முகத்தஆத் என்றால் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள
சுருக்கெழுத்துக்கள் ஆகும்.
அதாவது அலிஃப் லாம் மீம், அலிஃப்
லாம் மீம் ரா போன்றவை ஆகும். இவ்வெழுத்துக்கள் தனித்தனியாக கூறப்பட்டிருக்கின்றன. இவற்றுள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல்லை குறிக்கும். அப்படி திருக்குர்ஆனில் வந்துள்ள முகத்தஆத்தின்
பொருளை நாம் கீழே பார்க்கலாம்:
அலிஃப் லாம் மீம் :
அனல்லாஹு அஃலமு அதாவது நான் அல்லாஹ் எல்லாரையும் விட மிக அறிந்தவன்.
அலிஃப் லாம் மீம் ஸாது: அல்லாஹு அஃலமு ஸாதிக்குல் கவ்லி அதாவது நான் அல்லாஹ் எல்லாரையும் விட மிக அறிந்தவன். நான் உண்மையாளன்.
அலிஃப் லாம் ரா: அனல்லாஹு அரா அதாவது நான் அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறேன்.
அலிஃப் லாம் மீம் ரா: அனல்லாஹு அஃலமு வ அரா. அதாவது நான் அல்லாஹ் அனைத்தையும் அறியக் கூடியவனாகவும், பார்க்கக் கூடியவனாகவும் இருக்கிறேன்.
காஃப் ஹா யா ஐன் ஸாது: அன்த காஃபின் வ ஹாதின் யா ஆலிமு யா ஸாதிக்கு. அதாவது அறிபவனும் உண்மையாளனுமாகிய இறைவா! நீயே போதுமானவனும் நேர்வழி காட்டுபவனுமாவாய்.
தோ ஹா: தய்யிபுன் ஹாதிய்யுன் அதாவது தூய்மையானவ(தூத)ரே நேர்வழியில் முழுமை பெற்றவரே!
தோ ஸீன் மீம்: தய்யிபுன், ஸமீயுன், அலீமுன். அதாவது தூயவன், நன்கு கேட்பவன், நன்கு அறிபவன்.
தோ ஸீன்: தய்யிபுன், ஸமீயுன் அதாவது தூயவன், நன்கு கேட்பவன். (அதாவது இதை இறக்கியவன் தூயவனும் வேண்டுதல்களை கேட்பவனுமான இறைவனாவான்)
யா ஸீன்: யா ஸய்யிது அதாவது தலைவரே!
ஸாது: ஸாதிக்குல் கவ்லி. உண்மையுரைப்பவன்.
ஹா மீம்: ஹமீதுன், மஜீதுன். மிகுந்த புகழுக்குரியவன், மிகுந்த மேன்மைக்குரியவன்.
ஐன் ஸீன் காஃப்: அலீம் ஸிமீஃ கதீர் அதாவது நன்கு அறிபவன், நன்கு கேட்பவன், பேராற்றல் பெற்றவன்.
காஃப்: கதீர் அதாவது பேராற்றல் கொண்டவன்.
அலிஃப் லாம் மீம் ஸாது: அல்லாஹு அஃலமு ஸாதிக்குல் கவ்லி அதாவது நான் அல்லாஹ் எல்லாரையும் விட மிக அறிந்தவன். நான் உண்மையாளன்.
அலிஃப் லாம் ரா: அனல்லாஹு அரா அதாவது நான் அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறேன்.
அலிஃப் லாம் மீம் ரா: அனல்லாஹு அஃலமு வ அரா. அதாவது நான் அல்லாஹ் அனைத்தையும் அறியக் கூடியவனாகவும், பார்க்கக் கூடியவனாகவும் இருக்கிறேன்.
காஃப் ஹா யா ஐன் ஸாது: அன்த காஃபின் வ ஹாதின் யா ஆலிமு யா ஸாதிக்கு. அதாவது அறிபவனும் உண்மையாளனுமாகிய இறைவா! நீயே போதுமானவனும் நேர்வழி காட்டுபவனுமாவாய்.
தோ ஹா: தய்யிபுன் ஹாதிய்யுன் அதாவது தூய்மையானவ(தூத)ரே நேர்வழியில் முழுமை பெற்றவரே!
