பல்வேறு மொழிகளில் திருக்குர்ஆன் மொழியாக்கம்



அல்லாஹ் தனது அடியானுக்கு தமது கூட்டத்திற்கு , தான் உருவாக்கிய ஜமாத்திற்கு துவக்க காலத்தில் சோதனையை தந்தாலும் என்றுமே இறுதியில் வெற்றியே தருகிறான். இது இவனது தோன்றுதொட்ட நடைமுறையாக இருந்து வருவதை திருக்குர்ஆனை சிந்தித்து வாசித்து வரும் ஒவ்வொரு வரும் அறிந்த விஷயமே. அல்லாஹ் கூறுகிறான்:
அல்லஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;. நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள். (5:57)
நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள். (31:74)
அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (58:23)

இன்றிலிருந்து சுமார் 120 வருடங்களுக்கு முன் இறைவன் இவ்வுலக சீர்திருத்ததிற்காக ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சீடனாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்தான். அன்னாரால் 1889 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் என்ற இறை ஜமாஅத் அன்றிலிருந்து இன்று வரை இறைப்பணியில் வெற்றி மேல் வெற்றியை கண்டு வருகிறது. அதில் ஒன்றே இவ்வுலகின் பல்வேறு மொழிகளில் மக்களின் நேர்வழிக்காக இறைவன் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூலமாக வழங்கிய திருமறையான திருக்குர்ஆனை வெளியிடக்கூடிய பாக்கியம் ஆகும். ஜமாஅத் தோன்றி அன்றிலிருந்து இன்று வரை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திற்கு சுமார் 75 உலக மொழிகளில் திருக்குர்ஆனை மொழியாக்கம் செய்யக்கூடிய நல்வாய்ப்பை இறைவன் வழங்கியுள்ளான். காரணம் இந்த ஜமாஅத்தின் வெற்றிற்குரிய ஆயுதமாக இறைவன் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு இத்திருமறை திருக்குர்ஆனையே வழங்கியுள்ளான்.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் பல்வேறு உலக மொழியில் திருக்குர்ஆனை மொழியாக்கம் செய்து வெளியிட்ட விபரம் கீழே தருகிறோம்;
1              -              டச்   (முதல் பதிப்பு 1953)
2              -              ஸ்வாஹிலி (முதல் பதிப்பு 1953)
3    -     ஜெர்மன் (முதல் பதிப்பு 1954)
4    -     ஆங்கிலம் மொழி பெயர்த்தவர் ஹஸ்ரத் மௌலானா ஷேர் அலி (ரலி) சாஹிப் (முதல் பதிப்பு 1955, ஆங்கில மொழியாக்கத்துடன் ஐந்து பாகங்களை கொண்ட தஃப்சீர் 1947)
5    -     உருது ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் அவர்கள் செய்த மொழியாக்கம் 1957 இல் வெளியிடப்பட்டது. ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் செய்த மொழியாக்கத்தை 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
6    -     டேனிஷ் (முதல் பதிப்பு 1967)
7    -     இஸ்ப்ராண்டோ (முதல் பதிப்பு 1970)
8    -     இன்தோனேஷியன் (முதல் பதிப்பு 1970)
9    -     யூரோபா (முதல் பதிப்பு 1976)
10    -     குர்முகி (முதல் பதிப்பு 1983)
11    -     லோகண்டா (முதல் பதிப்பு 1984)
12    -     ஃபிரன்ச் (முதல் பதிப்பு 1985)
13    -     இத்தாலியன் (முதல் பதிப்பு 1986)
14    -     ஃபீஜியன் (முதல் பதிப்பு1987)
15    -     ஹிந்தி (முதல் பதிப்பு 1987)
16    -     ரஷ்யன் (முதல் பதிப்பு 1987)
17    -     ஜாப்பானி (முதல் பதிப்பு 1988)
18    -     கேகோயு (முதல் பதிப்பு1988)
19    -     கொரியன் (முதல் பதிப்பு 1988)
20    -     புர்துகாலி (முதல் பதிப்பு 1988)
