ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் பொன்வரிகள் :
" மனிதன் ஐவேளை தொழுகைகளையும் முறையாக அதன் ஆரம்ப நேரங்களில் நிறைவேற்றுவதுடன் கடமையான தொழுகைகள் , சுன்னத்தான தொழுகைகள் ஆகியவற்றை தொழுவதை நிரந்தரமாக செய்து வருவதுடன் மனதை ஒருநிலைப் படுத்தியவாறு ஆர்வத்துடனும் இன்பத்துடனும் இறை வணக்கத்தின் அருட்களைப் பெறுவதற்கு முழுமையாக முயற்சி செய்து வரவேண்டும் .
தொழுகை எப்படிப்பட்ட சவாரியாக இருக்கிறதென்றால் அது அடியானை மேலே இருக்கும் உலகத்தின் இறைவன் வரை கொண்டுசெல்கிறது. இதன் மூலமாக மனிதன் எத்தகு உயர் தகுதியை பெறுகின்றான் என்றால் அப்படிப்பட்ட உயர்வான நிலையை குதிரைகளின்
முதுகுகளில் அமர்ந்து மனிதனால் அடைய
முடியாது.
தொழுகையின் கனிகளை அம்புகளால் பெறமுடியாது .இதன் ரகசியத்தை
சொற்களால் வெளிப்படுத்திக் கூறவும் முடியாது.
எனவே எவர் இந்த வழிமுறைகளை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொண்டார்களோ அவர் உண்மையை பெற்றுக்கொண்டார் .மேலும் திரை மறைவிலிருக்கும் அந்த அன்பன் வரை சென்று விடுகிறார்.
அவரது பகல் ஒளிமயமானதாகவும் அவரது கூற்றுக்கள் முத்துக்கள் போன்றும் இருப்பதை காண்பீர்கள் . அவரது முகம் பதிநான்காவது இரவில் தோன்றும் நிலவாக காட்சி அளிக்கும் . அவரது தங்குமிடம் நெஞ்சங்களாக இருக்கும்.
எவர் தொழுகையில் பணிவோடு சிரம்பணிகிறாரோ அல்லாஹ் அவருக்காக அவர் முன்னால் அரசர்களைக் குனிய வைக்கிறான் .மற்றவர்களது ஆட்சி
மற்றும் அதிகாரத்தின் கீழ் இருந்த மனிதரை அவன் எஜமானராக ஆக்கி விடுகின்றான் .
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் சொற்பொழிவிலிருந்து ..19 -8 -2011
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None