முஸ்லிம்களின் இதயம்

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் :
உங்கள் இதயம் முஸ்லிமாகும் வரை நீங்கள் உங்களை முஸ்லிம் என்று கருதக்கூடாது. எதுவரை உங்கள் இதயம் உலக கேளிக்கைகளைக் கண்டு மகிழ்ந்திருக்குமோ அதுவரை உங்கள் இதயம் முஸ்லிமாகிவிட்டது என்று கூற முடியாது. எப்போது உங்களின் இதயம் உலக இன்பங்களிள் லயிப்பதை விட்டுவிட்டு அதன் மீது வெறுப்பு கொள்ளுமோ அப்போது தான் அது முஸ்லிம் ஆகும். எப்போது ஒரு மனிதன் இவ்வாறு எண்ணத் தொடங்குவானோ அப்போது அவன் தான் முன்பிருந்த நிலையில் தற்போது இல்லை என்பதை உணர்வான். அதோடு அவனுடைய உள்ளம் எதை நோக்கியோ இழுக்கப்படுவதை உணர்வான். இறைவனை நினைவு கூர்வதில் அவன் உள்ளம் பேரானந்தம் கொள்ளும். பிரார்த்தனை செய்வதை தன் அன்புக் குரியவரை விரும்புவது போன்று விரும்புவான். இது தான் நம்பிக்கையின் அடித்தளமாகும்.
- மல்ஃபூஸாத்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.