திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு சொற்கலும் பல்வேறு கருத்துக்கள் பல பொருட்களை கொண்டதாக திகழ்கிறது. அதில் பொதிந்திருக்கும் ஆழிய விஷயங்களை இறைவனுடன் தொடர்பு கொண்டவரால் மட்டுமே அறிய முடியும். இந்த உம்மத்தில் பலர் இறைமறைக்கு பல்வேறு கோணத்தில் பல்வேற் விஷயங்களை இந்த உம்மத்திற்கு தந்து சென்றுள்ளார்கள். இந்த வரிசையில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களின் மாபெரும் புதல்வன், இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் இறை உதவியுடன் அவனது திருமறைக்கு 10 பாகங்களை கொண்ட விளக்க பொக்கிஷத்தை இந்த ஜமாஅத்திற்கு அன்னார் தந்து சென்றுள்ளார்கள். இதில் பல்வேறு கருத்துக்களை பல்வேறு ஆழிய மற்றும் ஞானம் நிறைந்த கருத்துக்களை பல கோணங்களில் பல உதாரணங்களைக் கொண்டு தாம் கூற வரும் விளக்கத்தை தகுந்த ஆதாரங்களை கொண்டு கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து அன்னார் இல்ம், ஷஊர், அகல், ஃபிக்ர், இர்ஃபான் இவற்றுக்குள்ள வித்தியத்தை குறித்தும் மிக அருமையாக கூறியுள்ளார்கள். அதனை நாம் இங்கு நமது சகோதரர்கள் அறிந்து கொள்வதற்காக பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் தமது திருக்குர்ஆன் விளக்கவுரையில் சூரா அல்பக்கராவின் 10 வது வசனத்தில் வரக்கூடிய "யஷ்உரூன்" என்ற சொல்லிற்கு விளக்கம் அளிக்கும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:
"ஷஊர்" என்றால் ஒரு விஷயத்தின் நுட்பமான கருத்தை அறிவதாகும். திருக்குர்ஆனில் இதற்கு ஒப்பான 'இல்ம், இர்ஃபான், அகல் மற்றும் ஃபிக்ர்' போன்ற சொற்கள் பயனபடுத்தப்பட்டுள்ளன. வெளிப்படையாக இது ஒரே பொருளை தரக்கூடிய சொல்லாக தெரியலாம் ஆனால், இதன் அனைத்தின் பொருளும் ஒன்று மற்றொன்றை விட வேறுபட்டதாக இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால், அரபி ஆய்வாளர்கள் இவ்வாறு எழுதுகின்றார்கள், அரபி மொழியில் ஒரு சொல் கூட மற்ற சொல்லிற்கு முழுமையான முறையில் ஒன்றுபட்ட பொருளை தரக்கூடியதாக இல்லை. மாறாக ஒவ்வொரு சொல்லும் வேறுபட்ட மற்றும் அதிகப் பொருளை தரக்கூடியதாகவே இருக்கின்றது.
வெளியிலிருந்து கிடைக்கக்கூடிய, அறியக்கூடிய அறிவுக்கு 'இல்ம்' என்ற சொல் பாவிக்கப்படுகிறது. அதாவது கேட்டு, பார்த்து, அல்லது தொட்டு உருவாகின்ற அறிவுக்கு 'இல்ம்' என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு மனிதனுக்கு இனிப்பான ஒரு பொருளை உண்டு அதனின் ருசியை அறிந்து கொள்ளும் அறிவுக்கு 'இல்ம்' என்று கூறப்படுகிறது. இந்த அறிவுக்கு அரபியில் 'ஷஊர்' என்றோ அல்லது 'இர்ஃபான்' என்றோ கூற முடியாது.
இவ்வாறு 'இர்ஃபான்' என்பது, மீண்டுமொருமுறை கிடைக்கும் அறிவுக்கு பெயர் ஆகும். ஏனென்றால், இர்ஃபான் என்பது 'அறிந்துகொள்ளுதல்' என்பதற்கு கூறப்படுகின்றது. ஒன்றை முன்பே தெரிந்திருந்து அதனை குறித்த அறிவு மீண்டும் கிடைத்து அதனையே மனிதன் மீண்டும் அறிந்து கொள்கின்றான். இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனை அறிந்து கொள்ளுதல் என்றால் , முன்பே நாம் அவரை பார்த்திருந்து மீண்டும் அவரை பார்த்து அந்த நபரைப் பற்றி அறிந்து, முன்பு கண்டதை தெளிவாக்கிக் கொண்டு, இதனால் கிடைத்த அறிவில் நாம் தவறிழைக்கவில்லை என்பதை உணர்வதாகும்.
