அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபா ஆன்மீக தலைவர் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இறையச்சம் என்றால்
என்ன?
அல்லாஹ் தஆலா சூரா
மாயிதாவில் கூறுகின்றான்:
وَ اتَّقُوا اللّٰهَ وَ اسمَعُوْا وَ اللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ
இது நேர்மையான சாட்சியம்,
உள்ளபடி கிடைப்பதற்கும் தமது
சாட்சியத்திற்கு எதிரான சாட்சியம் வரலாமென்ற அச்சம் அவர்களின் (முதல் சாட்சிகளின்)
உள்ளத்தில் ஏற்படுவதற்கும் தூண்டுதலாக இருக்கும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (அவனுடைய
கட்டளைகளுக்கு) செவிசாயுங்கள். கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
وَ اتَّقُوا اللّٰہَ وَ اسْمَعُوْا وَ اللّٰہُ لَا یَہْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (அவனுடைய கட்டளைகளுக்கு) செவிசாயுங்கள். கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
(அல்-மாயிதா: 109)
இவ்வசனத்திலிருந்து இறையச்சம் என்றால் கீழ்படிதல்
என்பதாகும் என்பது தெரிய வருகிறது.
கீழ்படிதல் எவ்வாறு
உருவாகும்?
மேலும் கீழ்படிதல்
என்பதை அன்பின் காரணமாக அல்லது அச்சத்தின் காரணமாக பேணப்படுகிறது. அன்பானது அழகு மற்றும்
நன்மை செய்தல் இவைகளை பார்த்து உருவாகின்றது. மேலும் அச்சம் என்பது வல்லமையை கண்டு
உருவாகின்றது. பொதுவாக மனிதனின் இயல்பில் இவ்விரண்டு விஷயகளும் இருக்கின்றன. ஆகவேதான்
சூரா ஃபாத்திஹாவில் இவ்விரண்டு விஷயங்களை கொண்டு எடுத்து கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்
கூறுகின்றான்:
"அல்ஹம்து லில்லாஹி
ரப்பில் ஆலமீன், அர்ரஹ்மா நிர்ரஹீம்;
இவ்வனைத்து நல்ல அமல்களை
நினைவுக் கூறி ஒரு பக்கம் இது நல்லவையாகவும் இருக்கின்றது இதனை கொண்டு மனிதனை தமது
கீழ்படிதலின் பக்கம் கவனமூட்டியுள்ளான். பொதுவாக ஒரு சில உள்ளங்கள் அச்சத்தை வெளிப்படுத்தாமல்
கீழ்படிவதில்லை. ஆகவே அவ்வாறானவர்களுக்கு இறைவன் கூறுகின்றான்:
"மாலிக்கி யவ்மித்தீன்,
அதாவது தீர்ப்பு நாளிலிலும்
நான் எஜமானனாக இருக்கின்றேன்.
நபிமார்களின் தோற்றத்தின்
மூலம் இறையச்சம் ஏற்படுதல்
ஆக, கீழ்படிதல் என்பது முழு அன்பை சார்ந்து இருக்கிறது
அல்லது முழு அச்சத்தை சார்ந்து இருக்கிறது. இதற்காக அல்லாஹ் இருவேறு விஷயங்களை ஏற்படுத்தியுள்ளான்.
ஒரு வானத்தை சார்ந்தது மற்றொன்று பூமியை சார்ந்ததாகும். மனிதர்களுக்கு கீழ்படிதல் அல்லது
இறையச்சத்தை உருவாக்கக்கூடிய வானத்தை சார்ந்த விஷயமானது நபிமார்களின் தோற்றமாகும்.
