ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-
இந்த காலம் எவ்வளவு அருளுக்குரிய காலமாக இருக்கிறது. இதில் எவருடைய உயிரும் கேட்கப்படவில்லை மேலும் இந்த காலம் உயிரை கொடுப்பதற்கான காலமல்ல மாறாக தகுதிக்கேற்ப செல்வத்தை வழங்குவதற்குரியதாகும்.
(அல்ஹகம் காதியான் 10 ஜூலை 1903)
மேலும் கிஷ்தி நூஹ் என்ற நூலில் அன்னார் கூறுகின்றார்கள்:-
ஒவ்வொரு மனிதருடைய உண்மை தன்மையும் அவருடைய சேவையை கொண்டே அறியப்படும். அன்பர்களே! இது மார்க்கம் மற்றும் மார்க்கத்தின் நோக்கத்திற்காக சேவைக்கான நேரமாகும். இந்த காலத்தை பொக்கிஷமாக கருதுங்கள் மீண்டும் ஒருபோதும் இது கைக்கூடாது.
(கிஷ்தி நூஹ், ரூஹானி கஸாயீன் தொகுதி 19, பக்கம் 83)
சகோதரர்களே! நீங்கள் செவிமடுத்ததைப் போன்று இந்த அருளுக்குரிய மாநாட்டில் நான் விகிதாசார அடிப்படையில் சந்தா, வஸிய்யத் அமைப்பின் முக்கியதுவம் மற்றும் அருள்கள் என்ற தலைப்பில் சில கருத்துகளை உங்கள் முன் வைப்பதற்கு பணிக்கப்பட்டுள்ளேன்.
அன்பர்களே! தற்போது நான் அதிகாரம் அல்முனாஃபிக்கூன் வுடைய வசனம் 10, 11 ஆகியவற்றை ஓதினேன். அதன் மொழியாக்கம் ஹஸரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்களின் மொழியாக்கத்தில் இவ்வாறு வருகிறது.
நம்பிக்கையாளர்களே! உங்களது செல்வம், உங்களது சந்ததிகள் அல்லாஹ்வை நினைவு கூறுவதிலிருந்து உங்களை தடுக்க வேண்டாம் எவர் அவ்வாறு செய்வாறோ அவர் இழப்பிற்குறியவராவார். உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாக உங்களுக்கு வழங்கப்பட்டவற்றிலிருந்து வழங்குங்கள். அவர் அப்போது என் இறைவா! எனக்கு மேலும் சில காலம் வழங்கியிருந்தால் நான் நிச்சியமாக சதக்காக்கள் வழங்கி நல்லவர்களுடன் இணைந்திருப்பேன் எனக் கூறுவார்.
சகோதரர்களே! அல்லாஹ் இந்த வசனங்களில் ஞானத்தின் ஒரு மிகப்பெரிய கருத்தை கூறியுள்ளான் அதாவது மனிதன் இவ்வுலகை விட்டு செல்லும் நேரம் வரும்போது இந்த விஷயம் நிச்சியமாக அவனை நிம்மதியிழக்கச் செய்வதை அவன் உணர்கின்றான் அந்தோ! வாழ்க்கை அவனுக்கு மேலும் அவகாசம் வழங்கினால் அல்லாஹ்வின் பாதையில் தனது விருப்பத்திற்குரிய பொருளை அளவில்லாமல் வழங்க ஆயத்தமாகிவிடுகின்றான். மேலும் தன்னிடம் உள்ள அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கிவிடுகின்றேன் எப்படியாவது அல்லாஹ்வின் விருப்பத்தை பெற்று விடவேண்டும் என விருப்பம் கொள்கிறான்.
இந்த இடத்தில் இந்த கேள்வி மிக முக்கியமானதாகும் அதாவது மனிதனுக்கு அவனது கடைசி நேரத்தில் இறைவழியில் வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் நினைவுக்கு வருகிறது. இறைவிருப்பத்தை பெறுவதற்கு மிகச் சிறந்த மற்றும் பயன் தரக்கூடிய விஷயம் அல்லாஹ்வின் பாதையில் தனது செல்வங்களை தியாகம் செய்வது தான் என திடீரென்று ஏன் தெரியவருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதனுடைய இந்த நிலையை படம்பிடித்து காட்டியவாறு இவ்வாறு கூறுகிறார்கள்.
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எந்த சதக்காவில் அதிக நன்மையுள்ளது என வினவினார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது கருமித்தனம் கொண்ட போதிலும் வழங்கும் சதக்காவில் அதாவது உங்களை ஒருபுறம் வறுமையின் பயமும், மறுபுறம் செல்வந்தராகவேண்டும் என்ற எண்ணமும் (இந்த சதக்காவிலிருந்து) உங்களை பழவீனராக ஆக்கவேண்டாம். மூச்சி தொண்டைக்கு வந்த பின்னர் அந்த நேரத்தில் நீங்கள் அவருக்கு இவ்வளவு, இவருக்கு இவ்வளவு என கூறினால் எந்த பலனுமில்லை ஏனென்றால் அது (அந்த செல்வம்) அவருக்குரியதாக ஏற்கனவே ஆகிவிட்டது.
(புகாரி கித்தாபுஸ் ஸக்காத்)
அல்லாஹ் தனது அடியானுடைய அனைத்து நிலைகளையும் அறிந்தவனாவான். தனது அடியானின் கடைசி நேரத்தில் ஏற்படும் துயரத்திலிருந்து இரட்சிப்பை பெறுவதற்காக அனுதாப அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றான்:
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் . மறுமையின் மீதும் நம்பிக்கை கொள்வதில் மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து கொடுப்பதற்கு என்ன கஷ்டம் ஏற்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களை நன்கு அறிகின்றான். நிச்சியமாக அல்லாஹ் சிறிதளவுகூட அநீதி இழைக்கமாட்டான். ஏதாவது நன்மையான செயல் இருந்தால் அதை அவன் அதிகமாக்கி விடுவான். அதற்கு தன்புறமிருந்து மிகப்பெரிய கூலியையும் வழங்குகின்றான்.
(அன்நிஸா 40.41)
ஆக நன்மைக்குரிய மனிதரே பாக்கியசாலி ஆவார். அல்லாஹ் அவருக்கு ஆரோக்கியம் வழங்கியிருந்த காலத்தில், அவருக்கு வாய்பளித்த அதே நேரத்தில் தனது முடிவு நல்லதாக அமைவதற்கு பொருளாதார விசயத்தில் அல்லாஹ்வுடன் தனது கணக்கை சரியாக வைக்கின்றார். இல்லையென்றால் திருக்குர்ஆன் கூறுவதை போன்று மரணத்தருவாயில் பொருள் தியாகம் செய்வது தொடர்பாக கவலைப்படுவது இழப்பிற்குரியவர்களின் செயலாகும். அது தன்னை தானே அழிவில் ஆழ்த்தி கொள்வதாகும்.
