ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) கூறுகின்றார்கள்: தீயவன் இறைவனுடைய நெருக்கத்தைப் பெறமுடியாது.ஆணவம் கொண்டவன் நெருக்கத்தைப் பெறமுடியாது.அநீதி இழைப்பவன் நெருக்கத்தைப் பெறமுடியாது.நம்பிக்கைத் துரோகிஅவனது நெருக்கத்தைப் பெறமுடியாது அவனுடைய பெயருக்கு களங்கம் ஏற்ப்படுத்த முயல்கின்ற விஷயத்தில் தன்மான உணர்வை வெளிப்படுத்தாதவர் அவனது நெருக்கத்தைப் பெறமுடியாது நாய்களைப் போன்றும் எறும்புகளைப் போன்றும் கழுகுகளைப் போன்றும் உலகத்தின்மீது விழுகின்றவர்கள்,உலக சுக போகங்களில் மூழ்கி இருப்பவர்கள் அவனது நெருக்கத்தைப் பெறமுடியாது.பரிசுத்தமற்ற ஒவ்வொரு கண்ணும் அவனை விட்டும் விலகி இருக்கின்றது.தூய்மையற்ற ஒவ்வொரு இதயமும் அவனை அறிவதில்லை. எவர் அவனுக்காக நெருப்பில் விழுவாரோ, அவர் அந் நெருப்பிலிருந்து காப்பாற்றப் படுவார். எவர் அவ்னுக்காக கண்ணீர் வடிப்பாரோ,அவர் பின்னர் மகிழ்ச்சி அடைவார்.எவர் அவ்னுக்காக உல்கத்தை இழக்கத் துணிவாரோ, அவ் உலகம் அவருக்கு கிடைக்கும்.நீங்கள் உங்கள் உண்மையான உள்ளத்துடனும்,முழு நம்பிக்கை உடனும் தீவிரமான முயற்ச்சியுடனும் இறைவனுக்கு நண்பர்களாக ஆகிவிடுங்கள். அப்போது அவனும் உங்களுடைய நண்பனாக ஆகி விடுவான். வானத்தில் உங்கள் மீது கருணை உண்டாகும் பொருட்டு நீங்கள் உங்களின் கீழ் இருப்பவர்கள் மீதும், உங்களது மனைவியர் மீதும், உங்களது ஏழைச் சகோதரர்கள் மீதும்கருணை காட்டுங்கள்.உண்மையாக நீங்கள் அவனுக்காகவே ஆகி விடுங்கள்.அப்போது அவனும் உங்களுக்காகவே ஆகிவிடுவான்
(ஆதாரம் இமாம் மஹ்தியின் இனிய போதனைகள் என்ற நூல் அஹ்மதியா முஸ்லிம் ஜமாதின் தோற்றுனர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி அலை அவர்கள்)
எனது ஜமாஅத்தை உலக முழுவதும் பரவச் செய்வான்
-
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது ஜமாஅத்தாகிய *அஹ்மதிய்யா
முஸ்லிம் ஜமாஅத்தை* குறித்தும் அதிலுள்ள மக்களை குறித்தும் இவ்வாறு
கூறுகிறார்கள்:...
6 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None