21    -     ஹஸ்பான்வி (முதல் பதிப்பு 1988)
22    -     ஸ்வீடேஷ் (முதல் பதிப்பு 1988)
23    -     யூனானி (முதல் பதிப்பு 1989)
24    -     மலாயி (முதல் பதிப்பு 1989)
25    -     ஒடியா (முதல் பதிப்பு 1989)
26    -     ஃபார்ஸி (முதல் பதிப்பு 1989)
27    -     பஞ்சாபி (முதல் பதிப்பு 1989)
28    -     தமிழ் (முதல் பதிப்பு 1989)
29    -     வியட்நாமி (முதல் பதிப்பு 1989)
30    -     அல்பானியன் (முதல் பதிப்பு 1990)
31    -     அஸாமி (முதல் பதிப்பு 1990)
32    -     பங்க்ளா    (முதல் பதிப்பு 1990)
33    -     சீனி (முதல் பதிப்பு 1990)
34    -     சீக் (முதல் பதிப்பு 1990)
35    -     குஜ்ராத்தி (முதல் பதிப்பு 1990)
36    -     அக்பூ (முதல் பதிப்பு 1990)
37    -     மேண்டே (முதல் பதிப்பு 1990)
38    -     பஷ்தோ (முதல் பதிப்பு 1990)
39    -     போலிஷ் (முதல் பதிப்பு 1990)
40    -     ஸராயிக்கி (முதல் பதிப்பு 1990)
41    -     துருக்கிஷ் (முதல் பதிப்பு 1990)
42    -     தவால்வாயின் (முதல் பதிப்பு 1990)
43    -     பல்காரியன் (முதல் பதிப்பு 1991)
44    -     மலயாளம் (முதல் பதிப்பு 1991)
45    -     மணிப்பூரி (முதல் பதிப்பு 1991)
46           -              சிந்தி (முதல் பதிப்பு 1991)
47    -     தகாலக்    (முதல் பதிப்பு 1991)
48    -     தெலுங்கு (முதல் பதிப்பு 1991)
49    -     ஹவ்ஸா (முதல் பதிப்பு 1992)
50    -     மராட்டி (முதல் பதிப்பு 1992)
51    -     நார்வேஜியன் (முதல் பதிப்பு 1996)
52    -     கஷ்மீரி (முதல் பதிப்பு 1998)
53    -     சண்டானிஸ் (முதல் பதிப்பு 1998)
54    -     தாயி (பாகம்-1 பகுதி 1-10 1999, பாகம்-2 பகுதி 11-20 2006, பாகம்-3 பகுதி 21-30 2008)
55    -     நேபாளி (முதல் பதிப்பு 2001)
56    -     ஜோலா (முதல் பதிப்பு 2002)
57    -     கேக்கம்பா (முதல் பதிப்பு 2002)
58    -     கத்லான் (முதல் பதிப்பு 2003)
59    -     கன்னடா (முதல் பதிப்பு 2004)
60    -     கரியோல் (முதல் பதிப்பு 2004)
61    -     உஸ்பெக் (முதல் பதிப்பு 2005)
62    -     மோரே (முதல் பதிப்பு 2006)
63    -     ஃபோலா (முதல் பதிப்பு 2007)
64    -     மண்டின்கா (முதல் பதிப்பு 2007)
65    -     வோலோஃப் (முதல் பதிப்பு 2007)
66    -     போஸ்னியன் (முதல் பதிப்பு 2008)
67    -     மலாகாஸி (முதல் பதிப்பு 2008)
68    -     குர்கைஸ் (முதல் பதிப்பு 2008)
69    -     அஷாண்டி (முதல் பதிப்பு 2008)
70    -     மாவோரி (நியூஸிலேந்து) முதல் பத்து ஜுஸூ (முதல் பதிப்பு 2008) முழு மொழி பெயர்ப்பு (முதல் பதிப்பு 2013)
71    -     மியான்மார் (முதல் பதிப்பு 2014)
72    -     கர்யோல் (கேம்பியா) (முதல் பதிப்பு 2010)
73    -     யாவ் (முதல் பதிப்பு 2013)
74    -     சின்ஹாலா (முதல் பதிப்பு 2015)
75    -     ஜாவானீஸ் (முதல் பத்து ஜுஸூ) (முதல் பதிப்பு 2000)
(பத்ர் வாராந்திர பத்திரிக்கை காதியான் தேதி 24-31 டிசம்பர் 2015 லிருந்து எடுக்கப்பட்டது)
இத்துடன் சுமார் 101 மொழிகளில் திருக்குர்ஆனில் தேர்ந்தெடுத்து பல்வேறு வசனங்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க http://www.alislam.org/quran/selected-verses/
பார்க்க http://www.alislam.org/quran/

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.