சகோதரர்களே! பொருள் தியாகத்தின் அவசியம் இந்த வகையிலும் நாம் கணிக்கலாம் அதாவது அதாவது அல்லாஹ் தனது பரிசுத்த வேதத்தில் மிக முக்கிய இபாதத்தாக உள்ள தொழுகைக்கான கட்டளையுடன் பொருள் தியாகத்தின் கட்டளையாகயுள்ள ஸக்காத்தை பற்றி கூறியுள்ளான். ஆக எந்தளவு தொழுகைக்கு வலியுறுத்தியுள்ளானோ அதேயளவு இறைவழியில் தியாகம் செய்வதற்கும் வலியுறுத்தியுள்ளான்.
திருக்குர்ஆனில் பொருளாதார இபாதத் இரண்டு வகையான சந்தாக்களின் வடிவில் கூறப்பட்டுள்ளது. ஒன்று கட்டாய மற்றும் கடமையாக்கப்பட்ட சந்தா மற்றொன்று விருப்ப சந்தா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கப்பட்ட சந்தா அதாவது ஸக்காத்தை இஸ்லாம் மார்க்கத்தின் ஒரு அடிப்படை கடமையாக கூறியுள்ளார்கள். ஸக்காத்தை தவிர மார்க்கத் தேவையின் போது இறைதூதரின் அழைப்பினை ஏற்று பொருள் தியாகம் செய்வதில் முந்திக்கொண்டு பங்கு பெறும் மக்களே உண்மையில் இபாதத்தின் உரிமையை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறக்கூடியவர்களாகவும் உள்ளனர்.
இறைவழியில் செல்வத்தை வழங்குதல் என்ற குரல் மற்றும் திட்டத்திற்கு ஒவ்வொரு நபியின் காலத்திலும் அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் லெப்பைக் என்றே கூறியுள்ளனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஸஹாபாக்கள் எந்தளவு அன்னாரது குரலுக்கு செவிமடுத்தார்கள் என்றால் அதன் நினைவுகள் மறுமை வரை உள்ளங்களில் உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிலிருந்து இஸ்லாத்தின் உலகளாவிய வெற்றி இமாம் மஹ்தி, மஸீஹ் மவூது (அலை) மூலம் நடைபெறும் என்பது தெரியவருகிறது. இந்த மகத்தான திட்டத்திற்கு அந்த காலத்தில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் நம்மிடம் பொருள் தியாகத்திற்கான அறிவிப்பை செய்தார்கள். இந்த வகையில் ஸக்காத் போன்ற கடமையான சந்தாக்கள் செலுத்துவதுடன் வஸிய்யத் திட்டத்தின் கீழ் வருமானம் மற்றும் சொத்துகளிலிருந்து பொருள் தியாகம் செய்யுமாறு கூறினார்கள் மேலும் இதில் இணையக் கூடிய தூயவர்களுக்கு சொர்க்கத்திற்கான நற்செய்தியையும் வழங்கினார்கள். மேலும் வஸிய்யத் திட்டத்தில் இணையாத அந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயம் தனது வருமானத்தில் பதினாரில் ஒரு பகுதியை (சந்தா ஆம்) இந்த நோக்கத்திற்காக வழங்கவேண்டும். அதனுடன் வஸிய்யத் திட்டத்தில் இணைவதற்கு விருப்பம் கொள்ளவேண்டும் மேலும் அதற்காக துஆவும் செய்யவேண்டும். இதன் மூலம் அவருக்கு அதன் அருளினால் முறையாக வஸிய்யத் திட்டத்தில் இணைவதற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
வருமான அடிப்படையில் சந்தா செலுத்தும் அருளினால் அல்லாஹ் வஸிய்யத் திட்டத்தில் இணையும் வாய்ப்பை வழங்குகிறான். இந்த வகையில் நான் எனது சொற்பொழிவில் முறையே விகிதசார அடிப்படையில் சந்தா செலுத்துதல் மற்றும் வஸிய்யத் திட்டத்தின் அவசியம் மற்றும் அருள்கள் தொடர்பாக சில கருத்துகளை எடுத்துரைப்பேன்.
ஸக்காத் செலுத்திய பின்னர் அஹ்மதிய்யா ஜமாஅத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனது வருமானத்தில் பதினாரில் ஒரு பங்கை அல்லாஹ்வுடைய விருப்பதினை பெறுவதற்காகவும் இயக்கத்தின் நலனுக்காகவும் செலுத்துவது கட்டாயமாகும்.
ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கட்டாய சந்தா தொடர்பாக இதனை வலியுறுத்தி கூறுகிறார்கள் அதாவது இந்த இயக்கத்தில் இணைவதற்கு உயர்வான மன தைரியம் கொண்டவரே தகுதியானவராவார். மேலும் வருங்காலத்தில் முடிந்தளவு இடைவிடாது ஒவ்வொரு மாதமும் தனது வருமானத்திலிருந்து இந்த மார்க்க தேவைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பேன் என ஒரு புதிய மற்றும் உண்மையான வாக்குறுதியை அல்லாஹ்வுடன் செய்ய வேண்டும். வருமானத்திற்கேற்ப சந்தா செலுத்தும் எண்ணத்தை உணர்வை உள்ளத்தில் உருவாக்குவதற்கு இந்த நுட்பத்தை புரிவது அவசியமாகும். அந்த நுட்பமாவது அல்லாஹ் பலமுறை கூறியுள்ளான் அன்ஃபிகூ மிம்மா ரஸக்னாக்கும் (அல்பக்ரா:255) உங்களுக்கு வழங்கப்பட்டதிலிருந்து தியாகம் செய்யுங்கள். இதன் விளக்கத்தை இந்த குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துரைப்பது சாத்தியமற்றதாகும். எனவே காலத்தின் இமாம் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றை மட்டும் எடுத்துரைப்பதே போதுமானதாகும் எனக் கருதுகிறேன்.
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-
நீங்கள் (ஒரே நேரத்தில்) இரண்டு பொருட்கள் மீது அன்பு கொள்ள முடியாது. உங்களால் (ஒரே நேரத்தில்) செல்வத்தின் மீது அன்பு கொள்வதும், இறைவன் மீதும் அன்பு கொள்வது என்பது சாத்தியமற்றதாகும். ஒன்றின் மீது மட்டும்தான் உங்களால் அன்பு செலுத்த முடியும். ஆக இறைவன் மீது அன்பு செலுத்தக்கூடிய மனிதர் பாக்கியசாலி ஆவார். ஒருவர் இறைவன் மீது அன்பு செலுத்தி அவனது வழியில் செல்வத்தை தியாகம் செய்வார் என்றால் மற்றவர்களை விட அவரது செல்வத்திலும் அதிகளவு அருள் வழங்கப்படும் என நான் நம்பிக்கை கொள்கின்றேன். ஏனென்றால் செல்வம் தானே வராது இறைவனுடைய விருப்பத்திற்கேற்பவே வருகிறது.
(மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 497)
ஆக இந்த நுட்பத்தை புரிவதுதான் மிக அவசியமானதாகும்.
அன்பர்களே! அல்லாஹ்வுடைய நடைமுறை தனது அடியார்களுடன் சற்று வித்தியாசமாகவே உள்ளது. அதாவது தானே செல்வத்தை வழங்கி விட்டு அந்த செல்வத்திலிருந்து சிலவற்றை வழங்குங்கள் நான் அதற்கான அன்பளிப்பை அதிகப்படுத்தி தருகிறேன் என வாக்குறுதியும் அளிக்கின்றான்.
