ஃபிர்அவ்னின் உடலை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ள தவறான கருத்துக்கு விளக்கம்

அன்பார்ந்த நண்பர்களே! இறைதூதர் மூஸா அலை அதாவது மோசஸ் அவர்களின் கொடிய எதிரியாகிய ஃபிர்அவ்ன் அதாவது ஃபாரோன் என்ற எகிப்திய அரசரின் உடல் ஏறக்குறைய 3300 ஆண்டுகள் கழித்து அதாவது 1898ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு எகிப்திய பள்ளத்தாக்கில் பிரம்மீடு  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏராளமான மன்னர்களின் உடல்கள் இருந்தது அதில் இருந்து மூஸா அலை அவர்கள் எதிர்த்த ஃபிர்அவ்நின் உடல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு 1907ஆம் ஆண்டு இதை முழுமையாக ஆய்வு செய்வதற்காக எலியட் ஸ்மித் என்பவரிடம் எகிப்து அரசு ஒப்படைத்தது. அவர் விரிவான ஆய்வு செய்து அது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதை உ.றுதிப்படுத்தினார்.

மம்மி அல்லது பிரம்மீடுஎன்றால் என்ன?

அன்றைய எகிப்திய மக்க்ள இறந்தவர்கலின் உடலை  எடுத்து அது அலுகிபோகாமல் தைலம்கள் தடவி பாதுகாத்து அடக்கம் செய்து வந்தனர். இதை  'மம்மி' எனறு அழைத்தனர் அதன்மீது கட்டப்படும் கட்டிடத்தை பிரம்மீடு என்பார்கள் இவ்வாறு அடக்கம் செய்யப் பட்ட ஒரு பிரம்மீடில் இருந்துதான் ஃபிர்அவ்னின் உடல் கிடைத்து உள்ளது.


ஃபிர்அவ்ன் குறித்து திருகுர்ஆன் செய்துள்ள முன்னறிவிப்பு

இஸ்ரேலின் மக்களை அழைத்துக்கொண்டு இறைதூதர் மூஸா அலை அவர்கள் கடலை கடந்தார்கள் அப்போது கடல் அவர்களுக்காக வழி விட்டது அவர்கள் கடலை கடந்த போது அவர்களை பிடிப்பதற்கு ஃபிர்அவ்ன் தனது படையுடன் பின்தொடர்ந்தான் அவனும் படையுடன் கடலில் இறங்கிய போது கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போது ஃபிர்அவ்ன் இறைவனை நம்பிக்கை கொண்டதால் அவனின் உடலை அவனுக்கு பிறகு வரும் மக்களுக்கு ஒரு அடையாளமாக பாதுகாத்து வைப்பதாக அல்லாஹ் கூறியதை திருகுர்ஆனின் மூலம் நினைவு கூறி இருந்தான். அதற்கு ஏற்ப பாதுகாத்து வைக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் தற்காலத்தில் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ 
 "உனக்குப்( ஃபிர்அவ்நுக்கு) பிறகு வருவோருக்கு சான்றாக இருப்பதற்காக இப்போது உன்னை உன் உடல் அளவில் காப்பாற்றுகிறோம் மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்." திருக்குர்ஆன் 10:92

மற்ற முஸ்லிம்களின் தவறான நிலைப்பாடு

ஆனால் இன்று சில முஸ்லிம் சகோதரர்கள் அது ஃபிர்அவ்னின் உடல் இல்லை என்றும் அது யூகம் என்றும் அது ஃபிர்அவ்னின் உடலாக இருந்தாலும் இன்று அது உடலாக இல்லை கருவாடாக உள்ளது என்றும் ஃபிர்அவ்னின்உடல் போல் இன்னும் பல்வேறு உடல்கள் மம்மிகள் மூலம் பாதுகாக்க படுவதால் அது ஒரு அடையாளம் இல்லை என்றும் கூறி வருகின்றனர். இன்று உன்னையும் உன் உடலையும் பாதுகாப்போம் எனறு மட்டுமே அல்லாஹ் கூறியதனால் அன்று ஒரு நாள் மட்டுமே அவன் இறக்காமல் கடலில் இருந்த கரை ஒதுங்கியதாகவும் இதை தான் அல்லாஹ் அத்தாட்சி எனறு கூறியதாக கூறுகின்றனர்.

