ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் இல்லை என்பதற்கு எதிரிகள் எடுத்து வைக்கும் எதிர் வாதம் - 2



எதிரிகள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் வர முடியாது என்பதற்கு எடுத்து வைக்கும் மற்றுமொரு ஆதாரம் சூரா அல் மாயிதாவின் 4 வது வசனம் ஆகும். அந்த வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا 
பொருள்: இன்று நான் உனது மார்க்கத்தை உமக்காக முழுமை படுத்திவிட்டோம். மேலும் எனது அருட்களை உம்மீது முழுமையாக்கிவிட்டோம். மேலும் உமக்காக இஸ்லாம் (மார்க்கத்தை) விரிம்பியுள்ளோம். (5:4)
நமது பதில்: இந்த வசனமோ இனியும் நபி தோன்ற முடியும் என்பதற்கே ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் “அத்மம்து அலைக்கும் நிஅமத்தி” என்பதில் வரக்கூடிய “நிஅமத் என்பதற்கு நபுவ்வத் என்ற பொருள் ஆகும். அது முழுமை அடைந்துவிட்டது என்று கூறினால் அதற்குரிய நமது பதில்:

1- திருக்குர்ஆனில் தவ்ராத் வேதம் குறித்து இவ்வாறு வருகிறது:
تَمَامًا عَلَى الَّذِي أَحْسَنَ وَتَفْصِيلًا
பொருள்: நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கினோம். (6:155)
அதாவது தவ்ராத் வேதம் பூர்த்தி அடைந்ததாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகும் திருக்குர்ஆன் என்ற வேதம் வந்தது. எவ்வாறு பூர்த்தியாகிவிட்ட வேதத்திற்கு பிறகு ஒரு வேதம் வந்ததோ அவ்வாறே பூர்த்தியாகிவிட்ட நிஅமத்திற்கு பிறகு ஒரு நிஅமத் வந்துவிட்டது.
2- இந்த வசனத்திலோ நிஅமத் பூர்த்தியானதை குறித்து வந்துள்ளது. நிஅமத் என்றால் நபுவ்வத் மட்டுமில்லை. மாறாக அரசர், உண்மையாளர், ஷஹீத் பாக்கியம் பெறுதல், நல்லடியார்கள் இவ்வனைத்தும் நிஅமத்தே ஆகும். உதாரணமாக அல்லாஹ் திருமறையில் 4:70 இல் இவ்வாறு கூறுகிறான்:
أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ 
இதே போன்று 5:21 லும் இவ்வாறு கூறுகின்றான்:
اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنبِيَاءَ وَجَعَلَكُم مُّلُوكًا
ஆகவே “அத்மம்து அலைக்கும் நிஅமத்தி” என்பதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு நபுவ்வத் என்ற அருட்கொடை முடிந்துவிட்டது என்று பொருள் கொள்வீர்களானால், பிறகு இந்த முஹம்மத்திய உம்மத்தில் அரசன், உண்மையாளர், ஷஹீத் பாக்கியம் பெறுதல், நல்லடியார்கள் போன்ற அனைத்து நிஅமத்துகளும் மூடப்பட்டுவிட்டன என்று கருத வேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும். ஆகவே உங்களது பொருள் தவறானதாகும். உமக்கு அனைத்து அருட்களும் தரப்பட்டுவிட்டன” என்பதே இந்த வசனத்திற்கு சரியான பொருள் ஆகும்.
3- ஹஸ்ரத் யூசுஃப் (அலை) அவர்கள் தமது கனவை தனது தந்தையிடம் கூறிய போது அதற்கு பதிலாக கூறிய சம்பவம் திருக்குர்ஆனில் இவ்வாறு வருகின்றது:
وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَىٰ آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَىٰ أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ 
பொருள்: எவ்வாறு உமது மூதாதையர்களாகிய இப்ராஹீம், இஸ்ஹாக் மீது தனது நிஅமத்தை இறைவன் பூர்த்தி செய்தானோ அவ்வாறே தனது நிஅமத்தை இறைவன் உம்மீதும் பூர்த்தியாக்க விரும்புகிறான். (12:7)
ஆக, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் நிஅமத் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. பிறகு இதே போன்று ஹஸ்ரத் இஸ்ஹாக், யஅக்கூப் மற்றும் யூசுஃப் (அலை) போன்ற நபிமார்கள் மீதும் தனது நிஅமத்தை பூர்த்தியாக்கியுள்ளான். பிறகு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூலமாக முஸ்லிம்கள் மீதும் தனது நிஅமத்தை பூர்த்தி செய்துள்ளான். இதற்கு பிறகு மூடப்பட்டுவிட்டது என்ற பொருள் எவ்வாறு கொள்ள முடியும்? ஹஸ்ரத் இப்ராஹீம் மற்றும் இஸ்ஹாக் (அலை) அவர்களோடு நபுவ்வத் மூடப்பட்டுவிட்டதா? ஆகவே நாம் உமக்கு முழுமையான நிஅமத்தை வழங்கியுள்ளோம் என்பதே இதன் பொருள் ஆகும்.
இந்த வசனத்தை கொண்டு இனி எந்த நபியும் வர முடியாது என்று எடுத்து வைக்கும் வாதம் இவ்வாறு அடிபட்டு போகிறது.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.