உங்கள் சகோதரருடைய குற்றத்தை மன்னியுங்கள்

வாக்களிக்கப் பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

“உங்கள் சகோதரருடைய குற்றத்தை மன்னியுங்கள்! தன்னுடைய சகோதரனுடன் சமாதானமாக வாழவிரும்பாத மனிதன் துஷ்டனாக இருக்கின்றான். வேற்றுமைகளை ஏற்படுத்துகின்ற மனிதன் வெட்டுண்டு போவான். உங்களுடைய மனவிகாரங்களை ஒழித்துக்கட்டுங்கள். ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாதீர்கள். நீங்கள் உண்மையாளராக இருந்தாலும் உங்களை அடிமட்டத்தில் உள்ளவராகவே எண்ணிக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். தற்பெருமையையும் அகங்காரத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் அழைக்கப்படவிருக்கின்ற வாசல் வழியாக தற்பெருமையுள்ளவனும் அகங்காரம் கொண்டவனும் நுழையவே முடியாது. இறைவன் புறமிருந்து வெளியாகி என்னால் கூறப்பட்ட இவ்வசனங்களை ஏற்றுக் கொள்ளாத மனிதன் பேறிழந்தவனாக இருக்கிறான். விண்ணில் இறைவன் உங்களை நேசிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் ஒரே வயிற்றில் பிறந்த இரு சகோதரர்களைப் போல் ஆகிவிடுங்கள். உங்களிடையே கண்ணியத்திற்குரியவர் தன்னுடைய சகோதரனின் தவறுகளை மன்னிக்கிறவரேயாவார். பிடிவாதம் கொண்டு அவ்வாறு மன்னிக்கத் தவறுகின்றவர் பாக்கியமற்றவர்கள்.அத்தகையவரோடு எனக்கு எவ்வித உறவுமில்லை. இறைவனுடைய சாபத்திற்கு மிகமிக அஞ்சுங்கள். ஏனெனில் அவன் தூய்மையானவனும் அன்புடையோனுமாக இருக்கின்றான். மோசமான விளைவை ஏற்படுத்துகின்ற கெட்ட குணங்களுள்ள ஒருவனால் இறைவனை அணுக இயலாது. அகம்பாவமும் கர்வமும் நிறைந்த ஒருவனால் அவனை அடையவே முடியாது. அநியாயக்காரனால் அவனை அணுக முடியாது. நம்பிக்கைத் துரோகியாலும் அவனை நெருங்க முடியாது. அவனுடைய திருநாமங்களை உணர்ந்து பயபக்தியாக நடக்காதவன் அவனை ஒருபோதும் நெருங்க முடியாது. உலகின் மீது நாய்களைப் போலவும் எறும்புகளைப் போலவும் கழுகுகளைப் போலவும் விழுகின்றவர்களும் உலக சுகபோகங்களில் மூழ்கியிருப்பவர்களும் இறைவனின் திருச்சன்னதியை அடைதல் என்பது அறவே சாத்தியமற்றதொன்று! தூய்மையற்ற ஒவ்வொரு கண்ணும் அவனைவிட்டும் வெகுதூரம் அகன்று போனதாகும். தூய்மையற்ற எந்த உள்ளமும் அவனை அறியாது. எவர் இறைவனுக்காக நெருப்பில் வீழ்வாரோ அவர் அதிலிருந்து காப்பாற்றப்படுவார்”
                                                                                                                                     (கிஷ்தி நூஹ்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.