உண்மையான மார்க்கத்தை அறிந்து கொள்ளுங்கள்

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: 

எந்த மார்க்கம் இறைவன் புறமிருந்து வந்திருப்பதாக வாதிக்கின்றதோ, அது அதற்கான அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும். அது தன்னகத்தே இறைவனின் முத்திரையைப் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாம் இத்தகைய ஒரு மார்க்கமாகும். அதாவது மறைவாக இருக்கும் இறைவன் இந்த மார்க்கத்தின் மூலம் அறியப்படுகிறான். இந்த மார்க்கத்தை உண்மையாக பின்பற்றுபவர்களிடத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான். ஓர் உண்மையான மார்க்கம் இறைவனின் கரங்களால் ஆதரவளிக்கப்படுகிறது. மேலும் இத்தகைய மார்க்கத்தின் மூலம் இறைவன் தான் இருப்பதாக தன்னை வெளிப்படுத்துகிறான். கற்பனை கதைகளையே சார்ந்திருக்கும் மார்க்கங்கள் சிலை வணக்கத்தின் ஒரு வடிவமே ஆகும். இத்தகைய மார்க்கங்கள் உண்மையின் ஆவியை பெற்றிருப்பதில்லை. இறைவன் முன்பு இருந்ததைப் போன்றே உயிருடன் இருக்கின்றான் என்றால், அவன் இல்லாததை போன்று தொடர்ந்து மவுனமாக இருப்பதற்கு காரணம் ஏதுமில்லை. அவன் இந்த காலத்தில் பேசுவதில்லை, என்றால், அதைப்போன்றே அவன் செவியுறுவதுமில்லை என்பதுவும் நிச்சயமாகிவிடும். வேறு வார்த்தைகளில் கூறப்போனால், தற்போது அவன் ஒன்றுமில்லை என்றாகிவிடும். இந்த காலத்திலும் கூட இறைவன் செவியுறவும் பேசவும் செய்கின்றான் என்று எந்த மார்க்கம் நிரூபிக்குமோ, அந்த மார்க்கம் உண்மையான மார்க்கமாகும். ஒரு உண்மையான மார்க்கத்தில் இறைவன் பேசுவதன் மூலமாக தனது இருப்பை உறுதிப்படுத்துகிறான். இறைவனைத் தேடுவது கடினமான ஒன்றாகும். இது உலக தத்துவவாதிகள் மற்றும் அறிஞர்களின் வேலை அல்ல. வானங்களையும் பூமியையும் கூர்நது நோக்கும் போது, அவற்றின் ஒழுங்குத்தன்மை இந்த பிரபஞ்சத்தை படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், அத்தகைய ஒரு படைப்பாளன் உண்மையிலேயே இருக்கிறான் என்பதற்கு அது சான்று அல்ல. இருக்கவேண்டும் என்பதற்கும் இருக்கிறான் என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவனது இருப்பை உறுதிப்படுத்துகின்ற ஒரு வேதநூல் திருக்குர்ஆனே ஆகும். அது இறைவனை தேடுவதை தூண்டுவது மட்டுமல்லாமல் அவனை வெளிப்படவும் வைக்கின்றது. திருக்குர்ஆனைத் தவிர மறைந்திருக்கும் இறைவனை வெளிப்பட வைக்கின்ற வேறெந்த நூலும் இல்லை. 
(சஷ்மையே மஸீஹ் ரூஹானி கஸாயீன் தொகுதி 20 பக்கம் 351-352)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.