ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் கூறுகின்றார்கள்
உண்மையான தவ்பாவிற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. முதல் விஷயம், நமது மூளையை குழப்பம் நிறைந்த எண்ணங்களை உருவாக்கக்கூடிய விஷயங்களிலிருந்து தூய்மையானதாக வைத்திருக்க வேண்டும். இரண்டாவது விஷயம், ஏதாவதொரு தவறான வேலையை செய்வதற்கோ அல்லது தீமையின் பக்கம் கவனம் செல்லும் போது அதற்காக வெட்கமும் வருத்தப்படவும் வேண்டும். மூன்றாவது விஷயம், உறுதியான எண்ணம் இருக்க வேண்டும். அதாவது நான் இந்த தீமையின் பக்கமே செல்ல மாட்டேன் என்ற உறுதியான நிலைபாட்டில் இருக்க வேண்டும். மேலும் அதில் நிலைத்திருப்பதற்காக வலுவான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் துஆவும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த தீமைகளும் முடிவு பெரும். மேலும் இதன் இடத்தை நன்மைகள் எடுத்துக் கொள்ளும்.
(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் 7-6-2018 என்று ஆற்றிய ஜுமுஆ பேருரையிலிருந்து எடுக்கப்பட்டது)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None