அஹ்மதிய்யா
முஸ்லிம் ஜமாஅத் தமிழ்நாடு வரலாற்றில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கோவை முக்கிய
பங்கு வகிக்கிறது. காரணம் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தமிழ் நாடு முதன்முதலில்
இங்குதான் விவாத களத்தை சந்தித்தது. ஜாக் என்ற இயக்கத்திற்கும் அஹ்மதிய்யா
முஸ்லிம் ஜமாத்திற்கும் இடையில் கிட்டத்தட்ட 9 நாட்கள் முனாஸ்ரா (விவாதம்) நடந்த
இடமாக கோவை விளங்குகிறது.
விவாதம்
பொதுவாக உண்மைக்கும் பொய்யிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டுகிறது.
இந்த வகையில் கோவை விவாதம் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் உண்மையே என்பதற்கு எடுத்துக்
காட்டாக அமைந்தது. இதை வாயால் மட்டும் நாம் கூறவில்லை மாறாக அந்த விவாதத்திற்கு பிறகு
நடந்த சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன.
அந்த
விவாதத்திற்கு பிறகு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்துடன் விவாத களத்தில் சந்தித்த ஜாக்
அமைப்பு உடைந்தது. அந்த பிரிவு சார்பாக இருந்த மதிப்பிற்குரிய ஹஸன் குத்துஸ் அவர்கள்
அஹ்லே குர்ஆன் என்ற அமைப்பில் சேர்ந்துவிட்டார். அது மட்டுமா அந்த பிரிவில் இருந்த
பல சகோதரர்கள் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்தனர். இன்னும் சொல்வதாக இருந்தால்
அந்த மக்களின் பல தியாகங்களின் காரணத்தினால் கோவையில் இறை இல்லம் உதித்தது. இவ்வாறு
அல்லாஹ் உண்மையாளர்களுக்கும் பொய்யர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை பிரித்து காட்டிவிட்டான்.
கண் இருப்பவர்கள் இதை கண்டு இந்த ஜமாஅத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
ஈமான்
கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய
நேர்வழி காட்டுவான்;
இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில்
அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.(8:30)
தீயவர்களை
நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில்
முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. (3:180)
நிச்சயமாக
எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில்
அவனே
அவர்களுக்கு அறிவிப்பான்.(6:160)
இந்த
வகையில் உண்மையை அறிந்து பொய்யை விட்டு விலகி இந்த ஜமாஅத்தில் தன்னை
இணைத்துக் கொண்ட
கோவை ஜமாஅத் சகோதரர்கள் தன்னை இந்த ஜமாஅத்தில் இணைத்ததோடு மட்டுமல்லாமல் அல்லாஹ்வின்
நெருக்கதை அவனது விருப்பத்தை பெறுவதற்காக பல்வேறு பொருள் தியாகங்களை செய்து வருகின்றனர்.
இவர்களின் இந்த தியாகம் முழு தமிழ்நாட்டு ஜமாத்திற்கு ஒரு முன்மாதிரியாகவே உள்ளன என்று
கூறலாம்.
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் தமது குத்பா ஜுமுஆ சொற்பொழிவில் கோவை ஜமாஅத் சகோதரர்களின் பொருள் தியாகத்தைப் பற்றி கூறிய ஒரு சில குறிப்புகளை நாம் கீழே தருகிறோம்:
" தமிழ்நாடு கோயம்புத்தூர்
ஜமாத்தின் பெரும்பாண்மை புதிய அஹ்மதிகள் தான் அவர்களில் பெரும்பாலோர்
10 -15 ஆண்டுகளுக்கு முன்னர் தான் பையத் செய்தார்கள். அதில் அல்லாஹ்வின்
அருளினால் சம்பாதிக்கக் கூடியவர்களில் 50 % பேர்
வஸிய்யத் செய்து விட்டனர் .