ஆன்மீக அறிவிற்கு இதன் காரணமாகவே "இர்ஃபான்" என்று கூறுகின்றோம். அதாவது அல்லாஹ்வின் வேதத்தின் மூலமாக அல்லது தூய இயல்பின் மூலமாக எது நமக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததோ அவ்வனைத்தையும் நாம் அனுபவரீதியில் அறியும்போதோ அல்லது காணும்போதோ எதைக் குறித்து இறைவன் தமது வேதத்தில் கூறியிருந்தானோ அல்லது இயல்பின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்ததோ அது இதுவே ஆகும் என்பதை நாம் உணர்கின்றோம். இதன் காரணமாகவே நாம் "ஆரிஃப்" (ஞானி) என்று எவரை கூறுகின்றோமோ அவர், வேதத்தின் வாயிலாக இறைப்பண்பை அறிந்து அதனை நேரிலோ அல்லது அனுபவ ரீதியிலோ அதை அறிந்து இந்த பண்புகளைத்தான் இறைவன் தமது திருமறையில் கூறியுள்ளான் என்பதை அறிந்து விடுகின்றார்.
"அகல்" எந்த ஆற்றலைக் குறித்து கூறப்படுகின்றது என்று சொன்னால், மனிதனுக்கு இல்ம், ஃபிக்ர் மற்றும் ஷஊரின் அடிப்படையில் பணியை செய்வதற்கான வாய்ப்பை தரக்கூடியதே அகல் ஆகும். எவர் சரியான ஃபிக்ர், இல்ம், ஷஊரின் அடிப்படையில் பணி புரிகின்றாரோ, தனது நஃப்ஸை அதற்கு நேர்எதிராக செயல்படாமல் தடுக்கிறாரோ அவரே "ஆகில்" (அறிவாளி) ஆவார்.
அதே போன்று வெளியிலிருந்து கிடைக்கும் அறிவைக் கொண்டு ஒரு முடிவை எடுப்பதற்கு துணையாக இருப்பதற்கு பெயர் "ஃபிக்ர்" (சிந்தனை) ஆகும். தெளிவான அறிவை கொண்டு மட்டும் கிடைக்காத விடையை அந்த தெளிவான அறிவையும், ஃபிக்ரையும் சேர்த்து ஒரு புது முடிவிற்கு வருபவரை "முஃபக்கிர்" (சிந்தனையாளர்) என்று அழைக்கின்றோம்.
ஷஊர்" என்றால் உள்ளிருந்தே தோன்றும் அறிவிற்கு கூறப்படுகிறது. சரியான இயல்பை குறித்து அறிவதற்கு பெயர் ஆகும். ஆக, ஷஊர் என்றால், மனிதன், இறைவன் அவனுக்குள் உருவாக்கியுள்ள ஆற்றலை உணரும்போது, தனது இயல்பான ஆற்றலை உணர்ந்து தமக்கென நல்வழியை தேர்ந்தெடுப்பதாகும். முடிக்கு "அஷ்ஆருன்" என்று ஏன் கூறப்படுகின்றது என்று சொன்னால், அது உள்ளிருந்து வெளியே நோக்கி வளர்கிறது. அதே போன்று நாம் உடுக்கும் ஆடைக்கு உட்புறமாக உடலை தொட்டு கொண்டு இருக்கும் ஆடைக்கு "ஷிஆர்" என்று கூறப்படுகின்றது. "ஷிஆர்" மரத்திற்கும் கூறப்படுகின்றது, ஏனென்றால் அது பூமியிலிருந்து வெளியே வளர்கிறது. இதே போன்று சிப்பாய்கள் தமக்குள் இருக்கும் மற்ற சிப்பாய்களுக்கு மட்டுமே தாம் கூற வரும் செய்திகள் தெரிந்து கொள்வதற்காக ஒரு செய்கையை நியமித்துக் கொள்கின்றனர். இதற்கு பெயரும் "ஷிஆர்" என்று கூறப்படுகிறது. ஏன் இதற்கு இவ்வாறு பெயர் வைத்துள்ளது என்று சொன்னால், அந்த செய்கை மறைமுகமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் பரஸ்பரம் உள்ள இரகசியத்தை வெளிப்படுத்துவதற்கு ஆங்கிலத்தில் Warch word அல்லது Pass word என்று கூறப்படுகிறது. அதே போன்று கவிதைக்கு, அது உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்துவதினால் "ஷிஃர்" என்று கூறப்படுகிறது. அல்லாஹ்வின் நாட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய விஷயத்திற்கும் "ஷஆயிர்" என்று கூறப்படுகின்றது. ஏனென்றால், அதன் மூலம் இறை நாட்டத்தை அறிய முடிகிறது. மேலும் அதன் மூலம் அவனது பண்பு தெளிவாகிறது. இதே போன்று உள்ளுணர்விற்கு "மஷாயிர்" என்று கூறப்படுகிறது.
ஆக "ஷஊர்" என்றால் மனிதனுக்குள் பொதிந்திருக்கும் ஆற்றலுக்கான அறிவை தரக்கூடிய உணர்வுக்கான பெயர் ஆகும். வெளிப்புற அறிவோடு இதற்கு தொடர்பில்லை.
(தஃப்சீரே கபீர் பாகம் 1 பக்கம் 169)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None