தனது அடியார்களை இறைவழியில் செலவு செய்ய கூறிய இடத்தில் அதாவது யஸ்அலூனக்க மாதா யுன்பிகூன குலில் அஃப்வ (அல்பக்ரா:213) அதாவது எதை செலவு செய்ய வேண்டுமென வினவுகின்றனர். அதற்கு அவர்களிடம் (தேவைக்கு மேல்) எஞ்சி இருப்பதனை என்று கூறுவீராக என்று கூறியுள்ளான். மேலும் அல்லாஹ் தான் வழங்குவதை பற்றி கூறியுள்ள இடங்களிலெல்லாம் வல்லாஹு யர்ஸுக்கு மய்யஷாஉ பிகய்ரி ஹிஸாப் (அல்பக்ரா:213) அதாவது அல்லாஹ் தான் விரும்புபவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகிறான்.
ஆக அல்லாஹ் வழங்கும்போது அளவின்றி வழங்குகின்றான் ஆனால் தனது வழியில் செலவிட கட்டளையிடும்போது அதற்கு குறிப்பிட்ட அளவை நிர்ணயித்துள்ளான் இதற்கு இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் மரபின்படி ஷரஹ் (விகிதாசாரம்) என்று கூறுவர். தனது வருமானத்தில் தனது திறமையை விட அதிகளவு அந்த இறைவனுடைய அருளும் கருணையும் அடங்கியிருக்கும்போது அவனது ஒரு சிறிதளவு பங்கை திரும்ப கேட்கும் போது அதை கொடுப்பதை விட்டுவிட்டு அந்த அனைத்தும் அறியக்கூடிய இறைவனிடமிருந்து தனது வருமானத்தை மறைக்கக்கூடியவன் ஒரு பைத்தியக்காரனைத் தவிர வேறுயாராக இருக்க முடியும்.
இது தொடர்பாக ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹு தஆலா அவர்கள் கூறுகிறார்கள்:-
எனது வருமானவரி இவ்வளவு ஆகும் இதில் இவ்வளவு குறைத்து காட்டினால் எனக்கு இவ்வளவு எஞ்சும் என்ற எண்ணம் வருவது பிரச்சனையில்லை அல்லாஹ் அவரை தண்டிக்க மாட்டான். ஆனால் அதன்படி செயல்பட்டால் வருமானவரியை திருடினால், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினால் அல்லது உண்மையை கூறவில்லை என்றால், தனது சந்தாக்களில் தனது வருமானத்தை குறைத்து எழுதினால் அல்லாஹ் தண்டிப்பான். இது தொடர்பாக மக்களது பல அனுபவங்களும், உதாரணங்களும் உள்ளன. பின்னர் அவர்களது வருமானமும் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும் மேலும் அவர்கள் தெரிவித்த வருமானமளவுக்கே அவர்களது வருமானம் வந்து விடும். அல்லாஹ்வுக்கு வழங்கும் விசயமானலும் சரி, அரசுக்குரிய உரிமையை செலுத்துவதானாலும் சரி இவ்வாறு செய்தால் பிறகு தண்டனைக்குரிய குற்றமாகும். ஆக மனிதன் உள்ளத்தில் உறுதியான (தவறான) எண்ணம் உருவாகிவிட்டால் பிறகு அதற்காக சூழ்ச்சிகளையும், ஏமாற்றுதலையும் கைக்கொள்கிறான்.
(ஜுமுஆ குத்பா 26, அக்டோபர் 2018)
இவ்வாறே ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
எனது முழுவாழ்வின் அனுபவம் என்னவென்றால் எவர் பொருள் தியாகம் செய்யும் விசயத்தில் இறைவனுடன் சரியான நிலையை கையாளமாட்டாரோ, தனது செல்வத்திலிருந்து இறையச்சத்துடன் அல்லாஹ் மற்றும் அவனது மார்க்கத்தின் பங்கை தனியாக எடுத்து வைக்க மாட்டாரோ அவர்களது ஏனைய விசயங்களும் சீர்கெட்டுவிடும். வீட்டின் நிம்மதி அழிந்துபோகும், வியாபாரத்தில் இழப்பு ஏற்பட ஆரம்பிக்கும், சந்ததிகளின் தர்பிய்யத்திலும் சீர்கேடு வந்துவிடும் மேலும் பொதுவாக மனிதனின் வாழ்விலிருந்து அருள் போய்விடும்.
(மாலீ நிஸாம் தொகுதி 1, பக்கம் 96)
சகோதரர்களே! சூழ்நிலைக்கேற்ப இங்கு ஈமானுக்கு வலுவூட்டக்கூடிய ஒரு சம்பவத்தை எடுத்துரைப்பது உள்ளத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். அதாவது அல்லாஹ் தனது வழியில் உள்ளம் திறந்து வருமானத்தின் அடிப்படையில் முழுமையாக சந்தா வழங்கக்கூடியவருக்கு எவ்வாறு அருள்பாளிக்கின்றான் எனபதை பாருங்கள்.
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹு தஆலா அவர்கள் தனது ஜுமுஆ பேருரை 26 மார்ச் 2010 ல் கூறுகிறார்கள்:-
ஐவரிகோஸ்ட்டின் நகரமான பஸ்ஸம் என்ற இடத்தில் ஒரு புதிய அஹ்மதி சகோதரர் கண்ணியத்திற்குரிய யகோ அலிடோ (yago alido) அவர்களுக்கு ஜமாஅத்தின் பொருளாதார அமைப்பிலுள்ள விகிதாசாரம் மற்றும் அளவுகள் கூறப்பட்டன. மறுநாள் அவர் தனது வருமானத்திற்கேற்ப சந்தா ஆம், வக்ஃபே ஜதீது, தஹ்ரீக்கே ஜதீது போன்றவற்றை செலுத்த வந்தார். அது ஏறக்குறைய 50 பவுண்டாக இருந்தது. இது அவருக்கு மிகப்பெரிய தொகையாகும். இது அவர் அஹ்மதியத்தை எற்கொண்ட பிறகு செலுத்தும் முதல் சந்தவாகும். அறிவிக்கக்கூடியவர் கூறுகிறார் நமது முஅல்லிம் சாஹிப் அவரது சந்தவிற்கான ரசீதை எழுதி கொண்டுதான் இருந்தார் அவருக்கு அவரது ஒரு நண்பர் ஃபோன் செய்தார் இரண்டு வருடத்திற்கு முன்பு தான் கொடுக்கவேண்டிய கடன் தொகையை இன்று வந்து பெற்று கொண்டு செல் என்று கூறினார். யாகோ அலீடோ சாஹிப் மிகவும் ஆச்சரியத்துடன் கூறினார் இந்த மனிதர் என்னிடம் கடன் வாங்கி எவ்வாறு நடந்து கொண்டார் என்றால் இவரிடமிருந்து தனது கடன் தொகையை திரும்ப வாங்குவது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. இது இன்று சந்தா செலுத்தியதானால் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இந்த கடன் தொகை திரும்ப கிடைத்தது மட்டுமல்ல சில நாட்களுக்குப் பிறகு அரசின் தரப்பிலிருந்து அவருக்கு புதிய வருடத்தில் உங்களுக்கு மேற்பதவி மட்டுமல்ல உங்களது சம்பளத்தில் ஐம்பது சதவிகிதம் அதிகமாகியுள்ளது என கடிதம் கிடைத்தது. இவ்வாறு அவர் தனது அதிகப்படியான சம்பளத்தை பெற்றவுடன் தனது வருமானத்திற்கேற்ப தனது சந்தாவை இரண்டு மடங்காக்கினார். தற்போது அவர் தனது மாத சந்தாவை மட்டும் செலுத்துவதில்லை மாறாக பள்ளிவாசல் கட்டுமான பணியிலும் தனது கையிலிருந்து அதிகளவு செலவு செய்கின்றார். மேலும் அனைவருக்கும் இவையனைத்தும் இறைவனது வழியில் பொருள் தியாகம் செய்ததன் விளைவாக கிடைத்த இறைவனது அருட்கொடையாகும் என வெளிப்படையாக கூறி வருகிறார். பாருங்கள்! அல்லாஹ் எவ்வாறு புதிதாக வரக்கூடியவர்களுக்கு மின் ஹைசு லா யஹ்தஸிப் நீங்கள் அறியாத இடத்திலிருந்து நான் உங்களுக்கு வழங்குவேன் என்ற காட்சியை மட்டும் காண்பிக்காமல் ஃபயுளாயிஃபஹு லஹூ அளாஃபன் கஸீரா (அல்பக்ரா:246) நான் அதிகபடுத்தி வழங்குவேன் என்ற வாக்குறுதியையும் சொல்லுக்கு சொல் நிறைவேற்றியுள்ளான்.
