ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் இல்லை என்பதற்கு எதிரிகள் எடுத்து வைக்கும் எதிர் வாதம் - 3
அஹ்மதி அல்லாத் சகோதரர்கள் ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் வர முடியாது என்பதற்கு தமக்கு சாதகமானது
எனக்கருதி எடுத்து வைக்கும் ஒரு வாதம் “லா நபிய பஅதி” (எனக்கு பிறகு இனி எந்த
நபியும் இல்லை)(புகாரி கிதாபுல் அன்பியா பாகம் 1 பக்கம் 491 மீரட் பதிப்பகம்)
எனும் ஹதீஸ் ஆகும்.
நமது முதல் பதில்: இந்த
ஹதீஸை குறித்து மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு வருகிறது,
قال علیہ السلام یا علی اما ترضیٰ ان تکون منی
کھارون من موسیٰ غیر انک لست نبیا۔
பொருள்: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள், அலியே! நீர் மகிழ்ச்சியாக இல்லையா?
ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுக்கும் ஹாரூனுக்கும் இடையில் என்ன உறவோ அவ்வாறே உமக்கும்
எமக்கும் இடையிலானதாகும். ஆம், எனக்கு பிறகு நீர் நபியாக
இருக்க முடியாது இது மட்டுமே வித்தியாசம் ஆகும். (தபகாத்தே கபீர் பாகம் 5 பக்கம்
15) ஆக லா நபிய பஅதி என்பதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களே விளக்கம் தந்து இது
பொதுவான கருத்து அல்ல மாறாக ஹஸ்ரத் (அலி) அவர்களை குறித்து கூறப்பட்டதாகும்.
இரண்டாவது பதில்: இதே
புகாரி ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மற்றொரு ஹதீஸும் பதிவு
செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில் இவ்வாறு வருகிறது:
عن ابی ھریرہ قال رسول اللہ صلی اللہ علیہ وسلم
اذا ھلک کِسریٰ فلا کِسرٰ بعدہ و اذا ھلک قیصرُ فلا قیصرَ بعدہ۔
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘கிஸ்ரா மரணம் அடைந்த பிறகு இனி எந்த கிஸ்ராவும் வர முடியாது. மேலும் இந்த
கைஸர் மரணம் அடைந்த பிறகு இனி எந்த கைஸரும் தோன்ற முடியாது. (புகாரி கிதாபுல்
ஈமான் பாகம் 4 பக்கம் 91 மிஸ்ரி)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தம்மை
குறித்து “லா நபிய பஅதி” என்றும் கைஸர் மற்றும் கிஸ்ராவை குறித்து “லா கைஸர பஅதஹு”
லா கிஸ்ரா பஅதஹு” என்று கூறியுள்ளார்கள். அவ்வாறென்றால் கைஸருக்கு பிறகு வேறு எந்த
கைஸரும் தோன்றவில்லையா? அல்லது ஈரானின் அரசர் கிஸ்ராவுக்கு
பிறகுதான் வேறு எந்த கிஸ்ராவும் தோன்றவில்லையா? இல்லை, தோன்றினார்கள். வம்ச வழியாக தோன்றினார்கள் என்று
கூறுவதாக இருந்தால் பிறகு “லா கைஸர பஅதஹு என்பதற்கும் ல கிஸ்ரா பஅதஹு என்பத்ற்கும்
என்ன பொருள் தருவீர்கள்? ஃபத்ஹுல் பாரி ஷரஹ் புகாரியில்
இதற்கு இவ்வாறு பொருள் கொடுத்துள்ளார்கள்,அதாவது
معناہ فلا قیصرَ بعدہ یملکُ مثلَ ما یملکُ ھو
பொருள்: இதற்குப் பொருளாவது,
கைஸர் மரணம் அடைந்த பிறகு இனி அவரைப் போன்று ஆட்சி செய்யக்கூடிய வேறு ஒரு கைஸர்
தோன்ற முடியாது என்பதாகும்.
