எல்லாம் வல்ல இறைவன் தனது திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான்.
திருக்குர்ஆன் 22::29
‘’சிலை வணக்கமான இணைவைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள்’’
பொய்யும் ஒரு சிலையே என்றும், சிலையின் மீது நம்பிக்கை வைப்பவன் இறைவன் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவதைப் போல், பொய் கூறுவதால் ஒருவன் இறைவனை இழந்து விடுகிறான். [[அதாவது அவன் இறைவன் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை பொய்யின் மீது வைக்கின்றான்]].
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உண்மையை பற்றி பிடியுங்கள். எப்போதும் உண்மையை பேசுங்கள். ஏனென்றால் உண்மை பேசுவது நன்மையை ஈட்டுத் தருகிறது. மேலும் நன்மையானது சுவர்க்கத்தின் பக்கம் அழைத்து செல்கிறது. (ஸஹீஹ் முஸ்லிம் 6639)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று உண்மை பேசுவதாகும். மனிதன் பொய் கூறுவதற்கு வெறுப்புள்ளவனாகவே இருக்கின்றான். அதன் காரணமாகவே எவனாவது ஒருவன் பொய் சொன்னதாக நிரூபிக்கப்பட்டுவிட்டால், அவன் மீது வெறுப்பு கொண்டு அவனை அவமதிக்கின்றான். ஆயினும் இயற்கையான இந்த குணம் நல்லொழுக்கக்குணமாக மதிக்கப்படுவதில்லை.
ஒரு மனிதன் தன் சொந்த காரியங்களில் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சம் இருந்தும் உண்மை உரைப்பதைக் கைவிடாமல் இருக்கும்போது தான், அவன் உண்மையாளனாகக் கருதப்படுவான். ஏனென்றால், ஒரு மனிதன் தனக்கு எவ்வித கஷ்டமும் ஏற்படாத விஷயங்களில் மாத்திரம் உண்மை பேசியும், தனது மதிப்பும் பணமும் உயிரும் பாதிக்கும் நிலை அல்லது நஷ்டம் ஏற்படும் நிலை வரும்போது பொய்க்கூறியும் அல்லது உண்மை கூறாமலும் இருந்தால், அத்தகையவன் ஒரு பைத்தியக்காரனை விட அல்லது ஒரு குழந்தையை விட எந்த வகையிலும் சிறந்தவனாகமாட்டான்.
எனவே தனது உயிருக்கோ, கௌரவத்திற்கோ சொத்திற்கோ ஆபத்து நேரும் என ஒருவன் புரிந்துகொண்டுள்ள வேளையே உண்மையை உரைப்பதற்கான சரியான சந்தர்ப்பமாகும்.
[[[ஹஸ்ரத் அஹ்மத் -அலை- அவர்கள் எழுதிய 'இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம்' என்ற நூலிலிருந்து]]]
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None