சகோதரர்களே! வருமானத்திற்கேற்ப சந்தா வழங்குவது உண்மையில் அல்லாஹ் மற்றும் அவனது நபிக்கு கட்டுபடுவதாகும். வருமானத்திற்கேற்ப சந்தா வழங்குவதில் சில சமயம் பலகீனமான உள்ளத்தில் நாம் அதிகமாக வழங்கி விட்டோம் என எண்ணம் உருவாகிறது. நாம் இதை செலவு எனக் கருதுகிறோம் ஆனால் அல்லாஹ் கூறுகின்றான் இது செலவு அல்ல மாறாக இது எனது விருப்பத்தினை பெறுவதற்காக, நான் கூறிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நீங்கள் செய்த செலவுகள் உண்மையில் செலவுகள் அல்ல மாறாக அது உங்களது கணக்கில் செலுத்தியதாகும் மேலும் அது உங்களுக்கு தேவைப்படும் போது அல்லாஹ் அதை உங்களுக்கு திரும்பி வழங்கிவிடுவான்.
ஹதீஸ் குத்ஸி ஒன்றில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் தொடர்பாக கூறுகிறார்கள்:
அதாவது ஆதமின் சந்ததிகளே! நீ உனது பொக்கிஷத்தை என்னிடத்தில் சேர்த்து வைத்து நிம்மதி அடைந்து கொள். அதற்கு நெருப்பு பற்றுவதற்கான அபாயமும் இல்லை. நீரில் மூழ்குவதற்கான வாய்ப்பும் இல்லை மேலும் எந்த திருடனும் திருடுவதற்கான பயமும் இல்லை. என்னிடம் வைக்கபட்டுள்ள செல்வங்களை நீ அதற்கு மிக அதிக தேவையுள்ளவனாக இருக்கும் போது வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
(கன்ஸுல் உம்மால் தொகுதி 6, பக்கம் 352. ஹதீஸ் 16021)
சகோதரர்களே! நாம் அல்லாஹ்வின் வழில் எவ்வளவு செல்வங்களை தியாகம் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் இறைவனின் தூதருக்கு கட்டுப்பட்டு விகிதாசார அடிப்படையில் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்கிறோமா என்பதுதான் முக்கியம். வசதிபடைத்தவர்கள் இறைவழியில் இலட்ச கணக்கில் செலவு செய்வார்கள் ஆனால் இது அவருடைய வருமானதிற்கேற்ப விகிதாசர அடிப்படையில் இருக்காது. ஆனால் அவரை விட வசதியில் குறைந்தவராக இருந்தபோதிலும் கட்டுபடுதலுக்கான உயர் முன்மாதிரியை வெளிப்படுத்தியவாறு தனது வருமானதிற்கேற்ப விகிதாசார அடிப்படையில் இறைவழியில் செலவு செய்பவரே அதிக நன்மைக்கு தகுதியானவர் ஆவார். இறைவனுக்கு செல்வத்தின் தேவை ஒன்றுமில்லை அவன் உங்களது உள்ளங்களின் நிலையை ஆய்வு செய்கின்றான். அவன் உங்களது கட்டுபடுதலுக்கான ஆன்மா மற்றும் தியாகம் செய்வதற்கான உணர்வை பார்த்து நமக்கு வழங்குகிறான்.
இன்றைய காலத்தில் பணக்காரர் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் மக்கள் தனது செல்வத்தை வேகமாக இரண்டு, மூன்று மடங்காக ஆக்குவதற்கு உள்ளத்தை ஈர்க்கக்கூடிய விளம்பரங்களை பார்த்து தனது வருமானத்தை பைனான்ஸ் கம்பெனிகளில் செலுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலார் தனது முதலீட்டையே தொலைத்து விட்டு உட்காருக்கிறார்கள். ஆனால் இறை ஜமாஅத்துகள் தனது வருமானத்தை எப்போதும் இறை கட்டளைக்கேற்ப செலவு செய்து இறை விருப்பத்தை வேண்டக் கூடியவர்களாக இருப்பர்.
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-
நாம் நமது ஜமாஅத் உறுப்பினர்களிடம் இந்த விண்ணப்பத்தை மேலும் எப்போதும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களும் இந்த விண்ணப்பத்தை அதாவது இறைவனுக்காக தனது உயிர்களையும், செல்வங்களையும் தியாகம் செய்யுங்கள் எனக் கூறிவந்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த தரம் மாறியே வருகிறது. முதல் நாள் மக்கள் இந்த குரலை கேட்டபோது முன்னால் வந்தார்கள் மேலும் அவர்கள் கூறினார்கள் எங்கள் உயிரும், செல்வமும் இதோ உள்ளது எனக் கூறினார்கள். ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் அவர்களின் பதிலை கேட்டார்கள் மேலும் கூறினார்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள். நோன்பு வையுங்கள், இஸ்லாம் மற்றும் அஹ்மதிய்யத்தை பரப்புங்கள் மேலும் உங்களது செல்வத்திலிருந்து மார்க்க தொண்டிற்காக ஏதாவது கொடுத்து வாருங்கள் இதற்காக அரை ரூபாய் கொடுத்தாலும் சரி எனக் கூறினார்கள். மக்கள் இதை கேட்டபோது அவர்களது உள்ளத்தில் வேலை மிக சாதாரணமாக தான் உள்ளது பிறகு நம்மிடம் வாருங்கள் உங்களது உயிர்களையும், செல்வங்களையும் தியாகம் செய்யுங்கள் என ஏன் கூறப்படுகிறது என வியப்புற்றனர். சிறிது கலாம் கடந்த பிறகு மக்களிடம் உயிர் மற்றும் செல்வம் தியாகம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது எனக் கூறப்பட்டது. மக்களும் தனது உயிர்களையும், செல்வங்களையும் எடுத்துக் கொண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் நீங்கள் ரூபாவிலிருந்து ஒரு பைசாவை சந்தாவாக கொடுங்கள் எனக் கூறப்பட்டது. சிலகாலம் கடந்த பிறகு மர்க்கஸிலிருந்து மீண்டும் குரல் கொடுக்கப்பட்டது அதாவது வாருங்கள் தனது உயிர்களையும், செல்வங்களையும் மார்க்கத் தொண்டிற்காக தியாகம் செய்யுங்கள் எனக் கூறப்பட்டது. .