இவ்வாறு கைஸருக்கும்,
கிஸ்ராவுக்கும் பிறகு இனி அவர்களைப் போன்று ஆட்சி செய்யக்கூடிய அரசர்கள் தோன்ற
முடியாது என்று பொருள் கொள்வீர்கள் என்றால், பிறகு “லா நபிய
பஅதி’ என்பதற்கும் “ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி
அவர்களைப் போன்ற ஒரு நபி தோன்ற முடியாது”
என்றும் பொருள் ஆகும்........................... உதாரணமாக அரபியில் ஒரு
சொல்வழக்கு உள்ளது
لا فتیٰ الا علیّ لا سیف الا ذوالفقار
பொருள்: அலியை தவிர்த்து வேறு இளைஞன்
இல்லை. துல் ஃபிகாரை தவிர்த்து வேறு வாள் இல்லை. (மவ்லூஆத்தே கபீர் பக்கம் 59,81)
இக்கூற்றின்படி ஹஸ்ரத் அலி (ரலி)
அவர்களுக்கு பிறகு வேறு எந்த இளைஞனும் தோன்றவில்லையா?
துல் ஃபிகாருக்கு பிறகு வேறு எந்த வாளும் தயாரிக்கப்படவில்லையா? ஆகவே இங்கு ஹஸ்ரத் அலி (ரலி) போன்ற ஒரு இளைஞனோ அல்லது துல் ஃபிகாரை போன்ற
ஒரு வாளோ இல்லை என்று கூறி மறுக்கப்பட்டுள்ளது. ஆக “லா” என்பது தனிப்பட்ட நபரை
குறித்து இங்கு வரவில்லை மாறாக சிஃபத்தே மவ்ஸூஃபாக வந்துள்ளது. அதாவது யாரைப்
பற்றி அந்த பண்பு கூறப்பட்டுள்ளதோ அந்த பண்பை குறிப்பிட்டே “லா” என்ற சொல் இங்கு
இடம் பெற்றுள்ளது.
அ) இமாம்
ராஸி (ரஹ்) அவர்கள் “லா ஹிஜ்ரத்த பஅதல் ஃபத்ஹி” (புகாரி |
கிதாபுல் மனாகிப் மனாகிப் அன்ஸார் பாகம் 2 பாடம் மதினாவை நோக்கி ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்களின் ஹிஜ்ரத்) என்ற ஹதீஸிற்கு இவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள்:
واما قولہ علیہ السلام لا ھجرۃ بعد الفتح
فالمرادُ الھجرۃُ المخلصۃُ
அதாவது “லா ஹிஜ்ரத்த பஅதல் ஃபத்ஹி”
என்று கூறிய ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றிற்கு மக்காவின் வெற்றிற்கு பிறகு
இனி எந்த வித ஹிஜ்ரத்தும் இல்லை என்று பொருள் அல்ல மாறாக ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்களின் வாழ்வில் நடந்த மக்காவிலிருந்து மதினாவை நோக்கி நடந்த குறிப்பிட்ட ஒரு
ஹிஜ்ரத் ஆகும் என்பதே இதன் பொருள் ஆகும். (தஃப்சீரே கபீர் பாகம் 4 பக்கம் 580 |
மிஸ்ர் பதிப்பகம் | சூரா அன்ஃபால் வசனம் 73 இன் விளக்கமாக)
ஆக, இவ்வாறே “லா நபிய
பஅதி” என்ற சொற்றொடரிலும் எல்லாவித நபுவ்வத்தும் அடங்காது மாறாக ஒரு குறிப்பிட்ட
ஒரு நுபுவ்வத் அதாவது புது ஷரியத்தை கொண்ட, குர்ஆனை
நீக்கக்கூடிய மற்றும் நேரடியான நுபுவ்வத் மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது என்று
பொருள்படும்.
மூன்றாவது பதில்: இந்த
ஹதீஸில் வரக்கூடிய “பஅதி” என்ற பதமும் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
திருக்குர்ஆனில் “பஅத்” என்ற பதம் நேர்எதிரான பொருளுக்காக
கையாளப்பட்டுள்ளது.
