ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
கொள்கையைப் பொறுத்த அளவில் இறைவன் விரும்புவதெல்லாம் இறைவன் ஒருவனே என்பதை உளப்பூர்வமாக நம்வுவதும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுடைய தூதராகவும் 'காதமுல் அன்பியா' வாகவும் அனைத்து தூதர்களையும் விட மேலானவராகவும் நம்புவதும் ஆகும். எவர்மீது 'முஹம்மதிய்யத்' தின் பிரதிப்பிம்பம் என்னும் போர்வைப் போடப்படுகின்றதோ அவரைத் தவிர வேறு எவருக்கும் நபியாக வர இயலாது. ஓர் ஊழியன் தனது எஜமானனைவிட்டும் வேறுபட்டவன் அல்லன். ஒரு மரத்தின் கிளை அதன் வேரிலிருந்து வேறுபட்டதன்று. சுருக்கமாக எஜமானனிடத்திலேயே தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டு அதன்மூலம் நபிப்பைதவிப் பெற்றவர் 'கத்தமுன்னுபுவத்' திற்கு ஒருபோதும் எதிரானவராக மாட்டார். ஏனெனில் கண்ணாடியில் உங்களின் உருவத்தைப் பார்க்கும்போது வெளிப்படையில் இரண்டாகத் தெரிந்த போதிலும் உருவம் ஒன்றுதான். அசலுக்கும் பிம்பத்திற்கும் உள்ள வேறுபாடே இருக்கும். வாக்களிக்கப்பட்ட மஸீஹின் நிலை இவ்வாறே இருக்க வேண்டுமென இறைவன் விரும்பினான். 'வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்னுடைய கபரில் அடங்கப் பெறுவார்' என்ற நபிமொழியின் உட்பொருள் இதுவேயாகும். அந்தப் பிரதிப்பிம்பம் நானே! இதைத் தவிர வேறு வேறுபாடு எதுவுமில்லை!
(கிஷ்தி நூஹ்)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None