பெரியவர் சிறியவரிடம் அன்பைக் காட்டவேண்டும்

இமாம் மஹ்தி(அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

நீங்கள் பெரியவர்களாயிருந்தால் சிறியவர்களிடம் அன்பைக் காட்டவேண்டுமே ஒழிய அவர்களை ஏளனம் செய்யக்கூடாது. நீங்கள் அறிவாளிகளாக இருந்தால் அறிவீனர்களுக்கு அறிவூட்ட வேண்டுமே ஒழிய அவர்களை அவமதிக்க கூடாது. நீங்கள் பணம் படைத்தவர்களாக இருந்தால் ஏழை எளியவர்களுக்கு உதவிட வேண்டுமேயொழிய தற்பெருமை கொண்டு அவர்களை இழிவுபடுத்தக் கூடாது. நாசத்தின் வழியைக் கண்டு பயப்படுங்கள். இறைவனுக்கு அஞ்சி அவனை வழிபட்டு வாருங்கள். படைப்பினங்களை வணங்காதீர்கள். எல்லாம்வல்ல இறைவனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். உலகின்மீது மிகுந்த பற்று கொண்டு விடாதீர்கள். இறைவனுக்காக வாழுங்கள். அவனுக்காகவே ஆகிவிடுங்கள். அவனுக்காக, பாவங்களையும் அசுத்தமானவற்றையும் வெறுத்து ஒதுக்குங்கள். ஏனெனில், இறைவன் தூய்மையானவனாக இருக்கின்றான். நீங்கள் இறைபக்தியுள்ளவர்களாக இரவைக் கழித்ததாக ஒவ்வொரு பகலும் நீங்கள் இறைவனுக்கு அஞ்சியே பகலைக் கழித்ததாக ஒவ்வொரு இரவும் சான்று கூறட்டும். (கிஷ்தி நூஹ்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.