
(அல்பகரா:246)
إِن تُقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعِفْهُ لَكُمْ
وَيَغْفِرْ لَكُمْ ۚ
وَاللَّهُ شَكُورٌ حَلِيمٌ
(அத்தகாபுன்:18)
إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا
اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ
(அல்ஹதீது:19)
திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டு, எந்த வசனங்கள் ஓதிக்காட்டப்பட்டதோ அதன்
பொருள்:
அல்லாஹ்விற்கு
அழகிய கடனை வழங்குபவர் யார் ?அதன் காரணமாக அவன் அதனை அவருக்கு பெருமளவில்
பன்மடங்காக்கித் தருவதுடன். அல்லாஹ் (அடியானின் பொருளை) பெற்றுக்கொண்டு, பெருகச் செய்கிறான்.நீங்கள் அவனிடமே திரும்பவும் கொண்டு
செல்லப்படுவீர்கள். நீங்கள்
அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால்,அவன் அதனை
உங்களுக்குப் பன்மடங்காகித் தருவதுடன் உங்களை மன்னித்தருள்வான் .அல்லாஹ் மிக்க மதிப்பளிப்பவனும்
சகித்துக் கொள்பவனுமாவான்.
தருமம் வழங்கும்
ஆண்கள் ,தருமம் வழங்கும் பெண்கள் ,அல்லாஹ்வுக்கு
அழகிய கடனாகக் கடன் கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அது பன் மடங்கு ஆக்கப்படும், அவர்களுக்கு கண்ணியமான கூலியும் உண்டு .
வருகை
தந்திருப்பவர்களே !
அல்லாஹ்வின் அருளினால்
இன்று அஹ்மதிய்யா ஜமாஅத், வானத்தின் புனிதமான தலைமையாகிய கிலாஃபத்தின் நிழலின் கீழ் வாழ்வின் அனைத்து
பிரிவிலும் இஸ்லாமிய போதனையின் மேன்மை,உயர்வு,சிறப்பு ஆகியவற்றை நிருபித்துள்ளது. உலகின் அனைத்து பகுதிகளிலும் இஸ்லாம், அஹ்மதிய்யத்தின் வெற்றிக்கான மாபெரும் பணியில் இரவு பகலாக முழுவீச்சில் செயலாற்றி
கொண்டிருக்கிறது. தொலைந்துபோன இஸ்லாத்தின் மகத்துவத்தை மீண்டும் நிலைபெறச் செய்வதற்காக,இஸ்லாத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களின் மீது வெற்றி பெறச் செய்வதற்காக, திருக்குர்ஆன் மற்றும் முஹம்மது ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்களின் கொடி அனைத்து
உலகிலும் பறக்க செய்வதற்காக சாதகமற்ற நிலையிலும்، எல்லாவிதமான தியாகங்களையும் செய்யதவாறு
துன்பம் மற்றும் துயரத்தின் காடுகளையும்، முட்களையும் கடந்தவாறு எந்த
நோக்கங்களை சய்யிதுனா ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)அவர்கள் கொண்டு வந்தார்களோ, அந்த நோக்கத்தை அடைவதற்காக முயற்சி செய்து கொண்டியிருக்கிறது.
மேலும் அன்னார்
மூலமாக எந்த உலகளாவிய ஆன்மிக ,நல்லொழுக்க ,கலாச்சார
பெரும் புரட்சிக்கு அடித்தளம் இடப்பட்டதோ, அது முழுமைபெறும்
காட்சி எல்லா இடங்களிலும் தென்படுகிறது. மேலும் காலத்தின் மஸீஹின் அடிமைகள் மிகவேகமாக
அந்த நோக்கத்தை அடைவதற்காக மிகவும் அமைதியுடன், மனிதர்களின்
உள்ளங்களை உண்மை மற்றும் சத்தியத்திற்காக வெற்றி கொண்டவாறு முன்னேறுகிறார்கள். மேலும்
ஒவ்வொரு அடியிலும் காலத்தின் கலீஃபா அவர்களின் வழிகாட்டுதலும்,புத்தம்புதிதாக கிடைக்கக் கூடிய அறிவு மற்றும் ஆன்மீக உணவுகளும், கனிகளும் இந்த முன்னேற்றத்தில் மேலும் வேகத்தையும்,
சிறந்த வழிவகைகளையும் ஏற்படுத்துகின்றது. சாதகமற்ற நிலையிலும் தனது இமாமின் (தலைவரின்)உறுதிமிகு
தலைமையின் கீழ் தனது நோக்கத்தை அடைவதற்காக
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சகோதரர்களே !
திருக்குர்ஆனை
படிப்பதிலிருந்து, நபிமார்கள் தனது வருகையின் நோக்கத்தை
நிறைவேற்றுவதற்காக தன்னை ஏற்கும் மக்களிடம் பொருள் தியாகம் செய்யுமாறும்
கேட்கின்றார்கள் என்பது தெரிய வருகிறது. நபிமார்களின் இந்த நடைமுறைக்கு கேற்ப
இக்காலத்தில் தோன்றிய ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)அவர்களும் தன்னை பின்பற்றுபவர்களிடம் பொருள் தியாகம் செய்யுமாறு
கேட்டார்கள் (கூறினார்கள் ).இது உண்மையில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)அவர்களின் பரிசுத்தப்படுத்தும் ஆற்றல் மற்றும் இறை (மனிதனின்)தர்பிய்யத்தின்
தாக்கத்தின் விளைவேயாகும்.ஜமாஅத் உறுப்பினர்கள் மார்க்கம்,
அதனது கொள்கை மற்றும் நோக்கத்திற்காக உயிர், பொருள், நேரம்,மற்றும் கண்ணியத்தை தியாகம் செய்ய எந்நேரமும்
தயாராக இருக்கின்றார்கள்.இதற்கு அஹ்மதிய்யா ஜமாஅத்தின் வரலாறு சாட்சியாகவும், சான்றுபகரக் கூடியதாகாவும் இருக்கின்றது. நான் சொற்பொழிவின் ஆரம்பத்தில்
எந்த வசனங்களை ஓதினேனோ அவற்றிலும் இதே போதனைகள் தான் கூறப்பட்டுள்ளது.
நபிமார்களின்
அதே நடைமுறையைத்தான் இக்காலத்தில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் புதிதாக
துவக்கியிருக்கிறார்கள்.மேலும் அன்னார் மூலமாக தொடங்கப்பட்ட மாபெரும் பணிகளில்
ஒன்று கிலாஃபத்தின் கீழ் பைத்துல்மால்வுடைய அமைப்பினை நிலைபெறச் செய்வதும் அதனது உறுதிப்பாடும்
ஆகும்.இன்று அல்லாஹ்வின் அருளினால் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் தலைமையில்
பைத்துல்மால்வுடைய அமைப்பு சிறப்பாக நிலைபெற்றுள்ளது.மேலும்
அது அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது .உலகில் இதற்கு நிகரான
எந்தவோர் அமைப்பும் தென்படுவதில்லை. எண்ணை
வளங்களின் மூலம் வளம் பெற்ற இஸ்லாமிய அரசாங்களும் ,அரசவைகளும்
இருக்கின்றன ஆனால் அவர்களின் செல்வம் தனது சகோதரனை கொலை செய்வதிலும் இரத்தம் சிந்த
செய்வதிலும் செலவாகின்றது, ஆனால் அஹ்மதிய்யா ஜமாஅத், கிலாஃபத்தின் கீழ் அதனது அருளினால் தனது அன்பர்கள் மூலம் ஒன்று
திரட்டப்பட்ட செல்வங்களைக் கொண்டு அந்த மாபெரும் பணிகளை செய்து கொண்டிருக்கிறது.
அதில் நூற்றில் ஒரு பகுதி கூட மற்றவர்களால் செய்ய முடியாது,உண்மையில்
இது வானத்தின் கயிராகிய அல்லாஹ்வின் கிலாஃபத்துடன் இணைந்திருப்பதன் விளைவாகும்.
தற்போது நான்
பொருள் தியாகத்தின் முக்கியத்துவம் மற்றும் அருள்கள் குறித்து திருக்குர்ஆனின்
எண்ணற்ற வசனங்களிலிருந்து நேரத்திற்கேற்ப ஒன்று இரண்டு வசனங்களை எடுத்துரைக்கின்றேன்.