தோ ஸீன் மீம்: தய்யிபுன், ஸமீயுன், அலீமுன். அதாவது தூயவன், நன்கு கேட்பவன், நன்கு அறிபவன்.
தோ ஸீன்: தய்யிபுன், ஸமீயுன் அதாவது தூயவன், நன்கு கேட்பவன். (அதாவது இதை இறக்கியவன் தூயவனும் வேண்டுதல்களை கேட்பவனுமான இறைவனாவான்)
யா ஸீன்: யா ஸய்யிது அதாவது தலைவரே!
ஸாது: ஸாதிக்குல் கவ்லி. உண்மையுரைப்பவன்.
ஹா மீம்: ஹமீதுன், மஜீதுன். மிகுந்த புகழுக்குரியவன், மிகுந்த மேன்மைக்குரியவன்.
ஐன் ஸீன் காஃப்: அலீம் ஸிமீஃ கதீர் அதாவது நன்கு அறிபவன், நன்கு கேட்பவன், பேராற்றல் பெற்றவன்.
காஃப்: கதீர் அதாவது பேராற்றல் கொண்டவன்.
சூரா யூனுஸிற்கு விளக்கமளித்தவாறு
ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது அல்-முஸ்லிஹுல் மவ்வூது இரண்டாவது
கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனின் முகத்தஆத் (துண்டு எழுத்துக்கள்
அதாவது திருக்குர்ஆனில் அலிஃப் லாம் மீம் என்று ஆரம்பிக்கும் வார்த்தைகள்)
என்பதற்கு கீழ்வருமாறு விரிவான முறையில் இவ்வாறு விளக்கமளிக்கிறார்கள்:
"முகத்தஆத் என்ற சொல் தன்னகத்தே
எண்ணற்ற ரகசியத்தை உள்ளடக்கியதாக உள்ளது. அதில் சில ரகசியங்கள் திருக்குர்ஆனுடன்
நெருங்கிய தொடர்புடைய , திருக்குர்ஆனிலும் பெயர்கள் இருக்க வேண்டிய
அளவிலான சில நபர்கள் தொடர்பாக உள்ளது. மேலும் இதை தவிர்த்து இந்த முகத்தஆத்
சொற்கள் திருக்குர்ஆனுடைய சில கருத்துக்களுக்கு பூட்டாக இருக்கிறது. அந்த பூட்டை
திறந்தால் மட்டுமே ஒருவர் அந்த கருத்துக்கள் வரை சென்றடைய முடியும். எந்த அளவுக்கு
அதன் பொருள்களை புரிந்து கொண்டே செல்கிறோமோ அதே அளவு திருக்குர்ஆனின்
கருத்துக்களையும் புரிய முடியும்.
என்னுடைய ஆராய்ச்சி என்ன கூறுகிறது
என்று சொன்னால், முகத்தஆத் சொற்கள் மாறும்போது திருக்குர்ஆனின் கருத்துக்களும்
மாறிவிடுகிறது. புதியதொரு கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. எந்த
அதிகாரத்தின் ஆரம்பத்தில் முகத்தஆத் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அதன் பிறகு
வருகின்ற அதிகாரத்தில் முகத்தஆத் சொற்கள் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அந்த
அதிகாரங்களில் ஒரே கருத்துதான் கூறப்பட்டிருக்கும். அதே போன்று எந்த அதிகாரங்களில்
ஒரே மாதிரியான முகத்தஆத் மீண்டும் மீண்டும் வருகின்றாதோ அந்த அதிகாரங்கள்
கருத்துக்கள் அடிப்படையில் ஒரே சரடையில் கோர்க்கப்பட்டதாகவே இருக்கிறது.
சூரா பக்கரா முதல் சூரா தவ்பா வரை ஒரே
கருத்துதான் கூறப்பட்டுள்ளது. இந்த அனைத்து சூராக்களும் அலிஃப் லாம் மீம்
உடன் தொடர்புடையதாக இருக்கிறது. சூரா பக்கரா, சூரா ஆலி இம்ரான் ஆகிய அதிகாரங்கள் அலிஃப்
லாம் மீம் என்று ஆரம்பமாகிறது. அதன் பிறகு சூரா நிஸா,
சூரா மாயிதா, சூரா அன்-ஆம் ஆகியவைகள் முகத்தஆத்
சொற்களிலிருந்து காலியாக உள்ளது. (அதாவது முகத்தஆத் சொற்களைக் கொண்டு அந்த
அதிகாரங்கள் தொடங்கப்படவில்லை.)
