அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இறைவனால் நியமிக்கப்பட்ட ஜமாஅத் ஆகும்.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"இந்த இயக்கத்திற்கான விதை விதிக்கப்பட்டதுமே அதை சுக்கு நூறாக்குவதற்காக பெரும் முயற்சிகள் செய்யப்பட்டும், அந்த விதை முளைத்து, செடியாகி, மரமாகி பூத்துக் குலுங்கி, கனிகள் கொடுத்து கிளைகள் பலவிட்டு வளர்ந்து கொண்டிருப்பதிலும் அற்புதமான அடையாளம் இல்லையா ? இன்று இந்த மாபெரும் மரத்தின் கிளைகளில் எண்ணற்ற பறவைகள் அமர்ந்திருக்கின்றன.
இந்த இயக்கத்தை நாசம் செய்வதற்காக, எதிரிகள் பெரும் முயற்சிகள் செய்வார்கள். ஆனால் நான் இந்த இயக்கத்தை வளரச் செய்து முழுமையடையச் செய்வேன் இறுதி நாள் வரை வெற்றி பெரும் பட்டாளமாக அதை மாற்றுவேன். நான் உம்முடைய நாமத்தை பூமியின் எல்லை வரை புகழ் அடையச் செய்வேன். மக்கள் கூட்டம் கூட்டமாக தொலைதூரங்களில் இருந்து வருவார்கள். அதிகமான பொருளுதவி கிடைக்கும் எனவே நீர் உம்முடைய வீட்டை விரிவு படுத்தும் என்றெல்லாம் இறைவன் இருபத்துமூன்று வருடங்களுக்கு முன்பே கூறியிருந்ததை நான் பராஹீனே அஹ்மதிய்யா எனும் நூலில் எழுதியிருக்கிறேன்.
பாருங்கள், அன்று கூறப்பட்ட முன்னறிவிப்புகள் இன்று பூர்த்தியாகி இருக்கின்றன. கண்ணுள்ளவர்களுக்கு இந்த இறை அடையாலத்தக் காண முடியும். ஆனால் குருடர்களுக்கு இதுவரை ஒரு அடையாளத்தையும் காண முடியவில்லை.
(நுசூளுள் மஸீஹ் பக் 2-7)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None