ஆகவே ஹஸ்ரத் இப்ராஹீம்
அலை அவர்கள் உலகத்திலிருந்து இறையச்சம் குறைந்து கொண்டே செல்கிறது என்பதை பார்த்தபோது
அவர்கள் தனது இறைவனிடம் பணிவோடு இவ்வாறு துஆ வேண்டினார்:
رَبَّنَا وَ ابْعَثْ فِیْہِمْ رَسُوْلًا مِّنْہُمْ یَتْلُوْا عَلَیْہِمْ اٰیٰتِکَ وَ یُعَلِّمُہُمُ الْکِتٰبَ وَ الْحِکْمَۃَ وَ یُزَکِّیْہِمْ اِنَّکَ اَنْتَ الْعَزِیْزُ الْحَکِیْمُ
"எங்களுடைய இறைவா!
அவர்களுக்கு உனது அடையாளங்களை எடுத்தோதி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்
கொடுத்து, அவர்களைத் தூய்மைப்
படுத்தும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவர்களிடம் தோற்றுவிப்பாயாக. நிச்சயமாக நீயே வல்லோனும்,
ஞானமிக்கோனுமாவாய்.
(அல்-பக்கரா : 130)
இந்த துஆ நிறைவேறியது.
மேலும் ஒரு தூதர் தோன்றினார் அவர் திமிரு பிடித்த சமுதாயத்தில் கீழ்படிதல் என்ற ஆன்மாவை
உருவாக்கிவிட்டார். நபிமார்களின் கரமானது அந்த தூய இறைவனின் கையில் இருக்கின்றது. ஆகவே
எவர் அவரோடு தொடர்பை ஏற்படுத்துகின்றாரோ அவரும் தூயவராக ஆகி விடுகின்றார். மின்னலின்
சங்கிலி இதற்கு ஓர் உதாரணமாக இருக்கின்றது. எவருக்கு இதனோடு சிறு அளவு தொடர்பு ஏற்படுகிறது
அவர் தாக்கத்தை பெறாமல் இருக்க முடியாது. ஆயிரக்கணக்கான தன்னடக்கம் கொண்ட சமுதாயம்
இத்தனை ஆண்டு காலமாக பணி புரிந்து வந்தும் அவர்களை குறித்த கூற்று எவ்வித பயனுமில்லை
என்பதை நீங்கள் பார்ப்பதில்லையா. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தர்பாரிலிருந்து
ஓர் ஓசை மட்டும்தான் எழும்புகிறது அனைவரும் எவ்வித விதிவிலக்குமில்லாமல் மதுவின் குவலையை
உடைத்தெறிந்து விடுகின்றார்கள்.
உலகத்தின் ஒரு சிறு
பலனை பெறுவதற்காக மார்க்கத்தை பின்னால் தூக்கி எறிந்து விடும் அளவுக்கு முஸ்லிகளின்
நிலை ஆகிவிட்டது. ஆனால் இதே முஸ்லிம்களிலிருந்து "அப்துல் லத்தீஃப்" தனது
கரத்தை ஒரு நபியின் கரத்தோடு சேர்க்கின்றார். பிறகு மார்க்கத்தில் தனது உயிரை கூட தியாகம்
செய்து விடுகின்றார். காபூலின் தலைவரிடமிருந்து, ''மிர்ஸாவை நான் மஸீஹாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று
நீ வெளிப்படையாக மாட்டும் கூறிவிடு'' என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் கல்லெறிந்து கொல்லபடுவதை விரும்புகின்றார். மேலும்
இவ்வார்த்தையை தனது நாவில் எடுக்க விரும்பவில்லை. இவை எவ்வாறு ஆனது? ஏனென்றால் அவர் வானத்தை சார்ந்தவையின் வாயிலாக தூய்மையாக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு வழி பூமியை
சார்ந்தது ஆகும். மனிதன் தனது சுயர் முயற்சியை மேற்கொள்ளுதல் என்பது இதன் பொருள் ஆகும்.
இந்நேரத்தில் மனிதனின் ஆன்மாவின் நிலை மெதுவாக செல்லும் குதிரையை போன்று இருக்கின்றது.
