வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"அல்லாஹ் உங்களுக்கு தமது வழியை காட்ட இரவில் எழுந்து துஆ செய்யுங்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நபித்தோழர்களும் படிப்படியாகவே மார்க்கக் கல்வியை கற்றுக் கொண்டார்கள். அவர்கள் முன்பு எவ்வாறு இருந்தார்கள்? ஒரு விவசாயி விதைத்த விதையை போன்று இருந்தார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நீர் பாய்ச்சார்கள். அன்னார் (ஸல்) அவர்களுக்காக துஆ செய்தார்கள். விதை சரியாக இருந்தது மேலும் நிலமும் சரியானதாகவே இருந்தது. (அன்னாரின்) நீர்ப்பாசனத்தின் காரணத்தினால் சுவையான கனி கிடைத்தது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அவ்வாறு செயல்பட்டார்கள். அவர்கள் பகலுக்காகவும், இரவுக்காகவும் காத்திருந்ததில்லை. நீங்களும் உண்மையான உள்ளத்துடன் பாவ மன்னிப்பு தேடுங்கள். தஹஜ்ஜுதில் எழுந்திருங்கள், துஆ செய்யுங்கள், உள்ளத்தை சீர்செய்யுங்கள். பலகீனமானதை விட்டுத் தள்ளுங்கள். மேலும் இறை விருப்பத்திற்கிணங்க தமது சொல், செயலை மாற்றி அமையுங்கள்.
(மல்ஃபூஸாத் பாகம் 1 பக்கம் 28)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None