இவ்வாறாக அது அலிஃப் லாம் மீம்
என்று துவங்கக் கூடிய முந்தைய அதிகாரங்களின் கீழ் உள்ளது. இதன் பிறகு சூரா அஃராஃப்
அலிஃப் லாம் ஸாது என்று ஆரம்பமாகிறது. இதிலும் அதே அலிஃப் லாம்
உள்ளது. ஆனால் ஸாது என்ற எழுத்து அதிகமாக உள்ளது. அதன் பிறகு சூரா அன்ஃபால்
மற்றும் பராஅத் (தவ்பா) முகத்தஆத் எழுத்துகளிலிருந்து காலியாக உள்ளது.
ஆக சூரா தவ்பா வரை அலிஃப் லாம்
மீம் இன் கருத்துக்கள் தான் கூறப்பட்டுள்ளது. சூரா அன்ஃபாலில் ஸாது
அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணம் இந்த எழுத்து மெய்ப்பிப்பதற்காக
பயன்படுத்தப்பட்டுள்ளது. சூரா அஃராஃப் மற்றும் தவ்பாவில் ஹஸ்ரத் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் வெற்றி மற்றும் இஸ்லாத்தின் முன்னேற்றம் தொடர்பாக
கூறப்பட்டுள்ளது. சூரா அஃராஃபின் அடிப்படை ரீதியாகவும் சூரா அன்ஃபால் மற்றும்
தவ்பாவில் விளக்கமாகவும் உண்மைத்துவத்தினை பற்றி கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே
அங்கு ஸாது அதிகப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.
சூரா யூனிஸிலிருந்து அலிஃப் லாம்
மீம் என்பதற்கு பகரமாக அலிஃப் லாம் ரா என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அலிஃப்
லாம் அதே எழுத்துதான் ஆனால் மீம் என்ற எழுத்திற்கு பதிலாக ரா
என்று வந்துள்ளது. இங்கு கருத்து மாறிவிட்டது. எவ்வாறு வேறுபடுகிறது என்றால் சூரா
பக்கரா முதல் தவ்பா வரை அறிவு சார்ந்த விஷயங்கள் தொடர்பாக கூறப்பட்டிருந்தது. சூரா
யூனுஸ் முதல் கஹஃப் வரை சம்பவங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ள
கூற்றுகள் சம்பவங்களின் விளைவினை சார்ந்து உள்ளது. ஆகவேதான் இறைவன் அலிஃப் லாம்
ரா என்று கூறியுள்ளான். அலிஃப் லாம் ரா அதாவது நான் அல்லாஹ்
அனைத்தையும் பார்ப்பவனாக இருக்கிறேன். மேலும் உலகில் உள்ள அனைத்து வரலாற்றுகளின்
மீதும் பார்வையை செலுத்திய வண்ணம் இந்த வேதத்தை உமக்கு முன்னால் வைக்கிறேன்.
எவ்வாறு இருந்த போதிலும் இந்த சூராக்களில் "பார்த்தல்" என்ற இறைப்பண்பினை குறித்து கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்புள்ள சூராக்களில் "அறிகின்றவன்" என்ற
இறைப்பண்பை குறித்து பேசப்பட்டுள்ளது.
இங்கு நான் தற்போது சுருக்கமாக முகத்தஆத்
எழுத்துக்கள் தொடர்பாக கூற விரும்புகிறேன். சிலர் இதற்கு எந்த பொருளுள் இல்லை என்றும்
மேலும் சிலர் இந்த எழுத்துக்கள் வெறுமனே பயன்படுத்தப்பட்டுள்ளது எனக்
கூறுகின்றார்கள். ஆனால் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்களின் கருத்தை முகத்தஆத்
எழுத்துக்கள் தானாக முன்வந்து மறுக்கிறது.
