பைஅத்தின் 10 நிபந்தனைகள்


ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு அவர்களின் சீடராக வந்த ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் மற்றும் மஹ்தி (அலை) அவர்கள் இறைவனின் இந்த ஜமாத்தில் சேர்ந்து பையத் வாங்கும் ஒவ்வொருவரும் கீழ்காணும் 10 நிபந்தனைகளை தமது உயிர் இருக்கும் வரை கடைபிடிக்கவேண்டிய அவசியமுள்ளது என்று கூறினார்கள். அவையாவன:

1.நான் மரணமடைகின்ற வரைஷிர்க் எனும் இறைவனுக்கு இணைவைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வேன்.

2. பொய், விபச்சாரம், தீயப்பார்வை, கட்டுபடாமை, தீமை, அநீதி இழைத்தல், நம்பிக்கைத் துரோகம் செய்தல், குழப்பம் விளைவித்தல், கிளர்ச்சி செய்தல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வேன். மன உணர்ச்சிகள் எந்த அளவு தீவிரமடைந்தாலும் அவற்றை மேலோங்கவிடாது அடக்கிகொள்வேன்.

3.இறைவனின் கட்டளையின்படியும், அவனுடைய தூதரின் கட்டளையின் படியும் ஐந்துவேளை தொழுகைகளை விடாமல் நிறைவேற்றி வருவேன். என்னால் இயன்றவரை தஹஜ்ஜுத் எனும் நடுஇரவுத் தொழுகை, முஹம்மத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுதுல்,  தினமும் எனது பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்புகேட்டல் ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபடுவேன். இறைவனின் பேருதவிகளை நெஞ்சாரநினைவில் கொண்டு அவனை தினமும் புகழ்ந்து வருவேன்.


4. அல்லாஹ்வின் அனைத்து படைப்பினங்களுக்கு பொதுவாகவும் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் எனது மன உணர்ச்சியின் காரணமாக நாவினாலோ,  கைகளினாலோ வேறு வகையாலோ எவ்விதமான தகாத தொல்லையும் கொடுக்கமாட்டேன்.

5. துக்கம், மகிழ்ச்சி, பணக்கஷ்டம், பணவசதி, இறைவனிடமிருந்து கிடைக்கும் அருள், அவனால் தரப்படும் சோதனை ஆகிய எந்த நிலையிலும் மனங்கோணாமல் பற்றுள்ளவனாக இருப்பேன்.  இறைவனின் தீர்ப்பை எந்தநிலையிலும் உள்ப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். அவன் வழியில் எல்லா வகையான இழிவையும்,  இன்னல்களையும் ஏற்க தயாராக இருப்பேன்.  எத்தகைய தொல்லைகளுக்கு ஆளானாலும் முகம் சுளிக்காமல் முன்னேறிச் செல்வேன்.
6. சடங்கு, சம்பிரதாயங்களிலிருந்தும் மனதின் சொந்தவிருப்பங்களை பின்பற்றுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வேன்.  திருக்குர்ஆனின் ஆட்சிக்கு முழுமையாககட்டுப்பட்டு,  இறைவனின் போதனைப்படியும் அவன் தூதரின் போதனைப்படியும் நடப்பதையே எல்லா நிலையிலும் எனது நடைமுறையாக ஆக்கிக் கொள்வேன்.

7. தற்பெருமையையும், அகம்பாவத்தையும் முற்றாக விட்டு விடுவேன். பணிவு, தன்னடக்கம், இனியகுணம், சகிப்புத்தன்மை, எளிமை, இவற்றையே மேற்கொண்டு வாழ்க்கை நடத்துவேன்.

8. மார்க்கம், அதன்கண்ணியம், இஸ்லாத்திற்கு தொண்டு செய்தல் ஆகியவற்றை எனது உயிர், பொருள், கண்ணியம், குழந்தைகள், உறவினர்கள், ஆகிய எல்லவற்றையும் விட மிகவும் உயர்வாக கருதுவேன்.

9. அல்லாஹ்வின் படைப்புகளாகிய எல்லாருக்கும் தொண்டு செய்வதில் எந்த பிரதிபலனையும்  எதிர்பார்க்காமல் இறைவனுக்காகவே தொடர்ந்து ஈடுபட்டிருப்பேன். அவனால் எனக்கு வழங்கப்பட்ட ஆற்றல்களாலும்,  அருள்களாலும் என்னால் முடிந்தவரை மனிதகுலம் பயன்பெரும் வகையில் பணியாற்றுவேன்.

10. அல்லாஹ்வுக்காக,  நல்ல விஷயங்களில் நான் கட்டுப்படுவேன் என இந்த எளியவனிடம் (இமாம் மஹ்தி (அலை) அவர்களிடம்) நான் செய்து கொள்ளும் இந்த சகோதர உடன்படிக்கையில் மரணமடையும் வரை நிலைத்திருப்பேன் என்றும்மற்றெல்லா உலகத்தொடர்புகளை விடவும் இந்தசகோதர உடன்படிக்கை மிகவும் உயர்ந்ததாக இருக்கும் என்றும் உறுதிக் கூறுகின்றேன்.

(இஷ்திஹார்தக்மீலேதப்லீக் – 12 ஜனவரி 1889)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.