சில
ஆண்டுகளுக்கு முன் ஒருவர் பையத் செய்தார் சந்தாக்களை அதிகரிக்க அல்லாஹ் அவருக்கு
பாக்கியம் வழங்கினான் அவர்
கூறுகிறார் . இதன் காரணமாக அல்லாஹ் எனது வியாபாரத்தை பெருக்கி விட்டான் எனது
அஹ்மதியல்லாத உறவினர்கள் இவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்று
ஆச்சரியப் படுகின்றனர் . நான் அவர்களிடத்தில் இவையனைத்தும் அல்லாஹ்வின் அருள்
மற்றும் அஹ்மதிய்யத்தின் பரக்கத் ஆகும் எனக் கூறிவருகிறேன் என்று அவர் கூறுகின்றார் . இது
இந்தியாவின் நிலையாகும் . (குத்பா ஜுமுஆ 7
- 1-2011)
"தமிழ்நாட்டில்
கோயம்புத்தூர் ஜமாத்தில் 10 ஆண்டுகளுக்கு
முன்பு பையத் செய்த நல்ல நண்பர் ஒருவரிடம் வஃபே ஜதீத் இன்ஸ்பெக்டர் நீங்கள் 30000 ரூபாய்
சந்தா செலுத்தலாமே என கேட்ட போது அவர் 50000 ரூபாயாக
எழுதிக்கொள்ளுங்கள் என்றார் .அதனை ரமலான் மாத இறுதியில் பூர்த்தியாக்கி விட்டார்
.பிறகு வருட இறுதியில் வஃபே ஜதீத் , தஃரீக்கே
ஜதீத் சந்தாவுக்கென தலா ஒவ்வொரு லட்சம் ரூபாய் வஹ்தாவாக எழுதினார் " (குத்பா ஜுமுஆ 7 -1 -2011)
இந்தியாவைச் சேர்ந்த வஃபே ஜதீத்
இன்ஸ்பெக்டர் I.R. அன்ஸார் சாஹிப் எழுதுகிறார்.
வஃபே
ஜதீத் சுற்றுப்பயணத்தின் போது நான் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர்
ஜமாத்திற்கு சென்றேன் . நாஸிம் சாஹிப் வஃபே ஜதீத் என்னுடன்
இருந்தார்கள். மதிய உணவிற்கான ஏற்பாட்டை சகோதரர் சுலைமான் சாஹிப் அவர்களது
வீட்டில் செய்யப்பட்டிருந்தது.
அவர் ஒரு தூய அஹ்மதியாவார் 2011 ம்
ஆண்டின் வஃபே ஜதீத் பட்ஜெட் 1
லட்சத்தி 60 ஆயிரம்
ரூபாயாக இருந்தது . இந்த தொகையை வருடத்தின் இறுதியில் செலுத்துவதற்காக இவர் மிகவும் சிரமப்
பட்டார் . மிகவும் கஷ்டப்பட்டு அவர் இந்த தொகையை செலுத்தினார்
. இவ்வருடம்
அவர் தன்னுடைய பட்ஜெட்டை 5 லட்சத்தி
ஐம்பதாயிரமாக எழுதினார். இதனால் எனக்கு வியக்கத்தக்க பயம் ஏற்பட்டது . 1 லட்சத்தி 60 ஆயிரத்தை
இவர் சிரமப்பட்டு செலுத்தியிருக்கிறார் இப்போது அதை விட மூன்று
மடங்கு அதிகமான பட்ஜெட்டை எவ்வாறு பூர்த்தி செய்வார் என எண்ணினேன் . நாஸிம் சாஹிப்
என்னுடன் இருந்ததால் இதை எழுதுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. சாப்பிட்டுவிட்டு
துவா செய்த பிறகு நாங்கள் அங்கிருந்து சென்று
விட்டோம். நாங்கள் ஜமாத் தலைவருடன் இன்னொருவரின் வீட்டிற்கு துஆ செய்ய சென்றோம் .
