இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
நீங்கள் துன்பங்களைக் காணுகின்றபோது இறைவழியில் உங்களுடைய கால்களை முன்னே வையுங்கள். இதுவே நீங்கள் முன்னேறுவதற்கான வழியாகும். இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தை உலகெங்கும் பரவச்செய்ய நீங்கள் முயன்று வாருங்கள். அவனுடைய அடியார்களிடம் அன்புகாட்டுங்கள். உங்களின் நாவாலோ கைகளாலோ அவர்களுக்கு தீங்கு செய்து விடாதீர்கள். மக்களின் நல்வாழ்விற்காக பாடுபடுங்கள். உங்களைவிட வறியவர்களைக் காணும்போது கர்வம் கொள்ளாதீர்கள். உங்களை ஏசுகின்றவர்களைக் கூட ஏசாதீர்கள். எளிமை, இனிமை, பரந்த மனப்பான்மை ஆகியவற்றைக் கைக்கொண்டு மக்களோடு நேசபாவத்துடன் பழகுங்கள். அப்போதுதான் நீங்கள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவீர்கள். சிலர் வெளிப்படையாக பணிவைக் காட்டுவார்கள். ஆனால் அந்தரங்கத்தில் ஓநாய்களாக இருப்பார்கள். சிலர் வெளிப்பார்வைக்கு தூய்மையானவர்களாக காணப்படுவார்கள். ஆனால் உள்ளத்தால் பாம்பாக இருப்பார்கள். உங்களுடைய அகமும் புறமும் ஒன்றாகாதவரை நீங்கள் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டீர்கள். (கிஷ்தி நூஹ்)
மேலும் கூறுகின்றார்கள்:
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None