாமின் இறையச்சமும், இறையன்பும், பொறுமையும், உறுதியாக
நிலைநிற்றலும், தூய்மையும் இபாதத்தும் நமக்கு ஓர் அழகிய
முன்மாதிரியாகும். நாம் அந்த அப்பாவிக்கு கிடைத்த வழிகாட்டல்களைப்
பின்பற்றக்கூடியவர்கள் ஆவோம். அவருக்கு பகைவரான உள்ளம் அழிந்து விட்டது. மேலும்
செயல் அளவில் அன்னாரது நேசத்தை வெளிப்படுத்தக் கூடிய உள்ளம் வெற்றி பெற்று
விட்டது. அவரது ஈமான், நல்லொழுக்கம், வீரம்,
இறையச்சம், உறுதியாக நிலைநிற்றல் மற்றும்
இறையன்பின் அனைத்து காட்சிகளையும் பிரதிபலிப்பாக முழுமையான கட்டுப்படுவதுடன்
தனக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரு தூய கண்ணாடியில் ஒரு அழகிய மனிதனுடைய
பிம்பம் தெரிவதைப் போன்று தென்படுகிறது.
இந்த மக்கள் உலகின் கண்களிலிருந்து மறைந்துள்ளனர். அவர்களிலிருந்து இருக்கக்
கூடியவரைத் தவிர வேறு யார் அன்னாருடைய கண்ணியத்தை அறிவார்? இந்த உலகத்தின் கண்களால் அன்னாரைக் கண்டறிய முடியாது. ஏனென்றால் அவர்கள் உலகை விட்டு வெகு தூரம் உள்ளனர்.
இதுதான் ஹுஸைன் உடைய சஹீதிக்கு காரணமாக அமைந்தது. ஏனென்றால் அவர்கள்
அறியப்படவில்லை. உலகம், எந்தக் காலத்தில் அதன் தூய மற்றும் நல்லடியார்கள் மீது அன்பு
செலுத்தியிருக்கிறது. ஹுஸைனுடன் அன்பு செலுத்துவதற்கு!
எனவே ஹுஸைன் (ரலி) அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என நினைக்கும் இந்த செயல்
இரக்கமற்ற நம்பிக்கையில்லாத தன்மையை சேர்ந்ததாகும். எவர் ஒருவர் ஹுஸைன் அல்லது வேறெந்த தூய இமாம்களை
இழிவுபடுத்தினார் என்றால் அல்லது அவர்களுக்கு எதிராக தரக்குறைவான ஏதாவதொரு
வார்த்தையை தன் நாவினால் கூறுவார் என்றால் அவர் தனது ஈமானை வீணாக்குகின்றார்.
ஏனென்றால் அல்லாஹ் ஜல்லஸானஹு அவனது விருப்பத்திற்குரியவர்கள் மற்றும்
நல்லடியார்களுக்கு எவர் பகைவராக இருப்பாரோ அவருக்கு பகைவனாகி விடுகின்றான். எவர்
என்னை தவறாகப் பேசுகின்றாரோ ஏசிப் பேசுவாரோ அதற்கு பதிலாக வெறெந்த தூய மற்றும் இறை
அன்பிற்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பேசுவது தீய செயல் ஆகும். இப்படிப்பட்ட
நேரத்தில் மன்னிப்பது, அறிவற்ற பகைவனுக்காக துஆ செய்வது
சிறந்ததாகும். ஏனென்றால் அவர்கள் நான்
யாரிடமிருந்து வந்துள்¼ளன் என்பதை அறிந்தால் ஒருபோதும்
தவறாகப் பேசமாட்டார்கள்.
இறைவனது அன்பிற்குரியவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு ஆன்மீகக்
குடும்பம் என்ற பட்டம் மிகவும் உகந்ததாகும்.