இந்த நிலை இவ்வாறே முன்னேறிச் சென்றது. அரை பைசாவிலிருந்து துவங்கி பைசாவிற்கு வந்தது பிறகு இரண்டு பைசாவிற்கு வந்தது. பிறகு இரண்டு பைசா போதாது மூன்று பைசா வழங்குங்கள் எனக் கூறப்பட்டது. பிறகு மூன்று பைசா கொடுத்து வந்தார்கள் அப்போது நான்கு பைசா கொடுங்கள் எனக் கூறப்பட்டது. பிறகு ஒரு காலம் வந்தபோது தனது சொத்துகள் மற்றும் வருமானங்களிலிருந்து வஸிய்யத் செய்யுங்கள் எனக்கூறப்பட்டது. இந்த வஸிய்யத்தில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு வழங்குமாறு கேட்டக்கப்பட்டது. பிறகு பத்தாவது பங்கு மிகக் குறைவாகும் நீஙகள் 1/9 பங்கை கொடுக்க முயற்சி செய்யுங்கள் எனக் கூறப்பட்டது. இறைவன் யாருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளானோ அவர்கள் இதைவிட அதிகமாக வழங்குங்கள் எனக் கூறப்பட்டது. யாருக்கு அல்லாஹ் புரியும் திறனையும் சிந்திக்கும் அறிவையும் வழங்கியுள்ளானோ அவர்கள் எது இல்லாமல் சமுதாயம் உயிர் வாழ முடியாதோ நாம் அந்த நோக்கத்தின் அருகில் கொண்டு செல்லப்படுகிறோம் என்பதை அறிவார்கள்.
ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் கூற்று உண்மையான ரீதீயில் வெளிப்பட்டபோது கால சுழற்சியின் காரணமாக உங்களது கவனக்குறைவின் காரணமாக உங்களில் பலர் இவ்வாறு புரிந்து கொண்டார்கள் அதாவது உயிர் மற்றும் செல்வம் ஆகியவற்றை தியாகம் செய்வது என்பதன் பொருள் பணத்திலிருந்து ஒரு பைசா அல்லது ஒன்னரை பைசாவை சந்தாவாக வழங்குவது என்றும், உயிர் தியாகம் என்பதன் பொருள் வாரம் அல்லது மாதத்தில் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் (ஜமாத்திற்கு) வழங்குவது எனக் கருதினர். ஆனால் அந்த காலம் ஒரு பைசா அல்லது ஒன்றை பைசாவை சந்தாவாக கொடுப்பதற்குரிய காலமாக இருக்காது. மேலும் தனது நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் (ஜமாஅத்திற்கு) கொடுப்பதாக இருக்காது. மாறாக அனைத்து செல்வங்களையும் அனைத்து உயிர்களையும் இறைவழியில் தியாகம் செய்வதற்கான காலமாக அது இருக்கும். அந்த நேரத்தில் ஒரு பைசா அல்லது ஒன்றரை பைசாவை சந்தாவாக கொடுப்பதற்கான கேள்வி இருக்காது. மாறாக தனது அனைத்து செல்வத்தையும், அனைத்து சொத்துக்களையும் ஒரு நிமிடத்திற்குள் விட்டு செல்வதற்கான கேள்வி இருக்கும்.
(அல்ஃபஸல் 10 ஏப்ரல் 1962, 1946ல் மஜ்லிஸ் மஷாவரத்தில் கொடுக்கப்பட்ட சொற்பொழிவு)
ஆக காலம் எவ்வாரெல்லாம் பொருள் தியாகத்தை எதிர்பார்க்கிறதோ மேலும் காலத்தின் மகத்தான கலீஃபாக்கள் எப்போதெல்லாம் கூறுவார்களோ அப்போது லெப்பைக் எனக் கூறியவாறு தனது உயிர், செல்வம் போன்றவற்றை இறைவழியில் வழங்கி கொண்டே செல்ல வேண்டும்.
நான் தற்போது எனது சொற்பொழிவின் இரண்டாவது பகுதியாகிய வஸிய்யத் அமைப்பின் அருள்கள் என்பதன் பக்கம் வருகிறேன்.
சகோதரர்களே! தற்போது உலகின் எதிர்காலம் அஹமதிய்யத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது இறைநியதி ஆகும். மேலும் எந்த அமைப்பு உலகளவில் பரவவேண்டி உள்ளதோ அதில் உலகை நடத்துவதற்கான ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செயல் திட்டம் இருப்பது அவசியமாகும். அந்த அமைப்பின் பெயர் இன்று வஸிய்யத் அமைப்பாகும்.
ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் இதற்கான உண்மையான விளக்கத்தை கூறிகிறார்கள்:-
ஆக தற்போதைய காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது காத்தமுல் குலஃபா அவர்களின் கடமையாகும் அதாவது இஸ்லாமிய போதனைகளுக்கேற்ப ஒரு திட்டத்தை தயார் செய்து உலகின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இஸ்லாமிய திட்டத்தின் முக்கிய வழிகாட்டல் என்னவென்றால் மனிதர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றுவது. ஆனால் இதை செய்யும் போது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வின் நுண்ணிய உணர்வுகளை அழிக்கப்படவும் கூடாது. இந்த பணியை வசதிபடைத்தவர்களிடமிருந்து விருப்பமாக பெறவேண்டும் கட்டாயமாக பெறக்கூடாது. இந்த அமைப்பு நாடாளவில் இருக்க கூடாது. சமுதாய அளவில் இருக்க வேண்டும்.
இறைவன் புறமிருந்து தோன்றிய இமாம் மஹ்தி (அலை) அவர்கள் புதிய அமைப்பின் அடித்தளத்தை 1905 ல் நிறுவினார்கள். அதை அல்வஸிய்யத்தின் மூலம் வைத்தார்கள். இஸ்லாமிய அரசு அனைத்து உலகத்திற்கும் உணவளிக்க வேண்டுமென்றால், அனைத்துலகிற்கும் ஆடை வழங்கவேண்டுமென்றால், அனைத்துலகிற்கும் வசிப்பதற்கு வீட்டிற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டுமென்றால், அனைத்துலகின் நோய்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமென்றால். அனைத்துலகின் அறிவின்மையை அகற்ற கல்விக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டுமென்றால் நிச்சியமாக அரசிடம் இதற்காக அதிகமாக பணம் இருக்க வேண்டும். முந்தைய காலத்தில் இருந்தது போன்று இருக்க வேண்டும்.
