ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
இறைவன் என்னை மிகவும் கண்ணியப்படுத்துவான் என்றும், என்மீதான அன்பை உள்ளத்தில் வைத்திருப்பான் என்றும் எனக்கு மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளான். மட்டுமல்லாமல், எனது ஜமாஅத்தை சார்ந்த மக்கள், தனது உண்மையின் ஒளி, ஆதாரங்கள் மற்றும் அடையாளங்களை கொண்டு அனைவரின் வாயையும் அடைக்க செய்யும் அளவிற்கான அறிவாற்றலை பெருவார்கள் என்றும், ஒவ்வொரு சமுதாயமும் இந்த ஊற்றிலிருந்து நீர் அருந்துவார்கள் என்றும், இந்த இயக்கம் வளர்ந்து கொண்டே செல்லும், உலகில் இது நிலை கொண்டு விடும் அளவிற்கு மலர்ந்து விடும் என்றும் அறிவித்துள்ளான்.....ஆகவே கேட்பவர்களே கேளுங்கள்! இந்த விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த முன்னறிவிப்புகளை தமது பெட்டிகளில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இது இறைவனின் வார்த்தையாகும். இது ஒரு நாள் நிறைவேறும்.
(நூல் | தஜல்லியாத்தே இலாஹிய்யா)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None