மகத்தான ஒப்புமைகள்

அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாகிய ஹஸரத். ஈஸா (அலை) அவர்கள் இரண்டாவது முறையாக பூமிக்கு வருவார்கள் என்று , உலகில் பெரும்பாலானோர் நம்புகிறனர்.
முன்னர் வந்த ஹஸ்ரத் ஈஸா நபி (அலை ) அவர்கள் இறை நியதிக்கேற்ப மரணமடைந்த தூதர்களில் ஒருவர் தான் என்பதை திருக்குரான் மூலம் நிரூபணமாகிவிட்டது ஈஸா (அலை) அவர்களும வரவேண்டியவரும் வெவ்வேறானவர்கள் என்று நபிமொழிகளிலிருந்து நாம் தெறிந்து கொள்ள முடிகிறது. வருவதாக முன்னறிவிக்கப் பட்ட அந்த ஈஸா (அலை) அவர்கள் தகுந்த அடையாளங்களுடன் இக்காலத்தில் தோன்றி விட்டார்கள். அவர்கள் தான் காதியான் எனுமிடத்தில் தோன்றிய ஹஸரத் மிர்ஸா குலாம் அஹ்மது ( அலை) அவர்களாவார்கள் . அவர்கள் தன்னை இயேசுவின் இரண்டாம் வருகை என்பதை தக்க சான்றுகளுடன் நிரூபித்து விட்டார்கள்.
ஒரே பண்புகளுடைய இருவரை, ஒரே பெயரால் அழைப்பது மனிதனுடைய வழக்கம் மட்டுமல்ல. இறைவனின் நடைமுறையுமாகும் . அந்த வகையில் இந்த இரண்டு ஈஸாவிற்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:

✝ முதல் ஈஸா மஸீஹ் அவர்கள் யூத குலத்தை சேர்ந்தவர்களானாலும் யூதர்களில் எவருக்கும் அவர்கள் வாரிசாக இருக்கவில்லை.
☪இரண்டாம் மஸீஹ் அவர்கள் பனூ குரைஷி இனத்தைச் சாராத ஹஸ்ரத் சல்மான் பார்ஸி அவர்களின் வம்சா வழியில் ,முன்னறிவிப்பிற்கேற்ப தோன்றினார்கள். 

✝முதல் மஸீஹ் அவர்கள் பிறக்கும் போது எகிப்தில் ரோம ஆட்சி நடைபெற்றது
☪ இரண்டாம் மஸீஹ் அவர்கள் பிறந்தபோது பிரிட்டீஷாரின் ஆட்சி நடைபெற்றது.

✝முதல் மஸீஹ் அவர்கள் பிறிந்து போன இஸ்ரவேலர்களை ஒன்றிணைக்க வந்தார்.
☪இரண்டாம் மஸீஹ் அவர்கள் பிளவுபட்ட முஸ்லீம்களின் 72 கூட்டங்களை ஒன்றிணைக்க வந்தார் 

✝முதல் மஸீஹ் அவர்கள் தவ்ராத்தை மெய்பிக்க வந்தார்.
☪ இரண்டாம் மஸீஹ் அவர்கள் முழுமை பெற்ற திருக்குரானை மெய்பிக்க வந்தார்கள்.

✝ முதல் மஸீஹ் அவர்கள் மூசா நபிக்குப் பிறகு 1400 வருட துவகத்தில் வந்தார்கள்.
☪ இரண்டாம் மஸீஹ் அவர்கள் நபி (சல் ) அவர்களுக்குப் பின்னர் 1400 ம் ஆண்டு துவக்கத்தில் தோன்றினார்கள்.

✝ மூசா நபியின காலத்தில் கடுமையான தண்டனைச் சட்டம் தேவைப்பட்டது .ஆனால் தவ்ராத்தை மெய்ப்பிக்க வந்த ஈஸா நபியின் காலத்தில் மென்மையான, சமாதான போதனைதான் தேவைப்பட்டது.
☪ திருக்குரானின் கடுமையான தண்டனைசட்டங்கள் இறுதி நாள் வரை பின்பற்றத் தகுதி வாய்ந்தது.எனினும் இரண்டாம் மஸீஹ் தோன்றிய இன்றய காலச் சூழலில் திருக்குரான் கூறும் அமைதியின் போதனைகளே இன்றைய தேவையாகவும் ,உலகை வெல்லக்கூடியதாக உள்ளது.

✝முதல் ஈஸா மஸீஹ் அவர்கள் உவமையாகப் பேசக் கூடியவர்களாக இருந்தார்கள்.
☪இரண்டாம் மஸீஹ் அவர்கள் உவமைகளுக்கு விளக்கம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். 

