
(அல் பக்கரா :187)
(பொருள்: (தூதரே!) என் அடியார்கள் உம்மிடம் என்னைப் பற்றிக் கேட்டால், நான்
அருகில் இருக்கின்றேன்; பிரார்த்தனை செய்கிறவர் என்னை அழைக்கின்றபோது, நான் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, அவர்களும் என் கட்டளையினை ஏற்றுக் கொண்டு என்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்று பதில் அளிப்பீராக))
வல்லமையின் மூலம் தன்னை குறித்த உண்மை ஆதாரத்தை (இறைவன்)
வழங்குகின்றான் ,அந்த அடையாளம் அற்றவனின் முக வெளிப்பாடு
இதுவே ஆகும் .
எந்த விஷயத்தை நான் கண்டிப்பாக
செய்வேன் எனக் கூறுகிறானோ அது ஒருபோதும் தடைபட்டுப் போவதில்லை; இதுவே இறைதன்மை ஆகும்.
கண்ணியத்திற்குரிய தலைவர் மற்றும் சகோதரர்களே
! எனது சொற்பொழிவிற்கான தலைப்பு இறை இருப்பு துஆ ஏற்றுக் கொள்ளப்படுதலின் ஒளியில் எனபதாகும்.
திருக்குர்ஆன் இவ்வுலகின் மீது மாபெரும்
கருணை புரிந்திருக்கிறது. அது உயிருள்ள இணையில்லா இறைவனின் முகத்தை உலகத்திற்கு
காண்பித்து இருக்கிறது .அவன் தனது இருப்பில் முழுமையானவன் மட்டுமல்ல (அவன்) புகழுக்குரியவன் மாறாக
ஒட்டுமொத்த பண்புகளால் முழுமைபெற்றவன் ஆவான் .அந்த இறைவன் தனது முகத்தின் அனைத்து
விதமான அழகையையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்த நபிமார்களின் தலைவர் காத்தமுன் நபிய்யீன்
(ஸல்)அவர்களை அனுப்பினான் ,அன்னார் இறைவனின் அனைத்து வித ஒளியையும்
அழகையையும் தனக்குள் பிரதிபலிக்க செய்து முழு உலகிலும் பரவசெய்தார்கள் மேலும்
பெருமானார் (ஸல்)அவர்களுவுடைய ஸஹாபாக்கள் பெருமானார் அவர்கள் அல்லாஹ் தாலாவின்
பண்பின் நிழற்படம் (போட்டோ ) ஆவார்கள் என்பதனை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்கள் .
சகோதரர்களே !
அஹ்மதிகளாகிய நம் மீது அல்லாஹ் மாபெரும் கருணை புரிந்துள்ளான். அவன் நமக்கு பெருமானார்
(ஸல்)வுடைய முன்னறிவிப்பிற்கேற்ப இமாம் மஹ்தி மஸீஹ் மவூது அலைஹிஸ்ஸலாமை ஏற்க்கும்
நல்வாய்ப்பை வழங்கியிருக்கிறான் ,அவர்கள் முன்னறிவிப்பின்படி பெருமானார் (ஸல்
)வுடைய முழு நிழலாக திகழ்ந்தார்கள் மேலும் அவர்கள் இறைபண்புகளை தனது தலைவர்
முஹம்மது அரபி (ஸல்)அவர்களை முழுமையாக
பின்பற்றுதலின் மூலம் தனக்குள் முழுமையாக உட்படுத்த மட்டும் செய்ய வில்லை மாறாக
உலகத்திற்கு அதன் பிரகாசமான விளைவுகளையும் காண்பித்தார்கள் .
துஆ ஏற்றுக்கொள்ளபடுதல் இறையிருப்பிற்கு
சான்றாக இருக்கும் விஷயத்தில் மற்றவர்களின் நிலை ஒருபுறம் இருக்க தன்னை முஸ்லிம்கள் என்று கூறக்கக்கூடிய ஆலிம்கள்
புதிய கல்வி வளர்ச்சியின் வெளிப்படை பொலிவின்
தாக்கத்திற்கு அஞ்சி துஆ ஏற்றுக்கொள்ளப்படுதல் மூலம் அல்லாஹ் எற்படுத்தும்
மாபெரும் விளைவுகளை மறுத்து விட்டனர்.
ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை)
அவர்கள் உலகின் மீது செய்த மாபெரும் கருணை என்னவென்றால் அன்னார் இறையிருப்பிற்கான உயிருள்ள
சான்றாகவுள்ள துஆ ஏற்றுக்கொள்ளபடுதலின் தத்துவத்தை உலகிற்கு
எடுத்துரைத்துள்ளார்கள் ,இந்த வகையில் அலிகார் முஸ்ஸிம்
பல்கலைகலகத்தின் தோற்றுனர் சய்யிது அஹ்மத்
அவர்கள் ஐரோப்பாவின் நாத்திகத்தன்மை கொண்ட தத்துவவாதிகளுக்கு அஞ்சி துஆ
ஏற்றுக்கொள்ளப்படுதலின் உண்மையான பொருள் மற்றும் கருத்தை மறுப்பவராகி விட்டார்
அவரை நோக்கி கூறியவாறு அன்னார் துஆக்களின் தத்துவத்தை கூறுகிறார்கள் .
துஆவின் உண்மைத்துவம் இதுவாகும். (அதாவது)
இது ஒரு நல்லாடியார்க்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள ஓர் ஈர்ப்பு ஆகும. அதாவது
முதலில் அல்லாஹ்வின் ரஹ்மானிய்யத் அடியானை தன்பக்கம் ஈர்க்கட்டும். பிறகு
அடியானின் உண்மைத்தன்மையின் ஈர்ப்பால் இறைவன் அவனது அருகில் வந்துவிடுகின்றான்.
மேலும் துஆவின் நிலையில் அந்த தொடர்பு ஒரு சிறப்பான அந்தஸ்தை அடைந்து தனது சிறப்பான
அதிசயங்களை ஏற்படுத்துகின்றது , ஆக அந்த அடியான் கஷ்டத்தில் ஆட்படும்
போதெல்லாம் இறைவன்பால் முழு நம்பிக்கை முழு எதிர்பார்ப்பு முழுமையான அன்பு
முழுமையான விசுவாசம் மற்றும் முழுமயான தைரியதுடன் குனிகின்றான். மேலும் முற்றிலும் விழித்தவாறு கவனமின்மையின்
திரைகளை அகற்றியவாறு நன்றியுணர்வின் மைதானங்களை கடந்தவாறு முன்னேறிக்கொண்டே
செல்கின்றான், பின்னர் அவன் அங்கு என்ன காண்கின்றான் அது
இறைசன்னதியாக இருக்கின்றது அவனுக்கு யாரும் (இணை) இல்லை அப்போது அவனது ஆன்மா
அதன்மீது தனது தலையை வைத்து விடுகின்றது அவனுள் வைக்கபட்டுள்ள ஈர்ப்பின் ஆற்றல்
இறைவனது கருணையை தன்புறம் ஈர்க்கிறது அப்போது அல்லாஹ்தாலா அவனது வேலையை நிறைவேற்றுவதன்
பக்கம் கவனம் செலுத்துகின்றான் அந்த துஆவின் தாக்கத்தை அனைத்து ஆரம்ப காரணிகளின்
மீது இடுகின்றான் அது அவனது தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான காரணிகளை உருவாக்குகிறது. (பரகாத்துத் துஆ)
பிறகு
பெருமானார் (ஸல்) அவர்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மகத்துவத்தை
எடுத்துரைத்தவாறு கூறுகின்றார்கள் :.
அந்த அராபிய பாலைவன நாட்டில் ஓர்
அற்புதம் நிகழ்ந்தது இலட்சக்கணக்கில் இறந்தவர்கள் சில நாட்களிலேயே உயிர் பெற்றனர்,
தலைமுறை தலைமுறையாக சீர்கெட்டு
போயிருந்தவர்கள் இறைபண்புகளை பெறலானார்கள் , பார்வையிழந்தோர்
கண் பார்வை பெற்றனர்,ஊமைகளின் நாவுக்களிலிருந்து இறைஞானம் வெளிப்பட்டது,
எக்கண்ணும் கண்டிராத எக்காதும் கேட்டிராத அத்தகைய புரட்சி உலகில்
மலர்ந்தது அது என்னவென்று உங்களுக்கு
தெரியுமா?அது இறைவனில்
தன்னை மாய்த்துகொண்ட ஒருவரின் இருள்நிறைந்த இரவுநேரங்களில் செய்திட்ட
துஆக்களே ஆகும், அவை உலகில்
ஒரு பேரொலியை ஏற்படுத்தின மேலும் படிப்பறிவில்லாத சக்தியற்ற அம்மானிதரால் சாத்தியமற்றதாக தோன்றிய அதிசியங்களை அது
செய்துக்காட்டின. ..அல்லாஹும்ம ஸல்லி வபாரிக் அலைஹி வ ஆலிஹீ
......