இந்த வகையில் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப இந்த அறிவிப்பை செய்தார்கள் அதாவது இந்த காலத்தில் இறைவன் உண்மையான சொர்க்கத்தை பெற விரும்பும் மக்களுக்கு இந்த ஏற்பாட்டை செய்துள்ளான். அவர்கள் மகிழ்ச்சியுடன் தனது செல்வத்திலிருந்து குறைந்தபட்சமாக பத்தில் ஒரு பகுதியையும் அதிகபட்சமாக மூன்றில் ஒரு பகுதியை வஸிய்யத் செய்ய வேண்டும். இந்த புதிய அமைப்பின் அடித்தளம் 1910 ரஷ்யாவில் வைக்கப்பட்டதல்ல. அதேபோல் இனி வருங்காலத்தில் ஏதாவது ஒரு வருடத்தில் தற்போதைய போருக்குப் பிறகு ஐரோப்பாவில் வைக்கப்பட போவதுமில்லை மாறாக உலகிற்கு நிம்மதியளிக்கக் கூடியவரும் ஒவ்வொரு மனிதரின் வாழ்வை மகிழ்ச்சியாக ஆக்கக் கூடியவரும் இதனுடன் மார்க்கக்த்தை பாதுக்காக்க கூடியவர் மூலமாக புதிய அமைப்பின் அடித்தளம் 1905 ஆம் ஆண்டு காதியானில் வைக்கப்பட்டு விட்டது. தற்போது உலகிற்கு வேறெந்த புதிய அமைப்பின் தேவையுமில்லை.
(மாலி நிஸாம் பக்கம் 40,41)
சகோதரர்களே! இது நமது நற்பேறாகும் இப்படிபட்ட அருளுக்குரிய அமைப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பினை அல்லாஹ் தனது அருளால் நமக்கு வழங்கியுள்ளான். நாம் நஹ்னு அன்ஸாருல்லாஹ் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என நாம் வாதம் செய்துவிட்டு இவ்வளவு சிறந்த திட்டத்தில் பங்கு பெறுவதிலிருந்து தவிர்ந்து இருந்தோம் என்றால் இது எவ்வளவு பெரிய கண்ணியமின்மையாகும், இது நமது வாதத்தினை பொய்படுத்தக்கூடியதாகும். வஸிய்யத் அமைப்பில் இணைவது எந்தளவு முக்கியமானது என்பது ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்களின் இந்த மேற்கோள்களிலிருந்து மிகத் தெளிவாக தெரியவரும்.
அன்னார் கூறுகிறார்கள்:-
நம்பிக்கையாளருடைய சோதனை இதில் தான் உள்ளது அதாவது அவர் இந்த அமைப்பில் இணைய வேண்டும் மேலும் இறைவனது சிறப்பான அருளை பெறவேண்டும். நயவஞ்சகன் மட்டும் தான் இந்த அமைப்பிலிருந்து அகன்று இருப்பார். இது எவர் மீதும் கடமையில்லை ஆனால் இதில் உங்களது நம்பிக்கையில் ஒரு சோதனை உள்ளது என அதனுடன் கூறியுள்ளார்கள். நீங்கள் சொர்க்கத்தை பெற விரும்பினால் இந்த தியாகத்தை செய்வது உங்களுக்கு அவசியமாகும். உங்கள் உள்ளத்தில் சொர்க்கத்தின் கண்ணியமும் மகத்துவமும் இல்லை என்றால் பிறகு உங்கள் செல்வத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்.
(மாலி நிஸாம் பக்கம் 42)
மேலும் ஜமாஅத் சகோதரர்களுக்கு அறிவுரை கூறியவாறு அன்னார் கூறுகிறார்கள்:-
வஸிய்யத் அமைப்பு முழுமையடையும் போது, இதன் மூலம் தப்லீக் மட்டும் நடைபெறாது, மாறாக இஸ்லாத்தின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு நபருடைய தேவையும் இதன் மூலம் நிறைவேற்றப்படும். கஷ்டமும் வறுமையும் உலகிலிருந்து எடுக்கப்படும். இன்ஷா அல்லாஹ். அனாதைகள் யாசிக்க மாட்டார்கள், விதவை மக்களிடத்தில் கையேந்த மாட்டார். வசதியற்றவர் கஷ்டத்துடன் திரியமாட்டார். ஏனென்றால் வஸிய்யத் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும், இளைஞர்களுக்கு தந்தையாக இருக்கும், பெண்களுக்கு கணவனாக இருக்கும், கட்டாயப்படுத்தாமல் அன்பு மற்றும் உள்ளத்தின் மகிழ்ச்சியுடன் ஒரு சகோதரர் மற்றொரு சகோதரருக்கு இதன் மூலம் உதவி செய்வார். அவர் கொடுப்பது பிரதிபலனை எதிர்பார்த்து இருக்காது மாறாக கொடுக்கக்கூடிய ஒவ்வொருவரும் இறைவனிடத்தில் சிறந்த ஈட்டை பெறுவார்கள். வசதிபடைத்தவரும் இழப்பில் இருக்கமாட்டார், எந்த ஏழையும் இழப்பில் இருக்கமாட்டார். எந்த சமுதாயமும் மற்ற சமுதாயத்துடன் சண்டையிடாது. மாறாக அதனது கருணை உலகம் அனைத்திலும் பரந்திருக்கும். ஆகையால் நீங்கள் மிக வேகமாக வஸிய்யத் செய்யுங்கள் இதன்மூலம் புதிய அமைப்பு அமைக்கப்பட வேண்டும். மேலும் நாலாபுரமும் இஸ்லாம் மற்றும் அஹ்மதிய்யத்தின் கொடி பரக்கூடிய அந்த அருளுக்குரிய நாள் வரவேண்டும். நான் இதனுடன் வஸிய்யத் அமைப்பில் இணைந்துள்ள சகோதரர்களுக்கு வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறேன். மேலும் நான் தற்போது வரை வஸிய்யத் அமைப்பில் இணையாத அந்த மக்களுக்கு அவர்களும் இதில் இணைந்து உலக மற்றும் மார்க்க அருள்களிலிருந்து பங்கு பெற்று செல்வந்தர்களாக ஆக அல்லாஹ் வாய்பளிப்பதற்காக துஆ செய்கிறேன்.
