ஷபே பராத் கொண்டாட்டம் | ஒரு வழிகேடு

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:22)

இஸ்லாத்திலுள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்கையில், நடைமுறையில் நமக்கு முன்மாதிரி கிடைக்கிறது. இதை தவிர்த்து அல்லது நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, அல்லது செய்து காட்டாத விஷயத்தை நாம் செய்வோமே என்றால், அது வழி கேட்டின்பால் எடுத்து செல்லும் என்பது உறுதி ஆகும். இதனை நாம் கீழே உள்ள ஹதீஸ் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 3243


ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹ்) நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 
ஷபே பராத் (பராத் இரவு) என்ற இரவில் நடத்தப்படும் எந்தவொரு கலாச்சாரமும் சுன்னத்தில் ( அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையில்) அறவே இல்லை. எங்கும் இது சம்பந்தமான கூற்றும் தென்படுவதில்லை. நபித்தோழர்களும் சரி அல்லது அவர்களுக்கு பிறகு வந்த சந்ததிகளும் சரி ஷபே பராத் இரவை கொண்டாடியதில்லை. இவ்விரவு இவ்வாறு ஓர் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இரவாக இருந்திருந்தால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இதை பற்றி அறிந்திருக்கவில்லையா? இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இரவை பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இதை இவ்வாறு கொண்டாடுங்கள் என்று எங்கும் கூறவில்லையே!. பல்வேறு உலமாக்களும் இதை பற்றி கூறியுள்ளார்கள். மேலும் ஷபே பராத் சம்பந்தமாக கூறப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று அதை பலகீனம் என்று கூறியுள்ளார்கள் அல்லது பொய்யானது மற்றும் திரித்து கூறப்பட்டுள்ளது என்றும் திட்டவட்டமாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதே உலமா பெருமக்கள் மேலும் கூறுவது என்னவென்றால், ஒரு வாதத்திற்கு இவ்வாறான ஹதீஸ்கள் உண்மையானது என்று எடுத்துக் கொண்டாலும், எந்தவிதத்தில் இன்று இதை கொண்டாடப்படுகிறதோ இதற்கு எந்தவித அறிவிப்பும் கிடைப்பதில்லை மாறாக இது முழு வழிகேடா ஆகும்.
(உருது பேசுபவர்களுடன் ஓர் சந்திப்பு 6 மே 1994) 

அல்லாஹ் இவ்வாறான வழிகேட்டிலிருந்து இந்த முஸ்லிம் உம்மத்துகளை காப்பாற்றுவானாக. மேலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை உண்மையான முறையில் பின்பற்றும் நன்முஸ்லிமாக ஆக்குவானாக. ஆமீன்.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.