மேலும் நான் எனது அனுபவத்திலும்
பார்க்கின்றேன் அதாவது துஆக்களின் தாக்கம்
நெருப்பின் தாக்கத்தை விட அதிகமாகும் மாறாக உலக காரணிகளில் துஆவை போன்று
மாபெரும் விளைவை எற்படுத்த கூடிய பொருள் வேறுஎதுவும் இல்லை.(பரகாத்துத் துஆ )
நான் எனது சொற்பொழிவின் ஆரம்பத்தில் ஓதிய
வசனத்தில் அல்லாஹ் தனது இருப்பின் அடையாளத்திற்கு
துஆ ஏற்றுக்கொள்ளப்படுதலை சான்றாக கூறுகிறான் ,மேலும்
திருக்குர்ஆனும் கூட நபிமார்களின் துஆக்கள் ஏற்றுக்கொள்ளபட்டதற்கான அடையாளங்களால்
நிரம்பி காணப்படுகிறது ,மேலும் இந்த தொடர் ஹஸ்ரத் ஆதம் (அலை)
துவங்கி ஹஸ்ரத் ரஸூலுல்லாஹி ஸல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சூழ்ந்துள்ளது.
அல்லாஹ் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்களிடம் இன்னி ஜாயிலுக்க லின்னாஸி இமாமா
நான் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகிறேன் எனக்கூறிய போது அன்னார் வமின் துர்ரியய்த்தி
எனது சந்ததிகளிலிருந்தும் தோற்றுவிப்பாயாக என வேண்டினார்கள் அதற்கு அல்லாஹ் லா
யானாலு அஹ்திள் ளாலிமீன் (ஆம்
)எனினும் எனது வாக்குறுதி அநீதியிழைபவர்களை சாராது எனக்கூறினான் (அல்பாக்கரா 124)
அல்லாஹ் அன்னாரது துஆவை எந்தளவு மகத்துவத்துடன் நிறைவேற்றினான் என்றால் அன்னாரது
சந்ததியில் தொடர்ச்சியாக நபிமார்களின் ஒருதொடர் நிலைபெற்று இருந்தது கடைசியாக
அன்னாரது துஆக்களின் கனியாக சய்யிதுனா காத்தமுல் அன்பியாவை ரப்பனா வப்அஸ்
ஃபீஹிம் ரசூலம் மின்ஹூம் யாத்லு அலைஹிம் ஆயாத்திக வயுஅல்லிமூஹுமுல் கித்தாப வல்
ஹிக்மத்த வயுஸக்கீஹிம் இன்னக்க அன்தல் அஸீஸுல் ஹக்கீம் என்பதற்கு
உகந்தவராக ஆக்கி அனுப்பினான் , அன்னார் தனது உம்மத்திற்கு தரூதுஷரீஃப்
என்ற ஓர் அன்பளிப்பை வழங்கினார்கள் அந்த தருதில் வுள்ள துஆவின் அருளினால் அல்லாஹ்
இக்காலத்தில் அன்னாரது உண்மைபேரண்பர் சய்யிதுனா ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) மற்றும்
அன்னாரது கலீஃபாக்களின் தொடரையும் தொடரச்செய்துள்ளான் இது கியாமத் வரை
நிலைபெறக்கூடிய தொடர் ஆகும் ,இதன் மூலம் உலகில் முஹம்மது
(ஸல்)அவர்களுடைய தப்லீக் மற்றும் வெளியீடுகளின் (பிரச்சார )பணி கடுமையான எதிர்ப்பு
இருந்தும் நாலாபுரமும் பரவிக்கொண்டு இருக்கிறது. அல்லாஹ் தனது நபிமார்களுக்கு மற்றும் வலிமார்களுக்கு அவர்களது
துஆக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறப்பை
வழங்கி எப்போதும் பகைவர்களின் தீங்கிலிருந்து வெற்றியை வழங்குகிறான்,பகைவர்கள் எப்போதும் தோல்வியே அடைகின்றனர் .
ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) துஆ
ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பாக கூறுகிறார்கள் :
நினைவில் கொள்ளுங்கள் இறையடியார்களின்
ஒப்புக்கொள்ளப்படுதலினை கண்டறிவதற்கு துஆ ஒப்புக்கொள்ளப்படுவதும் ஒரு பெரிய ஆதாரமாகும்
மாறாக துஆ ஏற்றுகொள்ளப்படுவதனை போன்று வேறெந்த அடையாளமும் இல்லை ,ஏனென்றால்
துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதன் மூலம் அடியானுக்கு இறைவனிடத்தில் ஒரு கண்ணியமும்
மரியாதையும் இருப்பது தெரிய வருகிறது, இருந்தபோதிலும் எல்லா
இடங்களிலும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது கட்டாயம் இல்லை சில நேரத்தில் இறைவன்
தனது விருப்பப்படியும் செயல்படுகின்றான்.ஆனால் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர்களின்
கண்ணியத்திற்கு இதுவும் ஓர் அடையாளமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ,மற்றவர்களை விட அவர்களது துஆக்கள் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.துஆ
ஏற்றுக்கொள்ளப்படும் விஷயத்தில் அவர்களுடன் யாரும் போட்டியிடமுடியாது .
(ஹக்கீகத்துல்வஹீ
ரூஹானி கஸாயீன் பாகம் 22 பக்கம் 334 )
சகோதரர்களே !
நான் தற்போது துஆ
ஏற்றுக்கொள்ளப்படுதல் தொடர்பாக ஈமானை வலுப்படுத்த கூடிய சம்பவங்களை
எடுத்துரைக்கின்றேன் ,இதிலிருந்து அல்லாஹ் ஹைய்யுல் கைய்யும் ஆக
இருக்கின்றான் என்பது தெரியவரும்.
சகோதரர்களே ! பொதுவாக
அல்லாஹ் தனது நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களுடைய துஆக்களை அதிகமாக
ஏற்றுக்கொள்கிறான் இதில் அனைவரையும் விட சிறப்பு நமது தலைவர் சையதுனா முஹம்மது
ரசூலுல்லாஹ் அவர்களையே சாரும், தற்போது தேர்தெடுக்கப்பட்ட ஒரு
சில சம்பவங்களை எடுத்துரைக்கின்றேன் .
பத்ர் போரின் சமயத்தில் முஸ்லிம்களின்
எண்ணிக்கை வெறும் 313 ஆக இருந்தது அவர்கள் ஆயுதம் இல்லாமல் இருந்தார்கள்,ஆனால்
காஃபிர்களுடைய படையின் எண்ணிக்கை ஆயுதங்களை தயாராக வைத்திருந்த ஓராயிரமாக இருந்தது
வெளிப்படையில்முஸ்லிம்களின் இந்த
எண்ணிக்கை முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதிசெய்யமுடியாததாக இருந்தது
.நமது தலைவர் ஹஸ்ரத் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒரு கூடாரத்தில் நுழைந்து தனது
இறைவனிடத்தில் சஜ்தாவில் விழுந்து இறைவா! இன்று கையளவு இருக்கின்ற இந்த கூட்டம்
அழிந்து போய்விட்டால் பிறகு உனது பெயரை கூறக்கூடியவர் யாரும் இந்த பூமியில் இருக்க
மாட்டார் என மன்றாடிவாறு வேண்டினார்கள் ,இறைவனது தன்மானம்
உணர்வு பொங்கியது பெருமானார்(ஸல்)அவர்களுடைய துஆக்களை ஏற்றுக்கொண்டு முஸ்லீம்களுக்கு
வெற்றியை வழங்கினான்.
