தலைமுடி தாடிகளில் கருப்பு சாயம் பூசலாமா இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

கேள்வி :
தலைமுடி தாடிகளில் கருப்பு சாயம் பூசலாமா இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
                -_அபு மஹ்மூது உடன்குடி 


பதில் : 
ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சாயம் பயன்படுத்தியுள்ளார்களா என அபூஹுரைரா (ரலி )அவர்களிடம் கேட்டபோது ஆம் என்று பதிலளித்தார்கள்.

ஹஸ்ரத் ரசூலுல்லாஹ்  (ஸல்) அவர்களின் முடி சாயம் பூசப்பட்டிருந்ததை நான் கண்டேன் என அனஸ் (ரலி ) அவர்கள்ட அறிவிக்கிறார்கள் .
(ஷமாயிலுத் திர்மிதி )

இந்த நபிமொழிகளிலிருந்து சாயம் பூசுதல் தடையில்லை என்பதை உணரலாம்
----------------------------------
//சமாதான வழி 1998 ஏப்ரல் இதழில் 23ம் பக்கத்தில் தலை முடி,தாடிக்கு கருப்பு சாயம் பூச இஸ்லாத்தில் அனுமதி உண்டா என்ற கேள்விக்கு சாயம் பூச தடை இல்லை என்று பதில் அளித்து உள்ளீர்கள் .

ஆனால் கருப்பு சாயம் பூசுவதை ஹஸரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளதாக Gardensof the Righteous-ல்1462 வது ஹ்தீஸில் காணப்படுகிறதே?  

      - M.M.இப்ராகிம்

பதில் :
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் அந்த குறிப்பிட்ட நபித்தோழரிடம் "சாயம் பூசுங்கள்- கருப்பை தவிர " என்று கூறியதாக வருகிறது


இதிலிருந்து கருப்புச் சாயம் கூடாது என்ற கருத்தை கொள்வதை விட ஹஸ்ரத் நபி (ஸல் ) அவர்கள் கேள்வி கேட்ட அந்த சஹாபியிடம் ,பொதுவாக சாயம் பூசுவதில் எந்த தடையும் இல்லை எனக் கூறினார்கள். என்பதையே முதன்மையாக புரிந்து கொள்ள வேண்டும் .


மேலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாயம் பூசி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்களில் எங்கேயும் கருப்பு நிறத்தை விதிவிலக்காக குறிப்பிடப்படவில்லை .எனவே அன்னார் தனது ஒரு சஹாபிக்கு கருப்பு நிறத்தை தவிர என்று அவருடைய சூழ்நிலைக்கேற்ப கூறிய விஷயத்தை பொதுவான தடையாக கருத முடியாது


- சமாதான வழி செப்டம்பர்-1998
________


* ஹஸரத் நான்காவது கலீபத்துல் மஸீஹ் ( ரஹ் ) அவர்கள் கருப்பு சாயம் பயன்படுத்தி வந்தார்கள் .அவர்களது மனைவியின்  வஃபாத்திற்கு பிறகு  சாயம் பூசுவதை முழுமையாக நிறுத்திக் கொண்டதாக நாம் அறிகிறோம்.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.