வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
மார்க்கம் என்பதன் பொருள் மார்க்கத்தின் பெயரில் ஏசிப் பேசுவதும் கடும் சொற்களை பயன்படுத்துவதும் அல்ல. இது தொடர்பாக எவரும் உள்ளத்தின் தீமைகளை நீக்குவதன் பக்கமோ அல்லது நேசத்திற்குரியவனிடம் உண்மையான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதன் பக்கமோ கவனம் செலுத்துவதில்லை. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பின் மீது நாய்களை போன்று தாக்குதல் தொடுக்கின்றனர். மார்க்கத்தின் ஆதரவாக ஒவ்வொரு வகையான தீய நடத்தைகளும் வெளிப்படுத்தப்படுகிறது. இத்தகைய மக்கள் தாம் உலகிற்கு வந்தது ஏன் என்பதையும் தமது வாழ்வின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும் அறிவதில்லை. அவர்கள் தொடர்ந்து குருடர்களாகவும் தீய இயல்பு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். தமது மதவெறி கொண்ட உணர்வுகளுக்கு மார்க்கத்தின் பெயரை சூட்டுகின்றனர். அவர்கள் தனது தீய நடத்தையை வெளிப்படுத்தி தமது கட்டுப்பாடற்ற நாவை ஒரு கற்பனை இறைவனுக்கு ஆதரவாக பயன்படுத்துகின்றனர். அந்த இறைவனின் இருப்பிற்கோ அவர்களிடம் எந்த சான்றும் இல்லை. உயிருள்ள இறைவனை வணங்குவதை போதிக்காத மார்க்கத்தினால் என்ன பயன் இருக்க முடியும்? அவர்கள் முன்வைக்கின்ற இறைவன் ஒரு பிணத்தை காட்டிலும் சிறந்தவன் அல்லன். அவன் பிறரது ஆதரவினாலேயே நடக்கிறான். அந்த ஆதரவு திரும்ப பெறப்பட்டால் அவன் தரையில் விழுந்துவிடுகின்றான். மதவெறியைத் தவிர வேறெதையும் இத்தகைய மார்க்கத்தினால் அவர்கள் பெறுவதில்லை. மிகச் சிறந்த பண்புகளான இறைவன் மீதான அச்சத்தையும் மனித குலத்தின் மீதான அனுதாபத்தையும் அவர்கள் முற்றிலும் இழந்துவிடுகின்றனர்.
(பராஹீனே அஹ்மதிய்யா பாகம் 5, ரூஹானி கஸாயின் தொகுதி 21 பக்கம் 28)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None