இதனைப்போன்று மக்காவில் முஸ்லிம்களுக்கு
கடுமையான எதிர்ப்பு இருந்தது ,இரண்டு உமர்களும் கடுமையாக எதித்து வந்தனர்
அப்போது அன்னார் அல்லாஹ்விடம் அந்த இரண்டு உமரில் ஒருவரை எனக்கு தருவாயாக என துஆ
செய்தார்கள் ,அல்லாஹ் அன்னாரது துஆவை ஏற்றுகொண்டு ஹஸ்ரத்
உமர் பின் கத்தாபை அன்னாருக்கு வழங்கினான்,ஹஸ்ரத் உமர்
முஸ்லீமாக மாறியது மக்கா எதிரிகளின் மத்தியில் ஓர் ஆழ்ந்த துக்கத்தை எற்படுத்தியது,அன்றைய நாளே எதிர்ப்பில் குறைவு ஏற்பட்டது, மேலும்
ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களுடைய சஹாபாக்கள் மறைவாக தப்லீக் செய்ததனை விட்டுவிட்டு
வெளிப்படையாக தப்லீக் செய்ய தொடங்கினர்
.
நபி (ஸல்) அவர்கள் அரபு நாட்டின்
அரசர்களுக்கு தப்லீக் கடிதங்களை எழுதினார்கள். தற்போது நேரத்திற்கேற்ப அவையில் துஆ
ஏற்று கொள்ளப்படுதலுடன் ஆழமான தொடர்பை கொண்டுள்ள கடிதத்தை பற்றி எடுத்து கூறுவது
ஈமானை அதிகப்படுத்துவதற்கு காரணமாக அமையும்.நபி (ஸல்) சார்பாக ஹஸ்ரத் அப்துல்லாஹ்
பின் குதைஃபா அவர்கள் கடித்ததை எடுத்துக் கொண்டு கிஸ்ரா அரசருடைய தர்பாருக்கு சென்றார்கள்
கிஸ்ரா தனது மொழிபெயார்ப்பாளரிடம் அதனை படிக்கும்படி கட்டளையிட்டான்
மொழிபெயற்பாளர் அதனை படித்தபோது கிஸ்ரா கோபத்துடன் அந்த கடித்ததை கிழித்தெறிந்தான்
,இந்த விஷயம் நபி அவர்களுக்கு தெரியவந்தபோது அன்னார் அவன் நமது கடிதத்துடன்
எவ்வாறு நடந்து கொண்டானோ அதனைப்போன்றே நமது இறைவனும் அவனுடன் செயல்படுவான் எனக்
கூறினார்கள் .கிஸ்ரா கடிதத்தை கிளித்தெறிந்ததோடு நிறுத்தவில்லை மாறாக ஏமன் நாட்டு
கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதி அதனை ஒரு படை வீரர் மற்றும் ஒரு சிப்பாயிடம்
கொடுத்து நபித்துவவாதம் புரியக்கூடியவரிடம் அனுப்புமாறு கட்டளையிட்டான் .அவர்கள்
அவரிடம் நமது கட்டளையை எட்டவைக்கவேண்டும் கடிதம் கிடைத்ததும் அவர்களுடன் சேர்ந்து
அவர் அரசருடைய அவையில் ஆஜராகிவிடவேண்டும் என்றான் .இந்தவகையில்அந்த
செய்தியை கொண்டுசென்றவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் நீங்கள் கிஸ்ராவுடைய கட்டளையை மறுத்தீர்கள்
என்றால் அவன் உங்களையும் உங்களது நாட்டையும் அழித்துவிடுவான் ஆகையால் நீங்கள்
எங்களுடன் வாருங்கள் எனக்கூறினர்.நபிகள் நாயகம்(ஸல் )அவர்கள் அவர்களிடம் அப்படியா! நீங்கள் என்னை நாளை சந்தியுங்கள்
என்றார்கள் ,அன்னார் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள் அந்த
வல்லமை கொண்ட இறைவன் அன்னாரிடம் கிஸ்ரா இழிவுபடுத்தியதற்கான தண்டனையாக நாம் அவன்
மீது அவனது மகனை ஆதிக்கம் செய்ய வைத்துவிட்டோம் எனக்கூறினான் .ஆக அவ்வாறே
நடைபெற்றது இந்த சம்பவம் ரசுலுல்லாஹ் (ஸல்) வுடைய உண்மைதுவத்திற்கு
சான்றுபகரக்கூடிய அதே வேளையில் அல்லாஹ் தனது அடியார்களின் துஆக்களையும்
கேட்கின்றான் என்பதற்கும் சான்றாக உள்ளது .
சகோதரர்களே !
நேரத்தினை கருத்தில் கொண்டவாறு தற்பொழுது நான் நபிகள் நாயகம்(ஸல்)வுடைய
உண்மைபேரன்பர் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு
சம்பவங்களை கூறுகின்றேன் .
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்கள் ஒருமுறை நவாப் முஹம்மது கான் சாஹிபுடைய மகன் அப்துர் ரஹீம்கான் கடுமையாக
நோயுற்றபோது அன்னார் துஆ செய்தார்கள் ,அப்போது நீங்காத விதியாகும் மரணம் நிகழும் என இல்ஹாம்
இறங்கியது அப்போது அன்னார் நவாப் சாஹிப் அவர்கள் அனைத்தையும்
துறந்து காதியான் வந்துகொண்டிருக்கிறார்கள் அவரது மகன் மரணித்துவிட்டால் அவருக்கு
சோதனையாக ஆகிவிடக்கூடாது எனக்கருதினார்கள்
ஆகையால் அன்னார் இறைவனிடத்தில் இறைவா! இந்த பையனுடைய உடல் நலத்திற்காக பரிந்துரை
செய்கிறேன் எனக்கூறினார்கள்.அப்போது அன்னாருக்கு மிகவும் கடுமையுடன் மன்தல்லதீ
யஷ்ஃபவு இன்தஹூ இல்லா பி இத்னிஹி என்னுடைய அனுமதியின்றி பரிந்துரை செய்ய நீர் யார் என இல்ஹாம் இறங்கியது. ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர் ஆவார்கள் 1300
ஆண்டுகளாக உலகம் அன்னாரை எதிர்பார்த்து இருந்தது ,ஆனால்
அவர்கள் பரிந்துரை செய்யும்போது என்னுடைய அனுமதியின்றி சிபாரிசு செய்ய நீர்
யார் என அல்லாஹ் கூறுகின்றான். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள்
கூறுகின்றார்கள் இந்த இல்ஹாம் இறங்கியபோது நான் விழுந்துவிட்டேன் உடலில் நடுக்கம்
ஏற்பட ஆரம்பித்தது எனது உயிரே பிரிந்து விடும் போல இருந்தது ,இந்த நிலை ஏற்பட்ட போது அல்லாஹ் இன்னக்க அன்தல் மஜாஸ் தற்போது நாம்
உமக்கு சிபாரிசு செய்வதற்கான அனுமதி வழங்குகிறேன் எனக்கூறினான், இந்த வகையில் அன்னார் சிபாரிசு செய்தார்கள் பிறகு அப்துர்ரஹீம் நலம்
பெற்றார் .