1 – فبای حدیثٍ بعد اللہ (அல்-ஜாஸியஹ்: 70) அதாவது அவனது வசனத்திற்கு பிறகு வேறு
எந்த விஷயத்தில் அவர்கள் ஈமான் கொள்வார்கள்? இங்கு அல்லாஹ்விற்கு பிறகு என்ற
வாசகத்திற்கு என்ன பொருள்? அல்லாஹ் மரணம் அடைந்த பிறகு என்ற
பொருளா? அல்லது அல்லாஹ் அல்லாததிற்கு பிறகா? இவ்விரண்டு பொருளும் உகந்தது அல்ல என்பது அப்பட்டம் ஆகும். ஆகவே
“பஅதல்லாஹ்” என்பதற்கு அல்லாஹ்விற்கு நேர் எதிரான அல்லது அல்லாஹ்வை தவிர்த்து என்ற
பொருளே இங்கு உகந்ததாகும். இவ்வாறே “பஅதி” என்பதற்கு எனக்கு
நேர்எதிராக இருக்கும் எந்த ஒரு நபியும் இனி வர முடியாது என்று பொருள் ஆகும்.
2- ஒரு ஹதீஸில் இவ்வாறு வருகின்றது, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
فَاَوَّلْتُھُمَا کَذَّابَیْنِ یَخْرُجَانِ
بَعدِیْ اَحَدُھُمَا اَسْوَدُ الْعَنْسِیُّ وَ الْاٰخَرُ مُسَیْلَمَۃُ
அதாவது, தங்கத்திலான இரு
வளையல்களை நான் கனவில் கண்டேன். அதனை ஊதி அப்புறப்படுத்தி விட்டேன். இதன் பொருள்
இரு பொய்யர்கள் எனக்கு பிறகு வருவார்கள். அவர்களில்
முதலானவர் அஸ்வத் அன்ஸி ஆவான், இரண்டாவது முஸைலமா ஆவான்.
இதுவே இக்கனவிற்கான விளக்கம் ஆகும். (புகாரி கிதாபுல் மகாஸி | ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ஹஸ்ரத் அபூ ஹுரைராவிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
பாகம் 3 பக்கம் 49, மிஸ்ரி)
இந்த ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்கள் "یَخْرُجَانِ
بَعْدِیْ" என்று கூறியுள்ளார்கள். அதாவது
அந்த இரு பொய்யர்களும் எனக்கு பிறகு வெளிப்படுவார்கள். இங்கு "பஅத"
என்பதின் பொருள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இல்லாத காலமோ அல்லது அவர்களின்
மரணத்திற்கு பிறகு என்ற பொருளோ கிடையாது. மாறாக, அவர்களுக்கு நேர்
எதிராக என்றே பொருள் ஆகும். ஏனென்றால் முஸைலமா மற்றும் அஸ்வத் அன்ஸி இருவருமே
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலேயே தாமும் ஒரு நபி என்று வாதித்து ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்களுக்கு நேர் எதிராக நின்றார்கள். இதே புகாரியில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பிறிதொரு ஹதீஸில் இவ்வாறு கூறுகின்றார்கள்:
فَاَوَّلْتُھُمَا الْکَذَّابَیْنِ اَنَا
بَیْنَھُمَا صَاحِبُ صَنْعَا ءَ وَ صَاحِبُ الْیَمَامَۃِ۔
அதாவது எனக்கிடையில் இருக்கும் இரு
பொய்யர்களாகிய அஸ்வத் அன்ஸி மற்றும் முஸைலமா ஆகிய இருவரே ஆவர் என்று இக்கனவிற்கு
விளக்கம் கொடுத்துள்ளேன்.