பொருள் தியாகம் தொடர்பான கருத்து திருக்குர்ஆனில் நிரம்பியுள்ளது.அல்லாஹ்
கூறுகின்றான் :
وَأَنفِقُوا
فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ
وَأَحْسِنُوا ۛ
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
பொருள் :
அல்லாஹ்வின் பாதையிலே (பொருளையும் ,உயிரையும்) செலவு செய்யுங்கள்۔ நீங்கள்
உங்கள் கைகளாலேயே (உங்களை)அழிவிற்காளாக்கிக் கொள்ளாதீர்கள்.நன்மை செய்யுங்கள்.அல்லாஹ்
நிச்சயமாக நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்.(அல்பகரா:196)
إِنَّمَا
أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ ۚ وَاللَّهُ
عِندَهُ أَجْرٌ عَظِيمٌ
உங்கள் செல்வங்களும்,உங்கள்
சந்ததிகளும் ஒரு சோதனையேயாகும்.ஆனால் அல்லாஹ்விடத்தில் மாபெரும் நற்பலன்
உள்ளது.(அத்தகாபுன் :16)
பொருள்
தியாகத்தின் அளவற்ற அருள்களை குறித்து அல்லாஹ் கூறுகிறான்.
مَّثَلُ
الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ
أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ
وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
பொருள் : தங்கள்
செல்வத்தை இறைவழியில் செலவு செய்வாரோ ,ஒரு தானியம் உதாரணமாகும். அத்தானியம் ஏழு
கதிர்களை முளைப்பிக்கும்,ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள்
இருக்கும்,தான் நாடியவருக்கு அல்லாஹ் அதிக(மதிக)மாகக் கொடுக்கின்றான்,அல்லாஹ் தாராளமாகக் கொடுப்பவனும் ,மிக்க அறிபவனும்
ஆவான்.(அல்பகரா :262)
ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை)அவர்கள் கூறுகிறார்கள் :
எவர் இறைவழியில்
செலவு செய்வாரோ அவரது செல்வத்தில் அல்லாஹ் எவ்வாறு அருள்களை வழங்குகின்றான் என்றால்,
ஒரு தானியம் (விதை) விதைக்கப்படும் போது அது ஒரு தானியமாகத் தான் இருக்கின்றது, ஆனால் இறைவன் அதிலிருந்து ஏழு கதிர்களை முளைக்கச் செய்கின்றான். அவனால்
ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்களை உருவாக்க முடியும்,அதாவது
உண்மையான விஷயம் அதிகமாக்குவதாகும், இது இறைவனது வல்லமையில்
உள்ள ஒன்றாகும்,மேலும் நாம் அனைவரும் இறைவனது அதே
வல்லமையினாலயே உயிருடன் இருக்கின்றோம், ஒருவேளை இறைவன்
தன்புறமிருந்து ஒன்றை அதிகமாக
கொடுப்பதற்கு ஆற்றல் அற்றவனாக இருந்திருந்தால் அனைத்து உலகமும்
அழிந்துபோயிருக்கும் . மேலும் பூமியின் மேல் எந்தவோர் உயிரினமும் எஞ்சி
இருந்திருக்காது. (சஷ்மயே மஃரிஃபத் பக்கம் 162)
சகோதரர்களே !
எங்கு பொருள்
தியாகத்தின் அருள்கள் மற்றும் பயன்கள் பற்றி கூறப்பட்டுள்ளதோ அங்கு பொருள்
தியாகத்திலிருந்து விலகியிருப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் நான்காவது
கலீஃபத்துல் மஸீஹ் ரஹிமஹுல்லாஹு தஆலா அவர்களுடைய ஒரு மேற்கோளை எடுத்துரைக்கின்றேன்
.ஹுஸூர் அவர்கள் கூறுகின்றார்கள் :
எனது முழு
வாழ்வின் அனுபவம் என்னவென்றால், எவர் பொருள் தியாகத்தில் இறைவனுடன் தனது
விஷயத்தை சுத்தமாக வைத்திருக்க மாட்டாரோ ,இறையச்சத்துடன்
தனது செல்வத்திலிருந்து அல்லாஹ் மற்றும் அவனது மார்க்கத்தின் பங்கை தனியாக எடுத்து
வைப்பதில்லையோ அவரது ஏனைய விஷயங்களும் சீர்கெட்டுப் போய்விடும்,வீட்டின் அமைதி அழிந்து போய்விடும்,வியாபாரத்தில்
இழப்பு ஏற்பட ஆரம்பிக்கும்,குழந்தைகளின் தர்பிய்யத்தில்
சீர்கேடு வந்துவிடும்,மேலும் பொதுவாக அவர்களது
வாழ்க்கையிலிருந்து அருள்கள் அகன்று போய்விடும்,பிறகு
இப்படிப்பட்ட மக்களது தஃவத்தே இலல்லாஹ் பணியிலும் எந்தவிட உயிரும் ஆற்றலும்
இருக்காது,ஆகையால் இந்த விஷயத்தை சாதாரணமாகக் கருதாதீர்கள்,இறையச்சத்துடன் தனது நலனுக்காக இதன் பக்கம் முழுமையாக கவனம்
செலுத்துங்கள்.மேலும் நிச்சியமாக அல்லாஹ்வின் பாதையில் பொருள்தியாகம் செய்வதனால் செல்வம்
அதிகமாகவே செய்யும்,குறைவு ஒருபோதும் ஏற்படாது,(இந்தியாவின் ஜமாஅத் சகோதரர்களுக்கான சிறப்பு தூதுசெய்தி)
சகோதரர்களே!
இறைவழியில்
செல்வத்தை வழங்குகள் என்ற குரலுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் நபிமார்களை ,ரஸூல்மார்களை
ஏற்றுக்கொண்டவர்கள் லெப்பைக் (ஆஜராகிவிட்டோம்)என்றே கூறியுள்ளனர்.ஆனால் நபிகள்
நாயகம் (ஸல்)அவர்களது ஸஹாபாக்கள் எந்தவிதத்தில் லெப்பைக் எனக்கூறினார்கள் என்றால், அதனுடைய மகத்துவமே வேறு. அதன் நினைவுகள் கியாமத் வரை உள்ளத்தில்
வெப்பமூட்டிக் (ஊக்கமூட்டி) கொண்டேயிருக்கும். பெருமானரிடம்
இருந்து பொருள் தியாகத்திற்கான அறிவிப்பு வரும்போதெல்லாம்,
ஸஹாபாக்கள் விருப்பத்துடன் அன்னாரது கூற்றிற்கு லெப்பைக் என்று கூறுவார்கள் எந்தளவுக்கென்றால்
இஸ்லாத்திற்காக தனது உயிர்களை ஆடு, மாடுகளைப் போன்று தியாகம்
செய்து வந்தார்கள் .நபிகள் நாயகம் (ஸல்)அவர்களது காலத்தில் சமுதாய தேவைகளுக்காக
பெருமானார் (ஸல்)அவர்கள் அவ்வப்போது (பொருள்தியாகம் செய்யுமாறு)
அறிவிப்பார்கள்.அப்போது ஸஹாபாக்கள் அதிகளவு
அதில் பங்கெடுத்து வந்தனர். இதில் ஆண்களாயினும்,பெண்களாயினும்
அனைவரும் தனது செல்வங்களை தியாகம் செய்து வந்தனர்.
ஒருமுறை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள், பெண்களிடத்தில் (தற்போது) மார்க்கத்திற்க்கு
பொருள் தியாகத்தின் தேவையுள்ளது எனக் கூறினார்கள்,அதற்காக
ஹஸ்ரத் பிலால் (ரலி) அவர்கள் தனது போர்வையை
விரித்திருந்தார்கள்.அந்த போர்வை பெண்களின் நகைகளால் நிரம்பியது,பெண்களின் அலை மோதியது, தன்னிடம் உள்ளதை
கொடுப்பதற்காக ஒருவர் மற்றவர்மீது விழுந்தவாறு முந்திக் கொண்டுவந்தனர்.