இதனை போன்று மஸீஹ் மஊத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் தெற்கு ஹைதராபாதை சேர்ந்த
அப்துர்ரஹ்மான் சாஹிபுக்கு அப்துல்கரீம் என்ற பெயரை கொண்ட ஒரு பையன் இருக்கின்றான்
,அவன் நமது மதரஸாவுடைய மாணவன் ஆவான்
இறை நியதிகேற்ப அவனை வெறிநாய் கடித்துவிட்டது அவன் சிகிச்சைக்காக
மருத்துவமனை அனுப்பபட்டான் சிலதினங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது பிறகு காதியான் திரும்பி வந்தனர் ,சிலதினங்களுக்கு
பின்னர் வெறிநாய் கடித்த பிறகு ஏற்படும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன,தண்ணீரை கண்டு பயம் ஏற்பட்டது மிகவும் மோசமான நிலை ஏற்பட்டது அப்போது அந்த
ஏழை நண்பரின் நிலை குறித்து எனது
உள்ளத்தில் நிம்மதியின்மை ஏற்பட்டது மேலும் துஆ செய்ய ஒரு சிறப்பானகவனம்ஏற்பட்டது,ஒவ்வொரு வரும் அந்த ஏழை பையன் சிலமணிநேரத்திற்குள் மரணித்துவிடுவான் எனக்கருதினர்,அந்த பையன் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஒரு தனி வீட்டில்
மற்றவர்களிடமிருந்து விலக்கி எல்லாவகையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தான், மருத்துவமனைக்கு ஆங்கில மருத்துவரிடம் இந்த நிலமையில் ஏதாவது சிகிச்சை
அளிக்கமுடியுமா என தந்தி மூலம் கேட்கப்பட்டது அதற்கு தந்தி வாயிலாக NOTHING
CAN BE DONE FOR ABDUL KAREEM அதாவது இந்த
நிலையில் அப்துல் கரீமுக்கு எந்த சிகிச்சையும் செய்ய முடியாது என பதில் வந்தது,ஆனால்
அயல் ஊரிலிருந்து வந்த அந்த ஏழை பையனுக்காக எனது உள்ளத்தில் அதிக கவனம்(வேதனை )
ஏற்பட்டது எனது நண்பர்களும் அவனுக்காக துஆ செய்ய வற்புறுத்தினார்கள் ,ஏனென்றால் இந்த அயல் ஊரில் வாழும் நிலையில் அவன் கருணை காட்டப்பட
தகுதியானவனாக இருந்தான்,மேலும் உள்ளத்தில் அவன் மரணித்து
விட்டால் அவனது மரணம் மிகப்பெரியளவில் எதிரிகளின் மகிழ்ச்சிக்குக் காரணமாக
அமைந்துவிடுமே என அச்சம் ஏற்பட்டது ,அப்போது இதற்காக எனது
உள்ளம் கடுமையான வேதனைக்கும் நிம்மதியின்மையிக்கும் ஆளாகிவிட்டது ,வழகத்திற்கு மாற்றமான கவனம் ஏற்பட்டது அது எனது முயற்சியினால்
உருவாகவில்லை மாறாக அது இறைவனிடமிருந்து உருவானதாகும்,மேலும்
அப்படிபட்ட நிலை ஏற்பட்டு விட்டால் பிறகு அது இறைவனது கட்டளையினால்தாக்கத்தைஏற்படுத்துகின்றது
அதாவது மரணித்தவன் உயிர்பெறுவதாகும் ஆக
இதற்காக அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனின் நிலை ஏற்பட்டது ,மேலும் அந்த கவனம் உச்சத்தை அடைந்து அதன் வேதனை தனது முழு ஆதிக்கத்தையும் எனது உள்ளத்தின் மீது
ஏற்படுத்தியது அப்போது மரணித்தவனை போன்று ஆக்கியிருந்த அந்த நோய் இந்த கவனத்தினால்
அறிகுறிகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது மேலும் அவன் தண்ணீரை கண்டு பயந்து கொண்டிருந்தான்
வெளிச்சத்தை கண்டு ஓடிக்கொண்டு இருந்தான் ஆனால் திடீரென்று உடல் ஆரோக்கியத்தின்
பக்கம் திரும்பியது எந்த அவன் தற்போது எனக்கு தண்ணீரை கண்டு பயமில்லை என்றான் அப்போது அவனுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது அவன் அதனை
எவ்வித பயமும்யின்றி குடித்தான் எந்த அளவுக்கென்றால் தண்ணீரை கொண்டு ஒளுசெய்து
தொழுதான் மேலும் இரவு முழுவதும் உறங்கினான் ,அவனிடம் ஏற்பட்டுயிருந்த
பயங்கரமான, மிருகத்தனமான நிலை மாறிக்கொண்டே சென்றது,எந்த அளவுக்கென்றால் சில நாட்களிலேயே முழுமையாக உடல்நலம் பெற்றான் ,அப்போது எனது உள்ளத்தில் இடப்பட்டது அதாவது அவனிடம் ஏற்பட்டிருந்த
பைத்தியக்கார நிலை அவனை அழித்துவிட வேண்டும் என்பதற்காக ஏற்படவில்லை மாறாக இறைவனது அடையாளம் வெளிப்படவேண்டும் என்பதற்காக
ஏற்பட்டிருந்தது. உலகில் ஒருவனுக்கு வெறிநாய் கடித்து அவனிடம் பைத்தியத்திற்கான
அறிகுறிகள் வெளிப்பட்ட பிறகு உயிர்பிழைத்ததாக பார்த்ததில்லை என அனுபவசாலிகள்
கூறுகிறார்கள்.
ஆக நான் எனது நண்பர்களுக்கு
கூறுகிறேன். நன்றாக நினைவில் கொள்ளுங்கள், உள்ளத்தால் கேளுங்கள் ,உள்ளத்தில் இடமளியுங்கள் ,அல்லாஹ் தனது திருமறையாம்
திருக்குர்ஆனில் தனது இருப்பு மற்றும் ஏகத்துவத்தை மிகவும் வலுவான ,எளிமையான ஆதாரங்கள் மூலம் நிருபித்து இருக்கிறான்,அவன்
உயர்வானவனும், ஒளியும் ஆவான் எவர் அந்த இறைவனின் வல்லமையையும்,
அற்புதங்களையும் கண்ட பிறகும் அவனது இருப்பில் சந்தேகம் கொள்வாரோ அவர் மிகவும் பேறிழந்தவராவார்
என உண்மையாகவே நம்புங்கள். அல்லாஹ் தனது
அற்புதமான இருப்பு மற்றும் வல்லமைமிக்க இருப்பை நிரூபிப்பது தொடர்பாக கூறுகிறான் افی اللہ شک فاطرالسموات والارض ( இப்ராஹீமே !) வானங்களையும்
பூமியையும் படைத்த அல்லாஹ்வின் மீது சந்தேகம் ஏற்படுமா ?
(ஹக்கீகத்துல்
வஹீ பக்கம் 46,47 )
இப்போது நான் அஹ்மதியத்தின்
கலீஃபாக்களின் துஆக்கள் ஏற்றுகொள்ளப்பட்ட ஈமானை வலுவூட்ட கூடிய சம்பவங்களை
கூறுகிறேன்.
ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ்
அவர்கள் தனது குர்ஆன் தர்ஸில் அதிகாரம் இக்லாஸிற்கு விளக்கமளித்தவாறு
கூறுகிறார்கள்:
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை)வுடைய
அற்புதங்களில் அன்னாருடைய துஆக்கள்
ஏற்றுக்கொள்ளப்படுதலும் (ஒன்றாக) இருக்கிறது ,இதில் போட்டியிடுவதற்கு உலகிலுள்ள அனைத்து
கிறித்தவர்களுக்கும் ஆரியர்கள் போன்றோர்க்கும் அறைகூவல் விடப்பட்டது ஆனால் எவருக்கும் அன்னாருக்கு
போட்டியாக நிற்பதற்கே சக்தியில்லை.
(பின் இணைப்பு பத்ர் பத்திரிகை பக்கம் 39)
கண்ணியத்திற்குரிய காஸி சாஹிப் ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ்வுடைய துஆக்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடரில் ஒரு சம்பவத்தை கூறுகிறார்கள்:
லக்னோவை சார்ந்த ஷேக் மஹர் அலி சாஹிப்
அவர்கள் லாஹூர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார்கள் (அவர் பின்னால் டாக்டர்
முஹம்மது உமர் என்ற பெயரில் அஹ்மதிய்யா ஜமாத்தில் அழைக்கப்பட்டார் ,அவர்
ஜமாஅத்தின் நன்றியுள்ள சகோதரர் லாஹூர் ரயில்வே ஆடிட்டர் ஜனாப் பாபு
அப்துல் ஹமீது சாஹிப்பிற்கு மருமகன் ஆனார் )அவரது இயல்பில் ஒரு சுதந்திர தன்மை
இருந்தது அவர் யாருக்கு முன்பும் குனியமாட்டார் ,தொழுகை நோன்பு
கடைபிடிக்க கூடிய தஹஜ்ஜுது தொழக்கூடிய ,விருந்து உபசரிப்பு செய்யக்கூடிய ஏழை நோயாளிகளின் அனுதாபியாக விளங்கினார்,அவர் முதல் கலீஃபத்துல் மஸீஹ்வுடைய அவையில் துஆ செய்ய விண்ணப்பிக்க
ஆஜரானார் அவரது மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் அவருக்கு இணக்கம்
ஏற்படவில்லை , அவர் தன்னை ஏதாவது குறை கூறி அவர்கள் தோல்வியடைய (பெயில் )செய்துவிடுவார்கள் எனக் கருதினார்
,அவர் தொடர்ந்து இரண்டு வருடங்களாக தேர்வில் தோல்வியடைய
செய்யப்பட்டதால் அவர் வேண்டுமென்றே முதல் கலீஃபத்துல் மஸீஹ் அவர்களுடைய வுடைய
அவையில் முதல் கலீஃபாவுடைய உணர்வுகளை சீண்டும் வகையில் என்னை நோக்கி மூமீனற்ற தன்மையில்
இறைவா! நீ இல்லவே இல்லை அவ்வாறு நீ இருக்கின்றாய் யென்றால் மருத்துவ கல்லூரியின்
தேர்வாளரிடம் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா எனக் கூறினார்,ஹஸ்ரத் முதல் கலீஃபபத்துல் மஸிஹ் அவர்கள் இதனை கேட்டு தனது கண்களை
உயர்த்தியவாறு கூறினார்கள் பலா ஜி அப்படியா எனக்கூறிவிட்டு தனது பணியில்
மூழ்கிவிட்டார்கள். அதே வருடம் முஹம்மது உமர் சாஹிப் மருத்துவர் ஆனார், வெற்றிபெற்றார் ,அவர் என்னிடம் வந்தார் நான் இந்த
செய்தியை எவ்வாறு அன்னாருக்கு எடுத்துரைப்பேன்,எந்த
முகத்துடன் அன்னாரது அவைக்கு செல்வேன் என்றார் ,அதற்கு நான் கூறினேன்
வாருங்கள் போகலாம் என்றேன், நாங்கள் உட்காந்ததுமே முஹம்மது
உமர் சாஹிப் பாஸ் ஆகிவிட்டார் என்றேன் அன்னார் அவரை நோக்கி எனது வல்லமைபடைத்த
இறைவனின் வல்லமையின் வெளிப்பாட்டை பார்த்தீரா எனக்கூறினார்கள் .