(புகாரி கிதாபு தஅபீரூர் ருஃயா | பாப்
நஃபகு ஃபில் மனாம் பாகம் 4 பக்கம் 134 & கிதாபுல் மகாஸி
பாப் பனி ஹனீஃபா கூட்டம் பாகம் 2 பக்கம் 727 உருது மொழியாக்கம்)
ஆக, "அனா பைனஹுமா"
என்ற வாசகம் பிறிதொரு இடத்தில் வரக்கூடிய "யக்ருஜானி பஅதி" இல்
வரக்கூடிய "பஅதி" என்பதற்கு எனக்கு நேர் எதிராக அல்லது எனக்கு
நிகராக என்பதையும், எனது மரணத்திற்கு பிறகு அல்ல , எனது இல்லாமையின் காலம் அல்ல என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஆகவே "லா
நபிய பஅதி" எனும் வாசகத்தில் வரக்கூடிய "பஅதி"
என்பதற்கு எனக்கு நிகராக அல்லது என்க்கு நேர் எதிராக எந்த ஓர் நபியும் வர முடியாது
என்று பொருள் ஆகும்.
"லா நபிய பஅதி"
பற்றி சான்றோர்களின் கருத்து
நாம் "லா நபிய பஅதி" எனும்
ஹதீஸிற்கு எந்த பொருள் வழங்குகின்றோமோ அதே பொருளையே நமது சான்றோர்களும் வழங்கி
உள்ளனர். எடுத்துக்காட்டாக ஒரு சிலரின்
கூற்றை நாம் கீழே காண்போம்.
1- ஷேக்
முஹியுத்தீன் இப்னு அரபி அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஹதீஸ் "இன்னர் ரிஸாலத வன்
நுபுவ்வத்த கதின் கதஅத்" மற்றும் "லா நபிய பஅதி" என்பதற்கும் இதே
பொருள் ஆகும் அதாவது, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்களின் ஷரியத்திற்கு எதிராக செயல்படக்கூடிய எந்த நபியும் வர
முடியாது. ஆம், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஷரியத்தின்
கட்டளைக்கு கீழ் இருந்த வண்ணம் நபி வர முடியும்."
(ஃபத்தூஹாத்தே மகிய்யா பாகம் 2 பக்கம்
3 மிஸ்ரி | பதிப்பகம் தாருல் குதுப் அல் அரபியா அல் குப்ரா)
2- இமாம் ஷிஃரானி
(ரஹ்) அவர்கள் கூறுகின்றாகள்:
"லா நபிய பஅதி" என்ற ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்களின் இவ்வாசகத்தின் பொருள் "எனக்கு பிறகு இனி ஷரியத்தை கொண்ட
எந்த நபியும் வர முடியாது" என்று பொருள் ஆகும்."
(அல்-யவாக்கீத்து வல்-ஜவாஹீர் பாகம் 2
பக்கம் 24)
3- இமாம் முஹம்மது
தாஹிர் அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
காத்தமுன் நபிய்யீன் என்று கூறுங்கள் ஆனால் அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் வர
முடியாது என்று கூறாதீர்கள்" என்று கூறிய ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின்
இக்கூற்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் "லா நபிய பஅதி" என்ற ஹதீஸ்
எவ்வகையிலும் எதிரானது அல்ல. ஏனென்றால், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறிய லா நபிய
பஅதி என்பதன் பொருள் அன்னாருக்கு பிறகு அன்னாரின் ஷரியத்தை முறிக்கக்கூடிய எந்த
நபியும் வர முடியாது என்பதேயாகும். (தக்மிலா மஜ்மஉல் பிஹார் அன்வார் பக்கம் 85)
4- நவாப் நூருல் ஹஸன் கான் சாஹிப்
கூறுகின்றார்கள்:
"லா வஹ்ய பஅத மவ்தி" எனும்
ஹதீஸ் அடிப்படை அற்றதாகும். ஆம், லா நபிய பஅதி" என்று வந்துள்ளது.
அறிஞர்களின் பார்வையில் இந்த ஹதீஸிற்கு "எனக்கு பிறகு ஷரியத்தை மாற்றக்கூடிய
எந்த நபியும் வர முடியாது" என்று பொருள் ஆகும். (இக்தராபுஸ் ஸாஅஹ் பக்கம்
162)
(தப்லீக் பாக்கட் நூலிலிருந்து
எடுக்கப்பட்டது)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None