நமது தொழுகை எப்படி இருக்க வேண்டும்? அதன் உண்மைத்துவம் மற்றும் அதன் ஆன்மா என்ன?

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்.

சிலர் பள்ளிவாசலுக்கு செல்கின்றனர். தொழவும் செய்கின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடைமைகளையும் நிறைவேற்றுகின்றனர். ஆயினும் இறையுதவி அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களின் நல்லொழுக்கம் மற்றும் பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல்கள் எதுவும் தென்படுவதில்லை. இறைக்கட்டளைகளை செயல்படுத்துவது என்பது ஒரு விதையைப் போன்றதாகும். அதன் தாக்கம் உடல் மற்றும் ஆன்மா இரண்டின் மீதும் ஏற்படுகின்றது. நிலத்தை உழுகின்ற ஒருவர் இருக்கின்றார். மிக உழைப்புடன் விதையை விதைக்கின்றார். இரண்டு மூன்று மாதங்கள் வரை அதில் செடி எதுவும் வளரவில்லை என்றால் பின்னர் விதை சீர்கெட்டது என தெரிய வருகின்றது. இதே நிலைதான் இறைவணக்கத்தின் நிலையும் ஆகும். எனவே இந்த நுட்பமான கருத்தை நாம் நம்முன் நிறுத்த வேண்டும். அதாவது தமது நல்லொழுக்கம் மற்றும் பழக்க வழக்கங்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் இறை தொடர்பின் நெருக்கத்தை கண்டு கொள்ள முடியும்.

(ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் 25-5-18 அன்று ஆற்றிய ஜுமுஆ உரையிலிருந்து எடுக்கப்பட்டது)

2 கருத்துகள்:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.