வக்ஃபே ஜதீத் – இறைவன் வகுத்த திட்டம்
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்களுக்கு “லா இலாஹா இல்லா அனா ஃபத்தஹிஸ்னி வகீலா என்ற ஒரு இலஹாம் இறங்கியது.
அதாவது என்னைதவிர வணக்கதிற்குரியவன் வேறு எவனும் இல்லை. எனவே நீர் என்னையே உமது
பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக. உமக்கு வேறு எந்த பக்கமும் பார்க்க வேண்டிய
அவசியமில்லை. உம்முடைய எல்லா பணிகளையும் சரி செய்யக்கூடியவன் மற்றும் உமது அனைத்து
பணிகளையும் நடத்தக் கூடியவன் நானே ஆவேன் என்று அல்லாஹ் இந்த இல்ஹாமில் ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளான். மேலும் நானே உமது
அனைத்து பணிகளையும் கண்காணிப்பேன். மேலும் நானே அந்த பணிகளுக்கு தேவையான காரணிகளை
ஆயத்தம் செய்து தருவேன். நீர் எம்மை உமது இறைவனாக ஆக்கிக் கொண்ட பிறகு மேலும் நான்
உம்மை மார்க்கத்தை பரப்புவதற்காக அனுப்பி இருக்கும் போது பின்னர் எந்த வகையிலும்
கவலை கொள்ள தேவையில்லை. நான் உமது அனைத்து பணிகளையும் முழுமை செய்வதற்கு ஆற்றல்
படைத்துள்ளேன் என்று அல்லாஹ் இந்த இல்ஹாமில் ஆறுதல் அளித்துள்ளான்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்களும் இந்த இல்ஹாமிற்கு சுருக்கமாக விளக்கமளித்துள்ளார்கள். அதாவது நானே உமது
அனைத்து பணிகளுக்கும் உதவியாளனாக இருக்கிறேன். அல்லாஹ் கூறுகின்றான். எனவே நீர்
எம்மை உமக்கு உதவி செய்பவனாக கருதிக் கொள்வீராக. உமது பணிகளில் வேறு எவருக்கும்
பங்கு இருப்பதாக கருதாதீர்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)
அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த இல்ஹாம் இறங்கிய பிறகு எனக்கு மிகவும் அச்சம்
ஏற்பட்டது. எனது உள்ளம் அச்சத்தால் நடுங்கியது. அல்லாஹ்வின் பார்வையில் எனது
ஜமாஅத் பெயர் கூறுவதற்கு கூட தகுதியற்றதாக இருக்கின்றதா என்ற எண்ணம் எனக்கு
ஏற்பட்டது.
அன்னார் தனது ஜமாஅத்திற்கு
கவனமூட்டினார்கள். மேலும் கூறினார்கள். ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்றாக
கவனத்தில் கொள்ள வேண்டும். இறைவன் உங்களின் தொண்டுகளுக்கு தேவை உடையவன் அல்லன்.
உங்களின் உதவிகளுக்கும் தேவை உடையவன் அல்லன். அதே போன்று உங்களின்
தியாகங்களுக்கும் அவன் தேவை உடையவன் அல்லன். அவன் இந்த அமைப்பை உருவாக்கி
இருக்கும்போது அவனே இதனை நடத்துவதற்கும் ஏற்பாட்டை செய்து விடுவான்.
அன்னார் தனது ஜமாஅத் உறுப்பினர்களை
நோக்கி கூறினார்கள்: உங்களுக்கு கிடைக்கின்ற தோண்டிற்கான வாய்ப்பினை இறை அருளாக
கருதுங்கள்.
ஆக, அன்னாரின் இந்த
கூற்றை ஜமாஅத் உறுப்பினர்கள் புரிந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் அருளை
ஈர்ப்பதற்காக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் வருகையின் நோக்கத்தை
நிறைவு செய்வதற்காக எல்லா விதமான தியாகங்களுக்கும் ஆயத்தமாகினர். அல்லாஹ்வின்
உதவியின் காட்சிகளை இன்று வரை நாம் பார்த்து வருகின்றோம். இறைவன் அஹ்மதிகளின்
உள்ளங்களில் தியாகங்களின் முக்கியத்துவதிற்கான உணர்வுகளை ஏற்படுத்துகின்றான்.
மேலும் அஹ்மதிகள் அசாதாரண முன்னுதாரணங்களை வெளிப்படுத்தவும் செய்கின்றனர்.
ஜமாஅத்தில் வஸிய்யத் என்ற ஓர் அமைப்பு உள்ளது. சந்தா ஆம் என்ற அமைப்பு உள்ளது.