(ஹயாத்தே நூருத்தீன் பக்கம் 433)
சகோதரி மஹர் ரலியல்லாஹூ அன்ஹா ஹஸ்ரத்
முஸ்லீஹ் மவ்வூது (ரலி) அவர்களின் துஆ தொடர்பான ஒரு சம்பவத்தை கூறுகிறார்கள் .....துஆ
ஏற்றுக்கொள்ளப்படுதல் தொடர்பான அதே காலத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் இந்தியா
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பிறகு
மிக கடுமையான கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது ,இஸ்லாம் எதிர்ப்பின்
சான்றிதழை எப்போது பின் விட்டு சென்றிருக்கிறது.அஹ்மதிய்யத்தின் காரணத்தினால்
மட்டுமே அன்பர் நாஸிர் அஹ்மது சாஹிப் மற்றும் மிர்ஸா ஷரீஃப் அஹ்மது சாஹிப் கைது
செய்யப்பட்டார்கள் ஹுஸூர் (ரலி )அவர்கள் இதனால் வேதனையடைந்தார்கள் அது ஒரு இயல்பான
விஷயமாகும் ,ஆனால் அன்னார் தனது மகன் மற்றும் சகோதரர் ஹஸ்ரத்
மஸீஹ் மவ்வூது (அலை)அவர்கள் மீது ஈமான் கொண்ட
காரணத்தினால் மற்றும் முஹம்மது முஸ்தஃபா (ஸல்)அவர்களுடைய மார்க்கத்தை
பின்பற்றக்கூடியவர்கள் என்பதனால் தான் இந்த குற்றத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்
என்பதில் நிம்மதியின்மையை வெளிப்படித்தினார்கள் ,மேலும்
மார்க்கத்தின் வழியில் சோதனைகள் வருவது நபியின் சுன்னத் ஆகும் .
கோடைகால நாட்களாக இருந்தது அதுவும்
ரப்வாவுடைய வெயில் ஒருபுறம், நாங்கள் வழக்கம்போல் இஷா நேரத்தில்
முற்றத்தில் இருந்தோம் மேல்மாடியிருந்தபோதிலும் சூட்டில்(வெட்கையில் ) எந்தவித
குறைவும் இல்லை ,நாங்கள் இரவு உணவை ஒன்றாக சாப்பிட்டு
கொண்டிருந்தோம் அந்த வேளையில் அன்னார் சூட்டின் கடுமை மற்றும் அதனால் ஏற்படும்
நிம்மதியின்மையையும் வெளிப்படுத்தினார்கள்,,,எனது
வாயிலிருந்து என்னையும் அறியாமல் இந்த சூட்டில் மியான் நாஸிர் சாஹிப் மற்றும்
மியான் ஷரீஃப் சாஹிப் ஆகியோருடைய நிலை எவ்வாறு இருக்குமோ எனக்கூறினேன் ,இறைவா! அவர்களுக்கு சிறையில் ஏதாவது வசதி இருக்கிறதா, இல்லையா எனத் தெரியவில்லையே என்றேன், அதற்கு பதிலாக
அன்னார்,அல்லாஹ் அவர்கள் மீது கருணைகாட்டுவானாக அவர்கள் இந்த
காரணத்தினால் மட்டுமே சிறைபிடிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் மீது வேறெந்த குற்றமும்
இல்லை ஆகையால் எனக்கு எனது இறைவன் மீது முழுமையான நம்பிக்கையும் ஈமானும் உள்ளது
அவன் அவர்கள் மீது விரைவில் அருள்புரிவான் எனக்கூறினார்கள்,அதன்
பின்னர் நான் பார்த்தபோது அன்னாரது முகம் மாறிவிட்டது அவர்கள் இஷா தொழ நின்றார்கள்
தொழுகையில் அவர்களது மன்றாடலின் நிலையை
என்னால் மறக்கவே முடியாது ,எனது கண்கள் பார்த்த
காட்சியின் நிலையை என்னால் எழுதவே முடியாது அந்த மன்றாடலில் ஒரு துடிப்பும்
நிம்மதியின்மையும் இருந்தது அதில் ஈமான் மற்றும் முழு நம்பிக்கையின் வெளிப்பாடு இருந்தது
அதில் பெருமையும் பெருமையாளருடைய நிலையும் இருந்தது ,அதே காட்சியை
நான் தஹஜ்ஜுத் நேரத்திலும் கண்டேன் அந்த நேரத்தில் ஹஸ்ரத் முஸ்லீஹ் மவ்வூது(ரலி)அவர்கள்
துஆக்களை சப்தமாக மிகவும் பணிவு மற்றும் உருக்கத்துடன் கேட்டு கொண்டு இருந்தார்கள்
,அன்னாரது துஆ இரவின் அமைதியில் எந்தளவு சப்தமாக
இருந்ததென்றால் அருகிலுள்ள குழந்தைகளின் வீடுகளுக்கு கண்டிப்பாக கேட்கும் என நான்
கருதினேன் ,மறுநாள் விடிந்ததும் கடிதம் வருவதற்கான நேரம்வந்தபோது
எனக்கு கிடைத்த முதல் தந்தி ஹஸ்ரத் மியான்
ஷரீஃப் சாஹிப் மற்றும் மியான் நாஸிர் விடுதலை ஆகிவிட்டார்கள் என்ற நற்செய்தியை
கொண்டதாக இருந்தது, எவ்வளவு விரைவாக எனது இறைவன் எனக்கு துஆ
ஏற்றுக்கொள்ளப் படுவதன் அற்புதத்தை காண்பித்திருகிறான் ,அல்ஹம்து
லில்லாஹ்.
ஹஸ்ரத் மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ்
அவர்கள் பஹாயிகளை நோக்கி கூறுகிறார்கள்:
திருக்குர்ஆன் ரத்து செய்யப்பட்டது
எனக்கூறும் பஹாயிக்களின் தலைவர்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் பட்டதற்கான அடையாளத்தில்
என்னுடன் போட்டியிட முடியும் என்றால் மைதானத்திற்கு வாருங்கள் ,இறைவன்
இந்த போட்டியில் எனது துஆவை கேட்பான் பஹாயிக்களின் துஆ ஏற்கப்படமாட்டாது ஏனென்றால்
நான் உயிருள்ள மார்க்கமாகிய இஸ்லாத்தை பின்பற்றக்கூடியவனாவேன் .
(மாஹானா
அல்ஃபுர்கான் ரப்வா மார்ச் 1968 பக்கம் 2)
ஆனால் பஹாயிக்களின் தலைவர்களுக்கு
இன்றுவரை மைதானத்திற்கு வர தைரியம் வரவில்லை .