அரை மணி
நேரத்திற்கு பிறகு நான் நாஸிம் சாஹிபுடன் சதர் சாஹிபின் காரில் பள்ளிவாசலுக்கு வந்து
சேர்ந்தோம் . அங்கே சுலைமான் சாஹிப் நின்று கொண்டிருந்தார் .எங்களிடம் ஒரு பிளாஸ்டிக் கவரை
கொடுத்தார் . மௌலவி சாஹிப் அந்த கவரை திறந்து பார்த்து
ஆச்சரியமடைந்து சொல்வதறியாது திகைத்து நின்றார்கள் . அதில் 5 லட்சத்தி 50 ஆயிரம்
ரூபாய் இருப்பதைக்கண்டு எனது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது ...." (குத்பா ஜுமுஆ 4 -1 -2013)
" கோயம்புத்தூர் ஜமாத்தில்
ஒரு நண்பர் தனது மகளுக்கு நகை வாங்க கடைக்கு சென்றார் . நகைகளை வாங்கிக்
கொண்டிருக்கும் போது ஜு ம்மாவிற்கு நேரமாகிவிட்டதால்
அந்த நபர், நாங்கள் தொழுகைக்குப் பிறகு வந்து வாங்கிக்
கொள்கிறோம் என்று கூறி ஜும்மாவிற்கு வந்து
விட்டனர் ஜும்மாவில் சந்தாவின் முக்கியத்துவம் பற்றி
கூறப்பட்டது. குறிப்பாக ஒரு கண் பார்வையற்ற பெண் செய்த தியாகம் பற்றியும்
கூறப்பட்டது.அது அந்த நபரின் மீது எந்த அளவு தாக்கம் ஏற்படுத்தியது என்றால்
மகளுக்கு நகை வாங்க வைத்திருந்த பணத்தை
வஃபே ஜதீத் சந்தாவாவில் அவர் கொடுக்க வேண்டிய சந்தாவாக கொடுத்து விட்டார்
. ஜும்மா முடித்து வெளியில் வந்து அவரது
மனைவியிடம் கூறியபோது அவரும் அதே எண்ணத்தில் இருந்ததாக தெறிவித்தார் .அல்லாஹ் நமது மகளின் நகைக்கு வேறு ஏற்பாடு செய்வான்
எனக்கு கூறி மகிழ்ச்சியுடன் சென்றனர் . (குத்பா ஜுமுஆ 9 -1-2016 )
கோவை அஹ்மதி சகோதரரின் மற்றொரு
சம்பவத்தை ஹுஸூர்
அவர்கள் கூறும்போது; அவரது
கடைக்கருகில் தீப்பற்றி எறிந்தது ஆனால் அந்த அஹ்மதியின்
கடை ஃபிளக்ஸ் போர்டு கூட தீப் பற்றவில்லை எதிரிகளுக்கு
இந்த சம்பவம் ஒரு அடையாளமாக்கப்பட்ட சம்பவமாகும் என்று குறிப்பிட்டார்கள்.
இவ்வாறு
கோவை விவாதம் ஒரு அழிக்க முடியாத சுவடுகளை விட்டு சென்றிருக்கிறது. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்
கோவையை சார்ந்தவர்களின் இவ்வாறான தியாகமே இன்று கோவை ஜமாஅத் மென்மேலும் வளர்ச்சி பாதையில்
செல்வதற்கு காரணமாகவும் இருக்கிறது. இது அல்லாஹ் வழங்கும் வெற்றியை தவிர வேறு இல்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
" அல்லாஹ்வையும் அவனது தூதரையும்,
நம்பிக்கை கொண்டவர்களையும் தங்கள் நண்பர்களாக்கிக் கொள்கின்றவர்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினரே. அவர்களே நிச்சயமாக வெற்றி பெறுவர். " (5:57)
இன்று
இந்த இளைஞர்கள் நாங்கள் அல்லாஹ்வையும் அவனது ரசூல் மற்றும் நம்பிக்கை கொண்டோர்களை நண்பர்களாக
ஆகியுள்ளோம் என்பதை தமது செயல்களின் வாயிலாக நிரூபித்து வருகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின்
கூட்டத்தினர் என்பதை அல்லாஹ் அந்த ஜமாத்திற்கு வெற்றி மேல் வெற்றியை வழங்கி நிரூபித்திவிட்டான்.
அல்லாஹ் இவர்களின் இம்மையையும் மறுமையும் செழிப்புடையதாக ஆக்குவானாக. மேன்மேலும் அருட்களை
அவர்களுக்கு வழங்குவானாக. ஆமீன்.




கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None