நாம் முழு குர்ஆனையும் ஆராய்ந்து
பார்க்கும்போது எங்கெல்லாம் முகத்தஆத் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அங்கு
திருக்குர்ஆனின் தொகுப்பில் ஒரு ஒழுங்கு முறை தென்படுகிறது. சூரா பக்கரா அலிஃப்
லாம் மீம் என்று ஆரம்பமாகிறது. பிறகு சூரா ஆலி இம்ரான் அலிஃப் லாம் மீம்
என்று ஆரம்பமாகிறது. சூரா நிஸா, சூரா மாயிதா, சூரா
அன்ஆம் முகத்தஆத் எழுத்துக்கள் இல்லாமல் வந்துள்ளது. பிறகு சூரா அஃராஃப் அலிஃப்
லாம் மீம் ஸாது என்று ஆரம்பமாகிறது. அதன் பிறகு சூரா அன்ஃபால் மற்றும் சூரா
தவ்பா முகத்தஆத் எழுத்துக்கள் இல்லாமல் வந்துள்ளது. அதன் பிறகு சூரா யூனுஸ், சூரா ஹூது, சூரா யூஸுஃப் அலிஃப் லாம் ரா
என்று துவங்குகிறது. மேலும் சூரா ரஆதில் அதிகமாக மீம் சேர்ந்து அலிஃப் லாம் மீம் ரா என வந்துள்ளது. ஆனால்
அங்கு அலிஃப் லாம் மீம் ஸாது இல் ஸாது ஐ இறுதியாக வைக்கப்பட்டுள்ளது, இங்கு மீம் ஐ ரா விற்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால்
எந்தவொரு நோக்கத்தையும் கருத்தில் கொள்ளாமல் அதிகப்படுத்தியிருந்தால்; அதிகப்படுத்தி கூறப்பட்டிருந்த மீம் ஐ ரா விற்கு பிறகு
வைத்திருக்க வேண்டுமே!? ஆக மீம் என்ற எழுத்தை அலிஃப்
லாம் ரா வின் நடுவில் வைப்பதன் மூலம் இந்த எழுத்துக்களுக்கு ஒரு சிறப்பான
குறிப்பிட்ட பொருள் இருக்கின்றது என்பது தெரிகின்றது.
மேலும் நாம் பார்க்கின்றோம் அதாவது
முதலில் அலிஃப் லாம் மீம் என்ற எழுத்துக்களை கொண்ட சூராக்கள் உள்ளன. அதன்
பிறகு அலிஃப் லாம் ரா என்று வந்துள்ளது. இதிலிருந்து கருத்துக்கள்
அடிப்படையில் மீம் என்ற எழுத்துக்கு ரா எழுத்தின் மீது முதன்மை வகுத்துள்ளது
என்பது தெளிவாகிறது. சூரா ரஅதில் மீம் மற்றும் ரா ஒன்றாக சேர்த்து
பின்னர் மீம் ஐ ரா விற்கு முன்னாள் வைப்பது;
இவ்வனைத்து எழுத்துக்களும் சிறப்பான ஒரு குறிப்பிட்ட விளக்கத்தை தன்னகத்தே
கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது. ஆகவேதான் முன்னிலை பொருளைத் தரக்கூடிய
இந்த எழுத்துக்க்ளை எப்போதும் முன்னுள்ளதாகவே வைக்கப்படுகிறது.
சூரா ரஆதிற்கு பிறகு இப்ராஹீம்,
மற்றும் ஹிஜ்ரில் அலிஃப் லாம் ரா வந்துள்ளது. ஆனால் நஹ்ல், பனீ இஸ்ராயீல் மற்றும் கஹஃப் போன்ற அதிகாரத்தில் முகத்தஆத் எழுத்துக்கள்
பயன்படுத்தப்படவில்லை. இந்த அதிகாரங்கள் முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள
கருத்துக்களை உட்கொண்டதாக இருக்கின்றது. அதன் பிறகு சூரா மர்யம் உள்ளது. அதில்
காஃப் ஹா யா அய்ன் ஸாது என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூரா
மர்யத்திற்கு பிறகு சூரா தாஹா உள்ளது. அதில் தா ஹா என்ற எழுத்து
பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு அன்பியா, ஹஜ், மூஃமினூன், நூர் மற்றும் ஃபுர்கான் ஆகிய
அத்தியாயங்களில் முகத்தஆத் எழுத்துக்கள் இல்லை. இவை அனைத்தும் சூரா தாஹாவின் கீழ்
உள்ளது. (அதாவது அதில் கூறப்பட்டுள்ள கருத்தை உட்கொண்டதாக உள்ளது.) அடுத்து சூரா
ஷுஅரா தோ ஸீன் மீம் என்று ஆரம்பமாகிறது. இதில் (தோ ஹா வில்
வரக்கூடிய) தோ நிலைத்துள்ளது.