தரூது சரீஃபிலும் ஆலி முஹம்மது என்ற ஓதுகின்றோம். கூறுகின்றார்கள்: ஆன்மீக
குடும்பம் என்ற சொல் இறைவனது அன்பிற்குரியவர் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்குரியதாகும். அந்த ஆன்மீக குடும்பம் அதாவது ஹஸ்ரத் இமாம் ஹஸன், ஹுஸைன் பற்றி அல்லது அஹ்லே பைத் பற்றி கூறுகின்றார்கள். அதாவது அந்த ஆன்மீக குடும்பம் தன்னுடைய தாய்வழிப்
பாட்டனாரிடம் இருந்து அந்த ஆன்மீகத்தை வாரிசு அடிப்படையிலான சொத்தாகப்
பெறுகின்றனர். அதனை அபகரிக்கக்கூடிய
எவராலும் அபகரிக்க முடியாது. அவர்கள்
அனுமதியின்றி எவராலும் அபகரிக்க முடியாத அந்த சுவர்க்கத்திற்கு வாரிசாவார்கள்.
ஆக, இந்த கீழ்தரமான சிந்தனை சில முஸ்லிம்
பிரிவுகளிடம் அவர்களின் ரூஹ் மரணித்த போது ஏற்பட்டது. மேலும் அவர்களுக்கு ஆன்மீக
ரீதியில் குடும்பம் ஆவதிலிருந்து எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. இந்த வகையில் ஆன்மீக செல்வங்களிலிருந்து
வாரிசற்றுப் போனதால் அவர்களது அறிவு மழுங்கி விட்டது. அவர்களது உள்ளம் கடினமாகி
விட்டது. மேலும் பார்வைக் குறைவற்றுப் போனது.
ஹஸ்ரத் இமாம் ஹுஸைன் மற்றும் ஹஸ்ரத் இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்கள்
இறைவனது நல்லடியார்களாகவும், திறமைக்குரியவர்களாகவும்,
மதிப்பிற்குரியவர்களாகவும், கண்ணியத்திற்குரியவர்களாகவும்
வழிகாட்டலின் இமாமாகவும் இருந்தார்கள். மேலும் எவ்வித சந்தேகமுமின்றி இரண்டு
வகையான பொருளின் அடிப்படையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் குடும்பமாக
இருந்தார்கள். இதன் மீது நம்பிக்கை
கொண்டவர்களில் யார்தான் ஆட்சேபனை செய்வர்?
ஆக, அறிவுடையவர்களின் ஞானம் மிகுந்தவர்களின்
கொள்கையாவது ஹஸ்ரத் இமாம் ஹுஸைன் மற்றும் இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹுமா),
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் பௌதீக ரீதியில் குடும்பத்தைச்
சேர்ந்தவராக இல்லையென்று வைத்துக் கொண்டாலும், ஆன்மீக
ரீதியில் விண்ணில் குடும்பத்தைச் சேர்ந்தவராக ஆகி விட்டார்கள். சந்தேகமின்றி நபி (ஸல்) அவர்களுடைய ஆன்மீக
செல்வங்களுக்கு வாரிசாவார்கள்.
அழியக்கூடிய உடலுக்கு ஒரு சொந்தம் இருக்கும் போது ஆன்மாவிற்கு எந்த விதமான
சொந்தமும் இல்லையா? மாறாக ஹதீஸிலிருந்தும்
திருக்குர்ஆனிலிருந்தும் ரூஹ் -க்கு இடையிலும் சொந்தம் இருக்கின்றது.
தொடக்கத்திலிருந்தே நட்பும், பகைமையும் இருக்கிறது என்பது
நிரூபணமாகிறது. ஒரு அறிவுள்ள மனிதரால்
சிந்தனை செய்ய முடியும். அழிவில்லாத வகையில் நிரந்தரமாக ரஸூல் குடும்பம் தவறாக
இருப்பது பெருமையா? அல்லது உடல் ரீதியாக இருப்பது பெருமையா? தக்வா, தூய்மை
இல்லாமல் ஈமான் ஒன்றுமற்றதாகும். இதன்
மூலம் நாம் ரஸூல் (ஸல்) அவர்களது கண்ணியக் குறைவை ஏற்படுத்தி விட்டோம் என எவரும்
நினைக்க வேண்டாம்.
அன்னார் கூறுகின்றார்கள்: ஆன்மீக ரீதியில் சந்ததியாக இருப்பது, பௌதீக ரீதியில் சந்ததிகளாக இருப்பதை விட அந்தஸ்தில் மிக உயர்ந்ததாகும்.