(மாலி நிஸாம் பக்கம் 42)
ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-
நீங்கள் இது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயம் எனக் கருதாதீர்கள். இது வானம் மற்றும் பூமியின் அரசனாக உள்ள அந்த வல்லோனின் விருப்பமாகும். இந்த வலுவான வார்த்தைகளிலிருந்து வஸிய்யத் அமைப்பின் மகிமையும் மகத்துவமும் நமக்கு நன்றாக தெரியவருகிறது. இந்த வார்த்தைகள் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் பேனாவிலிருந்து இந்த அமைப்பு ஆரம்பிக்கபட்டபோது எழுதப்பட்டதாகும். இன்று இதற்கு 113 வருடங்கள் முழுமையடைந்ததை குறிப்பாக ஐந்தாவது கிலாஃபத்தின் அருளுக்குரிய காலத்தில் முழுமையடைவதை கண்டு உள்ளம் அல்லாஹ்வின் புகழால் நிறைகிறது. ஆக இந்த மகத்தான அமைப்பிற்கான அடித்தளம் இடப்பட்ட இந்தியாவில் வாழக்கூடிய நாம் எந்தளவிற்கு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம், எந்தளவு காலத்தின் கலீஃபாவின் குரலுக்கு கட்டுப்பட்டவாறு இந்த முனறிவிப்பு நிறைவேறுவதில் தனது பங்கை செலுத்தியுள்ளோம் என ஆய்வுசெய்ய வேண்டிய அவசியமுள்ளது.
மேலும் அன்னார் கூறுகின்றார்கள்:-
வஸீய்யத் செய்யும்போது எவருடைய செல்வம் நிரந்தரமாக உதவி செய்யக்கூடியதாக இருக்குமோ அவருக்கு நிரந்தரமான நன்மை கிடைக்கும். தொடர்க்கூடிய நனமையின் கட்டளையின் கீழ் அது இருக்கும்.
நான் சந்தர்பத்தை பயன்படுத்தியவாறு சகோதரர்களுக்கு இந்த விசயத்தின் பக்கமும் கவனமூட்ட விரும்புகின்றேன் அதாவது ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யாதஹுல்லாஹு தாஆலா) அவர்கள் தனது மிக அதிக விருப்பமான வஸீய்யத் அமைப்பு துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் வஸீய்யத் அமைப்பு தொடர்பாக உலகளாவிய ஜமாத்தினர் முன்பு 2005 ல் கூறினார்கள்:-
நான் கூறியதுபோன்று இந்த அமைப்பில் முழு ஆயதத்ததுடன் இணையுங்கள். எவர் இதில் இணைந்துள்ளாரோ அவர் தனது மனைவி, பிள்ளைகளையும் ஏனைய அன்பர்களையும் இதில் இணைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இறைவனுடைய மஸீஹின் குரலுக்கு கட்டுபட்டவாறு தியாகத்தின் உயர் தகுதியை நிலை நாட்டுங்கள். நான் எனது இந்த விருப்பம் தொடர்பாக இதற்கு முன்பும் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளேன். 2008 ஆம் ஆண்டில் அஹ்மதிய்யா கிலாஃபத் நிலைபெற்று நூறு ஆண்டுகள் முழுமையடையும் போது உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஜமாஅத்திலும் சம்பாதிக்கக்கூடிய நபர்களில் சந்தா கொடுக்கக்கூடியவர்களில் குறைந்தபட்சம் ஐம்பது விழுக்காடு பேர் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் இந்த மகத்தான அமைப்பில் இணைதிருக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலும் இது இந்த நபர்கள் மூலமாக அல்லாஹ்வுக்கு செலுத்தும் எளிமையான காணிக்கையாக இருக்கும் இது அஹ்மதிய்யா கிலாஃபத்தின் நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நன்றியாக அல்லாஹ்விடம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
மேலும் கூறுகின்றார்கள்:-
இதனையும் நினைவில் கொள்ளுங்கள் அதாவது நிஸாம் வஸிய்யதிற்கு நிஸாமே கிலாஃபத்துடன் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. ஏனென்றால் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கு தனது மரணம் தொடர்பான செய்திகள் கிடைத்தபோது ஜமாஅத்தின் தர்பிய்யத்திற்கான சிந்தனை தோன்றியது மேலும் அன்னார் பொருள் தியாகம் செய்வதற்கான அமைப்பை நிறுவிய அதே சமயத்தில் அன்னார் ஜமாத்தார்களுக்கு எனது மரணம் தொடர்பான செய்திகளை கேட்டு வருத்தமடையாதீர்கள் ஏனென்றால் இறைவன் இந்த இயக்கத்தை வீணாக்க மாட்டான் மாறாக இரண்டாவது வல்லமையின் கை உங்களை தாங்கிக்கொள்ளும் இந்த நற்செய்தியையும் கூறினார்கள். ஆக வஸிய்யத் நூலில் கிலாஃபத் அமைப்பு பற்றி கூறியிருப்பது இந்த இரண்டு அமைப்பிற்கும் இடையில் ஒரு ஆழமான தொடர்பு இருப்பதை நிருப்பிக்கிறது, எவ்வாறு வஸிய்யத் அமைப்பில் இணைந்து மனிதன் இறையச்சத்தின் உயர்தரத்தை தனக்குள் உருவாக்கி கொள்ள முடியுமோ அதேபோன்று கிலாஃபத் அமைப்புடன் கட்டுபடுதலுக்கான உயர் முன்மாதிரியை நிலைநாட்டினால் மட்டுமே அவரது ஆன்மீக வாழ்வு சாத்தியமாகும். பொருள் தியாகத்திற்கான அமைப்பும் கிலாஃபதின் அருளுக்குரிய நிழலில் தான் வலுவடைய முடியும். ஆக கிலாஃபத் நிலைபெற்றுயிருக்கும் வரை பொருள் தியாகத்தின் தரமும் உயர்ந்து கொண்டே செல்லும் மார்க்கமும் முன்னேற்றமடையும். ஆக எனது துஆ என்னவென்றால் அல்லாஹ் உங்களுக்கு இந்த இரண்டு அமைப்புடனும் இணைந்திருக்க செய்வானாக. மேலும் தற்போது வரை வஸிய்யத் அமைப்பில் இணையாதவர்களுக்கு அல்லாஹ் வாய்பாளிப்பானாக அவர்களும் இதில் இணைந்து ஆன்மீக மற்றும் பௌதீக அருள்கள் மூலம் செல்வங்களை பெறக்கூடியவர்களாக ஆகட்டுமாக. அல்லாஹ் ஒவ்வொரு அஹ்மதியையும் கிலாஃபத் அமைப்புடன் கலப்பற்ற தன்மை மற்றும் நன்றியுணர்வுடன் இணைந்திருக்க செய்வானாக. மேலும் கிலாஃபத்தின் ஆயுளுக்காக எப்போதும் தியாகம் செய்ய முயற்சி செய்யவேண்டும். மேலும் தனது அனைத்து வித முன்னேற்றத்திற்காக கிலாஃபத்தின் கயிறை பற்றி பிடிக்க வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு அஹ்மதிக்கும் தனது பொறுப்பை உணரக்கூடிய, அதன் படி முழுமையாக செயல்படக்கூடிய வாய்ப்பினை தந்தருள்வானாக. அனைவரையும் தனது விருப்பத்தின் வழியில் நடத்துவானாக, நம் அனைவரின் முடிவையும் நல்லதாக ஆக்கித்தருவானாக. ஆமீன்
(அல்பஸல் 2005 ,29 ஜூலை முதல் 11 ஆகஸ்டு வரை)
இந்த அமைப்பில் இணைவதன் அருள்களை மிகவும் சுருக்கமான வார்த்தைகளில் “சொர்க்க வாழ்வை பெறுவீர்கள்” என ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள். .
