இரட்சிப்பு பெற்றவர் யார்?

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

உண்மையான இறைவன் இருக்கிறான் என்றும் இறைவனுக்கு அவனது அனைத்து படைப்பினங்களுக்குமிடையில் பரிந்து பேசக் கூடியவர் ஹஸரத் முஹம்மது (ஸல்) அவர்களே என்றும்,  வானத்தின் கீழ் அவர்களுக்கு சம நிலையிலுள்ள வேறு எந்த நபியும் இல்லை என்றும், திருக்குர்ஆனுக்கு ஒப்பான வேறு எந்த வேத நூலும் இல்லை என்றும் நம்பிக்கை வைக்கக்கூடியவர்களே இரட்சிப்புப் பெற்றவர்களாவர்.

🔸நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் என்றென்றும் உயிர் வாழ வேண்டுமென்று அல்லாஹ் நாடவில்லை. ஆனால் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த திருநபி (ஸல்) அவர்கள் நிரந்தரமாக உயிரோடிருக்கிறார்கள்.

🔹எனவே அந்த புனித ஆன்மா கொண்டு வந்த ஷரீஅத் என்னும் இஸ்லாமிய மார்க்க சட்டங்களையும் அவர்களின் ஆன்மீக அருட்கொடைகளையும் இறுதி நாள் வரை நிலைத்திருக்கச் செய்வதன் மூலம் அவர்கள் என்றென்றும் உயிரோடிருக்கக் கூடிய அடித்தளத்தை இறைவன் நிலை நாட்டினான்.

(நூல்கி: கிஷ்தி நூஹ் (நூஹ்வின் கப்பல்))

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.