உங்களுடைய அகமும் புறமும் ஒன்றாகாதவரை நீங்கள் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டீர்கள்

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
நீங்கள் துன்பங்களைக் காணுகின்றபோது இறைவழியில் உங்களுடைய கால்களை முன்னே வையுங்கள். இதுவே நீங்கள் முன்னேறுவதற்கான வழியாகும். இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தை உலகெங்கும் பரவச்செய்ய நீங்கள் முயன்று வாருங்கள். அவனுடைய அடியார்களிடம் அன்புகாட்டுங்கள். உங்களின் நாவாலோ கைகளாலோ அவர்களுக்கு தீங்கு செய்து விடாதீர்கள். மக்களின் நல்வாழ்விற்காக பாடுபடுங்கள். உங்களைவிட வறியவர்களைக் காணும்போது கர்வம் கொள்ளாதீர்கள். உங்களை ஏசுகின்றவர்களைக் கூட ஏசாதீர்கள். எளிமை, இனிமை, பரந்த மனப்பான்மை ஆகியவற்றைக் கைக்கொண்டு மக்களோடு நேசபாவத்துடன் பழகுங்கள். அப்போதுதான் நீங்கள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவீர்கள். சிலர் வெளிப்படையாக பணிவைக் காட்டுவார்கள். ஆனால் அந்தரங்கத்தில் ஓநாய்களாக இருப்பார்கள். சிலர் வெளிப்பார்வைக்கு தூய்மையானவர்களாக காணப்படுவார்கள். ஆனால் உள்ளத்தால் பாம்பாக இருப்பார்கள். உங்களுடைய அகமும் புறமும் ஒன்றாகாதவரை நீங்கள் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டீர்கள்...(கிஷ்தி நூஹ்)

மேலும் கூறுகின்றார்கள்:

கருணையின் அடையாளத்தை காட்டுவது இறைவனின் மரபில் அமைந்த ஒன்றாகும். ஆயினும் அவனுக்கும் உங்களுக்குமிடையே பிளவு இல்லாதிருந்தால்தான் அவனுடைய இந்த வழக்கத்தால் நீங்கள் பயன்பெறயியலும். அதனால் உங்களுடைய அவாக்கள் அவனுடைய அவாக்களாகவும் உங்களுடைய விருப்பங்கள் அவனுடைய விருப்பங்களாகும் இருக்கவேண்டும். உங்களுடைய வாழ்விலும் தாழ்விலும் உங்களுடைய தலை, அவனுடைய திருச்சன்னிதானத்தில் பணிவந்தவண்ணம் இருக்கவேண்டும். அவனுடைய விருப்பத்திற்குத் தலைவணங்குங்கள்.
நீங்கள் இவ்வாறு நடந்தால் நீண்டகாலமாக உங்களிடத்தில் மறைந்திருந்த தன் முகத்தை இறைவன் உங்களுக்குக் காட்டுவான். இவ்வாறு, இறைவனின் தீர்ப்பிற்கும் விருப்பிற்கும் தலைவணங்குவதோடு அதன் மீது வெறுப்பும் கொள்ளாத யாரேனும் உங்களிடையே உண்டா?(கிஷ்தி நூஹ்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.