ஒருமுறை
பெருமானார் (ஸல்) அவர்கள் (பொருள் தியாகம்) அறிவித்தபோது ஹஸ்ரத் உமர் (ரலி)அவர்கள்
தனது வீட்டின் பாதி பொருள்களை எடுத்து வந்தார்கள்,ஹஸ்ரத் அபூபக்கர்
(ரலி) அவர்கள் தனது வீட்டின் அனைத்து பொருள்களையும் அல்லாஹ் மற்றும் அவனது ரஸூல்
அவர்களிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தார்கள்.பெருமானார்(ஸல்) அவர்கள் அபூபக்ர்
அவர்களே! வீட்டில் ஏதாவது விட்டுவிட்டு வந்துள்ளீரா! எனக்கேட்டார்கள். அதற்கு
அல்லாஹ் மற்றும் அவனது ரஸூலை விட்டு வந்துள்ளேன்,அவர்களை விட
பெரிய செல்வமும் ஒன்றுமில்லை,அவர்களை விட பெரிய சொத்தும்
ஒன்றுமில்லை கூறினார்கள்.ஹஸ்ரத் உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் நான் எனது
வீட்டின் பாதி பொருளை எடுத்து வந்தபோது, இன்று நான் ஹஸ்ரத்
அபூபக்ர் (ரலி) அவர்களை முந்தி விடுவேன் எனக் கருதினேன்,அவர்கள்
கூறுகிறார்கள் ஆனால் அபூபக்ர்(ரலி)அவர்களின் கூற்றை கேட்டப் பிறகு என்னால்
எப்போதும் அபூபக்ர் (ரலி) அவர்களை முந்த முடியாது எனக் கருதினேன்.
சகோதரர்களே !
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களுடைய முழு நிழல்(ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ) மீது
நம்பிக்கை கொண்ட இந்த பரிசுத்த கூட்டம் தான் முஹம்மதிய்ய மஸீஹின் குரலுக்கு
லெப்பைக் எனக்கூறியவாறு அன்னாருக்கு உதவி செய்யக் கூடியதாக இருக்கிறது .இந்த ஒருங்கிணைக்கப்பட்ட
ஆன்மீக கூட்டம் தான் எந்நேரமும் தனது உடல்,பொருள்,ஆவியை
காலத்தின் இமாமின் ஒரு சைகையின் கீழ் தியாகம் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறது.வாருங்கள்
! ஈமானை ஒளிமயமாக்க கூடிய, உண்மை தீபத்தின் அந்த விட்டில்
பூச்சிகளின், அளவில்லா கலப்பற்ற உணர்வு மற்றும் தியாகத்தின் ஒரு
சில சம்பவங்களை கேளுங்கள்.
ஸித்திக்கிய்யத்
மற்றும் ஃபாரூக்கீய்யத்தின் உணர்வுகளில் மூழ்கியவாறு ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மிகவும் நல்ல, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நண்பர் ஹஸ்ரத்
ஹக்கீம் மவ்லானா நூருத்தீன் ஸாஹிப் அவர்கள் உயர்வான எண்ணத்துடன் அன்னாருக்கு
எழுதுகிறார்கள்....
நான் உங்களது
வழியில் அர்ப்பணமாகின்றேன்,என்னிடம் உள்ளதெல்லாம் என்னுடையதல்ல
உங்களுடையதாகும்.ஹஸ்ரத் பீர் வ முர்ஷிதே!நான் உண்மையுடன் கூறுகின்றேன், எனது அனைத்து செல்வங்களும் மார்க்கத்தை
பரப்ப செய்வதில் செலவானால், நான் எனது நோக்கத்தை அடைந்தவனாகி விடுவேன்.
(ஆதாரம்
ஃபத்ஹே இஸ்லாம்,ரூஹானி கஸாயீன் தொகுதி 3,பக்கம் 36)
புகழுக்குரிய
ஹஸ்ரத் மவ்லானா அவர்களுடைய இந்த பணிவான
வார்தைகள் அன்பு மற்றும் கொள்கையினால் ஏற்பட்ட வெளிப்பாடு மட்டும் அல்ல. மாறாக
செயல்ரீதியிலும் அன்னார் தனது அனைத்து செல்வங்களையும் மார்க்கத்தின் வழியில்
செலவுசெய்து, ஹஸ்ரத் அபூபக்ர் (ரலி)மற்றும் ஹஸ்ரத் உமர்(ரலி) அவர்களின்
முன்மாதிரியை உயிர் பெறச் செய்து விட்டார்கள்.
ஹஸ்ரத் டாக்டர்
கலீஃபா ரஷீதுத்தீன் ஸாஹிப் (ரலி)அவர்களின் கலப்பற்றதன்மை மற்றும் அர்பணிப்பின்
நிலை எவ்வாறு இருந்ததென்றால்,குர்தாஸ்பூர் வழக்கு தொடர்பாக ஜமாஅத்திற்கு
அவசியமாக இருந்த பணத்தேவை குறித்து ஹுஸூர் அவர்களுடைய ஒரு எழுத்து (நூல்&கடிதம்)மூலம் அவருக்கு தெரியவந்தது, எதிபாரதவாறு அன்றைய
தினம் அவருக்கு ஏறக்குறைய 450ரூபாய் சம்பளம் கிடைத்தது,அவர்கள்
எவ்வித தயக்கமுமின்றி அந்த அனைத்து பணத்தையும் ஹுஸூர் அவர்களுக்கு
அனுப்பிவைத்தார்கள், வீட்டின் தேவைக்களுக்காக சிறிது தொகையை
வைத்திருக்கவேண்டும் என ஒரு நண்பர் கூறியதற்கு, எவ்வித
தாமதமுமின்றி அவர்கள், இறைவன் புறமிருந்து வந்தவர்
மார்க்கத்திற்காக தேவையிருக்கிறது எனக் கூறுகிறார், பிறகு
நான் வேறு எதற்காக அதனை வைத்திருக்கவேண்டும் எனக் கூறினார்கள்.
ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்கள் மினாரத்துல் மஸீஹை கட்டுவதற்கு (பொருள் தியாகம் செய்யுமாறு
)அறிவித்தார்கள்.அப்போது முன்ஷி ஷாதிகான் ஸாஹிப் சியால்கோட்டி (ரலி)அவர்கள், கட்டில்களைத் தவிர தனது வீட்டின் அனைத்து பொருள்களையும் 300 ரூபாயிக்கு
விற்று அனைத்து தொகையையும் ஹுஸூர் (அலை) அவர்களிடம் வந்து கொடுத்தார்கள்.அதற்கு
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது(அலை) அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு, தாங்களோ ஹஸ்ரத் அபூபக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களின் முன்மாதிரியை நிலை
நாட்டியுள்ளீர்கள் எனக் கூறினார்கள்,இதனைக் கேட்டதும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்று அந்த கட்டில்களையும்
விற்று அனைத்து தொகையையும் சந்தாவாக
கொடுத்து விட்டார்கள்.(தாரீக்கே அஹ்மதிய்யத் தொகுதி 2,பக்கம் 147)
ஹஸ்ரத் ஹக்கீம்
ஃபஸல்தீன் ஸாஹிப் பேருவி அவர்கள் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது(அலை) அவர்களுக்கு முன்னூறு
ரூபாய் அனுப்பி வைத்திருந்தார்கள், ஆனால் ஹுஸூர் அவர்களுக்கு இஸாலா அவ்ஹாம்
என்ற நூலை அச்சியிடுவதற்கு பணம் தேவைப்படுகிறது என அவர்களுக்கு எனத் தெரிந்தவுடன்
உடனே அவர் தனது மனைவியின் நகைகளை விற்று மேலும் நூறு ரூபாயை காதியான்
அனுப்பிவைத்தார்கள்.
(ரூஹானி கஸாயின் தொகுதி 3.பக்கம் 623)
ஹஸ்ரத் முன்ஷி
அப்துல் அஸீஸ் ஸாஹிப் அவ்ஞ்சலுவி (ரலி) அவர்கள் மாதச்சம்பளம் 6 (ஆறு ரூபாய்)
பெற்றபோதும், தான் பலவருடங்களாக சேமித்து வைத்திருந்த 155 ரூபாயை
ஹுஸூர் அவர்களிடம் கொடுத்தார்கள்.
(மஜ்முஅ இஷ்திஹாராத் தொகுதி 3,பக்கம்
166)
மவ்ஸஃ சீக்வான் என்ற
ஊரை சார்ந்த மூன்று காஷ்மீர் சகோதரர்கள், ஹஸ்ரத் மியான் ஜமாலுத்தீன் ஸாஹிப்,ஹஸ்ரத் மியான் கைருத்தீன் ஸாஹிப் மற்றும் மியான் இமாமுத்தீன் ஸாஹிப்
ஆகியோர் தினமும் மூன்று,நான்கு அனாக்களுக்கு பணிசெய்து
வந்தனர். அவர்களும் கூட தனது மொத்த சேமிப்பாகிய நூறு ரூபாயை மிகவும் பணிவுடன்
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களிடம்
கொடுத்தார்கள்
(ரூஹானி கஸாயின்.தொகுதி11.பக்கம்313)
ஹஸ்ரத் பாபூ ஃபக்கீர்
அலி ஸாஹிப் அவர்களிடம், சந்தா வாங்குவதற்காக சென்றார்கள். அப்போது அவர்களிடம் பணமாக எதுவும் இல்லை,சிறிது
கோதுமைமாவு மட்டுமே இருந்தது,அவர்கள் அதனையே சந்தாவாக
கொடுத்துவிட்டு பிறகு பசியுடனே உறங்கினார்கள்.
