ஈஸா (அலை) உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்து வைக்கும் எதிர் வாதம் – 10

பத்தாவது வாதம்

அஹ்மதி அல்லாத சகோதரர்கள் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை என்பதற்கு மற்றுமொரு ஆதாரமாக
یُدْفَنُ مَعِیْ فِیْ قَبْرِیْ

பொருள்: அவர் (ஹஸ்ரத் ஈஸா (அலை)) என்னுடன் எனது கபரில் அடக்கம் செய்யப்படுவார். (மிஷ்காத் கிதாபுல் பித்ன்; பாடம்-நுஸூலே ஈஸா (அலை) ப ரிவாயத் இப்னு ஜவ்ஸி ஃபில் கிதாபுல் வஃபா)
இவர்கள் வைக்கும் இந்த வாதத்திற்கு பதினொன்று வகையில் நாம் பதில் வழங்கலாம்.

1-    ஒருவேளை இன்று ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் வானிலிருந்து இறங்கி மதீனாவில் சென்று மரணம் அடைந்து விட்டார்கள் என்று சொன்னால் நல்லுள்ளம் படைத்த முஸ்லிம்களில் யார் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கபரை தோண்ட முன்வருவார்...? ஆம் குழப்பத்தை உருவாக்குபவர் முன்வரலாம்.


2-    ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸிற்கு நேரடி பொருள் கொள்வதிலிருந்து தடுத்துள்ளார்கள்.
اِنَّ عائشۃ ؓ زوج النبی صلی اللہ علیہ وسلم قالت رأیتُ ثلاثۃ اتمار سقطنَ فیْ حجرتی فقصصتُ رؤیا ی علیٰ ابی بکر الصدیقؓ ۔ قالت فلما توفی روسول اللہ صلی اللہ علیہ وسلم ق دفن فی بیتھا قال لھا ابوبکر ھٰذا احدُ اتمارکِ وھو خیرھا۔

 பொருள்: ஹஸ்ரத் உம்முல் மூமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் எனது கனவில், மூன்று நிலவு எனது அறையில் விழுந்ததாக” கண்டேன். நான் எனது இந்த கனவை எனது தந்தை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் கூறினேன். ஆகவே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்ததும் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “இவர்கள் உனது மூன்று நிலவுகளில் மிகச்சிறந்த ஒரு நிலவாக இருக்கின்றார்கள்” என்று கூறினார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி), ஹஸ்ரத் உமர் (ரலி) மரணம் அடைந்தார்கள். இதே அறையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவ்வாறு ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கனவின் அடிப்படையில் மூன்று நிலவு அவர்களின் அறையில் விழுந்துவிட்டது. (முஅத்தா இமாம் மாலிக் பாகம் 1 பக்கம் 121 மிஸ்ரி) இப்போது ஒரு வேலை  ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும் இங்கு அடக்கம் செய்யப்படுவார்கள் என்றால், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த கனவு தவறு என்று கருதப்படும்.

3-    ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; 
انا اولُ من یشقُ عنہُ القبْرُ

பொருள்: மனிதர்களின் கபரில் இறுதி நாளன்று எனது கபரே முதலில் திறக்கப்படும். இது எனது சிறப்பாகும். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 278 | மிஸ்ரி) இப்போது ஒருவேலை ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும் நபி (ஸல்) அவர்களோடு அடக்கம் செய்யப்படுவார்கள் என்றால், எப்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கபர் திறக்கப்படுமோ அப்போது ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும் இந்த சிறப்பில் பங்கு எடுப்பவர்களாக இருப்பார்களே.

4-    திர்மிதியில் இவ்வாறு உள்ளது:
عن ابن عمر قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم انا اول من تنشق عنہ الارضُ ثمّ ابو بکرٍ ثم عمرُ ثمّ اٰتِیْ اھلُ البقیعِ فیحشرونَ۔

பொருள்: ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,”முதன்முதலில் எனது கபரே திறக்கப்படும். எனக்கு பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களின் கபர், ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு பிறகு ஹஸ்ரத் உமர் (ரலி), ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு பிறகு ஜன்னதுல் பகீ யில் அடக்கம் செய்யபட்டுள்ள மூமீன்களின் கபர் திறக்கப்படும். இவ்வாறு அனைவரும் ஒன்று சேர்க்கப்படுவர்.
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிஞ்ச் கபரிலோ அல்லது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யபட்ட இடத்திலோ அடக்கம் செய்யப்படுபவராக இருந்திருந்தால், கபர் திறக்கப்படும் வரிசையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இல்லை என்றாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது அல்லது குறைந்தது நான்காவது நம்பராக இருந்திருக்க வேண்டுமே..! ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் தனது இடத்தில் (ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில்) தன்னுடன் அடக்கம் செய்யப்படும் “மூன்று நிலவுகளை” பற்றி கூறியுள்ளார்கள். இவர்களுக்கு பிறகு அடக்கம் செய்யபட்ட நபித்தோழர்களை பற்றி கூறுகின்றார்கள். ஆனால் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆக இந்த ஆதாரம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மதினாவின் கபரிலோ அல்லது நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திலோ ஹஸ்ரத் ஈஸா (அலை) அடக்கம் செய்யப்படுவார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