மேலும் கூறுகின்றார்கள்: ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்களின் அஹ்லே பைத்திற்கு
கண்ணியக்குறைவை ஏற்படுத்துகின்றோம் என எண்ண வேண்டாம். இவ்வாறு எழுதுவதால் நமது
நோக்கம், ஹஸ்ரத் இமாம் ஹஸன் மற்றும் இமாம் ஹுஸைன்
(ரலியல்லாஹு அன்ஹுமா) உடைய கண்ணியத்திற்கு பௌதீக ரீதியில் நபி (ஸல்) அவர்களுடைய
குடும்பத்தினராக இருப்பது மட்டும் ஏற்புடையது அல்ல. ஏனென்றால் இவை ஆன்மீக
தொடர்பில்லாமல் ஒன்றுமற்றவையாகும்.
அதாவது அவர்கள் பௌதீக ரீதியில் ரஸூல் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக
இருந்தார்கள் என்பதால் அவர்களுக்கு கண்ணியம் கிடையாது. மாறாக உண்மையான விசயம்
ஆன்மீக தொடர்பாகும்.
மேலும் கூறுகின்றார்கள்: ஆன்மீக ரீதியில் அன்னாரது குடும்பத்தில்
இணைந்தவருக்கு தான் நபி (ஸல்) அவர்களுடன் உண்மையான தொடர்பு உள்ளது. இறைத் தூதர்களின் ஞானமும், ஆன்மீக ஒளியும் தூதர்களுக்கு சந்ததிகளைப் போன்றவையாகும். இவை அவர்களிடமிருந்தே பிறக்கின்றன. அதாவது உண்மை என்னவென்றால் அவர்களின்
போதனைகளும், ஞானமும், ஆன்மீக ஒளியும்
அவர்களை ஏற்றுக் கொண்டவர்களிடம் பிரதிபலிக்கின்றது. இந்த ஞானம் மற்றும்
ஒளியிலிருந்து யார் புதிய வாழ்வை பெறுகிறார்க¼ளா மேலும் ஒரு
புதிய பிறப்பை அந்த ஒளியின் மூலமாக பெறுவார்க¼ளா அவர்க¼ள ஆன்மீக ரீதியில் முஹம்மதுவின் குடும்பம் என்று அழைக்கப்படுவர்.
ஆக, ஒவ்வொரு அஹ்மதியும், ஒவ்வொரு
முஸ்லிமும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடைய இந்த போதனையின்படி செயல்படக்கூடியவர்
என்றால், அன்னாரின் ஒளியிலிருந்து பலன்பெறக் கூடியவர்
என்றால் அன்னாருடைய உண்மையான போதனைகளின்படி செயல்படக் கூடியவர் என்றால், அவர் முஹம்மதின் குடும்பத்தில் ஒருவராக எண்ணப்படுவார். இந்த உண்மையான
சரியான பாதையின் மீது செல்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும். பெரியவர்கள் ஒவ்வொருவரின் அந்தஸ்தை கண்டறிந்து
அதற்கு கண்ணியமளிக்க வேண்டும்; மதிப்பளிக்க வேண்டும்.
பரஸ்பரம் உள்ள குழப்பங்களையும் கொலைகளையும் நிறுத்த வேண்டும். அனைத்து கொலை கொள்ளைகளும்,
குழப்பங்களும், முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை
கொலை செய்வதில், இஸ்லாத்தின் எதிரிகளின் கை இருப்பது என்பது
அப்பாற்பட்ட விசயம் ஒன்றுமல்ல. அவை முஸ்லிம்களில் பிரிவுகளை உருவாக்கி, பணம் கொடுத்து, தொகையை செலவு செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.
அல்லது தானே உள்¼ள நுழைந்து இவை அனைத்தையும் செய்கின்றனர்.
இப்போது ஷியாக்கள் மீது நடைபெறுகின்ற தாக்குதல்கள், பள்ளிவாசல்களின்
மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் இவற்றில் அரசாங்கம், தீவிரவாதிகள் என்று கூறக்கூடிய அமைப்புகளின் கை வரிசை உள்ளது.
தீவிரவாதிகள் தொடர்பாக அவர்கள் முஸ்லிம்க¼ள அல்ல என்று
அரசாங்கங்களின் அறிக்கை வெளி வந்துள்ளது. இது பாகிஸ்தானிலும் வெளி வந்துள்ளது. மேலும் அதில் இவர்கள் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக
வெளியிலிருந்து வந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ் தான் இந்த உம்மத்தின் மீது புரிவானாக! இவர்கள் ஒன்றுபடுவதற்கு
வாய்ப்பளிப்பானாக! அஹ்மதிகளிடம் நான் இதனைக் கூற விரும்புகின்றேன். ஏனைய முஸ்லிம்
பிரிவுகள் ஒருவர் மற்றவர்களை பழிவாங்குகின்றனர்.