(தல்கீஸ்
அஸ்ஹாபே அஹ்மது. தொகுதி 3,பக்கம்59)
சகோதரர்களே!
இது போன்ற எண்ணற்ற
உதாரணங்கள், அஹ்மதிய்ய வரலாற்றில் நிரம்பியுள்ளன,நேரம்
குறைவாக இருப்பதன் காரணத்தினால் இந்த சம்பவங்களே போதும் எனக் கருதுகிறேன்,ஆக இன்ஃபாக் ஃபீ ஸபீலில்லாஹ் அதாவது இறைவழியில் பொருள் தியாகம் செய்வதற்கு
அசாதாரணமான முக்கியத்துவமும்,அருள்களும் இருக்கின்றன.
கண்ணியத்திற்குரிய
சகோதரர்களே!
தற்போது நான்
சொற்பொழிவின் அடுத்த பகுதிக்கு வருகின்றேன், அது வஸிய்யத் அமைப்புடன் தொடர்புடையதாகும்.
1905ஆம் ஆண்டு, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் வரலாற்றில் மிக
முக்கியத்துவம் வாய்ந்ததாகும், ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்களுக்கு அவர்களது மரணம் அண்மையில் நிகழவிருப்பது
தொடர்பாக தொடர்ச்சியாக இல்ஹாம்கள் வந்துகொண்டிருந்தன,
அன்னார் தனது வருகையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான கவலையில் இருந்தார்கள்,ஏனென்றால் எந்த மகத்தான பணிக்காக அன்னார் அனுப்பட்டார்களோ அது ஓரிரு சந்ததிகளுடைய
வேலை அல்ல மாறாக தொடர்ச்சியான முயற்சி செய்யவேண்டிய தேவையுடையதாகும்.ஒரு
சந்ததிக்கு பிறகு மற்றொரு சந்ததியென கியாமத் வரை அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கான
ஏற்பாட்டை செய்ய வேண்டியிருந்தது,ஆக ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது
(அலை)அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்ப 1905ஆம் ஆண்டு வஸிய்யத் எனும் வானின்
திட்டத்தை தொடங்கினார்கள்,ஆனால் இதனது அடித்தளம்1400 வருடங்களுக்கு முன்னதாகவே இடப்பட்டிருந்தது.ஏனென்றால்
ஹஸ்ரத் அக்தஸ் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தனது உம்மத்திற்கு இந்த
வார்த்தைகளில் நற்செய்தி வழங்கி யிருக்கிறார்கள். (அதாவது)
வரக்கூடிய மஸீஹ் அவர்கள் யஹத்திஸுஹும் பிதரஜாத்திஹிம் ஃபில் ஜன்னத்தி,அதாவது தன்னை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கப்பெறூம் மாபெரும்
மேன்மைகளையும்,உயர் அந்தஸ்துகளையும் பற்றி கூறுவார்கள்,வஸிய்யத் அமைப்பு என்பது கிலாஃபத் அமைப்பின் கீழ் செயல்படக்கூடிய அமைப்பு
ஆகும், இது மார்க்க மற்றும் ஆன்மீக சீர்திருத்தம் மற்றும்
மேம்பாட்டுடன், உலகப்பொருளாதார மற்றும் சமூகப்
பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வையும் வழங்குகிறது.உலகின் எந்தவொரு அமைப்பும் இதனுடன்
போட்டியிட முடியாது.சய்யிதுனா இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அரை நூற்றாண்டை
விட அதிகமான தனது கிலாஃபத் காலத்தில் இந்த வானின் திட்டத்தின் அனைத்து விஷயங்களையும்
விளக்கியுள்ளார்கள், மேலும் ஜமாஅத் சகோதரர்கள் விரைவாக இந்த
வானின் திட்டத்தில் இணையவும் ,இந்த மாபெரும் பொருளாதாரத்
திட்டத்தின் அங்கமாக ஆகவேண்டும் என வலியுறுத்தினார்கள்.
சய்யிதுனா ஹஸ்ரத்
மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் வஸிய்யத் நூலின் மூலம் மாபெரும் ஒரு பொருளாதார
அமைப்பை அறிமுகப்படுத்திய அதேவேளையில் அன்னாரது மரணத்திற்குப் பிறகு மூமின்களின்
ஜமாஅத்தில் நிலைபெறக்கூடிய மாபெரும் அமைப்பாகிய கிலாஃபத் அமைப்பு குறித்து
கம்பீரமான வார்த்தைகளில் அறிவிப்பு செய்திருக்கின்றார்கள்,கிலாஃபத்
அமைப்பும் வஸிய்யத் அமைப்பும் உண்மையில் ஒன்றுடன் ஒன்று எந்தளவு பிணைக்கப்பட்ட
அமைப்பு என்றால் ஒன்றை, மற்றொன்றை விட்டு பிரிக்க முடியாது.
சய்யிதுனா
ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹு தஆலா அவர்கள் இந்த உண்மையின் பக்கம்
கவனமூட்டியவாறு கூறுகிறார்கள்:-ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் வஸிய்யத்
நூலில் இரண்டு விஷயங்களை பற்றி கூறியிருகின்றார்கள்,ஒன்று அன்னாரது
மரணத்திற்குப் பிறகு கிலாஃபத் அமைப்பு தொடங்குவது, தனது
மரணத்திற்குப் பிறகு ஜமாஅத்தினரிடம் இறையச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அதில்
முன்னேற்றம் அடைய செய்யக்கூடிய ஓர் அமைப்பு ஏற்படுவதனை குறித்த கவலை.இரண்டாவது
பொருள் தியாகம் செய்யக்கூடிய ஓர் அமைப்பு நிலைபெறுவது, அதன்
மூலம் நல்லவர் மற்றும் தீயவருக்கு இடையில் வேறுபாடு கண்டறியப் படவேண்டும் மேலும்
ஜமாஅத்தின் பொருள் தேவைகளும் மிகச்சிறந்த முறையில் பூர்த்தியாக வேண்டும்
என்பதாகும்.இதற்காக வஸிய்யத் அமைப்பை ஏற்படுத்தினார்கள் .ஆக இந்தவகையில் எனது
பார்வையில் கிலாஃபத் அமைப்பிற்கும் வஸிய்யத் அமைப்பிற்கும் ஓர் ஆழமான தொடர்பு இருக்கின்றது.
வஸிய்யத் அமைப்பு தற்போது எந்தளவு முன்னேறியிருக்க வேண்டுமென்றால் நூறு வருடம்
கழிந்த பிறகு இறையச்சத்தின் தரம் குறைவதற்கு பகரமாக நிலைபெறமட்டும் செய்யாமல்
அதிகமாக வேண்டும்,தன்னிடத்தில் ஆன்மீக மாற்றங்களை ஏற்படுத்த
கூடியவர்கள் உருவாகவேண்டும்,மேலும் தியாகங்கள் செய்யக்கூடிய
உருவாக வேண்டும்.அதாவது அல்லாஹ்வின் உரிமைகளையும், அடியார்களின் உரிமைகளையும் செலுத்தக்கூடியவர்கள் உருவாக
வேண்டும்.அல்லாஹ்விற்கு நன்றிசெலுத்தக் கூடிய அடியார்கள் உருவாக வேண்டும்.இதுபோன்ற
தரம் உருவாகிவிட்டால் பிறகு இன்ஷா அல்லாஹ் கிலாஃபத்தே ஹக்காவும் உருவாகிவிடும்.மேலும்
ஜமாஅத்தின் தேவைகளும் பூர்த்தியாகிக் கொண்டே செல்லும்.
(குத்ஃபாத்தே மஸ்ரூர் பாகம்
2,பக்கம் 559)
சகோதரர்களே !
