ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
உங்களுக்கு நான் கூறும் மிக
முக்கியமான போதனை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட ஒரு கிரந்தத்தைப் போல்
திருக்குர்ஆனைக் கைவிட்டுவிடாதீர்கள் என்பதாகும். ஏனெனில் உங்களின் வாழ்வு
அதில்தான் அடங்கியிருக்கிறது. எவர் திருக்குர்ஆனைக் கண்ணியப்படுத்துவாரோ
அவர் வானத்தில் கண்ணியப்படுத்தப்படுவார். எவர்கள் ஹதீஸுகள் இன்னும் பிற
நூற்கள் ஆகியவற்றை விட திருக்குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ அவர்
வானத்தில் கண்ணியப்படுத்தப்படுவார். தற்போது திருக்குர்ஆனை தவிர பூமியில்
மனிதகுலத்திற்கு வேறு ஒரு மறைநூல் இல்லை.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தவிர ஆதமின் மக்களுக்கு_ மனித சமுதாயத்திற்கு
பரிந்து பேசக்கூடிய எந்த இறைதூதரும் இல்லை. எனவே நீங்கள்
கண்ணியத்திற்குரிய அந்த மாநபி மீது உளப்பூர்வமான அபிமானம் கொள்ளுங்கள்.
வேறெவருக்கும் அம்மாநபிக்கு தரப்படும் மதிப்பைவிட மேலான மதிப்பைத்
தராதீர்கள். அப்போதுதான் இரட்சிப்பிற்குரியவர்களாக நீங்கள்
எழுதப்படுவீர்கள்(கிஷ்தி நூஹ்)
மேலும் கூறுகின்றார்கள்:
எவர் திருக்குரானின் எழுநூறு கட்டளைகளில்ஒரு சிறிய கட்டளையையாவது மீறுவாரோ அவர் தனது இரட்சிப்பின் வாசலைத் தனது கரங்களால் தானே அடைத்துக் கொள்கிறார் என்பதனை நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன்.உண்மையானதும்,முழுமையானதுமான இரட்சிப்புக்குரிய வழிகளை திருக்குறானே, நம்ம்க்கு திறந்து தந்திருக்கிறது.எஞ்சியிருப்பவை அனைத்தும் அதன் நிழல்களாகும்.ஆகவே, நீங்கள் திருக்குரானை மிகவும் கருத்தூன்றிப் படியுங்கள்.அதனை மிகவும் மேலாக நேசியுங்கள்.வேறெதேனோடும் வைக்காத பற்றை அதனோடு வையுங்கள்.ஏனெனில் இறைவன் என்னை நோக்கி ‘அல் கைரு குல்லுஹூ ஃபில்குரான் என்று கூறியுள்ளான். அதாவது எல்லா விதமான நலன்களும் குரானில் உள்ளன.(கிஷ்தி நூஹ்)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None