ஆனால் ஹா விற்கு பதிலாக ஸீன் மற்றும் மீம் வந்துள்ளது.
இதற்கு பிறகு சூரா நம்ல் தோ ஸீன் என்று ஆரம்பமாகிறது. இதில் மீம்
நீக்கப்பட்டுள்ளது. மேலும் தோ ஸீன் நிலைபெற்றுள்ளது. அதன் பின்னர் சூரா
கஸஸின் ஆரம்பம் தோ ஸீன் மீம் என்று துவங்கியுள்ளது. இவ்வாறு மீம்
தொடர்பான கருத்துக்கள் மீண்டும் இதோடு இணைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு சூரா
அன்கபூத்தில் மீண்டும் அலிஃப் லாம் மீம் என்று ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் இறைஞானம் தொடர்பான கருத்துக்களை ஒரு புதுப்பொலிவுடன் புதுத்தேவையை
கருத்தில் கொண்டு தொடரப்பட்டுள்ளது. (நான் தற்போது தரவரிசை தொடர்பாக கூறவில்லை
ஆனாலும் சிலர் அலிஃப் லாம் மீம் என்று மீண்டும் ஏன் துவங்கப்பட்டுள்ளது
என்று கேட்கலாம். அதற்கான காரணம் என்னவென்றால், சூரா
பக்கராவிலிருந்து அலிஃப் லாம் மீம் காஃபிரை (நிராகரிப்போரை) குறித்து
கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கிருந்து அலிஃப் லாம் மீம் மூமீனை
(நம்பிக்கையாளர்களை) குறித்து கூறப்படுகிறது.)
சூரா அன்கபூத்திற்கு பிறகு சூரா ரோம்,
சூரா லூக்மான் மற்றும் சூரா ஸஜ்தா வும் அலிஃப் லாம் மீம் என்றே
தொடங்கப்பட்டுள்ளது. இதன் பிறகு சூரா அஹ்ஸாப்,
ஃபாத்திரில் முகத்தஆத்
பயன்படுத்தப்படவில்லை. மாறாக இந்த சூராக்கள் முந்தைய சூராக்களின் கீழ் வருகிறது.
அதன் பிறகு சூரா யாஸீன் உள்ளது. இது யா ஸீன் என்று துவங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு சூரா சாஃப்ஃபாத் முகத்தஆத் இல்லாமல் உள்ளது. அதன் பிறகு சூரா ஸாது ஸாது
என்ற முகத்தஆத் சொல்லை கொண்டு துவங்கப்பட்டுள்ளது. அதன் பின் சூரா ஸுமர் முகத்தஆத்
இல்லாமலும் முந்தைய அதிகாரங்களின் கீழும் வந்துள்ளது. இதற்கு பிறகு சூரா மூமின் ஹா
மீம் என்பதை கொண்டு துவக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு ஹாமீம் ஸஜ்தா வும் ஹா
மீம் ஐ கொண்டு துவக்கப்பட்டுள்ளது. பிறகு அதிகாரம் ஷுரா வையும் ஹா மீம்
என்ற எழுத்துக்களை கொண்டு துவக்கப்பட்டுள்ளது ஆனால் இத்துடன் ஐன் ஸீன் காஃப்
என்ற எழுத்துக்களை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பிறகு சூரா ஸுக்ரூஃப் , துகான், ஜாஸியா மற்றும் அஹ்காஃபிலும் ஹா மீம்
என்றே துவங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சூரா முஹம்மது, ஃபத்ஹ்
மற்றும் ஹுஜ்ராத்திலும் முகத்தஆத் பயன்படுத்தப்படவில்லை. மாறாக முந்தைய அதிகாரங்களின்
கீழ் உள்ளது. பிறகு சூரா காஃப் காஃப் என்ற எழுத்தை மட்டுமே கொண்டு
துவங்கப்பட்டுள்ளது. மேலும் இதிலிருந்து திருக்குர்ஆனின் இறுதி வரை ஒரே கருத்தே
கூறப்பட்டு வருகிறது.