ஹஸ்ரத் நான்காவது கலிஃபத்துல் மஸீஹ்
(ரஹ்மஹுல்லாஹுத்தஆலா)அவர்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பவங்கள் .
ஹஸ்ரத் நான்காவது கலிஃபத்துல் மஸீஹ்
(ரஹ்மதுல்லாஹி அலை) அவர்கள் 1986 ஜூலை20அன்று வழங்கிய ஜூமுஅ குத்பாவில் துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டதன்
விளைவாக ஒரு நண்பருக்கு அற்புதமான வகையில் ஷிஃபா கிடைத்தது தொடர்பாக கூறுகின்றார்கள்.
டாக்காவை சார்ந்த ஓர் அஹ்மதி நண்பர் தனது அஹ்மதியல்லாத நண்பர் ஒருவரை
குறித்து எழுதுகிறார் அதாவது நான் அவருக்கு ஜமாஅத்துடைய பிரசுரங்களையும்,
கேட்பதற்கு கேசட்டுகளையும் கொடுத்து வந்தேன். அதன் மூலம் சிறிது சிறிதாக அவரது உள்ளம் மாற ஆரம்பித்தது ஜமாஅத்தின் பிரசுரங்கள்
மூலம் நல்ல தொடர்பு ஏற்பட ஆரம்பித்தது அவர் ஆர்வத்துடன் பிரசுரங்களை கேட்டுவாங்கி
படிக்க ஆரம்பித்தார் அந்த சமயத்தில் அவருக்கு கண்ணோய் ஏற்பட்டது, மருத்துவர்கள் இதனால் உமது கண்களின் ஒளி போய்விடும் உலகில் உமது கண்களின்
ஒளியை காப்பாற்ற எந்த வழியும் இல்லை எனக்கூறினர்.அவருடைய
நிலைமை மற்றோர் அஹ்மதியல்லாத நண்பருக்கு தெரியவந்ததும் அவர் கேலிசெய்ய ஆரபித்தார், அவர் இன்னும் அஹ்மதியத்தின் நூல்களை படி என்றார் அஹ்மதிய்யத்தின் நூல்களை
படித்ததனால் உமது கண்களில் நரகம் (நெருப்பு)நுழைகிறது அது உனது ஒளியை
மண்ணாக்குகிறது என்றார் ,இது அதற்கான தண்டனயாக உனக்கு
கிடைத்து கொண்டிருக்கிறது என்றார் ,அவர் இதனைப்பற்றி மிகவும்
நிம்மதியிழந்தவாறு தனது அஹ்மதி நண்பரிடம் கூறினார் அதற்கு பயப்படாதீர்கள்
நீங்களும் துஆ செய்யுங்கள், நானும் துஆ செய்கின்றேன் மேலும்
நமது இமாமிற்கும் துஆவிற்காக எழுதுகிறேன் பிறகு அல்லாஹ் எவ்வாறு
அருள்புரிக்கின்றான் என்பதை பாருங்கள் எனக்கூறினார்,இந்த
சம்பவத்திற்கு சில நாட்களுக்கு பிறகு அவரது கண்ணின் நிலை மாறத்தொடங்கியது சில
நாட்களுக்குள்ளே அனைத்து ஒளியும் திரும்ப வந்துவிட்டது ,மறுமுறை
மருத்துவரிடம் காண்பிக்க சென்றபோது அந்த பயங்கரமான நோயிற்கான எந்த அறிகுறியும் இருப்பதாக
தெரியவில்லையே எனக்கூறினார்.
(பின் இணைப்பு மாஹானா காலித் ரப்வா ஜூலை 1987)
ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்மஹுல்லாஹுத்தஆலா)1986
ஜூலை 25 ல் வழங்கிய ஜூமுஅ குத்பாவில் கூறுகின்றார்கள் .ஈரானிலிருந்து டாக்டர்
ஃபாத்திமத்துஸ்ஸுஹரா எழுதுகிறார்கள் அதாவது அவரது ஒரே மகனுக்கு வலதுகால் பலகீனமாக
இருப்பதால் அவன் சுகவீனமாக இருக்கின்றான் எனவும் நிலைமை ஒவ்வொரு நாளும்
மோசமாகிக்கொண்டே செல்வதாகவும் எந்தளவுக்கு என்றால் நொண்டி நொண்டி நடக்கின்றான், மருத்துவ வல்லுநர்களிடம் காண்பிக்கப்பட்டது
ஆனால் என்ன நோய்யென்று கண்டுபிடிக்கமுடியவில்லை என்று அவனது ஆரோக்கியத்தை குறித்து கவலையை வெளிப்படுத்தினார்கள்.
அவர் கூறுகின்றார் எனக்கு திடீரென்று துஆ செய்வதற்கான எண்ணம் தோன்றியது அந்த
வகையில் நானும் துஆ செய்தேன் உங்களிடமும் துஆ செய்யவேண்டி கடிதம் எழுதுகிறேன்.
அல்லாஹ்வின் மகத்துவத்தினால் மருத்துவர்களால் மருத்துவமே (இல்லை)செய்யமுடியாது
எனக்கூறப்பட்ட நோயாளிக்கு அன்றைய தினமே ஆரோக்கியம் கிடைக்க ஆரம்பித்தது,மருத்துவர்களால் இது என்ன நோய் எனக் கண்டுபிடிக்க முடியாதலால் அவர்கள்
சிகிச்சை செய்யமுடியாமல் இருந்தனர் ,அந்த நாள் முதலே அவனது
நிலை சிகிச்சை அளிக்காமலே மாற ஆரம்பித்தது அல்லாஹ்வின் அருளால் இதனை எழுத கூடிய
வேளையில் முற்றிலும் நன்றாக உள்ளான் எனக்கூறியுள்ளார் .
( பின் இணைப்பு மாஹானா காலித் ரப்வா ஜூலை1987 )
ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்மஹுல்லாஹுத்தஆலா)அவர்கள்
ஒரு சொற்பொழிவில் தனது துஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட ஈமானை மிகவும் வலுவூட்ட கூடிய,
உள்ளத்தை ஈர்க்கக்கூடிய,அற்புதத்தின் அடையாளமாக இருக்கின்ற சம்பவத்தை கூறுகிறார்கள்:
நான் கானா சென்றடைந்ததும் அங்குள்ள கிறிஸ்தவ
மதத்துடன் தொடர்புள்ள ஒரு மேலதிகாரி நானா ஒஜிஃபோ சாஹிப் முதல் நாள் இரவு என்னை
சந்திக்க வந்தார், தொழுகைக்கு பிறகு கூட்டத்தில் நான் உங்கள்
கையில் பைஅத் செய்ய ஆசைப்படுகிறேன் என
தனது விருப்பத்தை வெளிபடுத்தினார் ,நான் முரப்பி சாஹிபிடம்
இதற்கான காரணம் கேட்டபோது அவர் அதனை கூறினார் நான் அதை உங்களுக்கு கூறுகின்றேன் ,அவர் கூறினார் இவர் மூடநம்பிக்கைகளை பின்பற்றக்கூடிய குறிசொல்லும் சமுதாயத்துடன் குறிப்பாக தொடர்பு கொண்டவராவார் ,அவர்களிடம் பெரிய பெரிய மூடநம்பிக்கைகளும், சடங்கு
சம்பிரதாயங்களும் இருக்கின்றது..அவரது மனைவிக்கு ஒவ்வொருமுறையும் கரு கலைந்து
கொண்டுயிருந்தது ஒருபோதும் மாதங்கள் நிறைவடையவேயில்லை இந்த பிரச்சனையை அவர்
கிறித்தவ பாதிரிகளிடம் கூறியுள்ளார் ,ஓதி ஊதக்கூடியவர்களிடம்
சென்றுள்ளார் அதனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை,கடைசியில்
அவர் இவ்வாறு கூறினார் நான் ஒரு கிறித்தவன் ஆவேன் ஆனால் எனக்கு கிறிஸ்தவத்தில் துஆ
மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது ,உங்களைப் பற்றி நீங்கள்
