இஸ்லாத்தில் பர்தா ஏன் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது!?

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"ஐரோப்பாவை போன்று பர்தாயின்மைக்கு மக்கள் அழுத்தம் தருகிறார்கள். ஆனால், அது ஒரு போதும் உகந்தது அல்ல. இந்த சுதந்திரம்தான் பெண்களின் கட்டுப்படாமைக்கும் தீமைக்கும் வேர் ஆகும். எந்த நாடுகள் இந்த வகை சுதந்திரத்திற்கு அனுமதி கொடுத்து விட்டனவோ அவர்களின் நல்லொழுக்க நிலையை சற்று பார்வையிடுங்கள். அவர்களின் இந்த சுதந்திரம் மற்றும் பர்தாயின்மையால் இவர்களின் ஒழுக்கமும், தூய்மையும், கற்பு ஒழுக்கமும் அதிகமாகி இருந்தால் நாம் தவறில் இருப்பதாக ஒத்துக் கொள்வோம். ஆனால், ஆணும் பெண்ணும் இளம் வயதினராகவும் சுதந்திரமாகவும் பர்தா இல்லாமலும் இருந்தால் அவர்களின் தொடர்புகள் எந்த அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும். தீய பார்வையை வீசுதல் மன எழுச்சிகளால் பெரும்பாலும் மிகைப்படுத்துதல் மனிதனின் இயல்பான தன்மையாகும்.
பிறகு பர்தாவில் சுதந்திரம் இல்லாமல் இருக்கிற நிலையில் அவர்கள் கட்டுபடாமைக்கும் தீமைக்கும் உட்படுவார்கள் என்றால், பிறகு சுதந்திரமாக இருந்தால் எதுதான் நடக்காது? ஆண்களின் நிலையை சற்று மதிப்பிட்டுப் பாருங்கள். எந்த அளவுக்கு கடிவாளமற்ற குதிரைகளைப் போன்று ஆகிவிட்டார்கள். இறைவனை பற்றிய எந்த அச்சமும் இல்லை. மறுமையைப் பற்றிய நிச்சய உறுதியும் இல்லை. உலக ரசனைகளை தமது வணக்கத்திற்குரியவையாக்கி வைத்துள்ளனர். எனவே, எல்லாவற்றிற்கும் முதலில் தேவை இந்த சுதந்திரம் மற்றும் திரையின்மைக்கு முன்னர் முதலில் உங்கள் நல்லொழுக்கத்தை சரி செய்யுங்கள். அது சரியாகி விட்டால் ஆண்களில் குறைந்தபட்சம் அவர்கள் தமது மனக் கிளர்ச்சிகளால் வெல்லப்படாத அளவுக்கு ஆகிவிட்டார்கள் என்றால் பிறகு பர்தா தேவையா? இல்லையா? என்ற அந்த நிலையில் இந்த விவாதத்தை சீண்டுங்கள். அது அல்லாமல் தற்போதைய சூழ்நிலையில் இதன் பக்கம் அழுத்தம் தருவது, சுதந்திரம் திரையின்மைக்கு அழுத்தம் தருவது சிங்கத்தின் முன் ஆடுகளை வைப்பதாகும். இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? ஒரு செயலின் விளைவை சிந்திப்பதில்லை. குறைந்தபட்சம் தமது மனசாட்சியை பயன்படுத்தட்டும்! பெண்களை ஆண்களுக்கு முன்னால் திரையின்றி வைக்கப்படுவதற்கு ஆண்களின் நிலை என்ன சீர்திருத்தப்பட்டதாக உள்ளதா?"

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மேலும் கூறுகின்றாகள்:

"இக்காலத்தில் பர்தாவின் மீது தாக்குதல் கொடுக்கப்படுகிறது. ஆனால் இம்மக்கள் அறியவில்லை. இஸ்லாமிய பர்தா என்றால்  சிறைச்சாலை என்பது பொருள் அல்ல. மாறாக இது ஒரு வகை தடையாகும். அதாவது அன்னிய ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்க்காமல் இருப்பதற்காகவாகும். பர்தா இருந்தால் தடுமாற்றத்திலிருந்து பாதுகாக்கப்படுவர். ஒரு நடுநிலையாளர் கூற முடியும். அன்னிய ஆணும் பெண்ணும் ஒன்றாக எந்த தடையும் இன்றி சந்திக்க முடிந்தால் உலாவினால் எவ்வாறு மன எழுச்சியிலிருந்து கட்டாய சூழ்நிலையில் தடுமாறாமல் இருப்பர்? பெரும்பாலான நேரங்களில் கேட்கவும் பார்க்கவும் வருவது என்னவென்றால், அன்னிய ஆணையும் பெண்ணையும் ஓரிடத்தில் தனித்திருக்கவும், வாசல் கதவு அடைக்கப்பட்டு இருக்கவும் செய்வதையும் கூட அத்தகைய சமுதாயங்கள் தவறாக நினைப்பத்தில்லை. இதன் தீய விளைவை தடுக்கவே இஸ்லாமிய ஷரீஅத் எவரும் தடுமாறக்கூடிய அத்தகைய பேச்சுகளைப் பேச அனுமதி தரவில்லை. எங்கு அந்நிய ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான் என்று இஸ்லாம் அத்தகைய சூழ்நிலைகளைக் குறித்துக் கூறுகிறது. இந்த தீய போதனைகளால் ஐரோப்பா அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்த தீய விளைவைப் பற்றி ஆய்வு செய்யுங்கள். இந்த தீய வழக்கங்களினால் கட்டுப்பாடின்றி மிகவும் வெட்கம் கேட்ட வாழ்க்கை வாழப்படுகிறது. இது இந்த போதனையின் விளைவேயாகும். ஒரு பொருளை நம்பிக்கை துரோகத்திலிருந்து காப்பாற்ற விரும்பினால் அதனை பாதுகாப்பாக வையுங்கள். பாதுகாப்பாக வைக்கவில்லை என்றால், இவர்கள் நல்லவர்கள் தாம் என்று கருதினால், அது கண்டிப்பாக அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதஹுல்லாஹுத்தஆலா) அவர்கள் கூறுகின்றார்கள்:

"பெற்றோர் குறிப்பாக தாய்மார்களின் பணி என்னவென்றால், சிறு வயதிலேயே இளம் பெண்கலுக்கு இஸ்லாமியை போதனை மற்றும் சமுதாயத்தின் தீமையைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். அப்போதுதான் நமது சந்ததிகள் மார்க்கத்தில் நிலை நிற்க முடியும். பெயர் தாங்கி முன்னேற்றம் பெற்ற நாடுகளின் விஷத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். இந்த நாடுகளில் இருந்து கொண்டு பிள்ளைகளை மார்க்கத்துடன் இணைப்பது, வெட்கத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றிற்காக பெரும் ஜிஹாது செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதற்காக அவர்கள் தமது முன்மாதிரியைக் காட்ட வேண்டும். 

மேலும் கூறுகின்றார்கள்:

"எனவே, எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், வெட்கத்தை மேற்கொள்ள வெட்கத்தை வெளிப்படுத்தும் ஆடை அவசியமாகும். பர்தாவுக்கான இப்போதைய வழிமுறை வெட்கத்தை வெளிப்படுத்தும் ஆடையின் ஓர் அங்கமாகும். பர்தாவில் மென்மை காட்டினால் வெட்கத்தை வெளிப்படுத்தும் சாதாரண ஆடையிலும் கூட பல காரணங்களைக் கூறி மாற்றங்களைச் செய்து விடுவர். பிறகு இந்த சமுதாயத்தின் சாயலுக்கு உள்ளாகி விடுவர். இங்கு முன்னரே வெட்கமின்மை அதிகமாகிக் கொண்டு செல்கிறது. தமது மார்க்கத்தின் போதனையின்படி செல்பவர்களை குறிப்பாக முஸ்லிம்களை எவ்வாறு அவர்களின் மார்க்கத்திலிருந்து அகற்றுவது? என்று உலகம் முயற்சி செய்கிறது. இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் கடுமையாக அழுத்தம் தருகின்றன. மார்க்கப் போதனைகளை முஸ்லிம்களுக்குள் இருந்தே ஒழித்து விட வேண்டும் என்று நினைக்கின்றன. இந்த சக்திகள் ஒரு முயற்சியைச் செய்கின்றன. மார்க்கத்தை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒழித்து விட வேண்டும். அதுவும் பலவந்தமாக மார்க்கத்தை நாம் ஒழிக்கிறோம் என்று தமக்கு எந்தப் பழியும் வராத அளவுக்கு அதனை செய்ய வேண்டும். இது ஓர் அனுதாபம் என்று புரியப்பட வேண்டும் நினைக்கிறார்கள். ஷைத்தானைப் போன்று இனிக்க இனிக்க மார்க்கத்தின் மீது தாக்குதல் நடத்த நினைக்கின்றனர். நாம் துஆவிற்கு அழுத்தம் தர வேண்டும். அல்லாஹ் இந்த ஷைத்தானிய முயற்சிகளை எதிர்கொள்ள நமக்கு தைரியமும் வாய்ப்பும் வழங்குவானாக! மேலும் நமக்கு உதவியும் செய்வானாக! நான் உண்மையின் மீது நிலை நின்றால் நிச்சயமாக நமக்கு ஒரு நாள் வெற்றியும் உறுதியானது. இஸ்லாமிய போதனையே உலகில் வெற்றி பெற வேண்டியுள்ளது. 

இஸ்லாம் நிரந்தரமாக இருக்கக் கூடியதாகும். திருக்குர்ஆனின் போதனைகள் இறுதி நாள் வரைக்கும் ஆனவையாகும். எனவே நாம் எந்த தாழ்வு மனப்பான்மையும் இன்றி நமது போதனையின்படி செயல்பட முயற்சி செய்ய வேண்டும். மேலும் அதன் மீது நிலைத்து நிற்க வேண்டும். பிறருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். 

(13-01-17 அன்று ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்யதஹுல்லாஹுதஆலா) அவர்கள் ஆற்றிய ஜுமுஆ சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டது. முழு குத்பாவை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கில் செல்லவும்)

வீடியோ : https://www.alislam.org/friday-sermon/2017-01-13.html
ஆடியோ: https://www.alislam.org/tamil/av/FSA20170113-TA.mp3
படிக்க: https://drive.google.com/file/d/0ByyTP5qa3i8LOTVGblAxUFNUZ1VfQi1IemJsTVI5SEZzcVI4/view?usp=sharing

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.