ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
இது இறைவனது வார்த்தை இல்லையெனில் இறைவனது விருப்பத்திற்கு எதிரான ஓர் இட்டுக்கட்டுபவனின் திட்டம் எனில் இறைவன் அவருக்கு ஏன் உதவி செய்தான்? அவருக்காக அதற்கான ஆயத்தங்களையும் காரணிகளையும் ஏன் ஏற்படுத்தினான்? அதனை எல்லாம் நானா உருவாக்கினேன்? அல்லாஹ் ஓர் இட்டுக்கட்டுபவனுக்கு இவ்வாறு உதவி செய்வான் எனில் பிறகு நம்பிக்கையாளரின் உண்மைக்கான தகுதிதான் என்ன? நீங்களே அதற்கு பதில் சொல்லுங்கள்.
ரமழானில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் கிரஹணம் பிடிக்க வைப்பது, அந்த நேரத்தில் நான் அதனை செய்வது எனது சக்திக்கு உட்பட்டதா? ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் அதனை உண்மையான மஹ்திக்கு அடையாளமாக்கி இருந்தார்கள். இறைவன் எனது வாதத்தின் வேளையில் உண்மைப்படுத்தினான். நான் அவனது தரப்பிலிருந்து வந்தவன் இல்லை எனில் இறைவன் தானே முழு உலகத்தையும் வழி கெடுத்தானா? இதற்கு யோசித்து பதில் சொல்லுங்கள். என்னை மறுப்பதன் தாக்கம் எதுவரை செல்கிறது?
ஹஸ்ரத் நபி(ஸல்)அவர்களை மறுப்பதும் பிறகு இறைவனை மறுப்பதும் இதனால் ஏற்பட்டுவிடுகிறது. எத்தனை இறை அடையாளங்கள். இரண்டோ நான்கோ அல்ல, ஆயிரம் லட்சம் வரை உள்ளன. எதனை எல்லாம் மறுத்துக் கொண்டு செல்வீர்கள்? அதே பராஹீனே அஹ்மதிய்யாவில் இதுவும் எழுதப்பட்டுள்ளது யஃத்தூன மின் குல்லி ஃபஜ்ஜின் அமீஃக் (தொலைதூரத்திலிருந்து மக்கள் வருவார்கள்)
(மாநாட்டில் கலந்து கொண்ட மக்களை நோக்கி ஹஸ்ரத் அஹ்மதி அலை அவர்கள் கூறினார்கள்) இப்போது நீங்களே வந்துள்ளீர்கள். நீங்கள் ஓர் அடையாளத்தை நிறைவேற்றியுள்ளீர்கள். நீங்கள் ஓர் அயாளத்தை அழிக்க முடிந்தால் அழியுங்கள். பிறகும் கூறுகிறேன் இறை அடையாளத்தை மறுப்பது நல்லதல்ல. அதனால், இறைவனது கோபம் தூண்டப் படுகிறது. எனது உள்ளத்தில் உள்ளதை நான் கூறிவிட்டேன். ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். நான் உண்மையாளன் என்பதை இறைவன் நன்றாக அறிவான். நான் இறைவன் புறமிருந்து வந்தவன்.
(ஜும்ஆ பேருரையிலிருந்து-28/03/14)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None