துஆ செய்தால் இறைவன் அதனை ஏற்றுக்கொள்வதாக நான் கேட்டுள்ளேன் ,ஆகையால் உங்களது இமாமிற்கு என் சார்பாக இந்த அனைத்து விஷயங்களையும்
எழுதுங்கள் நாங்கள் கஷ்டத்தில் இருப்பதனை தெரிவியுங்கள் ,துஆ
செய்யகூறுங்கள் என்றார் ,இந்தவகையில் துஆவிற்காக எனக்கு
கடிதம் அனுப்பினார். எனக்கு நான் ஏன் அவ்வாறு செய்தேன் அல்லாஹ் ஏன் அவ்வாறு
செய்யவைத்தான் என்பது தெரியாது ,நானா அவருக்கு பதிலில்
உங்களுக்கு குழந்தை பிறக்கும் மிகவும் அழகான நீண்ட ஆயுளை பெறக்கூடிய குழந்தை
பிறக்கும் என எழுதினேன் ,அவரது மனைவி கர்பம் அடைந்ததும் மருத்துவர்கள்
இந்த குழந்தை மட்டும் மரணிக்காது மாறாக உமது மனைவியையும் சேர்த்து மரணிக்க
செய்யும் ,குழந்தை எப்படிபட்ட நிலையில் உள்ளது என்றால் உமது
மனைவியின் உயிருக்கே ஆபத்து உள்ளது , ஆகையால் அவளது கர்ப்பத்தை
கலைத்து விடு என்றார்கள், அதற்கு அவர் ஒருபோதும் அவ்வாறு
செய்யமாட்டேன், அஹ்மதிய்யா ஜமாஅத்துடைய இமாமின் கடிதம்
எனக்கு வந்துள்ளாது எனது மனைவிக்கும் எந்த பாதிப்பும் வராது எனது குழந்தைக்கும்
எந்த பாதிப்பும் வராது என்றார் ,பின்னர் ஒவ்வொரு வாரமும்
வந்து துஆவிற்கு நினைவூட்டி கொண்டு செல்வார் ,இந்த வகையில்
அல்லாஹ் அவருக்கு மிகவும் அழகான ஆரோக்கியமான ஆண்குழந்தையை வழங்கினான் அவரது
மனைவியும் முற்றிலும் நலமாக உளளார்கள் அவருக்கு எந்தவித கஷ்டமும் ஏற்படவில்லை
.எனக்கு நினைவில் உள்ளது அவரது தந்தி வந்தது அதில் அவர் GOD HAS BLESSED ME
WITH BOUNDING SON அதாவது
இறைவன் எனக்கு துள்ளி குதிக்கும் ஆற்றலை கொண்ட மகனை தந்துள்ளான் என்பதாகும் ,ஆகையால் அவர் எனது கையில் பைஅத் செய்ய ஆசைபட்டுள்ளார் இதற்காக அவர்
காத்திருந்துள்ளார் .
( பின் இணைப்பு மாஹானா
காலித் ரப்வா ஆகஸ்ட் 1988)
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ்
அய்யாதஹுல்லாஹுத்தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ்
அவர்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட
,ஈமானை ஒளிமயமாக்க கூடிய சம்பவங்கள்
.
நாம் அல்லாஹ்வுடைய அருள் மட்டும்
கருணையால் மட்டுமே ஐந்தாவது கிலாஃபத்தின் அருளுக்குரிய காலத்தில் வாழ்ந்து
வருகிறோம், அன்னாரது தலைமையின் கீழ் அஹ்மதிய்யத்தின் கூட்டம் மின்னலை போன்று
வேகமாக பல்வேறு களங்களை கடந்து மாபெரும்
எல்லைகளைக் கடந்து சென்றுகொண்டிருப்பதை
நாம் கண்கூடாக பார்க்கின்றோம், அன்னாருடன் இறைவன் இருப்பான்
என வாக்குறுதி இருக்கின்றது அதாவது இன்னீ மஅக யா மஸ்ரூர் ,
மஸ்ரூரே! நிச்சியமாக நான் உம்முடன் இருக்கின்றேன் ,ஆக இறைவன் அன்னாருடன்
இருப்பதே இறைவன் அன்னாரது உணர்வுப் பூர்வமான ,உருக்கமான
துஆக்களை ஏற்றுக்கொள்கிறான் என்பதற்கு போதுமான சான்றாகும் இதற்கு முழுவுலக
அஹ்மதிகளும் சாட்சியாவார்கள் ,இதனைப்பற்றி ஒவ்வொரு
குழந்தையும் ,முதியவரும் ,இளைங்களும் அறிந்துள்ளனர் , ஹஸ்ரத்
ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ்
அய்யாதஹுல்லாஹுத்தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் கிலாஃபத்தின் ஆரம்பத்திலிருந்தே
ஜமாஅத் சகோதரர்களுக்கு துஆவின் பக்கம் குறிப்பாக கவனமூட்டி வருகிறார்கள் .
அதனை தவிர அன்னார் கிலாஃபத்
நூற்றாண்டின் வெற்றிக்காக நமக்கு துஆக்கள் சார்ந்த சிறப்பான ஓர் ஆன்மீகநிகழ்ச்சியை வழங்கினார்கள் ,
நான் தற்போது அன்னாரது துஆ
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில சம்பவங்களை கூறுகிறேன் .
அக்டோபர்-7-2005 ஆம் நாளை எந்த அஹ்மதியால் மறக்கமுடியும்? ரமளானுடைய மாதத்தில்
அநியாயக்கார தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஹாவுதீன் மண்டி பகுதியில் ஜமாஅத்
பள்ளிவாசலில் ஃபஜ்ர் தொழுகை தொழுதுகொண்டிருந்த அப்பாவிகளான,பாவங்கள்
செய்யாத அஹ்மதிகளை தனது அநீதிக்கு ஆளாக்கினார்கள் இதில் ஏறக்குறைய 20 நபர்கள்
ஷஹீதாகி தனது இறைவனை சென்றடைந்தார்கள் .இந்த சம்பவம் தொடர்பாக செய்தி
கேள்விப்பட்டதும் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல்
மஸீஹ் அய்யாதஹுல்லாஹுத்தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்களது உள்ளம் துடித்தது. இதைக்குறித்து அன்றைய தினம்
அன்னார் வழங்கிய ஜூமுஅ உரையில் கூறினார்கள் ,அன்னார்
அநீதியிழைக்கப்பட்ட அஹ்மதிகளுக்காக துஆ செய்யுமாறு கூறி அல்லாஹ் தானே அந்த
அநீதியாளர்கள் பிடிபடுவதற்கு வழிவகைகளை செய்வானாக எனக்கூறினார்கள் .அன்னாரது இந்த
வார்த்தைகள் துஆவின் கோணத்தில் உருவெடுத்து சென்றது பின்னர் இறைவனது தன்மானம் பொங்கியது ,
விஷயத்தைகேட்டு இறைவன் துடித்தான்
பின்னர் எவ்வாறு பிளந்தது என்றால் அனைத்தையும் விழுங்கிவிட்டது .
ஆக மறுநாளே முஸஃப்பராபாத்
மாவட்டத்தில் கியாமத்தை போன்று நிலஅதிர்வு எற்பட்டது .கிராம கிராமமாக பூமிக்குள்
புதைந்து போனது, ஆயிரக்கணக்கில் மரணம் ஏற்பட்டது ,கோடிக்கணக்கில்
இழப்பு ஏற்பட்டது ,இறையருளால் அந்த கியாமத்தை போன்ற
நிலஅதிர்வில் ஓர் அஹ்மதிக்கு கூட உயிரிழப்பு ஏற்படவில்லை .