நமது விளக்கம்:- 

    ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணித்தான் என்று பிற முஸ்லீம் பிரிவுகள் தவறாக நம்புவது போல்  குர்ஆன் கூறவில்லை ஆனாலும் ஃபிர்அவ்ன் கடைசி நேரத்தில் இறைவனை நம்பிக்கை கொண்டதால் அல்லாஹ் ஃபிர்அவ்னை சில ஆண்டுகள் அதன் பின்னரும் உயிர் வாழ செய்தான். ஃபிர்அவ்னை அவனின் சில வீரர்கள் கடலில் இருந்து காப்பாற்றி உள்ளனர். ஆனால் அவன் உயிருடன் இருந்தாலும் கோமா போன்ற நிலையில் இருந்தான் அந்த காலகட்டத்தில் சில போர்கள் கூட நடந்து உள்ளன ஆனால் ஃபிர்அவ்ன் செயல் அற்று இருந்தான். சில பல ஆண்டுகள் கழித்தே ஃபிர்அவ்னின் மரணத்திற்கு பிறகு எகிப்தியர்களின் நடைமுறைக்கு ஏற்ப அவனது உடல் மம்மி மூலம் பாதுகாக்கப்பட்டது. குர்ஆனின் முன்னறிவிப்புக்கு ஏற்ப ஃபிர்அவ்னின் உடல் 1898 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்டது. 

ஒன்று:-
 உன்னையும் உன் உடலையும் காப்பாற்றுகிறோம் என்ற குர்ஆன வாசகம் இந்த உண்மையை விளக்குகிறது. ஃபிர்அவ்ன் உயிருடன் பாதுகாக்க உன்னை பாதுகாப்போம் எனறு கூறி இருந்தாலே போதுமானது. ஆனால்  அவ்வாறு கூறாமல் உன்னை உன் உடலுடன் பாதுகாப்பேன் என்று கூறியதில் இருந்து முதலில் உயிருடனும்ம் பின்னர் உடல் அளவிலும் பாதுகாப்பு நிகழும் என்பது தெரிகிறது.

இரண்டாவது:-
  இந்த வசனத்தில் فَالْيَوْمَ ஃபல்யவ்ம இன்று என்று வந்துள்ளது. எனவே ஒருநாள் மட்டுமே ஃபிர்அவ்ன் உயிருடன் இருப்பான் பாதுகாக்கப்பாடுவான் என்ற சிலரின் வாதம் குறித்து பர்போம்.

ஒருநாள் என்பது 24 மணி நேரத்தை மட்டும் குறிக்காது மாறாக ஒரு வினாடியில் இருந்து பல்லாயிரம் ஆண்டுகள் வரை உள்ள காலத்தையும் குறிக்கும்
 உதாரணமாக:- 
وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ 
 உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்" (அல்குர்ஆன் 22-47)  என்றும் இந்த வசனத்தில் ஒருநாள் என்பது ஆயிரம் ஆண்டுகள் எனறு அல்லாஹ் கூறி உள்ளான்:
تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ 
 வானவர்களும், ரூஹும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர். திருக்குர்ஆன் 70:4 எனறு இந்த வசனத்தில்  ஒருநாள் என்பது ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்றும் அல்லாஹு கூறி உள்ளான். 

 ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينً
 "இன்றைய நாள்;  உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்" (திருக்குர்ஆன் 5:3 )

மேற்கண்ட வசனம்களில் இருந்து ஒரு நாள் என்பது ஓர் ஆயிரம் ஆண்டையும்,  ஐம்பதாயிரம் ஆண்டையும் குறிக்கும் எனறு தெரிகிறது இதுபோல் இன்றயே நாள் உங்கள் மார்கத்தை முழுமையாக்கி என்ற வசனமும் அல்லாஹ் ஒருநாளுக்கு தான் மார்கத்தை முழுமை யாக்கி உள்ளான என்று பொருள் கொள்வது இல்லை மாறாக அன்றிலிருந்து கடைசி நாள் வரை என்று பொருள் கொள்வது போல்  ஃபிர்அவ்ன் குறித்து வரும் இடத்திலும் ஒருநாள் மட்டும் என்ற பொருள் கொடுப்பது தவறு ஆகும் அது அன்றிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகள் வரை உள்ள காலத்தை குறிக்கும்.

