இயேசு கிறிஸ்து இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தோன்றினார் என்று இஸ்லாம் எப்படி நம்புகிறது? அவர் கூறிய சில உவமைகளில் தனது அன்பு சேவை மற்றும் மீட்பின் செய்தி முழு மனித குலத்திற்கும் உரியது என்று சுட்டிக்காட்டியுள்ளாரே?

கேள்வி :
இயேசு கிறிஸ்து இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தோன்றினார் என்று இஸ்லாம் எப்படி நம்புகிறது? அவர் கூறிய சில  உவமைகளில் தனது அன்பு சேவை மற்றும் மீட்பின் செய்தி முழு மனித குலத்திற்கும் உரியது என்று சுட்டிக்காட்டியுள்ளாரே? 

பதில் :
இந்த விஷயம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் .முதலாவதாக, காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு மட்டுமே தாம் அனுப்பப்பட்டுள்ளதாக இயேசு கிறிஸ்து வாதிட்டார் .இஸ்ரவேல் வீட்டார் என்பது முழு உலகையும் குறிக்காது. மாறாக இஸ்ரவேல் வீட்டார் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை உள்ளடக்கிய ஓர் எல்லைக்குட்பட்ட சமுதாயமாகும் .அவர் முழு உலகிற்குமாக வரவில்லை என்று நாங்கள் நம்புவதற்கு இது ஒரு காரணமாகும் .

இரண்டாவதாக ,அவரது போதனைகள் எத்தகையது என்றால் அவற்றை முழு உலகத்தாலும் புரிந்துகொள்ள முடியவில்லை .அவரது உண்மையான போதனைகளை பற்றி நான் கூறவில்லை. மாறாக ,அவரது போதனைகளாக தற்போது கூறப்படுபவற்றை நான் குறிப்பிடுகின்றேன்.

 இந்த போதனைகளை முழு உலகத்தாலும் புரிந்துகொள்ள முடியவில்லை .ஏகத்துவம் என்ற போர்வையில் கூறப்படும் 'திரித்துவம்' தான் இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை விஷயமாகும்.

 நீங்கள் திரித்துவத்தை மறுத்துவிட்டு ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொண்டால் கிறிஸ்தவ மார்க்கம் விரும்புகிற கிறிஸ்தவனாக நீங்கள் இருக்க முடியாது. அவர்கள் ஒன்றில் மூன்று  என்றும் மூன்றில் ஒன்று என்றும் கூறிக் கொண்டு அவற்றுக்கு ஏதோ ஒரு விளக்கமும் கூறுகின்றனர். நான் அவற்றை விட்டு விடுகிறேன் .

நான் குறிப்பிட விரும்பும் கருத்து என்னவென்றால் கடந்த கால மக்கள் தலைமுறை தலைமுறையாக பெற்றுக்கொண்ட எந்த ஒரு மார்க்கத்திலும் திருத்துவத்திற்கான சான்றே இல்லை.  இயற்கையிலோ, இயற்கை சட்டங்களிலோ திரித்துவம் செயல்படுவதற்கான அடையாளத்தை எந்த ஒரு விஞ்ஞானியும் கண்டறியவில்லை. இயற்கை விதிகளை விளக்குகின்ற  மிக நவீன ஒருங்கிணைந்த புலக்கொள்கை ( Unified Field Theory) யின் கூற்றுப்படி இயற்கையில் உள்ள அனைத்தையும் , அனைத்து இடங்களிலும் ஆள்வது ஒரே ஒரு சட்டமே ஆகும் .

இயேசு கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னர் உலகை ஆட்சி செய்தது யார் ?அல்லது இயற்கை சட்டங்களை உருவாக்கவும் உலகைப் படைக்கவும் இறைவனோடு சேர்ந்து அவரும் ஈடுபடுவாரா ?  பூமி தோன்றுவதற்கு முன்பே இந்த பிரபஞ்சம் இருந்துள்ளது .அதற்கு என்ன நேரிட்டது? அங்கு என்ன நிகழ்ந்தது ?அந்நிகழ்வுகள் அந்நிகழ்வுகள் கால எல்லைக்கு உட்பட்டது அல்ல .

ஆதி அந்தமற்ற ஒரே ஒருவன் இறைவன் மட்டுமே ஆவான் .ஆதி அந்தமற்ற தன்மை வேறு எந்த வடிவிலும் ,இயற்கை சட்டங்கள் இருப்பதற்கான தடயம் எங்குமே இல்லை இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உலகளாவியது அல்ல என நாங்கள் கருதுவதற்கு சில காரணங்களாகும் .ஒரு உலகளாவிய போதனை உலகளாவிய முறையில் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்க  வேண்டும்

- ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியிலிருந்து 
சமாதான வழி மே 2001

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.