5-    ஒரு ஹதீஸில் இவ்வாறும் வருகின்றது. நான் எனது கபரில் மூன்று நாட்களுக்கு பிறகு இருக்க மாட்டேன் என்று வந்துள்ளது. ஆக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தனது கபரில் மூன்று நாட்களுக்கு பிறகு இருக்க மாட்டார்கள் என்றால் அஹ்மதி அல்லாதோர் கூறுவதை போன்று ஹஸ்ரத் ஈஸா (அலை) நபி (ஸல்) அவர்களின் கபரில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றால் “மஃயி” (என்னுடன்) என்ற நிபந்தனை நிறைவேறாமல் ஆகிவிடுக்கின்றதே.
6-    அஹ்மதி அல்லாதோர் கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 119 இல் வருகின்ற “ஒரு நபி எங்கு மரணிப்பாரோ அங்கு அடக்கம் செய்யப்படுவார்” என்ற ஹதீஸை ஏற்கின்றார்கள். (இந்த ஹதீஸை முன் வைத்து ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மீது ஆட்சேபனை வைக்கின்றார்கள். இதற்கான பதிலை மற்றொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது) மேலும் அஹ்மதி அல்லாத சகோதரர்கள் இதன் அடிப்படையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையினுள்ளே மரணம் அடைந்து அங்கே அடக்கமும் செய்யப்பட்டார்கள் என்றும் ஏற்றுள்ளனர். இப்போது ஹஸ்ரத் ஈஸா (அலை) வானிலிருந்து உண்மையிலேயே வந்துவிட்டார்கள் என்றாலும் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கபருக்குள் சென்றா மரணம் அடைவார்கள்.?

7-    இதே ஹதீஸில்; “ஃப அகூமு அனா வ ஈஸா இப்னு மர்யம ஃபி கப்ரின் வாஹிதின் பைன அபீ பக்ரின் வ உமர” (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 119)
பொருள்: பிறகு நானும், ஹஸ்ரத் ஈஸா இப்னு மர்யமும் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) மற்றும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் இருவருக்கிடையில் இருக்கும் ஒரே கபரில் நிற்போம். அதாவது இதன் அடிப்படையில் ஹஸ்ரத் ஈஸா (அலை) எந்த கபரில் அடக்கம் செய்யப்படுவார்களோ அந்த கபர் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) மற்றும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் கபருக்கு இடையில் இருக்க வேண்டும். ஆனால் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) மற்றும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் கபருக்கிடையில் எந்த இடமும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

8-    கபர் என்றால் மக்பரா (கபர்ஸ்தான்) என்று (அஹ்மதி அல்லாதோர்) கூறுபவர்களாக இருந்தால், கபர் என்பதற்கு மக்பரா என்று பொருள் என்பதற்கு ஏதேனும் அரபி அகராதியிலிருந்து எடுத்து காட்டி அன்பளிப்பை பெறுங்கள்.
(ஆ) உங்கள் கூற்றின் அடிப்படையில்  “ஃப அகூமு அனா வ ஈஸா இப்னு மர்யம ஃபி கப்ரின் வாஹிதின் பைன அபீ பக்ரின் வ உமர” (கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 119) இந்த ஹதீஸில் வரும் கபர் என்ற சொல்லுக்கு “மக்பரா” என்று பொருள் கொள்வீர்களா? ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) மற்றும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் கபருக்கிடையில் ஒரு “மக்பரா” இருக்கும் என்று எண்ணுகின்றீர்களா?
(இ) மக்பரா என்பதற்கு  موضعُ القُبور     அதாவது கபர் வைக்கும் இடம் என்று பொருள். (அல்முன்ஜத் மக்பரா என்ற சொல்) பிறகு எவ்வாறு கபர் மக்பராவாக ஆக முடியும்?
(ஈ) அஹ்மதி அல்லாத சகோதரர்களே இந்த ஹதீஸிற்கு நேரடி பொருள் கொடுக்காமல் அதற்கு தவறான விளக்கத்தை தரும்போது, நாம் ஏன் குர்ஆன், ஹதீஸ் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் இதனின் சரியான பொருள் கொடுக்க கொடுக்க கூடாது?