இந்த
மேற்கோளிலிருந்து தெரிவது போன்று வஸிய்யத் அமைப்பிற்கு இரண்டு மிகப்பெரிய பகுதிகள்
உள்ளன, ஒன்று மனிதனின் மார்க்க ,ஆன்மீக,நல்லொழுக்க சீர்திருத்தம் மற்றும் இறைநெருக்கத்தில் முன்னேற்றம் அடைவது, இரண்டாவது பொருள் தியாகம். வஸிய்யத்தின் மூலம் பொருள்தியாகம் செய்வது
தொடர்பான பகுதிதான் இன்று நான் பேச வேண்டியத் தலைப்பு ஆகும்.அல்வஸிய்யத் உண்மையில்
உலகத்திற்கான புதிய பொருளாதார அமைப்பின் அடித்தளம் ஆகும்.ஆகையால் இந்த வாதம்
உலகின் புதிய அமைப்பு மேற்கில் ஏற்படாது என்பது தவறானது ஒன்றுமல்ல மாறாக அதன்
அடித்தளம் 1905ல் புனித பூமி காதியானில் வைக்கப்பட்டு விட்டது,இப்போது உலகிற்கு அமைதி மற்றும் நிம்மதியை வழங்கக்கூடிய ,ஒவ்வொரு துக்கத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் இரட்சிப்பை வழங்கக்கூடிய
அமைப்பு,ஒவ்வொரு வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளின் உள்ளத்தில்
மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு,ஒவ்வொரு விதவை மற்றும்
அனாதைகளுக்கு தந்தை போன்று கருணை புரியக்கூடிய அமைப்பு இக்காலத்தில் தோன்றிய
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)அவர்களின் மூலம் உருவான இந்த வஸிய்யத் அமைப்பே ஆகும்.
ஹஸ்ரத் முஸ்லிஹ்
மவ்வூது (ரலி)அவர்கள் ஏப்ரல் 4,1926 ஆம் ஆண்டு
நடைபெற்ற மஜ்லிஸ் முஷாவரத்தின் சமயத்தில் வஸிய்யத் அமைப்பு தொடர்பாக தாக்கத்தை ஏற்படுத்தக்
கூடிய ,உண்மையை வெளிப்படுத்தக் கூடிய சொற்பொழிவை
நிகழ்த்தியவாறு, ஆற்றல்மிகு வார்த்தைகளில் கூறினார்கள்.
ஹஸ்ரத் முஸ்லிஹ்
மவ்வூது (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:-
அஹ்மதிய்யத்
முன்னேற்றம் அடையும்போது,நமது ஜமாஅத் மக்களின் வருமானம் அதிகரிக்கும்,நமது கையில் ஆட்சி வந்துவிடும்,அஹ்மதிகள் அமீர்களாகவும், அரசர்களாகவும் இருப்பார்கள்,அப்போது 1/10 என்ற வஸிய்யத்தின்
பங்கு போதுமானதாக இருக்காது,அந்தநேரத்தில் ஜமாஅத்தின்
கடிவாளம்(பொறுப்பு) யாரிடம் இருக்குமோ அவர் அல்வஸியத்திற்கு 1/3 பங்கு கட்டாயம் என
நிர்ணயம் செய்தாலும் அது அனுமதிக்கப் பட்டதாகும்.........அந்த சமயத்தில் ஆட்சி
அஹ்மதிய்யத்தின் ஆட்சியாக இருக்கும்.பணமும் செல்வமும் அதிகளவு இருக்கும், 1/10என்ற பங்கு ஒன்றுமற்றதாக இருக்கும்.
(குத்பாத்தே
மஹ்மூது, பாகம்10,பக்கம் 172)
பிறகு
வஸிய்யத்தின் பங்கு தொடர்பாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி)அவர்கள் மேலும்
கூறுகின்றார்கள்:-
சகோதரர்கள் வஸிய்யத்
செய்யும் போது இதனையும் நினைவில் வைக்க வேண்டும், அதாவது இறைவன்
உயர்ந்த பங்காக நிர்ணயித்தது 1/3 ஆகும்.மேலும் ஒவ்வொரு நம்பிக்கையாளரும்
அதிகளவு பங்கை வஸிய்யத் செய்வதற்கு முயற்சி செய்யவேண்டும், ஒருவேளை
தனது கட்டாய சூழ்நிலைகளின் காரணத்தால் 1/3 பங்கை வஸிய்யத் செய்ய
முடியவில்லையென்றால்,1/4 பங்கை வஸிய்யத் செய்ய வேண்டும்,ஒருவேளை ¼ பங்கை வஸிய்யத் செய்ய முடியவில்லையென்றால்
1/5 பங்கை வஸிய்யத் செய்யவேண்டும், ஒருவேளை 1/5 பங்கை
வஸிய்யத் செய்ய முடியவில்லையென்றால் 1/6 பங்கை வஸிய்யத் செய்யவேண்டும், ஒருவேளை 1/6 பங்கை வஸிய்யத் செய்ய முடியவில்லையென்றால் 1/7 பங்கை
வஸிய்யத் செய்யவேண்டும் ஒருவேளை 1/7 பங்கை வஸிய்யத் செய்ய முடியவில்லையென்றால் 1/8
பங்கை வஸிய்யத் செய்யவேண்டும், ஒருவேளை 1/8 பங்கை வஸிய்யத்
செய்ய முடியவில்லையென்றால் 1/9 பங்கை வஸிய்யத் செய்யவேண்டும், ஒருவேளை 1/9 பங்கை வஸிய்யத் செய்ய முடியவில்லையென்றால் 1/10 பங்கை
வஸிய்யத் செய்யவேண்டும்.
( குத்பாத்தே மஹ்மூது, பாகம்10,பக்கம் 167-168).
சகோதரர்களே!
வஸிய்யத்
அமைப்பின் மூலம் கிடைக்கப்பெறும் குடும்ப,பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வெற்றியைப்
பற்றி எடுத்துரைத்தவாறு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி)அவர்கள் கூறுகிறார்கள் :-
அல்வஸிய்யத்தில்
கூறப்பட்டதனைப் போன்று ,வஸிய்யத் திட்டத்தின் நன்மைகள் வேறொரு
கோணத்திலும் வெளிப்படும்,கடைசியாக மனிதயினத்தின் பலவீனமான
கூட்டத்தினரை உயர்த்தும்,மனிதயினத்தின் நன்மைகள் மற்றும்
மகிழ்ச்சிகரமான நிலையை முன்னேற்றமடையச் செய்யும் காரணியாக இது திகழும், எந்தவொரு அமைப்பின் அடித்தளம் கட்டாயப்படுத்துதலில் (நிர்பந்தப்படுத்துதலில்)இருக்குமோ
அது இந்த நோக்கத்தில் வெற்றிபெறமுடியாது.........அல்வஸிய்யத்தில் கூறப்பட்டுள்ள
திட்டங்கள் முற்றிலும் சுயம் விரும்பி செய்வதாகும்.அவை இஸ்லாதிற்கு தொண்டாற்றுவதினால்
கிடைக்கும் நற்கூலியின் அந்தஸ்தை கொண்டதாகும். இந்தவகையில் இந்த திட்டத்துடன்
தொடர்புள்ள நல்லொழுக்க மற்றும் ஆன்மீக பலன்களிலிருந்து ஏனைய அனைத்து அமைப்புகளும்
தடுக்கப்பட்டவையாகும். சிறிது சிறிதாக ஒரு நாட்டிற்குப் பிறகு மற்றொரு நாடு என்று இந்த
திட்டத்தினை ஏற்க முன்வருவார்கள்.இதனைப்போன்று இந்த திட்டத்தின் மூலம் ஆன்மீக,நல்லொழுக்க மற்றும் உலக நன்மைகளிலிருந்து பயன்பெறுபவர்களும்
வருவார்கள்.உலகில் இறைவனது பெயர் உயர்ந்து கொண்டே செல்லும்.