இந்த தரவரிசையின் ஒழுங்கு முறைகளை
பார்க்கும்போது இந்த முகத்தஆத் எழுத்துக்களை எந்த ஒரு நோக்கமும் இல்லாமல்
வைக்கப்படவில்லை என அறிய முடிகிறது. முதலில் அலிஃப் லாம் மீம் வந்துள்ளது.
பிறகு அலிஃப் லாம் மீம் ஸாது இதில் ஸாது அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிறகு அலிஃப் லாம் மீம் ரா என்று வந்துள்ளது. பிறகு தோ ஹா என்று
வந்துள்ளது. பிறகு சில மாற்றங்கள் செய்யப்பட்டு தோ ஸீன் மீம் என்று
பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான இந்த எழுத்துக்களை
தொடர்ந்து பயன்படுத்துதல் மேலும் சில எழுத்துக்களை மாற்றி அமைத்தல் போன்றவை என்ன
கூறுகிறது என்றால் இந்த எழுத்து அமைப்புகள் யாருக்கு புரிகிறதோ இல்லையோ யார் இதை
பயன்படுத்தினானோ அவன் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தியுள்ளான் என்பது
தெரிகிறது. எந்த நோக்கமும் இல்லாமல் பயன்படுத்தியிருந்தால் இந்த எழுத்துக்கள்
மாற்றியமைப்பதற்கான எந்த அவசியமுமில்லை. மேலும் ஒரு சில இடத்தில் அதிகப்படுத்தவும்
குறைக்கவும் தேவை இருந்திருக்காது.
மேற்கூறப்பட்ட ஆதரங்களைத் தவிர
இஸ்லாத்தின் எதிரிகளின் ஆய்வும் கூட முகத்தஆத் எழுத்துக்களும் சில பொருள்களை
கொண்டதாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது. இஸ்லாத்தின் எதிரிகள் இவ்வாறு
கூறுகிறார்கள், "திருக்குர்ஆன் அத்தியாயங்களின் தரவரிசை; பெரியது மற்றும் சிறியது என்ற அடிப்படையில் அமைந்துள்ளன.' இது உண்மை என்றால் சூராக்கள் பெரியது மற்றும் சிறியது என்ற அடிப்படையில்
முன்னும் பின்னும் வைக்கப்பட்டிருந்தும் கூட ஒரே வகையான முகத்தஆத் எழுத்துக்கள்
தொடர்ந்து வருவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லையா!? அலிஃப்
லாம் மீம் இன் சூராக்கள் ஒன்றாக வந்துள்ளன. அலிஃப் லாம் ரா உடைய
சூராக்கள் ஒன்றாக வந்துள்ளன. தா ஹா மற்றும் அதை சார்ந்துள்ளவைகள் ஒன்றாக
வந்துள்ளன. பிறகு மீண்டும் அலிஃப் லாம் மீம் உடைய சூராக்கள் ஒன்றாக
வந்துள்ளன. ஹா மீம் உடையது ஒன்றாக வந்துள்ளது. அதிகாரங்கள் அதனின் திண்மை
மற்றும் அளவை பொறுத்தவாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால் முகத்தஆத் எழுத்துக்களும்
ஒரு பிரத்தியேக தின்மையை வெளிப்படுத்துகிறது என்பதும் ஆச்சரியமானதாக
தெரியவில்லையா!? இதை மட்டும் ஏற்றுக் கொண்டாலும் பின்பும்
கூட முகத்தஆத் எழுத்துகளுக்கு ஒரு பிரத்தியேக பொருள் இருக்கின்றன என்பது
புலப்படுகின்றது. அது சூராக்களின் பெரியது மற்றும் சிறியதை பொருத்து
நியமிக்கப்பட்டுள்ளது என்ற பொருளில் கூட இருக்கலாம். ஆனால் ஒரு வகையான முகத்தஆத்
எழுத்துக்களுடன் அத்தியாயங்கள் ஒரே இடத்தில் ஒன்றுபடுவதன் மூலமாக இதனின்
அர்த்தங்களில் ஒன்றுபட்ட கருத்து வெளிப்படுவது உண்மையாகும். மேலும் இந்த
எழுத்துக்கள் அதிகாரங்களின் திறவுகோலாகவும் இருக்கின்றன.
(தஃப்சீரே கபீர் பாகம் 3 | பக்கம்
7-10)


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None