மூன்றாவது:-
ஃபிர்அவ்ன் உடல் உடன் காப்பாற்றபட்டது  அத்தாட்சி என்பது அன்று ஒருநாள் மட்டுமே என்ற இவர்களின் வாதம் குறித்து பார்ப்போம்.
அந்த வசனத்தில் அல்லாஹ்  உனக்குப்( ஃபிர்அவ்னுக்கு) பிறகு வருவோருக்கு சான்றாக இருப்பதற்காக  எனறு கூறி இருப்பது கவனிக்க தக்கது. அதாவது ஃபிர்அவ்ன் உடல் சான்றாக அல்லாஹ் ஆக்குவது அன்றயே மக்களுக்கு அல்ல மாறாக ஃபிர்அவ்னுக்கு பிறகு வரும் மக்களுக்கு அதாவது கியாமத் வரை வரும் மக்களை குறித்து கூறப்பட்டதாகும். குறிப்பாக ஃபிர்அவ்ன் போல் துதர்களை எதிர்கும் எதிரிகளுக்கு சான்றாக ஆக்கி உள்ளான்.

இதில் இருந்துவ ஃபிர்அவ்ன் உடல் தற்காலத்தில் அதாவது 1898 இல் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதும் இந்த காலமும் ஒரு இறைதூதர் வந்து இருக்கும் காலம் என்றும் நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி கடைசி நபி என்ற கொள்கை தவறு என்றும் நிரூபணமாயிற்று. ஏனென்றால் இந்த காலத்தில் ஒரு இறைதூதர் நபி வந்து உள்ளார் எனவே ஃபிர்அவ்ன் உடல் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதும் அந்த நபி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்களை மறுக்கும் எதிரிகளுக்கு ஒரு அடையாளம் அத்தாசி ஆகும்.

ஃபிர்அவ்ன் உடல் கண்டு பிடிக்கப்பட்டது 1898ஆம் ஆண்டு ஆகும். அஹ்மது (அலை) அவர்களின் வாதம் 1889 ஆகும். அதாவது ஒன்பது ஆண்டுக்கு முன்பு ஆகும். எனவே உடல் பாதுகாக்கப்படும் என்பது ஃபிர்அவ்னுக்கு பிறகு வரும் காலத்தை குறிக்கும் என்பது அஹ்மத் அலை அவர்களின் வருகை மூலமும் , ஃபிர்அவ்னுக்கு பிறகு வரும் மக்களுக்கு சான்றாக ஆக்குவொம் என்ற வார்த்தை மூலமும் நிரூபணமாயிற்று.

நான்காவது:-
ஃபிர்அவ்னின் உடல் என்பது வெறும் யூகம் மட்டுமே ஆகும் என்பதும் சிலரின் வாதமாக இருக்கின்றது.

நமது பதில்; அது யூகம் அல்ல தெளிவான கண்டு பிடிப்பு ஆராய்ச்சி  ஆகும். அல்லாஹ் திருகுர்ஆனில் கல்லறைகள் ஆராய்ச்சி பற்றி முன் அறிவிப்பு செய்து உள்ளான் அதாவது 
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَت
"மண்ணறைகள் திறக்கப்படும் போது, திருக்குர்ஆன்" 82:4 என்று கூறி உள்ளது கவனிக்கத் தக்கது ஆகும். எனவே இறுதி காலத்தின் அடையாளாங்களில் ஒன்று கல்லறைகள் ஆராய்ச்சி ஆகும். இன்றைய காலமும் அதற்கு சான்று ஆகும். இறந்தது அடக்கம் செய்யப் பட்டு மக்கிப்போன உடல்கள் கூட இன்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவதும் அதன் மூலம் பல உண்மைகள் வெளிவருவதும் அறிவுள்ள மக்களுக்கு போதுமான சான்று ஆகும். இந்த குர்ஆன் ஆதாரம் மற்றும் கல்லறை ஆராய்ச்சி தொல்பொருள் ஆராய்ச்சி ஆகியவை அது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதற்கு போதுமான ஆதாரம் ஆகும். அது யூகம் அல்ல தெளிவான ஆதாரம் ஆகும்.