ஆகவே கூறுகின்றான்:
"வல்லாதீன ஜாஹது பீனா
ல நஹ்தியன்னஹும் சுபுலான"
"எவரொருவர் எமது வழியில்
முயற்சியை மேற்கொள்வாரோ, நாம் அவருக்கு நேர்வழியை
காட்டுகிறோம். (அல்-அன்கபூத்: 70) இந்த முயற்சிகளில்
சிலவற்றை இங்கு கூறப்படுகின்றது:
முதலாவது விஷயம் சுஹ்பத்தே
சாதிக்கீன் (உண்மையாளர்களுடன் இருத்தல்) ஆகும். உண்மையாளர்களுடன் இருப்பதனால் மனிதன்
தூய்மை அடைகின்றான். ஒருவருடன் இருப்பதனால் ஏற்படும் தாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்
ஆகும். மக்கள் நோய் நிவாரணத்தை தேடி அலைகின்றனர்.
எனது பார்வையில் உலகத்தில் ஓர் (ஆன்மீக) நோய் நிவாரணம் இருக்கிறது என்று சொன்னால் அது
சுஹ்பத்தே சாதிக்கீன் ஆகும். இதன் மூலம் பலன் பெறுபவர் அருளுக்குரியவர் ஆவார்.
அல்லாஹ் தஆலா திருக்குர்ஆனில்
கூறுகின்றான்: யா அய்யூகல்லாதீன ஆமனு இத்த்குல்லாஹ் கூனு மஆஸ் சாதிக்கீன் (அத்தவ்பா:
119) அதாவது நம்பிக்கையாளர்களே!
இறையச்சத்தை மேற்கொள்ளுங்கள், மேலும் இந்த தக்வாவை
பெறுவதற்கான வழி என்ன? அதாவது நீங்கள் உண்மையாளர்களுடன்
இருந்து கொள்ளுங்கள். உண்மையாளர்களிடம் ஓர் மின்னல் போன்ற தாக்கம் இருக்கின்றது. இதனால்
பாவத்தின் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. உண்மையாளர்
இறைவனிடத்தில் ஓர் மரியாதைக்குரியவராக இருக்கின்றார். இதன் அருளாக உண்மையாளர்களுடன்
இருப்பவரும் மதிப்பிற்குரியவராக ஆகிவிடுகின்றார். ஹஸ்ரத் ஆயிஷா சித்தீக்கா ரலி அவர்கள்
தனது சகோதரியின் மகன் மீது ஏன் வெருப்படைந்தார்கள் என்றால் அதிகமாக சதக்கா செய்வதை
அவர் குறை கூறி வருபவராக இருந்தார். இனிமேல் எமது வீட்டுக்குள் எனது சகோதரனின் மகன்
வரக்கூடாது என்று கட்டளையிட்டார்கள். ஒரு முறை சில பெரும் நபித்தோழர்கள் (ரலி) (வீட்டிற்கு)
உள்ளே வருவதற்கு அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுடன்
சித்தீக்கா (ரலி) அவர்களின் சகோதரனின் மகனும் இருந்தான். அவரும் உள்ளே சென்று விட்டார்.
உண்மையாளர்களுடன் இருப்பதனால் என்ன பலன் கிடைக்கிறது என்பதை பார்த்தீர்களா!?
இவ்வாறே ஓர் நல்ல பொருளுடன் ஓர் சிறு பொருளும் விற்கப்பட்டு விடுகின்றன என்பதை
பார்க்கவும் செய்கின்றோம்.
இரண்டாவது வழி உள்ளத்தை
கணக்கிட்டு பார்ப்பதாகும். அதாவது ஒவ்வொரு நாளும் தாம் செய்யும் பணிகள் உலகத்தை சார்ந்து
இருக்கிறதா அல்லது மார்க்கத்தை சார்ந்து இருக்கிறதா என்பதையும் மற்றும் அல்லாஹ்விற்கு
நாம் ஏதேனும் மாறு செய்யும் பணியை ஒன்றும் செய்யவில்லையே என்பதை அலசி பாருங்கள். பிறகு
அதனை சீர் செய்யுங்கள். அல்லாஹ் தஆலா கூறுகின்றான்:
یٰاَیُّہَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَ لْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْۡ لِغَدٍ ۚ وَ اتَّقُوا اللّٰہَ اِنَّ اللّٰہَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ
(அல்-ஹஷ்ர்: 19)
நம்பிக்கையாளர்களே!
