ஒருவர் தன்னை நபியென்று பொய்யாக வாதித்தால் அல்லாஹ் அவரை அழித்துவிடுவான் எனத் திருக்குரான் கூறுகிறது. பஹாவுல்லாஹ் என்பவரும் இவ்வாறு பொய்வாதம் செய்திருந்தும் அவரது இயக்கம் ஈரான் போன்ற பல நாடுகளில் பரவியுள்ளதே ?

மேற்கண்ட கேள்விக்கு ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் ( ரஹ் ) அவர்கள் அளித்த பதில் :

"பஹாவுல்லாஹ் தம்மை நபியென்று கூறவில்லை .மாறாக தம்மை இறைவன் என்றே கூறினார். தம்மை இறைவன் என்று கூறிக் கொள்பவர் தண்டிக்கப்படுவார் எனத் திருக்குரானில் எங்குமே குறிப்பிடப்படவில்லை . ஏனெனில் பைத்தியக்காரர் தாம் இப்படிப்பட்ட வாதம் செய்வார். என்பதை அனைவரும் அறிவர் . 

இது தொடர்பாக ஒரு நகைச்சுவை ஒன்றைக் கூறலாம் . மனநலம் குன்றியவர்கள் தங்கியிருக்கும் ஒரு விடுதிக்கு சிலர் வருகை தந்தனர் அவர்களிடம் அந்த விடுதியைச் சேர்ந்த ஒருவர் ' நான் ஒரு நபி ; நீங்கள் என்னை நம்பவேண்டும் 'என்று கூறினார் . அப்போது அருகிலிருந்த மரத்தின் உச்சியிலிருந்து  மற்றொருவர் உரத்த குரலில் " அவன் பொய்யன் ; அவனை நம்பாதீர்கள் அவனை நான் நபியாக அனுப்பவேயில்லை " என்று கூறினார்.

 சமாதான வழி ஜூன் 2000
================
 பஹாவுல்லாஹ் பற்றிய அவர்களின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய ஒரு தமிழ் நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பஹாவுல்லாஹ் 'நபி'யென்றும் 'முஸ்லீம்களுக்கு மஹ்தியாக தோன்றியுள்ளார் 'என எழுதப்பட்டிருந்தது    ஆனால் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் திருக்குரானின்  69:45,47 (பொய் நபிக்கு இவ்வுலகில் தண்டனை) வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது பஹாவுல்லாஹ் தன்னை நபியென்று வாதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள் .

 மேலும் ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் ரஹ் ) அவர்களின் மேற்கண்ட குறிப்பில் அதனையே கூறியுள்ளார்கள் . 
எனவே இதன் உண்மை தன்மையை  அறிய சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தேன் 

2 வருடங்களுக்கு முன் இலங்கை ஷியா பிரிவு செய்யது அலி அவர்களிடம் விவாதம் செய்து கொண்டிருந்தபோது, பொய் நபிமார்களை அல்லாஹ் இவ்வுலகிலேயே பிடிக்கிறான் என்ற சப்ஜெட் வந்தபோது  அவர் 'இல்லை பஹாவுல்லாஹ் தன்னை நபியென்று தான் கூறி தண்டனைக்கு ஆளாகவில்லை 'என்றார் .  நான் அதற்கு பஹாவுல்லாஹ் சுயமாக எழுதிய இரண்டு நூட்களிலிருந்து ஆதாரம் தரமுடியுமா ? எனக்கேட்டேன் .இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். பிறகு மூன்று நாட்கள் கழித்து சில ஆங்கில கொட்டேஷன்களை அனுப்பினார் .  அதில் பஹாவுல்லாஹ் 'தானே இறைவன் 'என்றும் ,' நானே உலகைப் படைத்தேன் ',நானே உலகின் ஒளி' என்றெல்லாம் கூறுகிறார்.நபியென்று எங்கே கூறியுள்ளார் என கேட்டேன் ...
அவர் நழுவிச்சென்ற விதம் வேடிக்கையானது ..

ஆக உலகில் ஒருவர் நபியென்றும் வாதிக்க முடியும் .அல்லாஹ் என்றும் வாதிக்கமுடியும் ஆனால் மக்களை ஏமாற்றும் நோக்கில் தன்னை நபியென்று வாதிடுபவர்களுக்கு சற்று கால அவகாசம் கொடுத்து உவ்வுலகிலேயே இறைத் தண்டனைக்கு ஆளாகி விடுவார் என்பதே உண்மை .
===================
 ஹஸ்ரத்  வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் : 

" இறைவனது தொன்றுதொட்ட நடைமுறைச்சட்டம் , தன்னை ' நபி ' யென்று பொய்யாக வாதம் செய்கின்ற ஒருவருக்கு அவன் கால அவகாசம் வழங்குவதில்லை .
மாறாக அப்படிப்பட்ட நபர் விரைவில் பிடிக்கப்படுகிறார். இறைத் தண்டனைக்கு ஆளாகின்றார் .
அல்லாஹ் அப்படிப்பட்டவருக்கு, ஒரு உண்மையாளருக்கு வழங்குவது போன்று கால அவகாசம் வழங்குவதில்லை   ".

- இஸ்லாமும் மார்க்க சுதந்திரமும் '' பக்கம் 13

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.