இதைத் தவிர்த்து பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஜமாஅத் சகோதரர்கள் இவற்றில் அசாதாரண
முன்னுதாரணங்களை நிலை நாட்டுகின்றனர். இரண்டு திட்டங்கள் நிரந்தரமான
திட்டங்களாகும். அதாவது தஹ்ரீக்கே ஜதீத் மற்றும் வக்ஃபே ஜதீத் ஆகும். (இத்திட்டம் 1957
ஆம் ஆண்டு ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களால்
துவக்கப்பட்டது) ஜமாஅத் சகோதரர்கள் அறிந்தது போன்று பாகிஸ்தானில் இந்த திட்டம்
ஆரம்பிக்கப்பட்ட போது கிராமப்புற மற்றும் தொலைதூர ஜமாத்துக்களின் தர்பிய்யத்
மற்றும் தப்லீக் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காக இந்த வக்ஃபே ஜதீது
திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் முழு உலகத்திற்கும் பொதுவானதாக
ஆக்கப்பட்ட போதும் இதற்கென்று சில குறிப்பான நோக்கங்கள் இருந்தன.
இத்திட்டங்களின்
நோக்கங்கள் என்ன?
இத்திட்டங்களின் நோக்கங்கள் என்ன?
என்ற கேள்வி எழலாம். எனவே இது தொடர்பாக நான் சுருக்கமாக தெளிவுப்படுத்த
விரும்புகிறேன். நான் கூறியது போன்று வக்ஃபே ஜதீது திட்டம் சில குறிப்பிட்ட
பகுதிகள் மற்றும் நாட்டிற்கான திட்டம் ஆகும். அதாவது அந்த குறிப்பிட்ட நாடுகளின்
செலவீனங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகள் மற்றும் பணக்கார
நாடுகளின் ஜமாஅத்துகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற வக்ஃபே ஜதீது சந்தா இந்தியா
மற்றும் ஆஃப்ரிக்காவில் பொதுவாக கிராமப்புற பகுதிகளில் செலவிடப்படுகின்றன. இன்னும்
கூறப்போனால் ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் இந்த திட்டத்தை
பொதுவானதாக ஆகிய போது அதிலும் குறிப்பாக பணக்கார நாடுகளில் இந்த திட்டத்தை
செயல்படுத்தியதன் நோக்கம் இந்தியா மற்றும் காதியானின் செலவீனங்களை முழுமை செய்ய
வேண்டும் என்பதாகும். ஆனால் தஹ்ரீக்கே ஜதீது திட்டத்தின் கீழ் பெறப்படுகின்ற
சந்தாக்கள் உலகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் எங்கு மர்க்கஸின் உதவியின் தேவை
இருக்கின்றதோ அங்கு செலவிடப்படும். ஏனென்றால் வசூலான தொகை மர்க்கஸிற்கே
வருகின்றது.
எனவே, தேவையுடைய இடங்களில்
அது செலவிடப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் வக்ஃபே ஜதீது மூலமாக ஏராளமான
திட்டங்கள் ஏழை நாடுகளிலும் முன்னேற்றம் அடையாத நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு
வருகின்றன. (ஒவ்வொரு ஆண்டும்) ஜனவரி மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில்
புதிய வக்ஃபே ஜதீது ஆண்டிற்கான அறிவுப்பு செய்யப்படும்.
மரபுகளுக்கேற்ப கடந்த ஆண்டு அறிக்கையை
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் தனது குத்பாவில் எடுத்துரைத்தவாறு இவ்வாறு
கூறினார்கள்:
அல்லாஹ்வின் அருளினால் வக்ஃபே ஜதீதின்
58 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி 2015 ஆண்டுடன் முடிவடைந்தது.
·
இந்த ஆண்டில்
அல்லாஹ்வின் அருளினால் ஜமாஅத் சகோதரர்களுக்கு 68 இலட்சத்து 91 ஆயிரம் பவுண்ட்
வக்ஃபே ஜதீது சந்தாவாக பொருள் தியாகம் செய்யும் நற்பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த
வசூல் கடந்த ஆண்டை விட 6 இலட்சத்து 82 ஆயிரத்து 155 பவுண்ட் அதிகமாகும்.
இந்த ஒட்டுமொத்த வசூலில் மூன்றில் ஒரு
பகுதி முன்னேற்றம் அடைந்த அல்லது வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து வசூல்
செய்யப்படுகிறது. எனவே ஓட்டு மொத்த வசூலில் மூன்றில் ஒரு பங்கு இந்தக
நாடுகளிலிருந்து வருகிறது. மேலும் அந்த நாடுகளின் திட்டங்களுக்காக அது
செலவிடப்படுகின்றது. மீதம் இரண்டு பங்கு இருக்கின்றது. ஹஸ்ரத் நான்காவது
கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் இந்த திட்டத்தை காதியான் மற்றும் இந்தியா ஜமாஅத்துகளின்
திட்டங்களுக்காக விரிவுப்படுத்தினார்கள். எனவே மீதமுள்ள இரண்டில் ஒரு பங்கு அங்கு
செலவிடப்படுகின்றது. மீதுமுள்ள பங்கு ஆஃபிர்க்கா மற்றும் ஏனைய நாடுகளின்
செலவிடப்படுகிறது.
·
இந்தியாவில்
இதுவரை இந்த வருடத்தில் 19 பள்ளிவாசல்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன.