✝முதல்  மஸீஹ் அவர்களின் காலத்தில் அறிவியலில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. உதாரணமாக வானியல்/ நாட்காட்டி உருவாக்கம்/ சாலை மேம்பாடு போனறவைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது.
☪ இரண்டாம் மஸீஹ் அவர்களின் காலத்தில் அறிவியலின் முன்னேற்றம் அதன் உச்சத்தை. எட்டிவிட்டது

✝ முதல் மஸீஹ் அவர்களுடைய பிறப்பிற்கு புதிய நட்சத்திரங்கள் தோன்றுவதை அடையாளமாக்கப் பட்டது.
☪ இரண்டாம் மஸீஹ் அவர்களின் காலத்திலும் புதிய நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .

✝ முதல் ஈஸா அவர்கள் பொல்லாத யூத உலமாக்களின் பொய்க் குற்றச்சாட்டிற்கு இலக்கானார்கள்
☪ இரண்டாம் மஸீஹ் அவர்கள் முஸ்லீம் உலமாக்களின் பல்வேறு பொய் வழக்குகளால் அல்லல் பட்டார்கள் .

✝முதல் ஈஸா மஸீஹ் அவர்களிடம் .......யூத அரசவையில் சில பெரிய பொறுப்பு வகித்தவர்கள் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டார்கள். (உம்: நூற்றுக்கதிபதி பிலாத்து)
☪ இரண்டாம் மஸீஹ் அவர்களும் தனது நேர்மையான நடைமுறையால் கவரப்பட்டதால் ,இவர்கள் மீது சுமத்தப்பட்ட அநியாயங்களைக் கண்ட பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டனர். ( உம் :பிரிட்டானிய நீதிபதி டக்லீஸ்) . மேலும் இவர்களது புத்தகங்கள். வெளியிட உதவிகள் கிடைத்தது. பொய் வழக்குகள் தகர்த்தெறியப்பட்டன.

✝ முதல் ஈஸா  அவர்களை சிலுவையில் அரையப்பட்ட பின்னர் பிளேக் நோய் ஏற்பட்டது.
☪ இரண்டாம் மஸீஹ் அவர்களுடைய காலத்திலும் கொடிய பிளேக் நோய் ஏற்பட்டது. 

✝ முதல் ஈஸா சிலுவையில் தொங்கிய போது சூரிய கிரகணம் ஏற்பட்டது.
☪ இரண்டாம் மஸீஹ் அவர்களுக்கு அடையாளமாக முன்னறிவிக்கப்பட்ட சூரிய ,சந்திர கிரகணங்கள் ஏற்பட்டது.

✝ முதல் மஸீஹ் அவர்களுக்குப் பின்னர் ரோம ஆட்சி வீழ்சியடைந்தது.
☪ இரண்டாம் மஸீஹ் அவர்களுக்குப் பின்னர் பிரிட்டீஷ் ஆட்சி வீழ்சியடைந்தது.

✝ முதல் மஸீஹ் அவர்கள் நாஸரேத்தில் பிறந்ததால் நஸ்ரானி என அழைக்கப் பட்டார். 
☪ இரண்டாம் மஸீஹ் அவர்கள் காதியான் என்ற ஊரில் பிறந்ததால் காதியானி என அழைக்கப்படுகிறார்.

✝முதல் மஸீஹ் அவர்களின் கால உலமாக்கள் மிகத் தீயவர்களாக இருந்தனர்.
☪இரண்டாம் மஸீஹ் அவர்களின் கால முஸ்லீம் உலமாக்கள் முன்னறிவிப்பிற்கேற்ப வானத்தின் கீழ் கெட்ட படைப்பினமாக உள்ளனர்

✝ முன்னர் வானத்தில் ஏறிச் சென்ற எலியா இறங்கி வந்த பின்னர் உம்மை ஏற்றுக் கொள்வோம். என யூதர்கள்  முதல் மஸீஹை மறுத்தார்கள்.
☪இங்கே வானம் சென்ற ஈஸா (அலை) இறங்கவில்லை என எண்ணிக்கொண்டு வாக்களிக்கப்பட்ட மஹ்தியும் ,மஸீஹுமாகிய இவர்களை முஸ்லீம்கள் மறுக்கின்றார்கள

"அவர்களிடம் அவர்களுடைய இறைவனிடமிருந்து எந்த அடையாளம் வந்தாலும் அதனைப் புறக்கணிக்கின்றனர்". ( திருக்குரான்-:6:5)

(தொகுத்தவர் | மதிப்பிற்குரிய சுஹைல் அஹ்மத் சாஹிப் மாவட்ட அமீர்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.