9.    திருக்குர்ஆனில்
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ-مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ-.........ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ

என்று வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு மனிதனும் அவன் இந்துவாக இருந்தாலும் சரி, ஃபார்ஸி வம்சத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரியே அனைவரும் மரணித்து கபரில்தான் செல்ல வேண்டும். இவ்வாறு இருக்கும்போது, எந்த மனிதரின் உடல் எரிக்கப்பட்டு விடுகின்றாதோ, அல்லது விலங்குகள் உண்டு விடுகின்றாதோ அல்லது கடலில் மீன்கள் உண்டு விடுகின்றாதோ அந்த மனிதர்களும் இந்த வசனத்தின் அடிப்படையில் கபரில் செல்வார்களா? இல்லையா? அவர்கள் செல்லவில்லை என்றால் அவர்கள் மனிதர்கள் இல்லை என்பது நிரூபணமாகும் (2) முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கபர் வேதனை கிடையாது என்று நிரூபணமாகும். இப்படிப்பட்ட மனிதர்கள் கபரில் செல்வார்கள் என்று சொன்னால் கபர் என்பதற்கு வெளிப்படையாக சொல்லப்படும் கபர் இல்லை மாறாக ஆன்மீக நிலையிலான கபரே என்று பொருள் என்பது நிரூபணமாகும். “யுத்ஃபனு மயி ஃபி கப்ரீ எனும் ஹதீஸில் வருகின்ற கபர் என்பதற்கு ஏன் இந்த கபர் என்று பொருள் கொள்ளக்கூடாது. இவ்வாறு ஒரு ஹதீஸிலும் வருகின்றது:
القبرُ رُوضۃٌ من ریاضِ الجنّۃِ او حُفرۃٌ من حفرِ النِّیرانِ۔

பொருள்: கபர் சுவன தோட்டங்களில் ஓர் தோட்டம் ஆகும். அல்லது நரக குழிகளின் ஒரு குழியாகும். (திர்மிதி | அப்வாபு சிஃபத்துல் கியாமஹ் நம்பர் 26 | அறிவிப்பாளர் அபி சயீத் | பதிப்பகம் நோல் கஷோர் பக்கம் 182)

10-    இன்று ஒருவேலை ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் வருகை தந்து விட்டார்கள் என்றாலும் அவர்கள் மரணம் அடைந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கபருக்குள் செல்லும் வரை அவர்கள் மீது ஈமான் கொள்ளமாட்டீர்களா?

11-   இந்த ஹதீஸிற்கு ஈஸா இப்னு மர்யம் என்பதற்கு பனூ இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட அதே ஈஸா என்று பொருள் கொள்வீர்களேயானால், அந்த ஈஸா  மரணம் அடைந்துவிட்டார் என்று நிரூபணம் ஆகிவிட்டது. ஏனென்றால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் யுத்ஃபினு மயி” (அதாவது என்னுடன் அடக்கம் செய்யப்படுவார்கள்) அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார்கள் என்று நிரூபணமாகிறது. ஏனென்றால் இவ்வுலகத்தில் அல்லாஹ் ஏதேனும் ஒரு மனிதருக்கு நீண்ட ஆயுள் வழங்குபவனாக இருந்திருந்தால் நிச்சயமாக எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கியிருப்பான். அன்னாரைத் தவிர வேறெவர் அல்லாஹ்வுக்கு அதிக நேசராக இருக்க முடியும்.? அல்லாஹ் கூறுகின்றான்: “அஃபஇம் மித்த ஃபஹுமுல் யுக்லதூன்” (அன்பியா:35) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்து விட்ட பிறகு அவர்களுக்கு முன்பு வந்த நபிமார்களின் எவரேனும் நீண்ட ஆயுள் பெற்றவராக இருந்தால் இது அல்லாஹ்வுக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விஷயமாகும். ஆகவே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள், நான் மரணம் அடைந்து கபரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் வேறு எந்த நபியும் உயிருடன் இல்லை என்பது நிரூபணமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (கத் கலத் மின் கப்லிஹிர் ருஸுல் - மாயிதா:76)
 
அன்னார் கூறினார்கள் என்னுடன் அவர் அடக்கம் செய்யப்படுவார்” குறைந்தபட்சம் இந்த ஆதரத்தின் அடிப்படையிலாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த அதே சமயம்) ஈஸா (அலை) அவர்களும் உயிருடன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே. (நீங்கள் சிந்திப்பவர்களாக இல்லையா)
(அஹ்மதிய்யா தப்லீக் பாக்கெட் புக்கிலிருந்து எடுக்க பட்டது)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.