ஆக இந்த வார்த்தை மறுமையில் பெறக்கூடிய அல்லது வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட அல்லது வியாபாரமோ அல்ல மாறாக இந்த அமைப்பில் இணைவதன் மூலம் இந்த உலகிலேயே அதற்கான பிரதிபலன் அவர்களுக்கு கிடைத்து விடும். மேலும் எவருக்கு இவ்வுலகில் சொர்க்கத்தின் இன்பம் கிடைக்கவில்லையோ அவர் மறுமையிலும் அந்த அருளிலிருந்து தடுக்கப்பட்டவராக எழுப்பபடுவார் என நமக்கு திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த அனைத்தையும் தெரிந்த பின்னரும் இவ்வுலகிலேயே சொர்க்க வாழ்வை பெற விரும்பாத யாராவது இருக்கின்றாரா? இந்த அருளிலிருந்து தடுக்கபட்டவராக இருப்பதற்கு எந்த மனிதன் விரும்புவான்?. இறைவன் அவ்வாறு யாரும் இல்லாமல் ஆக்குவானாக.
ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் நமக்கு இந்த அமைப்பின் அனைத்து வித அருள்கள் மற்றும் முக்கியதுவத்தை தெளிவுபடுத்தியதுடன் இதில் இணைவதற்கு வலியுறுத்தியுமுள்ளார்கள் மேலும் இதன் உரிமையை முழுமையாக செலுத்திவிட்டார்கள். அன்னார் இவையனைத்தையும் மிகவும் வேதனையுடனும், அன்புடனும் கூறியுள்ளார்கள். அல்வஸிய்யத் நூலில் கடைசி வரியை அன்னார் இவ்வாறு எழுதுகிறார்கள்:-
பலர் உலகின் மீது அன்பு கொண்டவாறு எனது இந்த கட்டளையை விட்டுவிடுவார்கள் ஆனால் மிக விரைவில் உலகை விட்டு பிரிந்துவிடுவார்கள் அப்போது கடைசி நேரத்தில் ஹாதா மா வஃதர்ரஹ்மானு வ ஸதக்கல் முர்ஸலூன் என்று கூறுவார்கள் . வஸ்ஸலாமு அலா மனித்தபஉல் ஹுதா.
காலத்தின் இமாமின் கையில் பைஅத் செய்த பின்னரும் அன்னாருடைய வலியுறுத்தி கூறப்பட்ட கட்டளையை விட்டுவிடுபவர் தொடர்பாக எந்தளவு வேதனை மற்றும் துக்கத்தை வெளிபடுத்தியுள்ளார்கள். இறைவன் எந்த அஹ்மதியையும் இப்படிபட்ட துரதிஷ்டவாளியாக ஆக்கமாலிருப்பானாக.
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் விருப்பத்தினை புரிந்து இந்த அருளுக்குரிய வஸிய்யத் அமைப்பில் இணையக் கூடிய நல்வாய்ப்பினை வழங்குவானாக. ஆமீன்
வஸிய்யத் அமைப்பின் மூலம் நிறுவப்பட்ட பெஹிஷ்தி மக்பராவிற்கு ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் மிகவும் ஞானமிக்க, மிகவும் உருக்கத்துடன் மூன்று முறை துஆக்கள் செய்த தனிசிசிறப்பு உண்டு.
ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-
இதில் இறைவன் அருள்புரிவானாக. இதனையே பெஹிஷ்தி மக்பராவாக (சொர்க்கத்திற்குரியவர்களின் கல்லறை) ஆக்குவானாக. உண்மையிலேயே உலகத்தை விட மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்கி உலகின் நேசத்தை விட்டுவிட்டு தங்களை இறைவனுக்காக ஆக்கிக்கொண்டு தங்களிடத்தில் தூய்மையான மாறுதலை உருவாக்கி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஸஹாபாக்களைப் போன்று நன்றியுணர்வு, உண்மை ஆகியவற்றின் முன்மாதிரியை காட்டிய இந்த ஜமாஅத்தை சேர்ந்த தூய உள்ளம் கொண்ட மக்கள் இறுதியாக ஓய்வெடுக்கும் இடமாக அது இருக்கட்டுமாக என்று நான் இறைவனிடம் துஆ செய்கிறேன். ஆமீன் யா ரப்பல் ஆலமீன். மீண்டும் நான் துஆ செய்கிறேன். “வல்லமைமிக்க என் இறைவா! தங்கள் பணிகளில் உலக நோக்கங்களை கலக்காதவர்களாகவும், உண்மையிலேயே உனக்காகவே ஆகிவிட்ட என் ஜமாஅத்தை சேர்ந்த அந்த தூய உள்ளங்களின் கல்லறையாக இதனை ஆக்குவாயாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
மீண்டும் நான் மூன்றாம் முறை துஆ செய்கிறேன். வல்லமைமிக்க கருணைமிக்க என் இறைவா! அதிகமாக மன்னிக்கின்ற மீண்டும் மீண்டும் கருணைகாட்டும் இறைவா! உன்னால் அனுப்பபட்டுள்ள இந்த தூதர் மீது உண்மையான நம்பிக்கை வைத்து எவ்வித வஞ்சமும் சுயநலமும் தங்களிடத்தில் இல்லாமல் நம்பிக்கையின் கட்டுப்படுதலின் உரிமையை முழுமையாக நிறைவேற்றுபவர்களாக, உனக்காக உனது வழியில் தமது உயிரை அற்பணிப்பவர்களாக இருப்பவர்களுக்கும், எவர்களிடத்தில் நீ திருப்தியடைந்து, அவர்கள் முற்றிலும் உனது அன்பில் தங்களையே இழந்து உனது தூதரிடத்தில் உளப்பூர்வமான நம்பிக்கையுடனும் முழுமையான மரியாதையுடனும் அன்புடனும் அத்தூதருக்காக அனைத்தையும் அர்பணிக்கும் அளவில் தங்களது தொடர்பை நிலைநாட்டியுள்ளனர் என எவர்கள் பற்றி உனக்கு தெரியுமோ அப்படிபட்ட மக்களுக்கு இந்த கபருஸ்த்தானில் இடமளிப்பாயாக. ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
(அல்வஸிய்யத்:29 முதல் 32 வரை )
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் உயர்ந்த எதிர்பார்ப்பிற்கேற்ப நம்பிக்கை மற்றும் கட்டுபடுதலில் உயர் தரத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்பளிப்பானாக இதன் மூலம் நாம் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் துஆக்களுக்கு உண்மையான வாரிசாக வேண்டும்.
வஆகிரு தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
(ஜல்ஸா சாலானா (உருது மொழி) உரை 2018: மௌலவி கே.தாரிக் அஹ்மது சாஹிப் சத்ர் மஜ்லிஸ் குத்தாமுல் அஹ்மதிய்யா இந்தியா)
(தமிழ் மொழியாக்கம்: மௌலவி என்.ஜியாவுல் ஹக்)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None