மார்க்க தோற்றுநர்களை நாம் கண்ணியத்துடன் பார்க்க வேண்டும்

வாக்களிக்கப்பட்ட மஸீஹும், காலத்தின் மஹ்தியுமாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறினார்கள்:

"உலகத்தில் வந்த அனைத்து நபிமார்களையும் - அவர்கள் இந்தியாவில் வந்தவர்களாயினும், அல்லது பாரசீகத்தில் வந்தவர்களாயினும் அல்லது சீனாவில் அல்லது வேறு எந்த நாட்டிலாவது தோன்றியவர்களாயினும் அவர்கள் அனைவரையும் நாம் உண்மையாளர்களாக கருத வேண்டும். இந்த கொள்கை மிகவும் அன்பிற்குரியதும், அமைதியை வழங்கக்கூடியதும், சமாதானத்திற்கு அடித்தளம் இடுகின்றது, நல்லொழுக்க நிலைமைகளுக்கு உதவி அளிக்கக்கூடியதும் ஆகும். இறைவன் கோடிக்கணக்கான உள்ளங்களில் அவர்களின் கண்ணியத்தையும், மகத்துவத்தையும் நிலைநாட்டி விட்டான். மேலும் அவர்களின் மார்க்கத்தின் வேரை நிலைநாட்டி விட்டான். மேலும் பல நூற்றாண்டுகளாக அந்த மார்க்கம் நிலைபெற்று வருகின்றது. இந்த கொள்கையையே திருக்குர்ஆன் நமக்கு கற்றுத் தந்துள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் இந்த இலக்கணத்தின் கீழ் வருகின்ற ஒவ்வொரு மார்க்கத் தோற்றுநர்களை அவர்கள் இந்துக்கள் அல்லது பாரசீகர்கள் அல்லது சீனர்கள் அல்லது யூதர்களின் மார்க்க தோற்றுநர்களாக இருந்தாலும் அவர்களை நாம் கண்ணியத்துடன் பார்க்கின்றோம்." 
(துஹ்ஃபா கய்ஸரிய்யா பக்கம் 7)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.