உயிருள்ளவர் யார்?

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் மிக உரிமையுடனும், உறுதியுடனும் கூறுகிறேன், நான் உண்மையாளன். இறையருளால் இவ்வரங்கில் வெற்றி எனக்கே. இயன்ற அளவு தொலைநோக்குடன் பார்க்கும் போது முழு உலகையும் என் உண்மையின் காலடியில் காண்கிறேன். மிக விரைவில் நான் சிறப்பு மிக்க வெற்றி ஒன்றினை அடைவேன். ஏனென்றால் என் நாவிற்கு துணையாக மற்றொரு நாவு பேசுகிறது. என் கையை வலுவூட்ட இன்னொரு கை செயல்படுகிறது. அதை உலகு காண்பதில்லை. ஆனால் நான் காண்கிறேன். என் உள்ளத்தில் விண்ணுலகைச் சேர்ந்த ஆவியொன்று பேசுகிறது. அது என் சொல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வாக்கிற்கும் உயிரூட்டுகிறது. விண்ணில் ஒரு துடிப்பும் கொதிப்பும் எழுந்துள்ளது. அது இந்த ஒரு பிடி மண்ணை பொம்மை போன்று எழுப்பியுள்ளது. எவர் மீது தவ்பாவின் வாயில் மூடப்படவில்லையோ அவர் நான் சுயமாக எதையும் செய்யவில்லை என்பதை மிக விரைவில் கண்டு கொள்வார். உண்மையாளரைப் பிரித்தறிய முடியாத கண்கள் ஒளியுடையனவா? வானத்தின் இந்த சப்தத்தை உணராதவன் உயிருள்ளவனா?

(இசாலே அவ்ஹாம் பாகம் 2)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.