(தாரீக்கே அஹ்மதிய்யத்,
பாகம் 18,பக்கம் 110-112)
வஸிய்யத்தின் மூலம்
ஒன்றுசேரும் செல்வங்களின் செலவீனங்கள் என்ன? என்ன? எந்தஎந்த
தேவைகளில் அது செலவு செய்யப்படுகிறது என்பது தொடர்பாக சய்யிதுனா ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை)அவர்களின் தெளிவான வழிகாட்டல் இருக்கின்றது, ஹஸ்ரத்
மஸீஹ் மவ்வூது (அலை)அவர்கள் கூறுகின்றார்கள்:-
வரக்கூடிய இந்த செல்வங்கள்
ஒரு நம்பிக்கைக்குரிய ,அறிவுபடைத்த அஞ்சுமனிடம் ஒப்படைக்கப்பட்டு
இருக்கும்.பரஸ்பர ஆலோசனையின் மூலம் இஸ்லாத்தின் முன்னேற்றம்,திருக்குர்ஆனின் ஞானத்தை பரப்புதல்,நூல்கள்,ஆதாரங்கள் மற்றும் ஜமாஅத்தின் அறிவுரையாளர்கள் போன்றவற்றிற்காக
மேற்க்கூறிய வழிகாட்டலின் படி செலவு செய்வார்கள்.மேலும் இறைவனது வாக்குறுதி
இருக்கின்றது அவன் ஜமாஅத்திற்கு முன்னேற்றத்தை வழங்குவான்.ஆகையால் இஸ்லாத்தை
பரப்புவதற்காக அதிகளவு செல்வங்கள் ஒன்றுசேரும் என நம்புகின்றோம்.மேலும் இஸ்லாத்தை பரப்பும்
திட்டங்களில் உள்ள ஒவ்வொரு விஷயங்களும்,(தற்போது அதனது
விளக்கத்தை எடுத்துரைப்பது முடியாத ஒன்றாகும்,)அவையனைத்தும்
இந்த செல்வங்கள் மூலம் நிறைவேற்றப்படும்.அந்த செல்வங்களில் அஹ்மதிய்யா ஜமாஅத்தில்
இணைந்த,
குடும்பத்தை நடத்த போதுமான வசதியில்லாதவர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,புதிய முஸ்லிம்களுக்கும் உரிமை
இருக்கும் .
(அல்வஸிய்யத், பக்கம் 26)
வஸிய்யத் தற்போதைய
காலத்தின் தேவைகளுக்கேற்ப உலகிலிருந்து துக்கம் மற்றும் துயரத்தை அகற்றக் கூடிய
மாபெரும் திட்டம் ஆகும். உலகின் சமூக, பொருளாதார பிரச்சனைகளின் நிரந்தரத் தீர்வு
இந்த திட்டத்தில்தான் மறைந்துள்ளது. இஸ்லாம் எந்த சமூக,பொருளாதார
அமைப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியதோ,அதற்கு நான்கு முக்கிய
கோட்பாடுகள் உள்ளன.
முதலாவது :-அனைத்து
மனிதர்களின் தேவைகளும் பூர்த்திசெய்யப்படவேண்டும்.
இரண்டாவது :- இந்த
பணியை செய்யும் போது தனிமனித பண்பு மற்றும் குடும்ப வாழ்கையின் நுண்ணிய உணர்வுகளை
அழித்துவிடக்கூடாது.
மூன்றாவது:-இந்த
பணியை பணக்காரர்களிடமிருந்து விருப்பத்துடன் பெறவேண்டும், கட்டாயப்படுத்தி
செய்ய வைக்கக்கூடாது.
நான்காவது :-இந்த
அமைப்பு தனிப்பட்டநாடு சார்ந்ததாக இருக்காது,மாறாக பல உலகநாடுகளை கொண்டதாக இருக்கும்.
இந்த நான்கு
கோட்பாடுகளுக்கு ஏற்ப நாம் வஸிய்யத் அமைப்பை ஆராய்தோம் என்றால்,இந்த
அமைப்பு முற்றிலும் முழுமையான எல்லாவகையிலும் நிறைவுபெற்றதாக தென்படும்.இந்த
வானத்தின் அமைப்பின் விளைவாக பொருளாதார மற்றும் சமூக ரீதியில் உலகில் ஏற்படும் சந்தோஷமான
நிலையை எடுத்துரைத்தவாறு சய்யிதுனா ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி)அவர்கள்
கூறுகிறார்கள் :-
வஸிய்யத் அமைப்பு
முழுமையடையும் போது, இதன் மூலம் தப்லீக் மட்டும் நடைபெறாது, மாறாக இஸ்லாத்தின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு நபருடைய தேவையும்
இதன்மூலம் நிறைவேற்றப்படும்.கஷ்டமும்,வறுமையும் உலகிலிருந்து
எடுக்கப்படும்.இன்ஷா அல்லாஹ் .அனாதைகள் யாசிக்க மாட்டார்கள்,விதவை மக்களிடத்தில் கையேந்த மாட்டார்.வசதியற்றவர் கஷ்டத்துடன்
திரியமாட்டார். ஏனென்றால் வஸிய்யத் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும், இளைஞர்களுக்கு தந்தையாக இருக்கும்,பெண்களுக்கு
கணவனாக இருக்கும்,கட்டாயப்படுத்தாமல் அன்பு மற்றும்
உள்ளத்தின் மகிழ்ச்சியுடன் ஒரு சகோதரர் மற்றொரு சகோதரருக்கு இதன் மூலம் உதவி
செய்வார்.அவர் கொடுப்பது பிரதிபலனை எதிர்பாத்து இருக்காது மாறாக கொடுக்கக்கூடிய
ஒவ்வொருவரும் இறைவனிடத்தில் சிறந்த ஈட்டை பெறுவார்கள். வசதிபடைத்தவரும் இழப்பில்
இருக்கமாட்டார் ,எந்த ஏழையும் இழப்பில் இருக்கமாட்டார்.எந்த
சமுதாயமும் மற்ற சமுதாயத்துடன் சண்டையிடாது.மாறாக அதனது கருணை உலகம் அனைத்திலும்
பரந்திருக்கும்.
ஆக
நண்பர்களே!உலகத்தின் புதிய அமைப்பை
மிஸ்டர் சர்ச்சினாலும் ஏற்படுத்த முடியாது. மிஸ்டர் ரோஸ்வெல்ட்டாலும் ஏற்படுத்த
முடியாது.அண்டார்டிக்காவின் சார்டர்வுடைய
வாதம் அனைத்தும் ஏமாற்றுதலாகும்.அவற்றில் பல்வேறு குறைகளும், குறைபாடுகளும்,சீர்கேடுகளும்
உள்ளன.புதிய திட்டத்தை இறைவன் புறமிருந்து உலகில் தோன்றக்கூடியவர் தான்
கொண்டுவருகிறார்.அவர்களது உள்ளத்தில் வசதிபடைத் தவர்களை குறித்து எந்த பகைமையும்
இருக்காது.ஏழைகளின் மீது பொருத்தமற்ற அன்பு
இருக்காது.அவர் கிழக்கை சார்ந்தவராகவும் இருக்கமாட்டார்.அவர் மேற்கை
சார்ந்தவராகவும் இருக்கமாட்டார்.அவர்கள் இறைவனது தூதராக இருப்பார்கள்.அவர்கள்
அமைதியை நிலைநாட்ட வழியாக இருக்கும் அந்த போதனைகளையே வழங்குவார்கள்.ஆக இன்று மஸீஹ்
மவ்வூது(அலை) அவர்கள் மூலம் வந்த அதே போதனைகள் தான் அமைதியை நிலைநாட்டும்.அதனது அடித்தளம்
அல்வஸிய்யத் மூலம் 1905ஆம் ஆண்டில் வைக்கப்பட்டுவிட்டது.
(நிஸாமே
நவ், அன்வாருல் உலூம்பாகம்16,பக்கம்601).
சகோதரர்களே!