ஒருவர் தாக்குதல் நடத்தினால் மற்றவரும் தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனால்
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய பைஅத்தில் வந்த பிறகு, நம் மீது இந்த அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து எல்லா வித அநீதியிழைத்த
பிறகும் கூட நமது சிந்தனையில் பழிவாங்கும் எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது.
ஏதாவது ஒரு விசயத்தின் தேவை இருக்கிறது என்றால் நம்மில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அநீதிக்குப் பிறகும் நன்மையிலும், இறையச்சத்திலும்
முன்னேற வேண்டும். முன்பை விட அதிகமாக
இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்தி துஆவில் ஈடுபட வேண்டும். ஹஸ்ரத் இமாம் ஹுஸைன் (ரலி)
அவர்கள் உயிர் தியாகம் செய்து நம் முன்னால் ஏற்படுத்திய செயல் முன்மாதிரியானது
நமக்கு வழிகாட்டியாகும்.
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் இந்த விசயத்தை முன்னிறுத்தியவாறு தமது
ஒரு கவிதையில் ஜமாஅத்திற்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்: அதாவது அவர்கள்
உங்களை ஹுஸைன் ஆக்குகின்றனர். ஆனால் நீங்க¼ளா யஸீத்
ஆகின்றீர்கள். இது எவ்வளவு மலிவான வியாபாரம் ஆகும். பகைவனை அம்பு எறிய விடுங்கள்.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் ஹஸ்ரத் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களைப் பற்றி
அவர் சுவர்க்கத்தின் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.
கூறியுள்ளார்கள்: நமக்கு பொறுமை மற்றும் உறுதியாக நிலைநிற்றலுக்கான பாடம்
கற்பித்து சொர்க்கத்திற்கான வழியைக் காட்டினார்கள்.
முஹர்ரம் மாதத்தின் இந்த நாட்களில் குறிப்பாக ஒவ்வொரு அஹ்மதியும் தனது பொறுமை
மற்றும் உறுதியாக நிலை நிற்றலுக்காக துஆ செய்யும் போது எதிரிகளின் தீங்கிலிருந்து
தவிர்ந்திருப்பதற்காக துஆ செய்யுங்கள். ரப்பி குல்லு சைய்யின் காதிமுக ரப்பி
ஃபஹ்பள்னி வன்ஸுர்னி வர்ஹம்னி என்ற துஆவை அதிகமாக செய்ய வேண்டும்.
இந்த துஆவை நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு அதிகமாக செய்ய வேண்டும் என முன்பே
கூறியிருந்தேன்.
அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக ஃபீ நுஹூரிஹிம் வநவூதுபிக்க மின் ஷுரூரிஹிம் என்ற
துஆவையும் அதிகமாக செய்யுங்கள்.
தரூது சரீபை ஓதி வருமாறு கடந்த நாட்களிலும் கூறினேன். இதற்கு முன்னரும் கூறி வந்துள்¼ளன். இதன் பக்கம் அதிகமாக கவனம் செலுத்துங்கள். அல்லாஹ் ஒவ்வொரு
அஹ்மதியையும் தனது பாதுகாப்பில் வைப்பானாக! எதிரிகள் நமக்கு எதிராக தீட்டுகின்ற
திட்டங்களுக்கு எதிரில் தனது சிறப்பான உதவியை வழங்குவானாக! நம் மீது கருணை
காட்டியவாறு அஹ்மதிய்யத்தின் எதிரிகளின் ஒவ்வொரு தீங்கிலிருந்தும் ஜமாஅத்தின்
ஒவ்வொரு உறுப்பினர்களையும் பாதுகாப்பானாக! ஜமாஅத்தையும் பாதுகாப்பானாக! அல்லாஹ்
இவர்களது ஒவ்வொரு தீங்கையும் ஜமாஅத்திற்கு எதிராக தீட்டிக் கொண்டிருக்கக்கூடிய
ஒவ்வொரு திட்டங்களையும் இவர்கள் மீதே திருப்புவானாக! நம்மை ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்களுடைய உண்மையான ஆல் - குடும்பத்தில் இணைப்பானாக!