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் ஹஸ்ரத்
ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யாதஹுல்லாஹுத்தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் துஆ
ஏற்றுகொள்ளப்பட்ட மறக்க முடியாத,என்றும் நிலைபெற்று இருக்கக்கூடிய மற்றொரு
அற்புதம் :
மே 4 ,2006 வியாழக் கிழமையாக
இருந்தது. ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல்
மஸீஹ் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யாதஹுல்லாஹுத்தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் கிழக்கத்திய
நாடுகளின் சுற்று பயணத்தின் போது நாந்தி பிஜியில் இருந்தார்கள் ,இரவு இரண்டரை மூன்று மணியாக இருக்கும், லண்டன்
மற்றும் உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்து தொலைபேசி அழைப்பு வர ஆரம்பித்தது அதில்
தற்போது தொலைகாட்சியில் வரக்கூடிய செய்தியின்படி ஒரு பெரிய சுனாமி புயல் பிஜிக்கு
அருகிலுள்ள டோங்கா தீவில் நிலைபெற்றுள்ளது,இதன் வலிமை
இலட்சக்கணக்கில் மக்களை மூழ்கடித்த இந்தோனேஷியாவில் வந்த,
உலகில் பலநாடுகளை அழித்த சுனாமியை விட பெரியதாகும்,T.V யை on செய்து பார்த்தபோது இந்த சுனாமி தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் ,காலையில் நாந்தி பிஜிவுடைய அனைத்து பகுதிகளையும்,அருகிலுள்ள
தீவுகளையும் இது மூழ்கடித்துவிடுமென்றும்,ஆஸ்திரேலியாவின்
ஒரு பகுதியும் ,நீயுஸிலாந்தின் ஒரு பகுதியும் மூழ்கிவிடும்
என்றும் செய்தி வந்துகொண்டு இருந்தது ,ஹுஸுர் அவர்கள் காலை
நாலரை மணிக்கு ஃபஜ்ர் தொழுகைக்காக வந்தபோது புயல் தொடர்பான அறிக்கை
கொடுக்கப்பட்டது. மேலும் நிலைமை குறித்து வரக்கூடிய செய்திகளையும் ,தொலைபேசி அழைப்புகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது ,ஹுஸுர்
அவர்கள் ஃபஜ்ர் தொழவைத்தார்கள் மிக நீண்ட சஜ்தா செய்தார்கள்,
இறைவனிடம் துஆ செய்தார்கள் ,தொழுகைக்கு பிறகு ஜமாஅத்
சகோதரர்களை நோக்கி கவலைப்படாதீர்கள், அல்லாஹ் அருள்புரிவான்
எதுவும் ஆகாது என்றார்கள் .
இதன் பின்னர் ஹுஸூர் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்கள்.
திரும்பி வந்து T.V யை on செய்தபோது T.V
யிலஅந்த சுனாமிவுடைய வலு குறைந்து கொண்டிருப்பதாகவும்,சிறிதுசிறிதாக தீவிரம் குறைவதாகவும் செய்தி வந்து கொண்டு இருந்தது , ஏறக்குறைய இரண்டு இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இந்த சுனாமி இல்லாமல்
போய்விட்டது எனசெய்தி வந்தது ,ஆக அன்றைய தினம் உலகம் ஒரு
அதிசய காட்சியை கண்டது ,ஒரு சில மணிநேரத்தில் இலட்சக்கணக்கான
மக்களை அழித்துவிட கூடிய, அப்பகுதியையே முற்றிலுமாக
அழித்துவிட கூடிய சுனாமி கலீஃபாவுடைய துஆவினால், தானே
அழிந்து போய்விட்டது ,அன்றைய தினம் ஃபிஜி பத்திரிகைகள்
சுனாமி நகர்ந்து போனது ஓர் அதிசயத்தை விட குறைவு இல்லை எனசெய்தி வெளியிட்டது.
நான் இறைவன் மீது ஆணையாக ,மேலும்
நான் கலீஃபாவுடைய துஆவினால் தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதற்கு நான்
சாட்சியாவேன் ,ஆக எவ்வாறு ஜமாஅத்தின் முன்னேற்றம் அஹ்மதிய்யா
கிலாஃபத்துடன் இணைந்திருப்பதில்
இருக்கிறதோ அதே போன்று உலகத்தின் வாழ்வும் அஹ்மதிய்யா கிலாஃபத்துடன்
இணைந்திருப்பதிலேயே வைக்கப்பட்டுள்ளது .
இன்று அஹ்மதிய்யா ஜமாஅத்தின் ஒவ்வொரு
நபரும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய அந்த வார்த்தையின் உண்மைத்துவத்திற்கு
சாட்சியாக இருக்கிறார்கள் ,இறைவன் மீது ஆணையாக! ஹஸ்ரத் மஸீஹ்
மவ்வூது (அலை) அவர்களின் கலீஃபாவுக்கு ஆதரவாக மேலும் ஒரு நாவு பேசுவதை
நாம் கண்களால் கண்டோம் காதுகளால் கேட்டோம் ,கலீஃபத்துல்
மஸீஹின் கைக்கு வலிமைசேர்க்கும் வகையில் மற்றொரு கை செயல்படுவதை முழுவுலகமும்
பார்க்கின்றது. இன்று உலகின் பெரிய பெரிய சபைகளும் தனது நாவினால் இந்த
அருளுக்குரிய மனிதருடன் இறைவன் இருக்கின்றான்,இறைவனது ஆதரவு
பெற்றமனிதராவார் எனசாட்சி பகர்கின்றன.
ஆக நாம் எவ்வளவு நற்பேறுபெற்ற மக்களாவோம்,
ஒவ்வொரு நாளும் நமது அன்பிற்குரிய தலைவர் ஹஸ்ரத் அமீருல் முமினீன் ஹஸ்ரத் ஐந்தாவது
கலீஃபத்துல் மஸீஹ் அய்யாதஹுல்லாஹுத்தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்களின் மகத்தான
தலைமையின் கீழ் ஜமாஅத்தின் வளச்சி மற்றும்
வெற்றிகளை நமது கண்களால் பார்த்து கொண்டு வருகின்றோம் ,ஆக
எழுங்கள் தனது ஆன்மீக பெளதீக முன்னேற்றத்திற்காக கிலாஃபத்தின் பாதங்களில் தனது
தலையை வைத்துவிடுங்கள், தன்னை காலத்தின் கலீஃபாவின் கையில் குளிப்பாட்டுபவரின்
கையில் மைய்யம் (ஜனாஸா ) இருப்பதனை போன்று கொடுத்து விடுங்கள். இதில் தான் நமது
வெற்றிக்கான உத்திரவாதம் இருக்கிறது .அல்லாஹ் இதற்கான நல்வாய்பை நமக்கு
வழங்குவானாக. ஆமீன்
(அஹ்மதிய்யா கெஸிட் கனடா மே 2015)
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ்
அய்யாதஹுல்லாஹுத்தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் ஜமாஅத் சகோதரர்களுக்கு துஆவின்
பக்கம் கவனமூட்டியவாறு கூறுகிறார்கள்:
நினைவில் கொள்ளுங்கள்! அவன் உண்மையான
வாக்குறுதிகளை கொண்ட இறைவன் ஆவான் .அவன் இன்றும் தனது அன்பான மஸீஹின் அன்பான
ஜமாஅத் மீது தனது(ஆதரவின்) கையை வைத்துள்ளான்,அவன் நம்மை ஒருபோதும் கைவிட
மாட்டான், ஒருபோதும் கைவிட மாட்டான் ,ஒருபோதும்
கைவிட மாட்டான்,இன்றும் அவன் தனது மஸீஹிடம் செய்த
வாக்குறுதிகளை முந்தைய கிலாஃபத்தில் நிறைவேற்றியது போன்று நிறைவேற்றுகின்றான் ,அவன் இன்றும் முன்பு அருள் புரிந்தது
போன்று அருள் புரிகின்றான்,இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து
அருள்புரிந்து கொண்டே செல்வான்,ஆக யாரும் அல்லாஹ்வுடைய
கட்டளையின்படி அமல் செய்யாமல் இருந்து தடுமாற்றத்திற்கு ஆளாகிவிடக்கூடாது, தனது மறுமையை பாழாக்கிவிடக்கூடாது
என்பதுதான் அவசியமாக இருக்கிறது,ஆக துஆக்கள்
செய்தவாறு அவன் பக்கம் குனிந்தவாறு அவனது அருளை வேண்டியவாறு எப்போதும் அவனது வாசலிலேயே
கிடக்கவேண்டும். மேலும் அந்த உறுதியான காப்பை கையில் போட்டுவைத்திருந்தால் பிறகு
யாராலும் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது ,அல்லாஹ் நம்
அனைவருக்கும் இதற்கான நல்வாய்பை தந்தருள்வானாக .
(குத்பாதே
மஸ்ரூர் பாகம் 2 பக்கம் 354)
அல்லாஹ் நம்மை எப்போதும் கிலாஃபத்துடன்
இணைந்திருக்க செய்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தொண்டுகளை செய்யும் வாய்ப்பினை
வழங்குவானாக .ஆமீன்
(உருது சொற்பொழிவு: மதிப்பிற்குரிய ஸஹீர் அஹ்மத் காதிம்
| தமிழ் மொழியாக்கம்
: மவ்லவி N. ஜியாவுல்ஹக்)
|
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None