ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
பாவம் எத்தகைய ஒரு கிருமி என்றால் அது மனிதனின் இரத்தத்தில் கலந்திருக்கின்றது. ஆனால், அதற்கான சிகிச்சை இஸ்திக்ஃபாரின் மூலமாகவே நடக்க முடியும். இஸ்திக்ஃபார் என்றால் என்ன? நான் செய்துள்ள பாவங்களின் தீய தாக்கங்களிலிருந்து இறைவன் நம்மை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதே இஸ்திக்ஃபார் ஆகும். ஆனால் எந்த பாவங்கள் இதுவரை நிகழவில்லையோ அதே வேளையில் மனிதனின் ஆற்றலில் அவை இருக்கின்றனவோ எந்த ஆற்றல்கள் அவனை பாவத்தின் பக்கம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கின்றதோ அவை நிகழ்வதற்கான அந்த சமயமே வராமல் இருக்க வேண்டும். அதாவது அந்த பாவம் நம்மிடமிருந்து நிகழாமல் இருக்க வேண்டும். இதுவே இஸ்திக்ஃபார் ஆகும். அதாவது அந்த பாவங்கள் உள்ளுக்குள்ளேயே எரிந்து கரிந்து சாம்பலாகி விட வேண்டும். அதாவது கடந்த கால பாவங்களுக்காக மன்னிப்பும் கிடைக்க வேண்டும். அவ்வாறே வருங்காலத்தில் செய்யவிருக்கும் பாவங்களிலிருந்தும் தவிர்ந்திருக்க வேண்டும். இதுவே இஸ்திக்ஃபார் ஆகும். அதன் மூலம் அல்லாஹ்வின் கருணை பொங்கி எழ வேண்டும். அவன் அதன் மூலமாக நமக்கு அவனது கருணையையும், அருளையும் வழங்கி கொண்டே இருக்க வேண்டும்.
(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் 24-2-17 அன்று ஆற்றிய ஜுமுஆ சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டது)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None