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் கூறியது போன்று, உண்மையான அந்தஸ்து ஆன்மீக குடும்பத்திற்குரியதாகும். பௌதீக சொந்தமும் இருந்தால் அது ஒரு அன்பளிப்பு
ஆகும். ஆனால் பௌதீக குடும்பமாக இருந்து கொண்டு ஆன்மீக குடும்பத்தின் அந்தஸ்தைப்
பெறுவதற்கு பௌதீக குடும்பமும் சந்ததியும் முயற்சிக்கவில்லை என்றால், நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அல்லாஹ் தருவதாக வாக்குறுதி
அளித்த அந்த அருளிலிருந்து ஒருபோதும் பலன்பெற முடியாது.
ஆக, நாம் எந்நேரமும் நம்மை ஆராய்ந்து பார்க்க
வேண்டியது அவசியமாகும். தரூது ஓதும் போதெல்லாம் இந்த விசயத்தை ஆராய வேண்டும். அதாவது இந்த தரூதிலிருந்து பலன் பெறுவதற்கு
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த போதனைகளின்படி எந்த அளவு அமல் செய்ய
முயற்சிக்கின்றோம் என ஆராய வேண்டும். காலத்தின் இமாமின் பைஅத்தில் இணைந்து
திருக்குர்ஆனின் ஆட்சியை நம்மீது எந்த அளவு சுமத்திக் கொள்ளக் கூடியவர்களாக உள்¼ளாம் என்பதை ஆராய வேண்டும்.
அல்லாஹ் இந்த பெரியோர்களின் அந்தஸ்தைப் பற்றிய கூற்றுகளையும், அஹ்மதிய்யத்தின் எதிரிகளின் கடுமைகளையும், அநீதிகளையும்,
சில அரசுகள் இந்த அநீதிகளுக்கு பங்கு வகிப்பதும் நம்மை முன்பை விட
அதிகமாக இறை நெருக்கத்தைப் பெற்றுத் தரக்கூடியதாக அமைய வேண்டும். நமது தியாகங்கள்,
நல்ல இயல்புடைய மக்களை அஹ்மதிய்யத்தின் அரவணைப்பில் கொண்டு
வரக்கூடியதாக இருக்க வேண்டும்.
நாம் அஹ்மதிய்யத்தின் அதாவது உண்மையான இஸ்லாத்தின் வெற்றியின் காட்சிகளைக் காணக்கூடியவர்களாக
வேண்டும். இஸ்ரேல், பாலஸ்தீனுடன் நடந்து கொள்வதைக் குறித்து நான் ஆரம்பத்திலும்
கூறினேன். இதற்காக அதிகமாக துஆ
செய்யுங்கள். அல்லாஹ் அப்பாவி உயிர்களை எல்லா
விதமான அநீதியிலிருந்தும் காப்பாற்றுவானாக! இஸ்ரேலைப் பற்றி அவர்களின் கூற்றுகள்
வெளிவருகின்றன. அவர்கள் நாங்கள் அச்சத்தின் நிலையில் இருக்க மாட்டோம். அதனால் தான்
பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தினோம் என்கின்றனர். தானே முதலில் தாக்குதல் நடத்தினர். அவர்களது
மக்க¼ள அவர்களைக் கொன்றார்கள். அவர்களிடம் கேட்ட போது,
இவர்கள் எங்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துகின்றனர்
என்கின்றனர். இது வித்தியாசமான
பயமுறுத்தல் ஆகும். இந்த வித்தியாசமான
வழிமுறையை உலகவாதிகள் பயன்படுத்துகின்றனர்.
இவை அனைத்தும் நான் கூறியது போன்று முஸ்லிம்களிடம் எந்த விதமான ஒற்றுமையும்
இல்லை என்பதனாலாகும். அல்லாஹ் கருணை புரிவானாக! அந்த அப்பாவி பாலஸ்தீனர்கள் மீதும்
கருணை காட்டுவானாக! இவர்கள் எல்லா விதமான அநீதியிலிருந்தும் பாதுகாப்பானாக!
(ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது ஐந்தாவது
கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹுத் தஆலா பிநஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் 23-11-2012 அன்று ஆற்றிய ஜுமுஆ
பேருரை)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None