ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) கூறுகின்றார்கள்:
அச்சமும், நேசமும் வெவ்வேறானவை. அவை ஒன்றுடன் ஒன்று இணைய முடியாத அளவுக்கு வேறுபாடுகளைக் கொண்டவை. ஒருவன் ஒரு நபருக்கு அஞ்சுகின்ற அதே சமயத்தில் அவனால் அந்த நபரை நேசிக்க இயலாது.
ஆனால், இறைவனுக்கு அஞ்சுவது இறைவனை நேசிப்பதும் வித்தியாசமான ஒரு வகையை சார்ந்தது. ஒரு மனிதன் இறைவனுக்கு அஞ்சுவதில் எந்த அளவுக்கு முன்னேறுகின்றான் ஒருவன் இறைவனை நேசிக்கின்ற அதே அளவு அவனுக்கு அஞ்சவும் செய்கின்றான். இறையச்சம், இறை நேசம் காரணமாக ஒருவன் தீய செயல்களை விட்டொழித்து நற்செயல்களில் ஈடுபடுகின்றான்.
இஸ்லாம் இறையச்சத்தை எடுத்துக்காட்ட தொழுகையை கடமையாக்கியுள்ளது. அது போன்று இறை நேசத்தை வெளிப்படுத்த ஹஜ்ஜை ஏற்படுத்தியுள்ளது. தொழுகையின் பல்வேறு நிலைகள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனவை ஆகும். தொழுகையில் ஒருவன் தாழ்மை குணத்தையும், பணிவையுமே காட்டுகிறான்.
ஹஜ்ஜை பொருத்தவரை அது நேசத்தின் ஓர் அடையாளமாகும். அந்த நேசம் எத்தகையது என்றால், நேசிப்பவர் முறையாக உடை அணிவதைப் பொருட்படுத்துவதில்லை. இந்த உடையின் காரணமாக, அதாவது ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றவர் நேர்த்தியான உடைகளை அணியாமலிருப்பதே ஹஜ் நேசத்தின் அடையாளம் என்பதற்கு ஆதாரம் ஆகும்.
(அல்-ஹகம், ஜூலை, 1906)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None