நான் "ஆகிப்' (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை'' எனும் ஹதீஸ் பலகீனமானதே!
ஜுபைர் பின் முத்இம் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ் பவர்) ஆவேன். நான் "மாஹீ' (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறை மறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்' (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்' (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (4697)
நூல் : முஸ்லிம் (4697)
இந்த அறிவிப்பு ஏற்புடையது அல்ல. ஏனென்றால் இதனின் ஒரு அறிவிப்பாளராக சுஃப்யான் இப்னு உஐய்னியா இருக்கிறார். இவர் இந்த அறிவிப்பை சுஹ்ரி என்பவரிடமிருந்து அறிவிக்கிறார். சுஃப்யான் ஐ பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, "இந்த அறிவிப்பாளர் இல்லாததை கூறுபவர் ஆவார். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இவரை பற்றி, "இவர் சுஹ்ரி இடமிருந்து பல்வேறு ஹதீஸ்களை தவறாக அறிவித்துள்ளார். (இந்த "ஆகிப்" சம்பந்தப்பட்ட ஹதீஸும் இவர் சுஹ்ரி இடமிருந்து அறிவித்ததே) எஹ்யா இப்னு சயீத் கூறுகின்றார்கள்," ஹிஜ்ரி 197 இல் சுஃப்யான் இப்னு உஐயினியா வின் அறிவு மலுங்கிவிட்டது என்பதற்கு நான் சாட்சி கூறுகின்றேன். ஆகவே எவர் இதற்கு பிறகு அறிவிப்பை இவரிடமிருந்து அறிவிப்பை பெற்றிருந்தாலும் அது உண்மை அல்லாதவையாக ஆகிவிடுகின்றன. (மீசானுல் ஈததால் பாகம் 1 பக்கம் 397)
இந்த அறிவிப்பின் இரண்டாவது அறிவிப்பாளர் சுஹ்ரி பற்றியும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, "காண யுதள்ளிசு ஃபின்னார்" (மீசானுல் ஈததால் பாகம் 2 பக்கம் 146 & அன்வார் முஹம்மதி பாகம் 2 பக்கம் 448) அதாவது "இந்த அறிவிப்பாளர் சில நேரத்தில் ஏமாற்று வேலையையும் செய்பவர் ஆவார். ஆகவே இந்த அறிவிப்பிலும் இந்த அறிவிப்பாளர் ஏமாற்றும் வகையில் "வல் ஆகிபு அல்லதி லைச பஅதஹு நபிய்யுன்" என்ற வாசகத்தை அதிகப்படுத்தியுள்ளார். ஏனென்றால், ("வல் ஆகிபு அல்லதி லைச பஅதஹு நபிய்யுன்") இந்த வாசகம் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னது இல்லை மாறாக சுஹ்ரி யின் சொந்த கருத்து ஆகும். இதை முஸ்லிம் ஹதீஸ் நம்பர் 4697 இல் இறுதி பகுதியை படித்து பார்த்தால் தெரியும். அதில் கூறப்பட்டுள்ளதாவது, "உக்கைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் சுஹ்ரி (ரஹ்) அவர்களிடம் "ஆகிப்" என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "தமக்கு பிறகு வேறெந்த இறைதூதரும் இல்லாதவர்' என்று பதிலளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அடுத்து, "ஆகிப்" என்பது அரபி சொல் ஆகும். யார் முன்பு ரசூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸை ரசூல் (ஸல்) அவர்கள் எடுத்து வைத்தார்களோ அந்த சகாபிகள் அரபி அறிந்தவர்களாகவே இருந்தார்கள். இவ்வாறிருக்கும்போது ரசூல் (ஸல்) அவர்கள் மொழி பெயர்த்து சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? இவ்வாறு இந்த ஹதீஸில் மொழி பெயர்த்து கூறப்பட்டுள்ளது என்பது, "அரபி தெரியாத ஒருவருக்கு முன்பே இந்த ஹதீஸை ஒருவர் கூறியிருக்கிறார் என்பது புலப்படுகிறது.
ஹஸ்ரத் முல்லா அலியுள் காரி (ரஹ்) அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள், அதாவது," இந்த வாசகம் ("வல் ஆகிபு அல்லதி லைச பஅதஹு நபிய்யுன்") ஏதோ ஒரு சஹாபியோ அல்லது அடுத்து வரக்கூடியவர்களே மிதப்படுத்தி கூறியிருக்கிறார்கள். இப்னு அரபி அவர்கள் கூறுகின்றார்கள்," ஆகிப்" என்றால் ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தில் தனக்கு முன்புள்ளவர்களின் பிரதிநிதியாக இருப்பவர் என்பதற்கு கூறப்படும் என்று கூறுகிறார்.
ஆகவே இந்த ஹதீஸ் மூலமாக ரசூல் (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் வர முடியாது என்று எடுத்து வைக்கும் வாதம் அடிபட்டு விடுகிறது.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None