ஐந்தாவது:- 
தற்போது கண்டுபிடிக்க பட்ட உடல், உடல் அல்ல கருவாடு என்பது சிலரின் வாதம் ஆகும்.
நமது பதில்: இது இவர்களின் மிகைப்படுத்தப்பட்ட வாதம் ஆகும். பொதுவாக இறந்த உடல் சில நாட்களில் அழுகி எவ்வாறு அழிந்து விடுமோ அவ்வாறு அல்லாமல் ஃபிர்அவ்னின் உடல் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்படும் என்பது ஆகும். அதன் பொருள் அந்த உடலில் ஒரு கீறல் கூட விழாது என்பது பொருள் அல்ல நபியை எதிர்த்த மக்களுக்கு ஒரு பாடமாக அல்லாஹ் அதை ஆக்கி ஒரு அடையாளமாக வைத்து உள்ளான்.

ஆறாவது:-
ஃபிர்அவ்ன் உடல் மட்டும் அல்லாமல் இன்னும் மம்மிகள் மூலம் பல்லாயிரம் உடல்கள் இன்றுவரை இருப்பதால் இது ஒரு அடையாளம் இல்லை ஒரு உடல் மட்டும் இருப்பது தான் அடையாளம் என்பதும் சிலரின் வாதம் ஆகும்.

நமது பதில்: அல்லாஹு ஒரு உடலை பாதுகாக்க இயற்கையான முறையை கையாண்டு உள்ளான். ஃபிர்அவ்ன் மரணம் அடைவதற்கு பலநூறு ஆண்டுகள் முன்பே எகிப்தியர்களிடம் இறந்த உடலை அமிலம் இட்டு கெடாமல் பாதுகாக்கும் பழக்கத்தை அல்லாஹு இயற்கையிலேயே உருவாக்கியிருக்கின்றான். இரண்டாவது 1898இல் லாரேட் கண்டு பிடித்தது ஒரு ஃபிர்அவ்ன் உடல் மட்டும் அல்ல ஏராளமான  உடல்கள் ஆகும். அவை அனைத்தும் ஃபாரோன் என்ற மன்னர்கள் அவர்களின் குடும்பத்தினர்கள் ஆவார்கள் என்றும் அந்த ஃபாரோன் என்பது குடும்பப்பெயர் என்றும் ஒவ்வொருவருக்கும் தனி தனி இயற்பெயர் வேறு உள்ளது என்பதும் கண்டுபிடிக்க பட்டது.

அந்த வகையில் மூஸா அலை அவர்களை வளர்த்த ஃபாரோன் பெயர் Rameses l st  என்றும் அவர் வேறு  என்றும்  மூஸா அலை அவர்களை எதிர்த்த ஃபாரோன் பெயர் Rameses ll nd என்றும்   merneptay என்றும் இவர் வேறு; இந்த இருவரும் வேறு வேறு என்றும்; இருவரும் தந்தையும் மகனும் ஆவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விருவரின் குடும்பப்பெயர்தான் ஃபாரோன் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் பல விஷயங்கள் வரும்கால ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தும் என்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நான்காவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்.  அவர்களின் நூல் Revelation Rationality Knowledge and Truth என்ற நூலின் பக்கம் 572 முதல் 576 வரை உள்ள பக்கங்களில் இது குறித்த சில குறிப்புகளை பார்க்கலாம். இது போல் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபா (ரலி) அவர்கள் எழுதிய குர்ஆன் விரிவுரை ஆங்கில மொழியாக்கத்தின் ஐந்தாவது பாகம் சூரா 2 இல் 50 வது வசனத்தின் விளக்கத்திலும் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள்  எனவே ஃபிர்அவனை குறித்து தற்போதுள்ள முஸ்லிம்கள் கொண்டுள்ள கருத்து அனைத்தும் தவறானதாகும் என்றும் குர்ஆன்  கூறும் வரலாற்றிற்கு எதிரானது என்பதும் தெளிவாகிறது.  

(ஆக்கம்: ஆ.பி.யு. நாஸிர் அஹ்மது | மேலப்பாளையம்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.