உலகளாவிய
அஹ்மதிய்யா ஜமாஅத்தின் சகோதரர்கள் எந்தளவு நற்பெறுபெற்றவர்களாக
இருக்கின்றார்கள்.காலத்தின் இமாம் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)அவர்கள் மூலம்
கிலாஃபத் அலா மின்ஹாஜ்ஜுன் நுபுவத்துடன் இணைந்து,இந்த வானத்தின்
அமைப்பாகிய அல்வஸிய்யத்தில் இணைந்து ஒருபுறம் இறையச்சம்,தூய்மை,ஆன்மாவை பரிசுத்தப் படுத்துதல் மூலம் இறைநெருக்கத்தில்
முன்னேறுகின்றனர்.மறுபுறம் தனது செல்வங்களை இஸ்லாத்தை பரப்புவதிலும்,மக்களுக்கு கலப்பற்ற தொண்டுசெய்வதிலும் செலவு செய்கின்றனர்.அல்லாஹ்வின்
நற்செய்திக்கேற்ப மாபெரும் நற்கூலிக்கு உரியவராகிக் கொண்டிருக்கின்றனர்.இது
அஹ்மதிய்யா ஜமாஅத்தின் தனிச்சிறப்பாகும், அது தொடர்ந்து
தியாகங்கள் செய்வதற்கான வாய்ப்பினை பெற்றுவருகின்றது.பொதுவாக ஒவ்வொரு சமுதாயமும்,ஒவ்வோர் அமைப்பும் தனது
நோக்கங்களுக்காக தியாகங்கள் செய்யத்தான் செய்கின்றன,ஆனால்
அவை அனைத்தும் தற்காலிக உணர்வின் அடிப்படையில் தான் இருக்கின்றன,ஆனால் வஸிய்யத் அமைப்பின் மூலம் ஜமாஅத் சகோதரர்களுக்கு கிடைக்கக்கூடிய
மகத்துவமிக்க பொருள் தியாகத்திற்கான நல்வாய்ப்பு, தற்காலிக
உணர்வின் விளைவு அல்ல.மாறாக தொடர்ந்து மரணம் வரை தியாகங்கள் செய்து கொண்டே
செல்கின்றனர்.மரணத்திற்குப் பிறகு அவர்களின் சொத்துகளில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட
பங்கு இஷாஅத்தே இஸ்லாத்திற்காக கொடுக்கப்படுகிறது. இது அஹ்மதிய்யா ஜமாஅத்தின் தனிச்சிறப்பு ஆகும்,இதில் எந்த சமுதாயத்தின் நிர்பந்தமும் இல்லை,மாறாக
அஹ்மதிகள் அல்லாஹ்வின் அன்பில் நனைந்தவாறு தனது சுயவிருப்பத்துடன் இந்த அமைப்பில்
இணைந்து கொண்டே செல்கின்றனர். இந்த அமைப்பில் இருந்து எவராவது தடுக்கப்பட்டால்
அவர் எப்படிப்பட்ட நிம்மதியின்மைக்கும், துடிப்புக்கும்,துயரத்துக்கும் ஆளாகிவிடுகின்றார்.மேலும் தனது வஸிய்யத்தை
புதுப்பிக்க இரவு பகலாக எந்தளவு துஆக்களின் பக்கமும்,
இறைவன் பக்கம் திரும்புவதிலும் மூழ்குகின்றார்.இதிலிருந்து இந்த அமைப்பு முழுக்க சுய
விருப்பத்தின் அடிப்படையில் இருக்கிறது,மேலும் ஈமானின்
வெப்பத்தினால் நிரம்பிய உள்ளங்களில் இருந்து வெளிவரும் உண்மையான விருப்பத்தின்
நிறைவேற்றமாகும் என்பதனை அனுமானிப்பது கடினம் ஒன்றுமல்ல.
வஸிய்யத்
அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதனது மகத்துவத்தை இந்த விஷயத்திலிருந்து
கணிக்கலாம், அதாவது அல்லாஹ் தஆலா ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)அவர்களுக்கு
மட்டும் இதனது மாபெரும் பலன்களை பற்றி தெரிவிக்கவில்லை,
மாறாக அன்னாரது கலீஃபாக்களுக்கும் இதனது மாபெரும் பலன்களை பற்றி தெரிவித்திருக்கின்றான்.
சய்யிதுனா ஹஸ்ரத்
முஸ்லிஹ் மவ்வூது (ரலி)அவர்கள் கூறுகின்றார்கள்:-
இது நமக்கான
மிகவும் முக்கியமான விஷயமாகும். இதன்மூலமாக சொர்க்கம் நமது அருகில் கொண்டுவரப்
பட்டிருக்கின்றது.ஆக உள்ளத்தில் ஈமானும் ,பரிசுத்தமும் கொண்டு வஸிய்யத் பற்றி
கவனக்குறைவாக இருக்கக் கூடியவர்களுக்கு நான் கவனமூட்டுகின்றேன்.அவர்கள் வஸிய்யத்தின் பக்கம் வேகமாக வரவேண்டும்.அதே கவனக்குறைவின் காரணமாக சில, பெரிய நல்லவர்கள் மரணித்து போய்விடுகின்றார்கள்,அவர்களுக்கு
இன்று, நாளையென்று கூறி மரணமும் வந்துவிடுகின்றது.பிறகு இவரும்
நல்லடியார்களுடன் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாமே என உள்ளம் வேதனை அடைகின்றது.ஆனால்
அவ்வாறு அடக்கம் செய்ய முடியாது.அனைவருடைய உள்ளமும் அவரது மரணத்தின் போது ,இவர் நல்லமனிதர் ஆவார்,ஏனைய நல்லவர்களுடன் சேர்த்து
அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் எனக்கருதுகின்றது ,ஆனால்
அவரது சிறிய கவனக்குறைவு மற்றும் சோம்பேறிதனத்தனம் அதற்கு தடையாக
அமைந்துவிடுகின்றது.நமது ஜமாஅத்தில் பலர் இவ்வாறு உள்ளனர். அவர்கள் 1/10பங்கை விட
அதிகமாக சந்தா கொடுக்கின்றனர், ஆனால் வஸிய்யத்தில்
இணைவதில்லை.இப்படிப்பட்ட சகோதரர்களும் வஸிய்யத் செய்ய வேண்டும்.இப்படிப்பட்ட
நண்பர்களுக்கு எவ்வித கஷ்டமும் கிடையாது.பிறகு பலர் இவ்வாறு உள்ளனர், அவர்கள் ஒரு ரூபாயைக்கு ஐந்து அல்லது ஆறு பைசாவை மட்டும்
கொடுக்கின்றனர்.மேலும் வெறும் நான்கு அல்லது ஐந்து பைசா அவர்களை
வஸிய்யத்திலிருந்து தடுத்துக் கொண்டிருக்கும்.ஆக சிறிய பைசாவின் வித்தியாசத்தினால்
நமது ஜமாஅத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வஸிய்யத்திலிருந்து விளக்கியுள்ளனர்.
மேலும் சொர்க்கத்திற்கு அருகில் சென்றும் அதில் நுழைய
முடிவதில்லை..........வஸிய்யத்திற்கு நிகராக சந்தா கொடுக்கக் கூடிய
நண்பர்கள்.இப்படிப் பட்ட மனிதர்கள் பலர் உள்ளனர், அவர்கள்
கணக்கிட்டு வஸிய்யத் செய்ய வேண்டும்.சிலர் சிந்தித்துப் பார்த்தால், வெறும் ஒரு பைசா அதிகமாக சந்தா கொடுப்பதனால் அவர்களுக்கு
சொர்க்கத்திற்கான வாக்குறுதி கிடைத்துவிடும்.ஆக எந்தளவு முடியுமே, நண்பர்கள் வஸிய்யத் செய்ய வேண்டும்.வஸிய்யத் செய்வதன் மூலம் ஈமானில்
நிச்சயமாக முன்னேற்றம் ஏற்படும் என நான் நம்புகின்றேன்.இந்த பூமியில்
இறையச்சமுடைவர்தான் அடங்கப்படுவார் என அல்லாஹ்வுடைய வாக்குறுதி இருக்கிறது,அவ்வாறு இருக்கும் போது எவர் வஸிய்யத் செய்வாரோ அவரை இறையச்சமுடையவராக
ஆக்கியும் விடுவான்.
(அல்ஃபஸ்ல், செப்டம்பர்1,1932)
ஹஸ்ரத் மூன்றாவது
கலீஃபத்துல் மஸீஹ் (ரஹிமஹுல்லாஹு த ஆலா )அவர்களுக்கு அல்லாஹ் கஷ்ஃப் காட்சியை
வெளிப்படுத்தினான் ,அதாவது தற்போது வஸிய்யத் செய்தவர்கள்
மூலமாகவே அல்லாஹ், சேவைகளை வாங்கவேண்டியுள்ளது
எனக்கூறினார்கள். ஹஸ்ரத் மூன்றாவது
கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்)அவர்கள் கூறுகின்றார்கள்:-ஒரு நாள் எனது கண் திறந்தபோது
நான் அதிகமாக துஆக்கள் செய்து கொண்டிருந்தேன்,அப்போது நான் விழித்திருந்த
நிலையில் பார்த்தேன்,அதாவது மின்னல் வெட்டி ,பூமியை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை பிரகாசிக்க செய்யுமோ, அதேபோன்று ஒரு ஒளி வெளிப்பட்டது,அது பூமியை ஒரு
பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை மூடிக்கொண்டது,பிறகு அந்த ஒளியின்
ஒரு பகுதி ஒன்றுசேர்ந்து கொண்டிருந்தது,பிறகு அது வார்தைகளாக
மாறியது,பின்னர் ஒரு சப்தமான குரல் காற்றில் ஒலித்தது,அது அந்த ஒளியினால் உருவானதாகும்,அந்த வார்த்தை
இதுவாகும்,புஷ்ரா லக்கும்
அதாவது உமக்கு நற்செய்தியாகும்.
