வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
அன்பர்களே! தொன்றுதொட்டு இருந்து வந்த அனுபவம் மூலமாகவும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்த்ததன் மூலமும் இந்த விஷயம் நிரூபணம் ஆகியிருக்கின்றது. அதாவது பல்வேறு சமுதாயங்களைச் சார்ந்த நபிமார்களையும், தூதர்களையும் இழிவாக நினைவு கூருவதும் அவர்களை ஏசிப்பேசுவதும் எத்தகைய ஒரு விஷம் என்றால் அது இறுதியில் உடலை மட்டுமல்லாமல் ஆன்மாவையும் அழித்து மார்க்கம் மற்றும் உலகம் ஆகிய இரண்டையும் அழித்து விடுகிறது. எந்த நாட்டிலுள்ளவர்கள் பரஸ்பரம் தங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரது மார்க்கத்தைக் கொள்ளையடிப்பவராகவும் குற்றங்களைக் கணக்கிடுபவராகவும், ஒருவர் மற்றவரது தகுதியை குறைக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டும் இருப்பார்களோ அந்த நாட்டிலுள்ளவர்கள் நிம்மதியாகத் தங்களது வாழ்க்கையைக் கழிக்க முடியாது. எந்த சமுதாயங்களில் ஒரு சமுதாயம் அல்லது இரண்டுமே பரஸ்பரம் தங்களுக்கிடையில் ஒருவர் மற்றவர்களது நபிமார்களை அல்லது ரிஷிகளை அவதாரப் புருஷர்களையும் தீமையினால் அல்லது தீய சொற்களின் மூலம் நினைவு கூர்ந்து வருவார்களோ அந்த சமுதாயங்களுக்கிடையில் ஒருபோதும் உண்மையான ஒற்றுமை ஏற்பட முடியாது. தனது நபி அல்லது மார்க்கத் தலைவர் இழிவுப்படுத்தப்படுவதைக் கேட்டு எவருக்குதான் உணர்வு வராமல் இருக்கும்?
(சமாதானத் தூது பக்கம் 14)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None