·
இரண்டு
பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
·
இந்தக் வருடம் 23
மிஷன் ஹவுஸ்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.
·
நான்கு மிஷன்
ஹவுஸ்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.
·
இது தவிர காதியானில்
மாநாட்டு திடல் மற்றும் ஏனைய பல திட்டங்களில் செலவிடப்பட்டுள்ளது.
நேபாளம் இந்தியாவின் காண்காணிப்பில்தான் உள்ளது.
இங்கிருந்து வக்காலத்தே தன்ஃபீஸ் கண்காணித்து வருகின்றது. பூட்டானும்
அப்படித்தான். எவ்வாறிருப்பினும்,
·
நேபாளத்தில்
இரண்டு முழுமையான பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.
·
இரண்டு தற்காலிக
ஷட்டுகளும் கட்டப்பட்டு இருக்கின்றன. பள்ளிவாசல்கள் மற்றும் மிஷன் ஹவுஸ்கள்
கட்டுவதில் சிறப்பான கவனம் செலுத்தப்படுகின்றது.
·
இந்தியாவில் இந்த
வருடம் தர்பிய்யத் வகுப்புகள் நடத்தப்பட்டது.
·
Refresher course களும் பெரிய அளவில் நடத்தப்பட்டது. அதற்காகவும் செலவீனங்கள்
ஏற்படுகின்றன. தற்போது இந்தியாவில் பணி செய்கின்ற முஅல்லிம்களின் எண்ணிக்கை 1127
ஆகும். அவர்களுக்கான Allowence கள்,
தங்குமிடத்திற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. பின்னர் அவர்களின் பயணங்களுக்கான
செலவீனங்கள் இருக்கின்றன. இவ்வாறு பெரிய அளவில் செலவீனங்கள் உள்ளன.
·
ஆப்பிரிக்காவில்
26 நாடுகளில் தற்போது 1287 முஅல்லிம்கள் பணி செய்கின்றனர். கிராமப்புறங்களில்
பள்ளிவாசல்கள் கட்டப்படுவதுடன் முஅல்லிம்கள் தங்குவதற்கான வீடுகளும்
கட்டப்பட்டுள்ளன.
·
இந்த ஆண்டு
ஆப்பிரிக்காவில் 130 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன.
·
47 பள்ளிவாசல்கள்
தற்போது கட்டப்பட்டு வருகின்றன.
·
மேலும் 95
பள்ளிவாசல்கள் கட்டுவதற்கான திட்டங்களை அவர்கள் தீட்டியுள்ளனர்.
·
அடுத்து
ஆப்பிரிக்காவின் 18 நாடுகளில் 82 மிஷன் ஹவுஸ்களின் கட்டுமானப் பணிகள்
நிறைவடைந்துள்ளன. 13 நாடுகளில் 21 மிஷன் ஹவுஸ்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று
வருகின்றன.
·
இது தவிர்த்து
ஏராளமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆப்பிரிக்காவில் புதிய
அஹ்மதிகளின் தர்பிய்யத்திற்காக தர்பிய்யத் வகுப்புகள் மற்றும் Refresher course கள் நடத்தப்படுகின்றது. 1132 இமாம்கள்
பயிற்சி பெற்றுள்ளனர்.
ஹுஸூர் கூறுகின்றார்கள்: நான் ஏற்கனவே
கூறியது போன்று இந்த ஆண்டு வக்ஃபே ஜதீதில் 12 இலச்சத்தை விட அதிகமான மக்கள் கலந்து
கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு இலட்சத்து ஆறு ஆயிரம் அதிகமாகும்.
ஒட்டுமொத்த வசூலின் அடிப்படையில்
இந்தியாவின் முதல் பத்து மாநிலங்கள்: கேரளா, தமிழ் நாடு, ஜம்மு
காஷ்மீர், தெலுங்கானா, கர்நாடகா, பெங்கால், ஒரிஸா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், தில்லி,
மஹாராஷ்டிரா.
வசூல் அடிப்படையிலான ஜமாத்துக்களின்
பெயர்கள்: கருளாயி, கோழிக்கோடு,
பத்தபிரியம், கன்னூர் டவுன், கொல்கத்தா, சூலூர், பேங்களூர், பயங்காடி, ரிஷி நகர்.
அல்லாஹ் தஆலா பொருள் தியாகம் செய்த
அனைவரின் வாழ்நாளிலும் செல்வத்திலும் பக்கத் செய்வானாக. அல்லாஹ் தஆலா முன்பை விட
அதிகமாக பொருள் தியாகம் செய்வதற்கான நல்வாய்ப்பை வழங்குவதுடன் எண்ணிக்கையை
அதிகப்படுத்தக்கூடிய நல்வாய்ப்பை வழங்குவானாக. ஆமீன்
(08-01-2016 அன்று ஆற்றிய ஹுஸூர்
அவர்கள் இலண்டனிலுள்ள மஸ்ஜித் பைத்துல் ஃபுதூஹ் வில் ஆற்றிய ஜுமுஆ உரையிலிருந்து எடுக்கப்பட்டது.)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None