நீங்கள் இறைவனை அஞ்சுங்கள். அந்த தக்வா எவ்வாறு பெற முடியும் என்று சொன்னால்,
ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று
என்ன செய்தது என்பதை பார்க்க வேண்டும். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் எதனையெல்லாம்
செய்து வருகின்றீர்களோ அதனை அவன் அறிபவனாக இருக்கின்றான். எவர் அல்லாஹ் என்னை கவனித்து
கொண்டிருக்கிறான் என்று நம்பிக்கை வைக்கின்றானோ மேலும் தனது அமல்களை கவனித்து வருகின்றானோ,
மேலும் நான் நாளைக்கென்று
என்ன தயார் செய்து வைத்துள்ளேன் என்று கவனித்து வருகின்றானோ அவரே இறையச்சமுள்ளவராக
ஆகிவிடுகின்றார்.
மூன்றாவது வழி பாவச்செயல்களின்
மீது வெட்கப்பட்டு மனம் திரும்புவதாகும். அத்தாயிபு மினத் தன்ம்பி கமன் லா தன்ம்ப லஹூ
(இப்னு மாஜா கிதாபுஸ் ஸஹத் பாப் திக்ருத் தவ்பா) எவரொருவர் தமது பாவத்திற்காக வெட்கப்படுவாரோ
அவர் அதனின் தீய தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவார். மேலும் இனி வரும் காலங்களில்
நன்மை மாற்று தக்வாவிற்காக தன்னைத் தானே தயார் செய்து கொள்வார். மேலும் ஷைத்தானின்
மேலதிகமான தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருப்பார். ஹஸ்ரத் முஆவியா (ரலி) அவர்களின்
ஃபஜ்ர் தொழுகை தாமதமாக தோழக்கூடியதாக ஆகிவிட்டது. இதன் காரணமாக அன்னாருக்கு எந்த அளவுக்கு
மனக்கவலை ஏற்பட்டது என்று சொன்னால் எந்த அளவு இறை சந்நிதானத்தில் அழுதார்கள்,
கதறினார்கள் என்று சொன்னால்
இதன் காரணமாக அவர்களுக்கு ஒரு தொழுகைக்கு பதிலாக பத்து தொழுகைக்கான நன்மை கிடைத்தது.
மறுநாள் ஒருவர் அவரை எழுப்பினார், நீ யார் என்று அவர்கள்
கேட்டார்கள். அதற்கு அவன் நான் ஷெய்த்தான் என்று கூறினான். என்னது! தொழுகைக்காக ஷெய்த்தான்
எழுப்புகின்றானா! என்று ஆச்சரியம் கொண்டார். அவன் கூறினான், நான் எழுப்பவில்லை என்றால், நீங்கள் ஒரு தொழுகைக்கு பதிலாக பத்து தொழுகைக்கான
நற்கூலியை பெற்று விடுகின்றீர்கள். ஆக, உங்களது ஷெய்த்தான் முஸ்லிம் ஆகிவிடும் அளவிற்கு நீங்கள் உங்கள் பாவச்செயல்களை
கண்டு மனவருத்தம் கொள்ளுங்கள்.
நான்காவது வழி எல்லா
பணிகளிலும் இறைவன் மீது தவக்கல் (உறுதியான நம்பிக்கை) வைத்துக் கொண்டு வர வேண்டும்.
ஹஸ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், ஒருவர் இரவு பொழுதும் எனது வேலையை இப்னு உமர் செய்து
விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தால் பிறகு தேவையில்லாமல் எனது கவனம் முழுவதும் அதன்
பக்கமே இருக்கும். இதே போன்று எவரொருவர் அல்லாஹ் தஆலாவை தனது எல்லா காரியங்களிலும்
உதவியாளனாக வைத்துக் கொள்கின்றாரோ அல்லாஹ் தஆலாவும் அவர் மீது சிறப்பான கவனம் செலுத்துவான்.