இது ஒரு பெரிய
நற்செய்தியாகும்,இதனை வெளிப்படுத்துவது அவசியமற்றதுதான், ஆனால்
எனது உள்ளத்தில் ஓர் ஏக்கம் இருந்தது,ஒரு விருப்பம் இருந்தது,அதாவது நான் எந்த ஒளியை பூமியை மூடுவதாக பார்த்தேனோ,
அது ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம்வரை ஒளிமயமாக்கியது.அதன் விளக்கத்தையும்
அல்லாஹ் தன்புறத்திலிருந்து எனக்கு புரிய வைத்து விட்டான்.இந்த வகையில் நமது அந்த
இறைவன் மிகவும் அருளுக்குரியவனும்,கருணைகாட்டக் கூடியவனும்
ஆவான்.அவன் தானே, எனக்கு இதன் விளக்கத்தை
புரியவைத்தான்.அதாவது கடந்த திங்கட்கிழமை, நான் லுஹர் தொழுகை
தொழுதுகொண்டிருந்தேன், மூன்றாவது ரக்அத்தில் நின்றுகொண்டிருந்தேன்,அப்போது எனக்கு ஏதோவொரு மறைவான ஆற்றல் என்னை தனது ஆதிக்கத்தில்
எடுத்துக்கொண்டது,அப்போது எனக்கு, நான்
அன்றைய தினம் பார்த்த ஒளி,திருக்குர்ஆனின் ஒளியாகும் என
விளங்கியது.அது தஃலீமுல் குர்ஆன் மற்றும் வக்ஃபே ஆர்ஸி திட்டத்தின் கீழ் உலகில்
பரப்பப்படுகின்றது.பிறகு நான் அதாவது
திருக்குர்ஆன் கற்பிப்பது தொடர்பாக துவங்கப்பட்ட வக்ஃபே ஆர்ஸீ
திட்டதிற்கும் வஸிய்யத் அமைப்பிற்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது என்பதனை உணர்ந்தேன்.
(குத்பா ஜுமுஆ பிப்ரவரி 5,1966)
சகோதரர்களே !
சய்யிதுனா ஹஸ்ரத்
ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹு அவர்கள் உலகளாவிய ஜமாஅத்திற்கு இந்த
புனித வானின் திட்டத்தின் பலன்கள் மற்றும் முக்கியத்துவத்தின் பக்கம்
கவனமூட்டியவாறு, தனது விருப்பத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள்.மேலும்
ஜமாஅத்தார்கள் இந்த அமைப்பில் இணைவதற்கு வலியுறுத்தினார்கள்.அன்னார் கூறினார்கள் “
எனது விருப்பம்
இதுவாகும்,அதாவது 2008 ஆம் ஆண்டில் கிலாஃபத் நிலைபெற்று நூறு வருடங்கள்
ஆகிவிடும்.இன்ஷா அல்லாஹ்.அப்போது உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு
ஜமாஅத்திலும் சம்பாதிக்கக்கூடியவர்கள் ,சந்தா கொடுக்கக் கூடியவர்களில்
குறைந்தது ஐம்பது சதவிகிதம் பேர் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்களின் இந்த மாபெரும் அமைப்பில் இணைந்திருக்கவேண்டும். அஹ்மதி இளைஞர்களும்,பெண்களும் இதற்காக முழுமையாக முயற்சி செய்வீர்கள் என நம்பிக்கையிருக்கிறது.இதனுடன்
பெண்களுக்கு குறிப்பாக கூறுகின்றேன், அதாவது தன்னுடன் தனது
கணவர்மார்களையும், பிள்ளைகளையும் இந்த மாபெரும்
புரட்சிகரமானஅமைப்பில் இணைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.இக்காலத்தில் உலகின் நிம்மதிக்கு காரணமாக இருக்கக்கூடிய, ஆன்மாக்களின் நிம்மதிக்கு காரணமாக இருக்கக்கூடிய,மனிதயினதிற்கு
தொண்டாற்றுவதற்கான வாதம் உண்மையாக புரியக்கூடிய, ஒரு
புரட்சிகரமான அமைப்பு இருக்கிறதென்றால்,அது ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்களால் வழங்கப்பட்ட வஸிய்யத் அமைப்பு மட்டுமே ஆகும். ஹஸ்ரத்
மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் இந்த அமைப்பிற்கு கண்ணியம் அளிக்காதவர்களை அதிகமாக
எச்சரிக்கை செய்தும் ,அதிகமாக அச்சமூட்டியும் உள்ளார்கள்.
(ஹஸ்ரத் ஐந்தாவது
கலீஃபத்துல் மஸீஹ் அய்யாதஹுல்லாஹு தஆலா அவர்களின்
சொற்பொழிவு ,ஜலஸா ஸாலான இங்கிலாந்து 2004)
சய்யிதுனா ஹஸ்ரத் ஐந்தாவது
கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹு தஆலா
அவர்கள் தனது காதியான் சுற்றுப்பயணத்தின் போது ஜலஸா ஸாலான 2005 ல்
வஸிய்யத்தின் முக்கியத்துவம் மற்றும் அருள்கள் தொடர்பாக சொற்பொழிவை
நிகழ்த்தினார்கள்,அதன் இறுதியில் ஹுஸூர் அவர்கள் கூறினார்கள்.
முஹம்மதிய்ய
மஸீஹீன் பசுமையான கிளைகளே !
மகிழ்ச்சியடையுங்கள்.
அல்லாஹ் உங்களது ஒளிமயமான,பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம்
அளித்திருக்கிறான்.ஆக இறையச்சத்தில் நிலைநின்றவாறு,
அதிலிருந்து பலன் பெற்றுக்கொண்டே செல்லுங்கள். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)
அவர்களின் மரத்தின் பசுமையான,கனிதரும் கிளைகளாகவும் ஆகிக்
கொண்டே செல்லுங்கள்.இன்று ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களது கொடியை, ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் குரலுக்கு லெப்பைக் எனக்கூறியவாறு நீங்கள்தான்
பறக்கவிடவேண்டும்,இன்று அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உலகில் நிலைபெறச்
செய்வதற்கு தியாகங்களின் உயர்தரத்தை நீங்கள் தான் நிலைநாட்ட வேண்டும்.நமது முன்னோர்கள்
இறையச்சத்தின் வேரை தனது உள்ளத்தில் வலுப்படுத்தி,
அனைத்தையும் அடைந்தார்கள்.இன்ஷா அல்லாஹ் நாமும் அவ்வாறு செய்யவேண்டும்.இதன் மூலம்
வரக்கூடிய சந்ததிகள் அல்லாஹ்வின் அருள்களிலிருந்து பங்கு பெற்றுக் கொண்டே
செல்லவேண்டும்.அல்லாஹ் தஆலா அனைவருக்கும் இதற்கான
நல்வாய்ப்பினை வழங்குவானாக.
( ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹு
தஆலா அவர்களின், 2005 ஆம் ஆண்டு ஜலஸா ஸாலானா காதியானின்
இறுதி சொற்பொழிவு).
ஆக,
அல்லாஹ் நமக்கு வானின் அல்லாஹ்வின் கயிராகிய கிலாஃபத்தினை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு ,எல்லாவிதமான தியாகங்களையும் செய்வதற்கான
நல்வாய்ப்புகளை கிடைக்கச்
செய்வானாக .மேலும் வஸிய்யத் அமைப்பு, நம்மிடம்
எதிர்பார்க்கின்ற அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றக் கூடியவர்களாக ஆக்குவானாக,இதன்மூலம் இஸ்லாம் மற்றும் அஹ்மதிய்யத்தின் உலகளாவிய வெற்றியை நாம் நமது
கண்களால் பார்க்க வேண்டும்.அல்லாஹ் அவ்வாறே செய்வானாக.ஆமீன்.
(உருது மொழியில்
சொற்பொழிவு ஆற்றியவர் மதிப்பிற்குரிய வசீம் அஹ்மது சித்தீக் சாஹிப் | தமிழ்
மொழியாக்கம் மௌலவி N. ஜியாவுல் ஹக்)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None