முஸ்லிம்களிடம் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும்

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"நன்றாக நினைவில் கொள்ளுங்கள், மற்றவரின் ஒளிகளை ஈர்க்கும் ஆற்றல் மனிதனிடம் இருக்கிறது. இந்த ஒருமைப்பாட்டிற்காகவே தினமும் தொழுகைகளை வட்டாரத்திலுள்ள பள்ளிவாயிலில் தொழ வேண்டும். தினமும் தொழுகைகளை முஹல்லாவின் பள்ளிவாயிலிலும், வாரத்திற்கு ஒருமுறை ஊரிலுள்ள பள்ளிவாயிலிலும், வருடத்திற்கு ஒருமுறை ஈது மைதானத்திலும் ஒன்று கூட வேண்டும். பூமியிலுள்ள எல்லா முஸ்லிம்களும் வருடத்திற்கு ஒருமுறை பைத்துல்லாஹ்வில் ஒன்று கூட வேண்டும். இந்த எல்லாக் கட்டளைகளின் நோக்கமும் இந்த ஒருமைப்பாடேயாகும். தொழுகையிலிருந்து ஹஜ் வரை எவ்வளவு கட்டளைகள் உள்ளனவோ இந்த இறை வணக்கங்களின் நோக்கம் என்ன? முஸ்லிம்கள் ஒரே சமுதாயமாக ஆக வேண்டும் என்பதுதான். இப்போது துரதிஷ்டவசமாக அதிகமான பிரிவினைகளும் வேறுபாடுகளும் முஸ்லிம்களிடமே காணப்படுகிறது. நாம் அஹ்மதிகள் ஆவோம். நாம் தான் இந்த (ஒருமைப்பாட்டிற்கான) முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உலகிற்கு இஸ்லாத்தின் உண்மையான போதனையை எடுத்துக் கூற வேண்டும்."


கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.