எவரொருவர் அல்லாஹ் தஆலாவின் மீது கவனம் செலுத்துவாரோ அவர் ஏன் கட்டுப்படக்கூடியவராக
ஆக மாட்டார்!?
இறையச்சத்தை பெறுவதற்கான
ஐந்தாவது வழி இஸ்திகாரா ஆகும். அதாவது தினமும் தனது பணிகளுக்காக இஸ்திகாரா செய்து வரவேண்டும்.
மேலும் தனது இறைவனிடம், எப்பணி நன்மை மற்றும்
உனது திருப்தியை சார்ந்து இருக்கிறதோ அதனை செய்வதற்கான தவ்ஃபீக்கை தந்தருள்வாயாக மேலும்
எது உனது திருப்தியை சார்ந்ததாக இல்லையோ அதிலிருந்து என்னை விலக்கி விடுவாயாக என்று
துஆ செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வரமுடியவில்லை என்றாலும் வாரத்திற்கு ஒரு
முறையாவது செய்து வரவும்.
ஆறாவது வழி என்னவென்றால்,
துஆவில் தொடர்ந்து நிலைத்திருப்பதாகும்.
எவரொருவர் தனது அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டிருப்பாரோ அல்லாஹ் தஆலா அவருக்கு தனது
திருப்தியின் வழியை காட்டுகின்றான். மேலும் வழிகெட்டு போவதிலிருந்து காப்பாற்றுகின்றான்.
ஏழாவது வழி “ல இன் ஷகர்த்தும் ல அஸீதன்னக்கும்” (சூரா இப்ராஹீம்: வசனம் 8) என்ற வசனத்திலிருந்து தெரிய வருவது என்னவென்றால்,
இறைவனின் எந்த அருளின் மீது
நாம் நன்றி செலுத்துகிறோமோ அது மிகைப்படுத்தி வழங்கப்படுகிறது. ஆகவே மனிதன் ஒரு நன்மையான
காரியத்தை செய்வான் என்றால் அவன், இன்னும் அதிகமான நன்மை
செய்வதற்கான பாக்கியம் கிடைப்பதற்கும், இறையச்சமுடையவனாக மாறுவதற்கும் அதிகமதிகமாக நன்றி செலுத்தி வர வேண்டும்.
எட்டாவது வழி “சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹா இல்லல்லாஹு
வல்லாஹு அக்பர்” என்பதை ஓதிக் கொண்டிருக்க
வேண்டும். ஒருவர் மற்றொருவரை புகழ்ந்துரைக்கிறார்
என்றால் அவரும் இவ்வாறே மாறி விட வேண்டும் என்று புகழ்ந்துரைக்கபட்டவர் விரும்புகிறார்.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் “லாயிலாஹ இல்லல்லாஹு”
என்பதில் மிக அழுத்தம் கொடுத்து
வந்தார்கள். அல்லாஹ் தஆலாவை “வஹ்தஹூ லா ஷரீக்க
லஹூ” என்பதை நிரூபித்ததின் விளைவாக
இறைவன் கூறினான் நபியே! நாம் உம்மை தனித்தன்மை வைந்தவராக மாற்றி விட்டோம். எவரொருவர்
அல்லாஹ் அக்பர் கூறி உளப்பூர்வமாக இறைவனின் மகத்துவத்தை தனது செயலின் வாயிலாக எடுத்து
கூறி வருவாரோ, அவரை அல்லாஹ் மேன்மையானவராக
மாற்றி விடுவான். எவரொருவர் அவனது தூய்மையை எடுத்துரைக்கிறாரோ இறைவன் அவரை தூயவராக
மாற்றி விடுவான். மேலும் எவரொருவர் ஹாமிது (அதாவது இறைவனை புகழக்கூடியவர்) ஆக இருப்பாரோ
அவர் மஹ்மூது (புகழப்பட்டவர்) ஆக மாறி விடுவார்.
ஒன்பதாவது வழி தொழுகையை கொண்டு உங்களை சீர்திருத்திக் கொள்ள
வேண்டும். ஏனென்றால் இறைவன் கூறுகின்றான்:
اِنَّ الصَّلٰوۃَ تَنْہٰى عَنِ الْفَحْشَاۗءِ وَالْمُنْكَرِ
தொழுகையானது பிடிக்காத செயல்களிலிருந்து
தடுக்கிறது. தொழுகையானது மிஃராஜுல் முஃமினீன் அதாவது நம்பிக்கையாளர்களுக்கு ஆன்மீக
முன்னேற்றங்களை வழங்கக்கூடியது ஆகும். ஆகவே இறையச்சம் பெறுவதற்கும், உங்களில் கட்டுப்படுதலின் ஆன்மா உருவாகுவதற்கும்
தொழுகையை அதிகம் தொழுது வாருங்கள்.
பத்தாவது வழி அல்லாஹ்
தஆலாவின் வல்லமை மற்றும் மென்மையை பார்த்து வர வேண்டும். வல்லமையை குறித்து இறைவன்
கூறுகின்றான் “ அவலம் எஹ்தி லஹும்
லகும் அஹ்லக்னா மின் கப்லிஹிம் மினல் குரூனி யம்ஷூன ஃபீ மஸாகினிஹிம்-இன்ன ஃபீ தாலிக
ல ஆயாத்தின்- அஃபலா யஎஸ்மஊன்” (சூரா ஸஜ்தா: வசனம்
27) அதாவது இவர்களுக்கு முன்னர்
எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருப்பது, இவர்களுக்கு வழிகாட்டவில்லையா? (இப்பொழுது) இவர்கள், அவர்கள் வசித்திருந்த இடங்களில் நடந்து திரிகின்றனர்.
நிச்சயமாக இதில் பல அடையாளங்கள் உள்ளன. எனவே இவர்கள் செவி சாய்ப்பதில்லையா?
இறைவனுக்கு கீழ்படியாதவர்களின்
முடிவு இவ்வாறாயிற்று என்பதை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், மேலும் எவர்கள் உலகிய அலங்கார பொருட்களுக்காக இறைவனை
கோபத்திற்கு ஆளாக்கினார்களோ அவர்களின் முடிவை நீங்கள் கண்டீர்கள் என்றால், கட்டுபடுதலின் பக்கம் மிக அதிகம் கவனம் ஏற்படும்.
மேலும் ஜமால் (மென்மை) அதாவது அருட்கொடைகளை குறித்து இதனுடன் இவ்வாறு கூறுகின்றான்
“அவலம் யரவ் அன்னா நஸூக்குல்
மாஅ இலல் அர்ழில் ஜுருஸி ஃப நுக்ரிஜு பிஹீ ஸர்அன் தஃகுலு மின்ஹு அன்ஆமுஹும் வ அன்ஃபுஸுஹும்-அஃபலா
யுப்ஸிரூன்” (சூரா ஸஜ்தா: வசனம்
28) நாம் தண்ணீரை வறண்ட பூமியின்
பால் ஓட்டிச் சென்று, அதன் மூலம் அவர்களின்
கால்நடைகளும், அவர்களும்,
உண்ணும் விளைச்சல்களை வெளிப்படுத்துவதை
அவர்கள் காணவில்லையா? அவர்கள் ஏன் கவனம்
செலுத்துவதில்லை. மனிதன் இறைவனின் அருட்கொடைகளை நினைவுகூற வேண்டும். மேலும் அவனின் ஈகைக்குணத்தை ஒவ்வொரு துரும்பிலும் நீங்கள் கண்டீர்கள்
என்றால் பிறகு தனது எஜமானன் மற்றும் தயவு குணம் படைத்தவனின் மீது மாய்த்து போக உள்ளம்
விரும்பும்.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None